இயற்கையின் ஓய்வு
இயற்கையின் ஓய்வு

1 min

24.2K
அன்புள்ள நாளேடே,
உலகம் அனுதினமும் சுமக்கும்
பலவகை மாசு சுமையெலாம்
சற்றே கீழிறக்கி விட்டே
ஆசுவாசமாய் இருக்கவும் தான்
ஏங்கித் தவித்ததுவோ ?
மனித இனம் தரவிரும்பா
அமைதியையும் ஆசுவாசத்தையுமே
இயற்கைப் பேரிடர் கொடுத்தும்
மனித அறிவுக்கு எட்டாத
நோய் தனைக் கொடுத்தும்
எல்லோரையும் வீட்டில் அடைத்து
தனக்கான ஓய்வை தானே -
தன் வழியில் பெற்றே
தன்னை சீர் செய்து கொள்கிறதோ ?