இதயம்
இதயம்
இரத்தமும் சதையுமான இதயமதில்
உணர்வுகள் மெல்ல தலைதூக்க
இதயமும் உயிர்பெற்றே துடித்து துள்ள
கோபம் - வலி - ஏமாற்றம்
வஞ்சம் - பரிதவிப்பு என
சில உணர்வுகள் குத்திக் கிழிக்க
அன்பு - அக்கறை - ஆதரவு
நம்பிக்கை - உறுதி என
சில உணர்வுகள் மருந்திட்டு
காயம் ஆற்ற
துணிவோடே வாழ்வின் நொடிகளை
துடிப்பாய் இட்டுச்செல்லும்
உரமேறிய இதயம் !