இரவின் மடியில்...
இரவின் மடியில்...
இரவின் மடியில் நிலவின் ஒளியில்
அவன் விரல் பிடித்து நடந்தேன்
கடற்கரை மணலில்....
ஆர்ப்பரிக்கும் அலைகள்
எம் இருவரின் பாதம்
நனைத்து சென்ற பொழுதினில்
மனதில் தோன்றிய
இனம்புரியா உணர்வில்
மனம் மகிழ்ந்தேன்...
அந்த பொழுதினில் வானில்
வெள்ளிக் கம்பிகளாய் மழைத்
தண்ணீர் எங்களின் தலையில்
விழுவது பூக்களால் இயற்கை
அன்னை ஆசிர்வதிப்பதாக
உணர்ந்தேன் இயற்கையின்
எழிலில் மயங்கி....

