கண்ணாடிவளையலும், கால்கொலுசும்.
கண்ணாடிவளையலும், கால்கொலுசும்.
1 min
297
கிளிங் கிளிங் ஒலியுடன்
அவள் கைகளில் நடனம்
ஆடிடும் அழகிய கண்ணாடி
வளையலாக பிறந்திருந்தால்
மங்கை அவளின் கைகளில்
சந்தோசமாக குலுங்கிக்
கொண்டிருப்பேன்...
நான் கண்ணாடி வளையாலாக
பிறக்காததும் நன்மை தான்
அவள் கைகளில் நான்
குலுங்கிடும் வேளையில்
உடைந்து விட்டால் அவள்
கைகளில் இரத்தம் வர
நானல்லவா காரணமாகி
விடுவேன் என்று தான்
கண்ணாடி வளையலாக
பிறக்க வில்லை என்று
மகிழ்ச்சி கொண்டது
மங்கை அவளின் கால் கொழுசு....
