STORYMIRROR

Uma Subramanian

Inspirational

4  

Uma Subramanian

Inspirational

எதற்காக?

எதற்காக?

1 min
221

சம்பாதிக்கிறோம்! சாதிக்கிறோம்!

பாதிக்கிறோம்! வாதிக்கிறோம்! 

குதிக்கிறோம்! கண்ணீரில் குளிக்கிறோம்!

சம்பாத்தியம்

 கடல் போன்ற வீடு தந்தது!

திடல் போன்ற இடம் தந்தது!

வீடு நிறைய பொருட்கள் தந்தது!

பொருளைத் தந்தது! புகழைத் தந்தது!

பெயரைத் தந்தது!

பெருமையைத் தந்தது!  

கட்டில் வாங்கி தந்தது !

நிம்மதியான உறக்கத்தை தரவில்லை!

விதவிதமான ஆடைகளை வாங்கி தந்தது!

உடுத்த நேரம் தரவில்லை!

வகைவகையான உணவை வாங்கித் தந்தது

உண்ண நேரம் தரவில்லை!

ஆடம்பர வாழ்வைத் தந்தது

ஆரோக்கியத்தைத் தரவில்லை! 

மருந்தை வாங்கி தந்தது!

மகிழ்ச்சியைத் தரவில்லை!

உறவை வாங்கித் தந்தது

உற்சாகத்தை தரவில்லை!

மடிநிறைய செல்வம் தந்தது!

மனநிம்மதியை தரவில்லை! 

ஆயினும் ஓடுகிறோம்!

அடித்து பிடித்து ஓடுகிறோம்!

அரக்கப் பரக்க ஓடுகிறோம்! 

பம்பரமாய் சுற்றுகிறோம்!

பலன் என்ன பிதற்றுகிறோம்!

கை நிறைய சம்பாதிக்கிறோம்!

வாழ்க்கை வெறுக்குமளவு பாதிக்கிறோம்!

கடவுளே ஏன் படைத்தாய் வாதிக்கிறோம்! 

கை நிறைய சம்பாதிக்கிறோம்?



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Inspirational