என்னவளே அழகானவள்
என்னவளே அழகானவள்


மேக கூட்டத்தினுள்ளே ஒளிந்திருக்கும் வண்ணத்து பூச்சி அவள்...
பல வண்ணங்கள் கொண்ட வானவிலும் அவள்..
வாசனை தேடி நுகர்கின்ற தேனீ பூக்களினுள் அவள்..
மலைகளுக்கிடையே வழிந்து வரும் நீரூற்றும் அவள்..
அதிலே நனைய துடிக்கும் வெந்தாமரை பூ அவள்..
அழகாய் செதுக்கிய சிற்பமும் அவள்.. இதயத்தின் இருட்டிலே ஒளிதரும் மின்மினி பூச்சி அவள்..
வர்ண கிளிகள் கொத்தி திங்க ஏங்கும் பழுத்த பழம் அவள்..
என்னவென்று சொல்லவதம்மா என்னவளே எத்தனை அழகு அவள்..