என் வரிகளில்
என் வரிகளில்
என் வரிகளில் என்னை தேடாதே...
என் சோகத்தின் அளவும்
உனக்கு தோன்றிய சோகத்தின் அளவும்
ஒன்றல்ல...
என்னுடைய சந்தோசமும்
உன்னை ஆட்கொண்ட சந்தோசமும் ஒன்றல்ல...
என்னுடைய வலியின் அளவும் நீ உணர்ந்த வலியின் அளவும் ஒன்றல்ல....
என்னுடைய கருத்தும் உன்னை வந்தடைந்த கருத்தும் ஒன்றல்ல..
நான் உணர்ந்த காதலும் நீ அறிய முயலும் காதலும் ஒன்றல்ல...
நான் பார்த்த உலகமும் நீ பார்க்க முயலும் உலகமும் ஒன்றல்ல...
நான் கொண்ட கோவமும் நீ அறிய முயன்ற கோவமும் ஒன்றல்ல...
நான் தேடிய நானும் நீ அனுமானித்த நானும் ஒன்றல்ல....
நான் அறிந்த நானும்...நீ அறிந்ததாய் நினைக்கும் நானும் ஒன்றல்ல..
நான் பயணித்த சாலைகளும் நீ கற்பனையில் நினைத்த சாலைகளும் ஒன்றல்ல...
என் வரிகளில் என்னை தேடாதே......
நான் கொண்ட நிலையும் நீ கொண்ட நிலையும் ஒன்றல்ல..