சுய தனிமை (social distancing)
சுய தனிமை (social distancing)


அன்புள்ள நாளேடே,
நமக்கும் பிறருக்கும் பாதுகாப்பாய்
சுய தனிமையை கடைபிடிப்போம் !
உதடுகள் உதிர்க்கும்
மேம்போக்கு வார்த்தைகளை
ஓரமாய் ஒதுக்கி விட்டு
உள்ளார்ந்த அன்புடன்
தூரத்திலிருந்தே உதிர்ப்போம்
இதழ் விரித்தே
புன்னகை தனையே !
அது போதுமே
பல உள்ளங்களில்
புத்துணர்வு தனை
மலரச் செய்திடவே !