சங்க இலக்கிய ஜல்லிக்கட்டு
சங்க இலக்கிய ஜல்லிக்கட்டு
கிராமத்து குயிலொன்று
பொங்கல்விழா காண
பாரதி கண்ட மாட்டுடன்
ஜல்லிக்கட்டு காண
சென்ற வழியில்
காளையொன்று
தன் கொம்புகளால் காதல்
மடல் கணை அனுப்ப
சிலிர்த்தெழுந்த தந்தைமாடு
சுயம்வர ஜல்லிக்கட்டில்
குயிலழகியை முன்னிறுத்த
பெருமூச்சுடன் காளை
போர்க்கோலம் காண கிளம்பியது!
பசுமை மறந்த சமுதாயம்
இட்ட வேதியியல் புண்ணாக்கு
கலந்த புல் உண்ட சோர்வில்
மயங்கி தோல்வி காணவே
குயில் வெள்ளிவீதியாராய்
சோககானம் சங்கஇலக்கிய ஓலையில்
வரைய பறப்பட்டாளே!