STORYMIRROR

Uma Subramanian

Inspirational

4  

Uma Subramanian

Inspirational

சிதவலாகுமோ

சிதவலாகுமோ

1 min
335

தாயே!

உன் இளமை கண்டு ...

தலை நிமிர்ந்து வியக்கிறேன்!

உன் வளமை கண்டு ...

தலை வணங்கி தாழ்கிறேன்! 

உன் எழில் கண்டு ...

கண் மயங்கி நிற்கிறேன்!

உன் சுவை கண்டு....

 நா ஊற சுவைக்கிறேன்! 

உன் நயம் கண்டு....

மெய் சிலிர்த்துப் போகிறேன்!

மூத்தவளாயினும்....

 உன்னில் செருக்கு இல்லை!

உன்அழகில் ஒன்றும் குறைவில்லை! 

பிறன் வரவால் நீ  என்றும் சுருங்கியதில்லை! 

உன் பெருமை தெரிந்தவர்...

 உன்னை மணக்க மறந்ததில்லை!

உன்னழகில் மயங்கியவர்... 

உன்னை விலக துணிந்ததில்லை!

உன் புகழை வையமெல்லாம் 

வாயார வாழ்த்தி நிற்க...

உன் மடியில் பிறந்தோரெல்லாம்

 உன்னை தாழ்த்தி நினைக்க...

 அந்நியமொழியை 

விழி மிரள கண்டு....

விழி மிளிர மகிழ்ந்து ...

அதன் ருசியை சுவைத்து மகிழ.....

அன்னை மொழியாம் உன்னை

 கொஞ்சம் கொஞ்சமாய் ஓரங்கட்ட....

விழிநீர்க் கன்னங்களில் ஈரந்தட்ட...

உன்னில் வளர்ந்தவன்....

உன்னால் வாழ்ந்தவன்....

 தன்னின் வளரும் பிள்ளை

 வாய் நிறைய உன்னை அழைக்குமோ?

உன் புகழ் தன்னை நினைக்குமோ?

தளிர்க் கரங்களால் உன்னை அணைக்குமோ?  

அன்னைத் தமிழாம் உன்னை நினைக்குமோ?

தமிழே! என் தாயே!

எண்ண எண்ண உன் மனம் சிதவலாகுமோ?

கலங்காதிரு! _ நீ

வளம் கொண்டவள்! நலம் நிறைந்தவள்!

செம்மையானவள்! செழுங்கனிச் சுவையானவள்! 

உன்னைக் கட்டியணைக்க....

கசிந்துருகி உம் புகழ் பாட ...

உன் மணம் கண்டு...

வையத்தில் பேதமின்றி 

நாளும் ஓதி மகிழ்ந்திட 

 கோடி மனங்கள் உண்டு!


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational