STORYMIRROR

க.வெங்கடேஷ் ஊத்தங்கரை.

Abstract Drama Others

4  

க.வெங்கடேஷ் ஊத்தங்கரை.

Abstract Drama Others

சிட்டுக்குருவி

சிட்டுக்குருவி

1 min
176

பாலடைந்த கிணற்றை 

பஞ்சனையாய் கொண்டு

ஊரையே ஊசலாய் 

கொண்டு அடிக்கொண்டும்

மென் குரலில் 

வண்மையாய் 

சுற்றும் 

மாந்தர் இனத்தையும் 

மென்மனதாய் மாற்றி

தொங்கும் தோட்டங்களை 

ஆங்காங்கே கொண்டு

அந்தர கோட்டையிலே

எழில் மிகு 

கம்பீரமான ஒய்யார 

வாழ்வுனக்கு சிட்டே.


மாந்தரின் வாழ்வது 

இன்னல் என்பார் 

உன்னை விடவா 

என யாவரும் 

நினைப்பதில்லை.


அலையிலும் சாவு 

வலையிலும் சாவு 

என மரனத்தை 

ஆங்காங்கே சந்தித்து

ஆனந்தம் காண்கிறாய்.


மென்குரலும்

சிறு உடலும்

வண்ண சிறகும் 

கொண்டு 

உன் அருமை தெறியாதோருக்கும் 

உதவும் உள்ளம் தான் ஏனோ உனக்கு.


நல்நெஞ்சம் கொண்டு

உன்னை காத்திடா

இந்த உலகில் 

உதவும் நல்மனம் ஏனோ.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract