சிறு துளியா பெரு வெள்ளம்...!!
சிறு துளியா பெரு வெள்ளம்...!!


ஏய் மனிதா
ஏன் எனை - நீ
ஏளனமாய்
பார்க்கிறாய் .......!!!
வஞ்சக மனதில் - நீ
சிறு துளி என்ன
செய்யும் என்று
நினைக்கிறாய் .......!!!
ஆக்கவும் முடியும் என்னால் ..........
அழிக்கவும் முடியும் என்னால் .......
துளி துளியா ......
மண்ணின் மீது
கொண்ட காதலால்
முதலில் குளத்தை தொட்டு
பிறகு குட்டையை அடைந்து
பின்பு ஆறாய் உருவெடுத்து
கடைசியில் கடல் சென்று
அலையோடு அலையாய்
என் காதலை
அரங்கேற்றம் செய்தேன் .........!!!
அருவியாய் தவழும் எனை
ரசித்து பார்க்கும் நீ .....!
வெள்ளமாய் பொங்கும் போது
பயந்து ஓடுகிறாயே நீ .....!
சிப்பியில் ஒரு
துளியாய் நுழைந்து
முத்து ......
முத்து ......
என மாறவும் முடியும் ............!!!
இதய வலிகளை
கண்ணீர் துளிகளால்
கழுவி .....
கழுவி .....
துக்கம் கரைக்கவும் முடியும் .........!!!
ஆணவத்தால்
ஆடாதே மனிதா
துளி ....
சிறு துளி .....
என நினைக்காதே........!!!
துளி துளியாய்
பாறையை
இரண்டாக உடைக்கவும் முடியும் .....!
துளி துளியாய்
நிலத்தை
நடைபாதை ஆக்கவும் முடியும்....!
துளி துளியாய்
உன்னை
வாயில் மெல்லவும் முடியும்......!
துளி துளியாய்
ஊரை
விழுங்கி செல்லவும் முடியும்......!
உனக்கு
ஞாபக மறதி அதிகம்
ஆகையால்
மறுபடியும் சொல்கிறேன்
ஆக்கவும் முடியும் என்னால் .........!!
அழிக்கவும் முடியும் என்னால் .......!!
ஆணவத்தால்
ஆடாதே மனிதா
துளி ....
சிறு துளியே ......
என்று எனை நினைக்காதே........!!!