சிரிப்பு
சிரிப்பு
சிரிப்பு பலவகை
சிந்தையை மகிழ்விக்கும் சிரிப்பு
துன்பம் துயரையே
துடைத்தெறியும் சிரிப்பு
வெற்றிக் களிப்பு அளிக்கும்
ஒருவகை சிரிப்பு
தோல்வி விரக்தியிலும்
இதழோரம் வடியும்
குறுஞ்சிரிப்பு
நாணத்திலும் வழிந்தோடுமே
மகிழ்ச்சி சிரிப்பு !
சிரிப்போடே சிந்தையும் தான்
மகிழ்ந்திடுமே !
சிந்தை மயங்க
பொறாமை நெருப்பில் உதிக்கும்
ஆணவச் சிரிப்பு - அது வேண்டாமே !