சில மாற்றங்கள்
சில மாற்றங்கள்
பழகிய நட்பை பிரிவது போல்....
பிடித்த சுற்றத்தை விலக்குவது போல்.
காதலித்த உறவை தவிர்ப்பது போல்...
வலிகள் மிகுந்தது சில மாற்றங்கள்...
தடைபட்ட பயணம் போல்...
மறுக்கப்பட்ட உரிமைப் போல்..
விட்டுக்கொடுத்த விருப்பங்கள் போல்...
தவிப்புகள் மிகுந்தது சில மாற்றங்கள்....
தவிர்க்கப்பட்ட அன்பு போல்.....
அடக்கப்பட்ட கோவம் போல் ...
கட்டுப்படுத்த பட்ட கண்ணீர் போல்
கனமானவை சில மாற்றங்கள்...
சொல்லாமல் விட்ட மன்னிப்புகள் போல்..
கூறாமல் விட்ட நன்றிகள் போல்...
காட்டாமல் விட்ட கனிவு போல்...
குற்ற உணர்ச்சி நிரம்பியவை சில மாற்றங்கள்...
இருந்து விட்டு போகட்டும்...
கடந்து செல்வது என்றான பின்..
அசைபோடா மறதியுடன்....
புதிதாய் பிறந்துவிடலாம் நாளைய விடியலில்.........
தொடங்கிவிடலாம் மற்றும் ஒரு பயணத்தை.......
ஒரு கோப்பை தேநீரோடு......