சிகரெட்
சிகரெட்


காற்று வீசும் போதெல்லாம்
நான் என்னையே
சினந்து முனையில்
தீயாய் சுட்டுக்கொள்கிறேன்!
மனிதன் உடலில்
பரவும் விஷக்கிருமியாய்
நான் மாறி வெகுகாலம் ஆனாலும்
பாழும் இளந்தலைமுறை
என்னை மறக்க
முடியாமல் என்னையே துணையாக்கி
கூற்றுவன் வீடு தேடி
போகின்ற வேதனையை என் சொல்வேன்!
மதுவும் நானும்
ஒட்டிப்பிறந்த கூற்றுவனின்
சொந்தக்காரர்கள் என
மனிதன் விலகுவது எப்போது?