சாக்லேட்
சாக்லேட்


மனித படைப்பில்
இனிப்பான ஒன்று.....
இது வரை யாரும்
வெறுத்தவர் இல்லை
வயது வித்தியாசம் இன்றி
அனைவரும் விரும்பும் பொக்கிஷம்
ஆதலால் போர்வை (ரேப்பர்) கொண்டு
மூடி வைத்தார்கள் உன்னை......!!!
சுப காரியங்கள் ...
பிறந்த நாட்கள் ....
சில பல நாளில் நீ தான் ஹீரோ ..... !!!!
உன் சிறப்பு ....
விரோதியும் நண்பர் ஆவர்
உன் குணம் ....
நல்ல மனநிலை தரும்
கொடுத்து பார்த்தான் ......
பல வடிவங்களை
பல நிறங்களை
பல உருவங்களை
உனை பார்த்ததும் கண்கள
் துள்ளி ஆடும்
உனை கண்டதும் நாக்கும் நடனம் ஆடும்
உனை தொட்டதும் உடல் வலிமை பெறும்
உனை சுவைத்ததும் மேனி மெருகு ஏறும்
வாசல் தேடி வந்த விடியல் போலே
எனை தேடி வந்த சாக்லேட் நீயே
ஜன்னல் தேடி வந்த காற்று போலே
எனை தேடி வந்த சாக்லேட் நீயே
வீதி தேடி வந்த கோலம் போலே
எனை தேடி வந்த சாக்லேட் நீயே
இசையை தேடி வந்த கருவி போலே
எனை தேடி வந்த சாக்லேட் நீயே
இறுதியாய்....
காதலனை தேடி வந்த காதலி போலே
எனை தேடி வந்த சாக்லேட் நீயே ...