அவளுடன்
அவளுடன்
சந்தனமும் செவ்வாதும் நான் உனக்கு தந்திடுவேன்
சாந்தமும் சாய்ந்து கொள்ள தோளும் நீ எனக்கு தந்திடுவாய் சிரிப்பினில் சிறைய வைக்கும்
அன்போ?!
சீரகம் போன்ற நற்குணமோ?!
சுகம் தரும் சொற்களோ?! சூரியன் போன்ற பொலிவோ?!
செந்தேன் சுவை இவளோ?!
சேனையை வெல்லும் அறிவோ?!
சைவம் என்று சொல்லி என்னை கொல்கிறாயே!
சொர்க்கம் என்று சொல்aலவா அவள் பொறுமையை
சோதனை என்று சொல்லவா அவள் நினைவினில் நான் . இருப்பதை
வேதனை கொண்டாலும்
சௌகரியம் கொள்கிறேன் அவளுடன்....
-தமிழ்ப்பிரியன்
