அழகோ அவன்
அழகோ அவன்
அப்படியோர்
ஆண் அழகன்
இந்த பூமியில் இருக்கிறான்
ஈரேழுலோகத்து தேவர்களும்
உரைந்து பார்க்கும் அழகோ!
ஊரையே மிஞ்சும் அறிவோ!
எட்டாத உயரமோ!
ஏகாந்தம் கொள்வானோ !என
ஐயம் கொள்வேனோ?நான்
ஒரு ஒரு முறை உன்னை
ஓரமாய் நின்று பார்க்கும் போது
ஔடதம் தேவை உன்
அழகில் சிக்கி தவிக்கும் எனக்கு...
அழகோ அவன்....
-தமிழ்ப்பிரியன்
