அன்பு
அன்பு
அம்மா என்ற மூன்றெழுத்து அப்பா என்ற மூன்றெழுத்து அக்கா என்பது மூன்று எழுத்து தம்பி என்பது மூன்றெழுத்து தங்கை என்பது மூன்று எழுத்து தாத்தா என்பது மூன்று எழுத்து பாட்டி என்பது மூன்றெழுத்து
இந்த மூன்றெழுத்துக்களின் பாசம் மூன்றெழுத்து இவர்களிடம் படும்
கோபம் மூன்றெழுத்து
அதனால் கிடைக்கும்
சாபம் மூன்றெழுத்து
இருப்பினும் நம்மை ஏற்றுக் கொண்டு அளிக்கும்
நேசம் மூன்று எழுத்து நேசத்தை சுமக்கும் மனம் மூன்று எழுத்து இவையெல்லாம் அடங்கும்
அன்பு மூன்று எழுத்து இதுவே வாழ்வின் வரம் மூன்றெழுத்து
இவற்றையெல்லாம் வெளிப்படுத்த முடிந்தது என் தமிழ் என்னும் மூன்றெழுத்தில்.....
-தமிழ்ப்பிரியன்
