அவள் போல் யாரும் இல்லை....
அவள் போல் யாரும் இல்லை....
அன்பானவளோ!
ஆறுதல்
சொல்பவளோ!
இன்முகத்தவளோ!
ஈகை கொண்ட
தேவதையோ!
உறைந்த மெழுகு
சிலை அவளோ!
ஊரையே மிஞ்சும்
அழகு அவளோ!
எம்மை வெல்லும்
அறிவு
கொண்டவளோ!
ஏகாந்தம்
கொண்டேனே
அவளின்,
ஐவிரல் என்னை
நோக்கி
அசைக்கையில்
ஒரு பார்வை
போதுமே அவை,
ஓராயிரம்
மொழிகள் பேசுமே
ஔடதம் தேவை
அவளுக்குள்
விழுந்த எனக்கு
அஃது அவள்
தன்மையோ!
ஆதலால்
சொல்கிறேன்
அவள் போல் யாரும் இல்லை.....🧡💚
-பிரியன்💚
