அவள்
அவள்
விரும்பிய ஒருத்தியின்
பாதம் பற்றி தொழு.
அழு,
கொண்டாடு,
அர்ப்பணி,
போற்று,
பூஜி,
ஆராதி,
செத்தொழி.
மேலும்
நினைவில் கொள்-
காணும் ஒவ்வொருத்தியிடமும்
இதையுன்னால் சாத்தியப்படுத்திட முடியாது.
ஒருத்திக்குத்தான் உன்னாயுள் விதிக்கப்படிருக்கிறது.
அவளைச்சேரும் வரை
காதல் போலியென்றுரைப்பாய்!