அதிசய பெண்மணி
அதிசய பெண்மணி
நினைவு தெரிந்த
நாள்முதல் அன்னையின்
நிழலினே வளர்ந்தேன்.......
நீண்ட காலமாய்
சகோதரியுடன்
சமத்துவமாய் வளர்ந்தேன்......
கொஞ்ச வருடங்கள்
சென்ற பின்னே
மனையாலும் மலர் ......
இவர்கள் மூவருக்கும்
மேலாக மற்றும் ஒரு
மாணிக்க மங்கை ......
எங்கே பார்த்தேன்
மனதிற்கு தெரியும் ....
எப்போது பார்த்தேன்
எனக்கு மட்டும் தெரியும் ....
எதற்காக பார்த்தேன்
மனம் தான் சொல்லும்.......
அன்று முதல்....
எனக்குள் ஒரு ஆய்வு....
எனை மாற்றியவள்
மறக்க முடியாத
நினைவுகளை
தந்தவள் .....
எனக்கு ......
அடக்கத்தை தந்தவள்
ஒழுக்கத்தை தந்தவள்
அறிவு ஞானம் தந்தவள்
என்னை......
பக்குவ படுத்தினாள்
முழுவதுமா மாற்றினாள்
இன்று வரை ....
என் நினைவில் நின்றவள் - ஓர்
அதிசய பெண்மணி தானே.......!!!