அழகு
அழகு
கொஞ்சும் கிளியே உந்தன்
செக்கச் சிவந்த
அலகு அழகா ?
கொத்தாய் காய்த்தே
சிவக்கக் காத்திருக்கும்
கனிகள் அழகா ?
இலாவகமாய் கிளை பற்றியே
கனியை கொத்த உந்தன்
முயற்சிகள் அழகா ?
கொஞ்சிக் கொஞ்சியே
உளம் மயக்கும் உந்தன்
கிள்ளை மொழி அழகா ?
கானம் பாடியே பறந்து
அந்தியை அழகாக்கும்
கிளிக் கூட்டம் அழகா ?
இயற்கையின் படைப்பில்
அனைத்துமே அழகு !
அகம் திறந்தால்
புலனாகும் அழகு !