ஆசான்
ஆசான்


அறிவை ஆணிவேர்வரை ஊற்றி
விருச்சம் பெற செய்து...
இயல்பாய் இருக்க வேண்டிய
ஈகை உரமூட்டி...
உள்ளத்திற்கு உயரிய உணர்வூட்டி
ஞான நீரூற்றி...
காயப்படுத்தும் கிளைகளுக்கு
மாற்றுவழி காட்டி...
நீ உயர்வாய் வாழ்வதை
ஊரறியச்செய்து...
நீ கனி தரும்போது அன்னாந்து பார்த்து
நான் வளர்த்த செடி என ஆனந்தம் கொள்பவர்கள்
நம் ஆசிரியர்கள்...