விடுங்கள்.. போகட்டும்
விடுங்கள்.. போகட்டும்


நைட் ஷிப்ட முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான் ஆனந்தன்
வரும் வழியில் ஒரு ஓட்டு வீட்டிலிருந்து “ ஐயோ!....என்னை யாராவது வந்து காப்பாற்றுங்க!……” என்று ஒரு பெண்ணின் அபயக்குரல் கேட்டது.
உடனே சைக்கிளை நிறுத்தி விட்டு, அந்த வீட்டிற்குள் நுழைந்தான் ஆனந்தன். அங்கு ஒரு இளம் பெண் உள் பாவாடையோடு நின்று கொண்டு ஒரு இளைஞனின் பிடியில் இருந்து தப்பிக்கப் போராடிக் கொண்டிருந்தாள்.
ஆனந்தன் நல்ல பலசாலி. அந்த இளைஞனுக்கு மூக்கு, வாய் எல்லாம் உடைத்து விட்டான். வேறு வழியில்லாமல், ஆனந்தனைப் பார்த்து முறைத்துக் கொண்டே அந்த இளைஞன் ஓடி விட்டான்!
காலை எழுந்தவுடன், அக்கம் பக்கம் இரவு நடந்த நிகழ்ச்சியைச் சொல்லி, பெரிய இடத்துப் பிள்ளைகள் எல்லாம் இப்படி கெட்டுப் போகிறார்களே என்று வருத்தப் பட்டான்.
மறுநாள் மாலை. ஆனந்தன் வீட்டில் போலீஸ் படை நுழைந்தது. ரெய்டு. கஞ்சாப் பொட்டலங்களுடன், ஆனந்தனைக் கை விலங்கிட்டு இழுத்துக் கொண்டு போனாங்க!
ify"> “அந்தப் பையன் முன்னாள் அமைச்சர் மகன்… இப்ப ஆட்சியில் இருப்பவர்களுக்கும் அவருடைய ஆதரவு வேண்டியிருக்கு!… நாட்டு நிலவரம் தெரிந்த ஆனந்தன் அந்தப் பையனை அடிக்காமல் வந்திருக்கலாம்!
....பாவம் நம்ம போலீஸ் என்ன செய்யும்?...பெரிய இடத்தில் என்ன சொல்லறாங்களோ… அதைத் தானே அவர்களால் செய்ய முடியும்?......” என்று ஒருவர் புலம்பினார்!
“ .. இந்தக் காலத்தில் செல்வாக்குள்ள அரசியல் வாதிகள் வீட்டு பையன்கள் என்ன செய்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து.....காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்! ... ஏழை வீட்டு பையன்கள் நியாயமான விஷயத்தில் கடுமையாக நடந்து கொண்டாலும்...காவல் துறை சும்மா விடாது! ...இதை பொள்ளாச்சி விஷயத்திலேயே மக்கள் பார்த்தது தானே?...”
“ சரி!... விடுங்கள் போகட்டும்!...எல்லாம் தலைவிதி!.. இந்தக் காலத்தில் நல்லதுக்கு காலம் இல்லை!... என்று ஒரு வயசானவர் தலையில் அடித்துக் கொண்டார்!