துடுப்பதி ரகுநாதன் கோயமுத்தூர்

Drama


3  

துடுப்பதி ரகுநாதன் கோயமுத்தூர்

Drama


கெட்ட பழக்கம்!

கெட்ட பழக்கம்!

1 min 619 1 min 619


 


 எந்த நேரமும் ஹேமா பேஸ் புக்கில் ஆண் நண்பர்களுடன் சாட்டிங் செய்வதில் தன் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தாள்.

 ஸ்ரீதர் எவ்வளவோ சொல்லியும் அவள் அந்த கெட்ட பழக்கத்தை விடுவதாக இல்லை! வளுக்கு இப்பொழுது ஒரு பாய் பிரண்ட் சேகர் என்று. அவனிடம் சாட்டிங் செய்வதில் இந்த ஆறு மாதமாக ஹேமாவின் பொழுது போகிறது.


 “ஹேமு!...சொன்னாக் கேளு…பேஸ் புக் பிரண்ட் கூட எந்த நேரமும் சாட்டிங் என்ற பெயரிலே உன் அந்தரங்க விஷயங்கள் எல்லாம் அவனை நம்பி உளறி மாட்டிக்காதே!...அதை வைத்துக் கொண்டு உன்னிடம் பணம் கறக்கப் பார்ப்பான்!...அல்லது வேறு வகையில் உன்னை உபயோகிக்கப் பார்ப்பான்!”

“!....நீங்களும்!.உங்கள் கேவலமான புத்தியும்...ச்சே!....”


“ சரி!...எப்படியோ தொலை!...” என்று கோபத்துடன் சோபாவிலிருந்து எழுந்து போனான் அவள் கணவன் ஸ்ரீதர்.

 அன்று இன் பாக்ஸில் பேஸ் புக் பிரண்ட் சேகரின் செய்தி “ டியர் ஹேமு!..நீ எனக்கு நல்ல பிரண்ட் தான்!...இந்த ஆறு மாசமா எத்தனையோ உலக விஷயங்களைப் பற்றி நாம் கருத்துப் பரிமாற்றங்கள் செய்திருக்கிறோம்! உன் அழகான போட்டோவைப் பார்த்து உன்னை நேரில் சந்திக்க எவ்வளவோ ஆசைப் பட்டேன்!  


ஆனா நீ நேரில் ஒருமுறை கூட சந்திக்க வர மறுத்து விட்டே!... நீ என் நட்பை வெறும் பொழுது போக்குக்காக மட்டுமே பயன் படுத்த நினைக்கிறே!.....சாரி…..நான் ஒரு சாதாரண பாய் பிரண்ட் தான்! ‘பேஸ் புக் பாய் பிரண்ட்’னா இன்னும் எவ்வளவோ எதிர்பார்ப்புகள் இருக்கும்!...உனக்கு அதெல்லாம் கொஞ்சம் கூட புரியலே! அதனால் நம் நட்பைத் தொடர எனக்கு விருப்பம் இல்லே!... குட் பை! …”

 முக நூலில் கிடைக்கும் நிறைய பாய் பிரண்ட்ஸ் இப்படித் தான் இருப்பார்களோ?

ச்சே!....Rate this content
Log in

More tamil story from துடுப்பதி ரகுநாதன் கோயமுத்தூர்

Similar tamil story from Drama