துடுப்பதி ரகுநாதன் கோயமுத்தூர்

Drama

5.0  

துடுப்பதி ரகுநாதன் கோயமுத்தூர்

Drama

முக்கிய முடிவு

முக்கிய முடிவு

2 mins
550  போகிற போக்கைப் பார்த்தால் சட்டசபைத் தேர்தல் கூட சீக்கிரம் வந்து விடும் போல் தெரிகிறதே! அதனால் எல்லாக் கட்சிகளுமே மிக சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கி விட்டன. நாட்டில் இருக்கும் கட்சிகளிலேயே மிகப் பெரிய கட்சிகளில், அது ஒரு முக்கியமான கட்சியாகும்!

 அந்த கட்சிக்கு மாநில தலைநகரில் பிரமாண்டமான கட்சி அலுவலகம் இருக்கிறது! அன்று அந்தக் கட்சியின் பிரபலத் தலைவர்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து, மிக மிக முக்கியமான முடிவு எடுக்க கூடியிருந்தார்கள்!

 வெளிக் ‘கேட்’ பூட்டப் பட்டு, காவல் கடுமையாகப் போடப் பட்டிருந்தது! கட்சித் தொண்டர்களைக் கூட ஆலோசனைக் கூட்டம் நடக்கும் இடத்திற்கு அனுமதிக்க வில்லை!

 சமீப காலமாக அந்தக் கட்சியோடு கூட்டணி வைப்பதற்கு மற்ற கட்சிகள் ஆர்வம் காட்டாத விஷயமும் நிருபர்களுக்குத் தெரியும்! அந்தக் கட்சி மேலிடம் கூட்டணியில் சில கட்சிகளை இழுக்க பல் வேறு ராஜ தந்திரங்கள் செய்து கொண்டிருப்பதும் பத்திரிகை நிருபர்கள் அறியாதது அல்ல!

 அந்தப் பெரிய கட்சியின் வலையில் எந்தக் கட்சியாவது வேறு வழியில்லாமல் சிக்கியிருக்கிறதோ என்னவோ? அவர்களோடு தொகுதி உடன்பாடு ரகசியமாக செய்து கொண்டு, பின்னர் அறிவிக்கலாம் என்று கட்சி மேலிடம் கருத்து சொல்லியிருக்கலாம். அதனால் அந்த முக்கிய முடிவு எடுக்கும் வரை பத்திரிகை நிருபர்களிடம் அவர்கள் மூச்சுக் காட்ட விரும்ப வில்லை போலும்!

 அவர்கள் செய்யும் ஆலோசனையையும், முக்கிய முடிவையும் தங்கள் பத்திரிகை தான் முதலில் வெளியிட வேண்டுமென்று ஒவ்வொரு பத்திரிகை நிருபர்களும் துடித்துக் கொண்டிருந்தார்கள்!

 அந்த ரகசியக் கூட்டம் முடிந்து வெளியில் வந்த ஒரு பிரமுகர் காரில் ஏறும் பொழுது கூடவே ஓடி ஒரு நிருபர் அந்தக் காரில் ஏறிக் கொண்டார். அந்த நிருபர் அந்தப் பிரமுகருக்கு பல வகையில் வேண்டியவர். அதனால் பிரமுகர் அவரிடம் ஒன்றும் சொல்ல முடிய வில்லை.

“...அப்படி என்ன சார்!....ரகசியம்?...பிளீஸ்!.....”

“அட நீ வேறே!....என்னை விட மாட்டே போலிருக்கு!...என் பேர் வராம பார்த்துக்கோ!....எங்களோடு கூட்டணிக்கு எந்தக் கட்சியும் இனி மேல் வருவதாகத் தெரியவில்லை!....அதனால் நாங்கள் தனித்து நிற்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை!...நிதி நிலமையிலிருந்து அனைத்துப் பிரச்னைகளையும் கட்சித் தலைவர்கள் கலந்து பேசி ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளார்கள்!...”

“ அப்படி என்ன சார் முக்கிய முடிவு எடுத்தீர்கள்?...”

“எப்பாடு பட்டாவது..எவ்வளவு செலவானாலும் சரி...எல்லாத் தொகுதிகளிலும் டிபாசிட்டுகளையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்று!...”

 
Rate this content
Log in

Similar tamil story from Drama