வாக்குவாதம்
வாக்குவாதம்


குமரி மாவட்டம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும், பகுதியைச் சேர்ந்த பி.எஸ்சி. நர்சிங் படித்த தனியார் ஆஸ்பத்திரி நர்சுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. திருமணத்தின்போது மணமகனுக்கு 10 லட்சம் ரொக்கமும், 10 லட்சம் மதிப்புள்ள நகையும் சீதனமாக கொடுக்க மணமகள் வீட்டார் முடிவு செய்தனர்.
கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது மணமகள் வீட்டார் ரூ.5 லட்சம் சீதனத்தை முதல் தவணையாக கொடுத்தனர்.
இன்று (வியாழக்கிழமை) திருமணம் நடத்த முடிவு செய்தனர்.
இருவரது வீட்டிலும் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது.
அழைப்பிதழ்கள் அச்சடித்து நண்பர்கள், உறவினர்களுக்கு கொடுத்தனர்.
இதற்கிடையே கடந்த 4-ந் தேதி மணப்பெண்ணின் செல்போனில் சென்னையில் இருந்து ஒரு பெண் பேசினாள். மணப்பெண்ணிடம், நீங்கள் திருமணம் செய்ய இருக்கும் நபர், என்னிடம் கடந்த 2 ஆண்டுகளாக பழகினார்.
நாங்கள் பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றி உள்ளோம்.
அவர் என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறியதால் நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளோம்.
என்னை தவிர இன்னொரு பெண்ணுக்கும், அவருக்கும் தொடர்பு உண்டு.
இப்போது உங்களை திருமணம் செய்து கொள்ளப்போகிறார்.
அவரிடம் நீங்கள் ஏமாந்து விடாதீர்கள் என்று கண்ணீர் மல்க அந்த பெண் கூறினாள்.
மேலும், நீங்கள் நம்பவில்லை என்றால் அந்த நபரும், நானும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன் என்று கூறிவிட்டு இருவரும் நெருக்கமாக இருக்கும் ஏராளமான புகைப் படங்களை மணப்பெண்ணின் ‘வாட்ஸ்அப்’புக்கு அனுப்பிவைத்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மணப்பெண், அந்த புகைப்படங்களை தனது பெற்றோரிடம் காட்டினார்.
இதுபற்றி மணமகன் வீட்டாரிடம் கூறி திருமணத்தை நிறுத்துமாறு கூறினர்.
ஆனால் அவர்கள் மறுத்தனர்.
இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து மணப்பெண்ணின் பெற்றோர் குலசேகரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மணமகன் வீட்டார் திருமணத்தை உடனே நிறுத்தி விடுவதாகவும், மணமகள் வீட்டார் கொடுத்த நகை-பணத்தை திரும்ப கொடுத்து விடுவதாகவும் கூறினர்.