உறவோடு தீபாவளி
உறவோடு தீபாவளி
இந்த உலகத்தில் உள்ள
அனைத்து ஜீவன்களும்....
அன்பு என்னும் உணர்வில்
அனைவரும் அகமகிழ்ந்து.....
உறவுகள் என்ற பந்தத்தில்
ஒன்றாக இணைந்து....
குடும்பம் என்ற அமைப்பில்
மகிழ்ச்சியாக வாழ்ந்து...
சொந்தங்களின் பாசத்தில்
உள்ளம் நெகிழ்ந்து...
இருக்கின்றனர் அனைவரும்...
கூட்டு குடும்பங்கள் பிரிந்தாலும்
உறவுகள் பிரிவதில்லை....
அவர்களின் பாச பிணைப்புகள்
என்றும் தொடர்கின்றன....
என் பெயர் ஜீவிதா.... நான் இப்பொழுது பள்ளியின் இறுதி ஆண்டு படிக்கிறேன்..... ஹிஹி அதாங்க பன்னிரண்டாம் வகுப்பு.... கொஞ்சம் ஓரளவுக்கு படிப்பேன்.... சரி அதை விடுங்க.. என் அப்பாவின் வேலை காரணமாக... நாங்கள் பெங்களூரில் தங்கியிருக்கிறோம்... என் வீட்டில் நான், என் தங்கச்சி, அப்பா, அம்மா...
இப்ப நாங்க எல்லாரும் டிரெயினில் போய்க் கொண்டு இருக்கிறோம்....
இதோ இருங்க... இவள் என் அ(எ)ருமை தங்கச்சி பெயர் சவிதா மேடம் பத்தாவது படிக்கிறாள்....
இப்ப நாங்க எல்லாரும் எங்கே போகிறோம் என்று நினைக்கிறீர்களா தீபாவளி வருதுல அதான்... எங்கள் சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு செல்கிறோம்.....
அந்தப்பட்டி இந்தப்பட்டி அதாங்க எங்க ஆண்டிப்பட்டி எங்களின் சொந்த மண்ணு.....
பெங்களூரு போயி தேனி வந்தது
டும்டும்டும்டும்.....
டிரெயின் போயி பஸ் வந்தது
டும்டும்டும்டும்.....
தேனி போயி ஆண்டிப்பட்டி வந்தது
டும்டும்டும்டும்.....
பஸ் போயி வீடு வந்துருச்சு🤣🤣
டும்டும்டும்டும்.......
நம்மளோட சொந்த ஊருக்கு வந்தாலே சந்தோஷமும் கூட வந்துரும்.... அதுதான் சொந்த ஊருக்கு உள்ள தனிக்கலை....
இங்க வைகை ஆறு சலசலன்னு ஓடும் பாருங்க.... ப்பா... செமையா இருக்கும்.... சொல்ல வார்த்தைகளே இருக்காது... அவ்வளவு அழகா இருக்கும்.
ஆற்றில் இறங்கி அந்தச் சில்லுன்னு இருக்கிற தண்ணியில குதிச்சு ஆட்டம் ஆடி விளையாட தோனும்....
எங்க ஊரு... எங்கே பார்த்தாலும் பச்சை பசேலென்று வயலும் வரப்புமாய் கண்களுக்கு குளிர்ச்சித் தரும்.....
அதோ அங்கே இருக்கிறதே... உங்களுக்கு தெரிகிறதா... ஒரு பெரிய வீடு... அதுதாங்க எங்க தாத்தா பாட்டி வீடு....
அந்த வீட்டில நிறைய ஆட்டுக் குட்டி, முயல் குட்டி, வாத்து, கோழி, மாடுன்னு எல்லாமே இருக்கும்...
நான் இங்கே வந்தாலே இதுங்க கூட எல்லாம் நல்லா விளையாடுவேன்... எல்லாத்துக்கும் செல்ல பெயர்களும் உண்டு....
வாங்க வாங்க இப்ப எங்கள் வீட்டுக்குள்ள போகலாம்.... எனக்கு பிடித்த தீபாவளியை கொண்டாட வேண்டும்....
சீக்கிரம் வாங்க ஏனென்றால் என்னுடைய மொத்த குடும்பமும் உள்ளே தான் இருக்காங்க.....
என் தாத்தா, பாட்டி, பெரியம்மா, பெரியப்பா, சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா, அண்ணா, அண்ணி, அக்கா, மாமா, இவர்களின் குட்டி வாண்டுகள், என்னோட தங்கச்சிகள், தம்பிகள் என்று ஒரு பெரிய பட்டாளமே இருக்கிறது....
எல்லாரும் தீபாவளி அப்போதான் ஒன்றாக இருப்போம்.... ஒன்றாக கும்மியடித்து ஆட்டம் பாட்டம் ஒரே கொண்டாட்டம் என்று அனைவரும் மகிழ்ச்சியாக இருப்போம்....
தீபாவளி அன்று,
எல்லாரும் காலையில் எழுந்து தலை விளக்கெண்ணெய் தேய்த்து குளித்து.... புத்தாடைகள் அணிந்து மகிழ்ச்சியாக பட்டாசு வெடித்தோம்....
மறுநாள் அமாவாசை,
எங்கள் வீட்டில் அன்று தான் சாமி கும்பிடுவார்கள்... பெரியவர்களை எல்லாம் பல்லில் பச்சைத் தண்ணீர் கூட படாமல் விரதம் இருப்பார்கள்....
எல்லா வருடம் போல இந்த வருடமும் என் பாட்டியும் விரதம் இருப்பேன் என்று அடம் பிடித்தார்.
"பாட்டி எதுக்கு நீங்கள் இந்த வயதிலும் விரதம் இருக்கீங்க " என்று அனைவரும் மாறி மாறி கேள்வி எழுப்பினார்.
அதற்கு என் பாட்டியோ, "இந்த விரதத்தை நான் கண்டிப்பாக இருப்பேன்" என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.
பிறகு என்ன, எல்லாரும் கப்சிப் என்று இருந்து விட்டனர்.
நான் என் பாட்டியிடம் கேட்டேன்.
"எதற்காக பாட்டி இந்த விரதம் இருக்கனும்? இந்த விரதம் இருந்து நமக்கு என்ன பயன்? நீங்கள் இப்படி முடியாமல் விரதம் இருந்தே ஆகனுமா?"
அப்போது என்னுடைய கூட்டு களவாணிகள் (தம்பி தங்கை மற்றும் வாண்டுகள்) எல்லாம் பாட்டியை சுற்றி வட்டமாக உட்கார்ந்து கொண்டோம்.... நான் தான் அந்த கூட்டத்தின் தலைவியாக்கும்....
அதற்கு அவர் சிரித்துவிட்டு, "ஜீவி கண்ணு இந்த விரதத்தின் பெயர் கேதார கௌரி விரதம்..."
நாங்கள் எல்லோரும் பாட்டி கதை சொல்ல போறாங்க என்று அவங்க வாயவே பாத்துகிட்டு இருந்தோம்.....
"இந்த விரதம் இருந்து சிவனை பூஜித்து தான் அந்த பார்வதி தேவி ஈஸ்வரனின் இடப்பக்க உடலை பெற்று அர்த்தநாரீஸ்வரர் என்று எல்லாராலும் போற்றி வணங்கப் பட்டார்கள்.
இந்த விரதத்தை புரட்டாசி மாதத்தில் வருகிற வளர்பிறையான தசமி திதி முதல் ஐப்பசி மாத அமாவாசை வரை 21 நாட்கள் சுத்த பத்தமா இருந்து விரதம் இருக்கனும் என்று ஐதிகம் அப்படி முடியாதவர்கள் அமாவாசை அன்றைக்கு மட்டும் கூட இருந்து வழிப்படலாம். இப்ப எல்லாரும் இதை தான் கடைபிடித்து வராங்க...
இந்த விரதத்தை எல்லாரும் வெவ்வேறு வகையான முறையில் பண்ணுவாங்க... அதாவது அவங்க அவங்க குடும்பத்து வழக்கப்படி செய்வாங்க...
இந்த விரதத்தில் நாம எச்சில் கூட விழுங்க கூடாது என்று சொல்லுவாங்க...
இதை வருடா வருடம் செய்துகிட்டு வரணும் நடுவில் எல்லாம் விட்டுவிட கூடாது...
இந்த விரதத்தை ஆண் பெண் அனைவரும் இருக்கலாம்...
இதனின் பயன்கள்... நம்ம குடும்ப நன்மைக்கு, கணவர் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், கன்னிப்பெண்கள் நல்ல கணவன் அமைவதற்கு, குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாக, எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்று இப்படி நிறைய நன்மைகள் இருக்கு.....
சரி சரி போங்க சாமி கும்பிட நேரம் ஆச்சு அதன் பிறகு சாப்பிட்டு போய் பட்டாசு வெடிங்க போங்க" என்று அனைவரையும் அனுப்பி வைத்தார் பாட்டி.
பின்னர், எல்லாரும் சாமி கும்பிட்டு விரதத்தை முடித்துக் கொண்டு சாப்பிட்டு பட்டாசு வெடித்தோம்......
எல்லா வருடம் போல இந்த வருடமும் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தோம்.....
அதாங்க ஒரு பாட்டு கூட வருமே.... ஹான்...
பாசங்கள் நேசங்கள்....
ஏதுமே இன்றி வாழ்ந்திடும்
வாழ்க்கையோ....
வாழ்க்கையில்லை....
பிரிந்தே நாம்..
வாழ்கின்ற போதிலும்...
நினைவுகள் நம்மை
சேர்த்திடுமே....
அழகாய் பூ
பூத்திடவேண்டியே...
வேர்கள் நீர் ஈர்த்திடுமே....
இன்னும் ஓர் ஜென்மம்....
அது கிடைத்தாலும் கூட....
இது போல் ஒரு சொந்தம்..
கிடைத்திட நம் வரம் தேவை....
யார் என்ன சொன்னாலும்...
யார் என்ன செஞ்சாலும்....
சொந்தமும் பந்தமும்...
கூட வரும்......
நாம் வந்த பின்னாலும்.....
நாம் சென்ற பின்னாலும்.....
சொந்தமும் பந்தமும்....
பேரு சொல்லும்.....
_____முற்றும்_____
இது ஒரு கற்பனையில் எழுதப்பட்ட பதிவே...
யார் மனதையும் புண்படுத்த அல்ல....
அனைத்தும் என் கற்பனையே....
