Chandhru Flimist

Drama Romance Classics

5  

Chandhru Flimist

Drama Romance Classics

தீராத இரவுகள்

தீராத இரவுகள்

2 mins
902



குழந்தைகள் மட்டுமில்லை -

காதலர்கள் கூட புதிதாக பிறந்தவர்கள்தான் !


எல்லா உணர்வுகளும்,

எப்பொழுதும் நமது கட்டுப்பாட்டிலேயே இருப்பதில்லை.

சில நேரங்களில் கட்டவிழ்க்கப்படும் உணர்வுகள் கூட பேரழகானதுதான் .



வசியன் ஒரு சிற்பி .

இருபத்து நான்கு வயதை எட்டிப்பார்த்த,

ஒரு இளமையினும் வலிமையான ஆண்.


பெருமலையில் தேன் எடுத்துக்கொண்டு,

குதிரைக்கு புல் அறுத்துக்கொண்டு,

தன் குடில் புகுகிறான் - பெருங்களைப்போடு .


திடீரென, காற்றின் அலைவரிசையில்,

தேன் தெளித்த வாசம் உணர்கிறான்.

அவன் குடில்கூரையில்

பூவின் - ஆடம்பர மாயவாசம் நுகர்கிறான்.

அருகில் இருகாற்ச்சலங்கையின் ஓசை உணர்ந்ததும்,

ஒரு ஒப்பில்லா மயக்கம் -

அவனது உடல் புகுந்து,

உள்ளம் நிறைந்து,

தட்டித்தழும்பும் ஒரு பேரின்ப சுழலுக்குள் ஓய்ந்து ஒழிந்து மீள்கிறான் .


மெதுவாக திரையை அகற்றி ,

அவன் உயிரை பற்றவைக்க,

காற்றை மெதுமெதுவாக

விலக்கிவிட்டுக்கொண்டே

உள்ளிருந்து வருகிறாள் நிழலி.


அவள்,

மனித இனத்தில் மாறிப்பிறந்த

ஒரு இருபது வயது தேன்பூ தான் .

அவள் அருகில் நின்று நுகர்ந்து பார்த்தால் -

அத்தனையும் தேன் தெளித்து கடைந்த மாயவாசம் தான் .


அவள் விரல் பிடித்து பார்த்தால் ,

ஆண்மையின் ஆசைகளுக்கு

உயிர் வந்துவிடும் .


அவள் தான் நிழலி - வசியனின் மனைவி .


ஒரு கூரைக்குடிலுக்குள்,

இரு தாமரைகள் பூத்திருப்பதைபோலவே வாழ்ந்திருந்தார்கள்.








ஒரு நாள் ,

அந்நகரத்தில் செல்வந்தன் ஒருவன்,

ஆள்மயக்கும் வசீகரமிகு சிலை ஒன்றை ,

எனக்காக நீங்கள் வடித்துக்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு புறப்பட்டார் .



மறுநாள் மாலையில்,

வெகுகுளிரோடு,

மழையின் ஆரவாரம் ஒலியோங்கி பெய்துகொண்டிருந்தது .


விளக்கொன்றை கையிலெடுத்து,

வசியன் அருகில் வந்தாள் நிழலி .

சாணம் மொழிகிய தரையில் அமர்ந்திருந்த அவனோடு

உயிர் மொழுகினால் அவள் .


ஒளியின் மீது இருள் பூசிக்கொண்டிருந்தது இரவு .


வசியனின் சிந்தனையெல்லாம்

சிலை செய்வதை பற்றியே இருந்தது .


தன் கற்பனையை அங்குமிங்கும் அலைமோதவிட்டான்.

ஆனாலும் வசீகர சிந்தனைகள் வாய்க்கவேயில்லை.






ஆனால் இப்புறம் ,

நிலாவின் ஒளிகீற்றை விட,

நிழலியின் அகக்கீற்று பேரழகாய் ஒளிர்ந்திருந்தது .


கனிச்சாறுகளை மென்மையாய் கடைந்து,

ஒன்றுதிரட்டி ஒட்டிவைத்தது போலவே - அவள் உதடுகள் அடர்ந்திருந்தது.



புதிய பூக்களை பறித்து

அதற்கு பெண்மை பூசிமொழுகி,

அதில் ஆணவமான அழகு தெளித்தது போலவே அசைந்திருந்தது,

அவள் இருபுற மார்பும்.


அவள் இடையை சொல்லவேண்டும் என்றால்,

அது கவர்ந்திழுக்கும் மென்பனிபடலம் ,

முகம் புதைத்து மூச்சிழுக்க ஆர்வம் தரும் வாசக்கொடி .


விரல்கள், நீளப்பூக்கள்,

தேகங்கள், தாமரையின் தாள்கள்,

கண்கள்,கவிதை எழுதி ஒட்டிவைத்த கருவட்ட காகிதங்கள்,

இன்னும் சில ரகசிய மறைவிடவழகுகள்,

நாவின் கீறல்களுக்கு இசை தரும் ரகசியப்பெட்டகங்களும் சில.







இப்படி ஒரு அழகுக்காடு,

வசியன் அருகில் படர்ந்து கிடந்தாள்.


சிலை சிந்தனை - பறந்து போனது,

இவள் சிந்தனை - படர்ந்துபோனது.


அவள் விரல் பிடித்தான்,

அவள் விடு என்றாள்,

அவன் நெருங்கி வந்தான்,

அவள் விலகி ஒழிந்தாள்,

அவள் இடை இழுத்தான்,

அதை இடைமரித்தாள்,

நகர்ந்து நகர்ந்து

ஒளியே ஊடுருவாத இருளுக்குள் புதைந்து போனார்கள்.


அவள் உதடுகள் முழுவதும்

அவன் முத்தம் கொட்டிக்கொடுத்தான்.

அவள் போதும் என்று சொல்லாமல் பங்கெடுத்தாள்.


வசியனின் ஐவிரல்கள்

நிழலியின் மார்பை படர்ந்திருந்தது.

அவள் முகமெங்கும் நாணமே புகுந்திருந்தது.






அவளுக்குள்,

பெருமூச்சு மீண்டும் மீண்டும் பிறந்துகொண்டே இருந்தது


வசியன் , அவன் காதலை அவளிடம் புதுவிதமான மொழியில் ஒப்பித்துக்கொண்டிருந்தான்.


அவள் கூட, உடல் வழியாக கேட்டுக்கொண்டுதான் இருந்தாள்.


ஆடையில்லா பூக்களை போல,

திரையில்லா பிறையை போல,

உடல் உயிர் மறைக்காமல் ஒன்றிக்கிடந்தார்கள்.





ஒலியில்லை

ஆனால் மொழி இருந்தது.

ஆடை இல்லை

ஆனால் உடல் இருந்தது.

வரி இல்லை

ஆனால் இசை இருந்தது.



காற்றுகூட புகாத அளவுக்கு,

பின்னலிட்டு பிரியாதிருந்தார்கள்.



மோகம் என்பது காதலின் உயர்பிரிவு.

அது காதலோடு நிகழுமாயின்

அதுவே பேரழகு.


இரவுகளை இப்படியே ஒருவருக்குள் ஒருவராய்

தீர்த்துக்கொண்டிருந்தார்கள் .


அவளை வர்ணித்துக்கொண்டே இருந்தான்.

அதனை ரசித்துக்கொண்டே கிடந்தாள்.


"நீ அழகி" என்றான்.

அதற்க்கு நீங்களே காரணம் என்றாள்.

எப்படி, என்றான் .

உங்களுக்கு நிகராக, என்னை நீங்கள் காதலிக்கிறீர்கள் அல்லவா,

அதனால் தான் என் அழகிற்கு காரணம் நீங்கள் என்றேன், என்றாள் !


மீண்டும் ஒரு கட்டியணைப்புகளும்,

கலவர ஊடல்களும் அரங்கேறின.

அமுதகாலம் உருவாகின.


"இரவே இன்னும் கொஞ்சம் தீராதிரு" என்றன -

இரு உடலும் உயிரும் உள்ளமும்.







பருகப்பருக தீராதது தான் பேராசை .


வசியன் நிழலி - இக்கணம் பேராசையின் விளிம்பில்,

பெருங்காதல் கொண்டு கிடந்தார்கள்.


மெல்ல மெல்ல,

அவள் அழகான அதிகாரங்களுக்குள் அடங்கிப்போனான் வசியன் .


அவள் கேட்பதையெல்லாம் கொடுத்தான் முத்தவகையில்.

அவள் கேட்க்காததையும் தூண்டிவிட்டான்

வேறு வகையில்.



அவளை அவனுக்குள் அள்ளி அடைத்துக்கொண்டு,

அகிலம் மறக்கக்கொண்டு,

ஊடலின் ஆழத்தை ஒட்டுமொத்தமாக சுருட்டிபறிக்க ,

அந்த நீள்இரவை அப்படியே விழுங்கிக்கொண்டிருந்தான்.


இதற்க்கு பின் - வசியன் வடிக்கும் சிலை வசீகரம் இல்லாது போகுமா என்ன !


ஆடையில்லா அவளை நோக்கியே –

சிலைக்கு கற்பனை பெருக்கிக்கொண்டான் .


உடலின் ஒவ்வொரு பகுதியையும்,

அவள் அளவிற்க்கே அடிபிறழாமல் அமைத்தான்.



சிலையா இல்லை நிழலியா என்று சந்தேகிக்கும் அளவிற்கு,

நிஜம் பூண்டிருந்தது அந்த சிலை.


விலையேறிப்போயிருந்தது -

சிலைமீது செல்வந்தனுக்கும்,

நிழலியின் மீது வசியனுக்கும்.


ஊடலின் ஒவ்வொரு நகர்வுகளும் – பேரழகானது,

காதல் கலந்திருக்கும்பொழுதெல்லாம் !


மீண்டும் ஒரு சிலை தேடி,

வேறெரு செல்வந்தன்

வசியனை காண வருகிறான் - சொல்கிறான் - செல்கிறான் !


வசியன் அவளை நோக்கினான் !

அவளோ இருளை தேடினாள் !





Rate this content
Log in

Similar tamil story from Drama