Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

anuradha nazeer

Crime

5.0  

anuradha nazeer

Crime

தீ

தீ

1 min
2.8K


செண்பகராமன்புதூர் அருகே துணை மின்நிலையம் பகுதியில் வசிப்பவர் கணேசபெருமாள் (வயது 43). இவர் அப்டா மார்க்கெட்டில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். நேற்று அதிகாலை கணேசபெருமாளின் வீட்டில் மின்சாரம் தடைபட்டது. சிறிது நேரத்தில் திடீரென வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் மீது சரமாரியாக கற்கள் வந்து விழுந்தன. இதில் கண்ணாடிகள் உடைந்து விழுந்தன.


இதனால், அதிர்ச்சி அடைந்த கணேச பெருமாள் பக்கத்து வீட்டுக்காரருக்கு தகவல் தெரிவித்தார். பக்கத்து வீட்டுக்காரர் வந்ததும் கணேச பெருமாளும் வெளியே வந்து பார்த்தார். மோட்டார் சைக்கிள் எரிப்பு


அப்போது வீட்டின் முன் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டு இருந்தது. மேலும், வீட்டில் வளர்த்து வந்த நாய்க்கும் விஷம் வைக்கப்பட்டு இருந்தது. அதாவது, இரவில் வீட்டுக்கு வந்த மர்ம நபர்களை பார்த்து நாய் குரைத்துள்ளது. இதனால் ஏதோ ஒரு உணவில் விஷம் கலந்து நாய்க்கு கொடுத்துள்ளனர்.


அதனை சாப்பிட்டதும் நாய் மயங்கி விட்டது. நாய் மயங்கிய சமயத்தில், மர்ம நபர்கள் வியாபாரியை அச்சுறுத்தும் வகையில் அவருடைய வீட்டின் மீது கற்களை வீசியும், மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து எரித்து விட்டு தப்பி ஓடியதும் தெரியவந்தது.

முன்விரோத தகராறில் இந்த தாக்குதலை நடத்திவீட்டை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொள்ளையடிப்பதற்கு கூடவா வினோதமான காரணங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது. கொள்ளையடிப்பதற்கு முன் ஒரு விதமான திகிலை ஏற்படுத்திஅவரை பயமுறுத்தி உள்ளார்கள்.


Rate this content
Log in

More tamil story from anuradha nazeer

Similar tamil story from Crime