Saravanan P

Abstract Drama Classics

5  

Saravanan P

Abstract Drama Classics

ஒருவனின் கதை அத்தியாயம் 1

ஒருவனின் கதை அத்தியாயம் 1

2 mins
514


தொடர்கதை 


இக்கதையில் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே வாசகர்களே.


அத்தியாயம் 1 மாமழை 


2002


மார்க்கெட் ஏரியா அன்று ஜே ஜே என கூட்டமாக இருந்தது.


பொங்கல் பண்டிக்கை நெருங்கி வருவதால் கூட்டம் அலைமோதியது.


மாசி தன் கடைக்கு சென்று தன் ஷிப்ட் வேலையை பார்க்க ஆரம்பித்தார்.


கடைக்கு வந்த ஒரு நபர் ராஜேஷ் குமார் நாவல் குடு பா என கேட்டு முடிக்க இன்னொரு வயதான நபர் தம்பி சீவல் பாக்கெட் கேட்க அதற்குள் இன்னொரு நபர் வந்து மதிய நியூஸ் பேப்பர் ஒன்னு என கேட்க மாசி கடகடவென என கேட்டதை கொடுத்து சரியாக காசு வாங்கி கல்லாவில் போட்டார்.


பின்பு ஒரு சிறு இடைவெளிக்கு யாரும் வரவில்லை,மாசி டீ கடையில் டீ சொல்ல அந்த கடை நபர் சிறிது நேரத்தில் வந்து டீயை கொடுத்து விட்டு சென்றார்.


அப்பொழுது கடைக்கு வந்த ஒரு பெண்மணி கோயிலுக்கு காணிக்கை கேட்க மாசியும் அந்த காசை உண்டியலில் போட்டு விட்டு டீயை குடித்து கொண்டே வெளியே பார்க்க வானம் மேகமூட்டமாக இருந்தது.


திடீரென மழை கொட்ட ஆரம்பிக்க அனைவரும் மாசியின் பெட்டி கடை முன் பந்தலில் வந்து நின்றனர்.


கொட்டிய மழையில் ரோட்டில் கடை போட்டிருந்த அனைவரும் வேக வேகமாக பொருட்களை மூடினர்.


மாசிக்கு தோன்றியது "மழை எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்குறது இல்லை" என்பதுதான்.


பின்பு மதியம் மணி 3:00 ஐ தாண்ட ஆள் வந்தவுடன் மாசி வீட்டிற்கு கிளம்பினார்.


பையில் சிகரட் பாக்கெட் ஒன்றை வைத்து கொண்டு சைக்கிளில் வீட்டிற்கு கிளம்பினார்.


அண்ணன் வீட்டில் வளர்ந்து வந்த மாசி தன் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்.


வேறு என்ன கல்யாண ஆசை வந்துவிட்டது வாசகரே இந்த கதாபாத்திரத்திற்கு.


வயசு 29 ஆச்சு, குடிப்பழக்கம்,சிகரெட் பயன்பாடு இருக்கு,


மனிதன் அப்படினா கெட்ட பழக்கம் இருக்கனும்னு யாருங்க சொன்னா,நல்லா இருக்குற ஆளுங்களா இவங்க கண்ணுக்கு தெரிய மாட்டாங்களா என்ன? இதே ஒரு நல்ல விஷயத்தை நமக்கு தெரிஞ்சவங்க கிட்ட இருந்து கத்துக்க நமக்கு தோணுமா.




மாசி பிறந்த போதே அந்த பழக்கத்துடன் பிறக்கல.



கெட்டபழக்கம் நம்மளா கத்துக்குறது, இல்லைனா நண்பர்கள் நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறது.


நண்பர்கள் மட்டும் இப்படி பண்ண மாட்டங்க,சினிமாகாரங்க,விளையாட்டு வீரர்கள் எல்லாரும் சில நேரத்தில இந்த மாதிரி நமக்கு கெட்ட விஷயத்தை நமக்கு பழக்கப்படுத்த முயற்சிப்பாங்க.


கெட்ட விசயத்தை யாரு நமக்கு சொன்னாலும்,நம்ம மனசே ஒரு தடவை தானே அப்படினு நினைச்சாலும் மனசுல ஒரு முடிவோட சந்திரமுகி பிரபு மாதிரி வேண்டாம் அப்படினு வேட்டையாபுரம் அரண்மனை அலற மாதிரி சொல்லனும்.


கதைக்கு திரும்புவோம்.


மாசி நல்ல பழக்கமும் இருக்கு,உதவுற மனசு,கண்மூடிதனமா ஒருத்தரு மேல அன்பு வைக்கிறது.


பிள்ளையார் கோயிலுக்கு சாயங்காலம் போய் அமர்ந்து பிள்ளையார் அப்பா,எனக்கு நல்ல இல்வாழ்க்கை அமையனும்,நல்ல பிள்ளைங்க கிடைக்கனும் அப்படினு தொடர்ந்து நாலாவது வாரம் வேண்டுனாரு நம்ம நண்பர்.


வீட்டுக்கு போன மாசிக்கு அவர் அண்ணே உக்கந்து கணக்கு பாத்துக்கிட்டே இருந்தவரு அவரை நிக்க சொல்லி "நாளைக்கு உனக்கு பொண்ணு பாக்க போறோம்,ரெடி ஆ இரு" என சொல்லிட்டு எந்திருச்சு போனாரு.


மாசி செவிங் பண்ண கடைக்கு கிளம்பினார்.


ஒருவனின் கதை அத்தியாயம் 2 என தொடரும்.


Rate this content
Log in

Similar tamil story from Abstract