மணி மேகலை
மணி மேகலை


சங்ககாலத்தின் இறுதியில் கடைச்சங்க காலத்தில் தோன்றிய நூல்களில் சமயம் சார்ந்த வரலாற்றைப் படைத்ததில், முதன்மையான முதல் காப்பியமானது, மணிமேகலை! அதுகாலம் வரை, புராணங்கள், வாழ்க்கை வழிகாட்டும் கதைகளே ஆண்டுவந்த தமிழ் இலக்கிய உலகில், முதன்முறையாக, ஒரு சாதாரணப் பெண்மணியை, அதுவும் கணிகையர் எனும் நடன மாந்தர் குலத்தில் பிறந்த பெண்ணை கதையின் நாயகியாக, பெரும்பான்மை இந்து சமய நெறிகளுக்கு மாறான பவுத்த மதத்தைப் பின்புலமாகக் கொண்டு, சமயம் சாதி பாடுபாடு, ஆண் மேலாதிக்கம் போன்றவை உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் படைத்தார் சீத்தலைச் சாத்தனார் என்றால், அது மிகவும் தைரியமான ஒரு செயல் என்பதைவிட, புரட்சிகரமான செயல் என்பதே, சரியாக இருக்கும்
சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாகக் கருதப்படும் மணிமேகலை, துறவறத்தைக் கருப்பொருளாகக் கொண்டதாகும்.