முள் பாதை
முள் பாதை


அது மலை மீது இருக்கும் ஓர் ஊர். அங்கிருந்து 5 கிலோமீட்டர் இறங்கி வந்தால்தான், உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல முடியும். பேருந்து வசதி கிடையாது. அதனால், நிறைய பிள்ளைகள் ஆரம்பப் பள்ளியுடன் நின்றுவிடுவார்கள். அந்த ஊரிலிருந்து சங்கீதா, ஆறாம் வகுப்புக்குச் செல்கிறாள்.
‘‘பொம்பளை புள்ளையை எதுக்கு இவ்வளவு தூரம் அனுப்பணும்?’’ என்று மற்றவர்கள் பேசியதை சங்கீதாவின் பெற்றோர் பொருட்படுத்தவில்லை.
‘‘நான் போய்ட்டு வரேன்ம்மா’’ என்ற சங்கீதா, புத்தகப் பையில் சிறிய வெட்டுக்கத்தியையும் எடுத்துக்கொண்டாள். ‘‘இது எதுக்கு?’’ என்று அக்கம்பக்கத்தில் கேட்டார்கள்.
‘‘போற பாதையில இருக்கிற முள் செடிகளை வெட்டி விலக்கிட்டே போவேன். என் பின்னாடி வர்றவங்க சிரமம் இல்லாம வரட்டும்’’ என்றாள் சங்கீதா.