காற்றின் மொழி
காற்றின் மொழி
விடுமுறை பரபரப்புகள் முடிந்து ஜூன் முதல் தேதி... காற்றின் வழியே ஊட்டியும் கொடைக்கானலும் பேசிக்கிட்டாங்க. ‘‘என்னப்பா கொடை, உன் இடத்துக்கு வந்த கூட்டமெல்லாம் போயாச்சா?’’
‘‘ஆமாம் ஊட்டி... இப்போதான் நிம்மதியா மூச்சு விட முடியுது. மனுஷங்க நம்மளை ரசிக்க வர்றாங்க, ஓய்வு எடுக்கிறாங்க. எல்லாம் சரி. ஆனா, நம்ம மேலேயே குப்பையைக் கொட்டி, தண்ணீரை வீணாக்கி... படாத பாடு படுத்திடறாங்க’’
‘‘கொஞ்சம் பொறுத்துக்க கொடை. பெரியவங்களோட வந்த குழந்தைகள் இதுபத்தி புரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டாங்க. கொஞ்ச வருஷத்துல அவங்க நம்மை நல்லபடியா கவனிச்சுப்பாங்க’’ என்றது ஊட்டி.
அந்தக் காற்றின் மொழி, உங்களுக்குக் கேட்டுச்சா ஃப்ரெண்ட்ஸ்!