மலை உச்சியில் ஓர் மர்ம பங்களா (அத்தியாயம் 2)
மலை உச்சியில் ஓர் மர்ம பங்களா (அத்தியாயம் 2)
மலை உச்சியில் ஓர் மர்ம பங்களா - தொடர் மர்ம நாவல்
அத்தியாயம் இரண்டு:
அர்த்த ராத்திரியில் அலறல்.....
1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம் காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் காந்தி, நேரு போன்றவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. அச்சமயத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த மவுண்ட் பேட்டன் பிரபு அவர்கள் இங்கிலாந்து ராணிக்கு பாரத விடுதலைப் போராட்டத்தின் தீவிரத்தைப் பற்றியும், பாரதத்திற்கு வழங்க வேண்டிய அவசியம் பற்றியும் விரிவாக செய்தி அனுப்பினார். இதனால் லண்டனில் விக்டோரியா மகாராணியும் பாரதத்திற்கு சுதந்திரம் வழங்க ஆணை பிறப்பித்தார். 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் விடுதலை வழங்க முடிவாயிற்று. எந்த நேரத்திலும் பாரதத்தில் கலவரம் ஆகும் என்று ஆங்கிகலேயர்கள் நினைத்ததால் துரைகள் அனைவரும் இங்கிலாந்து புறப்பட ஆயத்தமானார்கள்.
ஊட்டியின் துரைஜான்பாலும் தன் குடும்பத்தினருடன் இங்கிலாந்து செல்ல முடிவெடுத்தார். எனவே அலுவலகம் சென்று அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார். மனைவி எமிலியை அழைத்து விபரத்தைச் சொன்னதும் துரைசானி தன் வேலையாட்களைக் கூப்பிட்டு தான் ஆசை ஆசையாக சேகரித்த இந்திய கலைப் பொருட்கள், அழகான வேலைப்பாட்டுடன் கூடிய பீங்கான் தட்டுகள், கோப்பைகள் அனைத்தையும் பேக் செய்யச் சொன்னார். பதினாறே வயதான தன் அழகு மகள் அறைக்குச் சென்று அவளையும் புறப்படத் தயாராகுமாறு சொன்னார். துரையும், துரைசானியும் வேலையாட்களுடன் சேர்ந்து புறப்பாட்டிற்கான ஏற்பாட்டில் மும்முரமாக இருந்தனர். ஆனால் அழகு தேவதை ஏஞ்சலா மிகவும் உறைந்து போய் நின்றாள்.
ஆம்.... பருவ வயதில் எல்லோருக்கும் ஏற்படும் காதல் வியாதி அவளுக்குள் ஏற்பட்டதால் அவள் தன் எண்ணங்களை வெளிப்படுத்த முடியாது தவித்தாள். ஆரம்பத்தில் இங்கிலாந்தை விட்டு விட்டு வர ஏஞ்சலாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை.அம்மா அப்பா இவர்களின் கட்டாயத்தால் தான் அவள் இந்தியாவிற்கு வருகை தந்தாள். இந்தியா வந்தபின் ஊட்டி மலையின் அழகையும் தட்பவெப்பத்தையும் கண்டபின் அவள் தன் எண்ணங்களை மாற்றிக் கொண்டாள். மலை உச்சியில் அமைந்த புதுமையான மாடர்ன் பங்களாவின் பால்கனியும் அங்கிருந்து காணப்படும் பள்ளத்தாக்கின் அழகையும் கண்டபின் ஏஞ்சலா இங்கிலாந்தை மறந்துவிட்டாள்.
ஊட்டி அழகைத் தினமும் காலையும் மாலையும் ரசித்து ரசித்து ஆனந்தப்பட்ட அந்த அழகு தேவதையின் அலறல் அர்த்த ராத்திரியில் கேட்டது. மாடர்ன் பங்களாவே அலறல் கேட்டு ஆடிப் போனது.துரை,துரைசானி ,பங்கள பங்களா வேலையாட்கள் மற்றும் பங்களாவைச் சுற்றி வாழும் மக்கள் அனைவரும் அலறல் கேட்டு ஆடிப் போய் தூக்கம் கலைந்து என்ன நடந்தது என்று அறிய வெளியே ஓடோடி வந்தனர். பால்கனி விளக்கு வெளிச்சத்தில் மலை அடிவார தரைத்தளத்தில் அழகு தேவதை ஏஞ்சலா இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அனைவர் இதயமும் உறைந்து போனது. மனம் ஒடிந்து ஏஞ்சலா மரணத்தைத் தழுவக் காரணமான காதலன் யார் ?
மர்மம் தொடரும்.....
