Roja rani

Drama Classics

3  

Roja rani

Drama Classics

மேஜிக் ரோப்

மேஜிக் ரோப்

6 mins
215



காலை 10 மணி அளவில் பிரவீன் அலுவலக வாசலில் தன் வண்டியை நிறுத்திவிட்டு கைபேசியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான். அவெஞ்சர் பைக் வேகமாக வந்து அவனருகில் சடன் பிரேக் போட்டு நின்றது. திரும்பி பார்த்தபடியே நிற்க ஹெல்மெட்டை கழட்டிய போது ஆண் வேடமிட்டவள் போல் அமர்ந்திருந்தாள் சக்தி. தலை முடி பாய் கட், ஒரு சிறு கம்மல் ஜீன்ஸ் டி-ஷர்ட் அணிந்து வாயில் பபுள்கம் மென்றுக்கொண்டிருந்தாள்


கோபமாக முறைத்து கொண்டு இருந்தவனை பார்த்து


"என்ன மச்சி காலையிலேயே டென்ஷனா இருக்க? என்று கேட்டாள்


"நேத்து எங்க அப்பாகிட்ட என்ன சொன்னேன்" என்று கோபம் குறையாமல் கேட்டான்


"நான் எங்கடா உங்க அப்பாவ மீட் பண்ணேன்?"


"நேற்று என்ன நடந்தது நல்ல ஞாபகம் படுத்தி பாரு?" என்றான் பிரவீன்


கண்முன் சுருள் கடந்து நேற்று மாலையை சென்றடைந்தது


பிரவீன் வீட்டிற்குள் நுழைந்தாள் சக்தி. சோஃபாவில் அமர்ந்து பிரவீனின் தாய் பூ கட்டிக்கொண்டிருக்க பிரவீன் டீவி பார்த்துக் கொண்டிருந்தான். உள்ளே நுழைந்த சக்தியை கண்டு பிரவீனின் தாய்


" வாடா... சின்னபைய்யா" என்றாள்


"ம்மா... அவ பொண்ணும்மா... எத்தனை தடவை சொல்றது! அவள் அப்படி கூப்பிடாதேன்னு?" சிறு சலிப்புடன் கூறினான்


"ஓய்... உனக்கு என்ன பிரச்சினை? ம்மா நீ அப்படியே கூப்பிடும்மா" என்றாள் சக்தி தெனாவட்டாக.


"ம்... எனக்கே சில நேரம் சந்தேகம் வருது. நீ பொண்ணுதானான்னு. இந்த சந்தேகம் உனக்கே வராம பாத்துக்க."


"பாத்துக்கலாம் பாத்துக்கலாம்... ஆமா போன விஷயம் என்ன ஆச்சு? பொண்ண பாத்தியா?"


"ம்.. பார்தேன்"


"பிடிச்சிருக்கா?" சற்று ஆர்வமாக கேட்டாள்


"ம்..."


"என்னடா.. ஒரு இன்ட்ரெஸ்டே இல்லாம சொல்றே? எங்கே ஃபோட்டோவ காட்டு!" சக்தி கேட்டதும் பிரவீனின் தாய் 


"நான் இருக்கேன்னு நடிக்கிறாம்மா... நான் போய் காஃபி போட்டு எடுத்துட்டு வரேன்." என்று எழுந்து சென்றவளிடம் 


"ம்மா... எனக்கு இஞ்சி டீ" என்று சொன்னவளை கையை பிடித்து இழுத்து தன் அறைக்கு அழைத்துச் சென்றான் பிரவீன். 


"டேய்.. இருடா வரேன்." என்று அவனுடன் சென்றவளை அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தான்.


"என்ன?" என்று கேலி கேவலமாய் கேட்க 


சிறு வெட்கம் கலந்த சிரிப்புடன் ஒரு கவரை அவள் முன் நீட்டினான்.


"அய்ய... வழியுது... தொடச்சிக்க" என்று கவரில் இருந்த ஃபோட்டோவை எடுத்து பார்த்தாள்.


"ம்... பொண்ணு சூப்பரா இருக்காடா!! பேரென்ன?"


"காயத்ரி. வயசு 26, ஒரே பொண்ணு, டீச்சரா வொர்க் பண்றாள்"


"ம்... பாருப்பா!! பொண்ணு கிட்ட பேசினயா?"


"ம்... பேசினேன். நல்ல பேசினாள்... இன்ஃபேக்ட் அவ பேசினதுல தான் எனக்கு ரொம்ப பிடிச்சிது" மகிழ்ச்சியுடன் கூற 


அவன் மகிழ்ச்சியை மனதார ஏற்றவளாய் ஆர்வத்துடன் கேட்டாள்


"என்ன சொன்னா?"


"சும்மா ஜென்ரலா தான், அவளுக்கு புடிச்சது, புடிக்காது..." 


"அடேங்கப்பா! இதெல்லாம் பேசிக்கிற அளவுக்கு நெருக்கமாகிட்டீங்களா? என்ன பிடிக்குமாம்?"


"சும்மா சக்தி... படிக்க பிடிக்கும் பசங்கன்னா பிடிக்கும், இப்படி நார்மலா தான். ஆனா எனக்கு ரொம்ப பிடிச்சது, கலகலன்னு பேசறது, பொறுப்பா நடந்துக்கிட்டது, உன்ன மாதிரி வெளிப்படையா பேசுறது, இதெல்லாம் தான்" 


"சூப்பர் டா.. உன்னுடைய எதிர்பார்ப்பு என்ன?"


"எதிர்பார்ப்பெல்லாம் பெருசா ஒன்னும் இல்ல சக்தி. எங்க அம்மா அப்பாவ நல்லபடியா பார்த்துகனும், என் அம்மாவுக்கு அடுத்து இன்னொரு அம்மாவா இருக்கனும். 2,3 பசங்கல பெத்துகனும், அவங்கள நல்லபடியா வளர்க்கனும். சிம்பிலா சொல்ல போனா ஒரு சாதாரண ஆண்களுக்கு இருக்க எதார்த்தமான ஆசைகள் தான்" 


என்று அவன் கூறி முடிக்கையில் எதையோ சொல்ல வந்தவளிடம் கண்ஜாடை காட்டி அம்மா வருவதை உணர்த்தினான். உள்ளே வந்தவள்


"என்னம்மா பொண்ண பார்த்தியா? உனக்கு ஓகே வா?"


என்று மூவரும் சிறிது நேரம் பேசிமுடித்ததும் சக்தி புறப்பட்டாள். வாசப்படியில் தன் ஷூ லேஸ் கட்டிக் கொண்டிருக்கையில் பிரவீனின் தந்தையை சந்தித்தாள்


"என்னம்மா சக்தி? உன் ஃப்ரெண்டை வந்து விசாரிக்க வதந்தியா?" என்றார்


"ஆமாம் ப்பா"


"பொண்ணு ஓகேவா?"


லேஸை கட்டி முடித்து எழுந்தவள் 


"பொண்ணு சுப்பர் தான், ஆனா உங்க பையன் தான் இன்னும் கல்யாணத்துக்கு ரெடி ஆகல" என்று சொல்லிவிட்டு புறப்பட்டாள்



மீண்டும் ஒரு சுருள் பழைய நிலைக்கு கொண்டு வந்தது. 


"எதுக்கு அப்படி சொன்னே?" கோபமாக கேட்டான்


"என்ன ஆச்சு அதனால?"


"ம்... எங்க அப்பா என் அம்மா கிட்ட செம்ம ரைடு விட்டாரு" 


"இங்க பாருடி உன் மகன் கிட்ட சொல்லிவை. இத விட நல்ல பொண்ணு உன் மகனுக்கு கிடைக்க மாட்டா. இவ்வளவு தூரம் பேசி முடிச்சதுக்கப்புறம் ஏதாவது ஏடாகுடம் பண்ணா... அப்புறம் நடக்குறதே வேற" அவர் பேசியது கண்முன் வந்து போனது.


கேன்டீனில் அமர்ந்து டீயை கலக்கிக் கொண்டிருந்தவள் கலகலவென சிரித்தாள். காஃபி அருந்திய படியே முறைத்தான் பிரவீன்.


"உண்மையை தானே மச்சி சொன்னேன்!"


"நான் உன்கிட்ட இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொன்னேனா? இன்ஃபேக்ட் என் ஆசையெல்லாம் உன் கிட்ட மட்டும் தானே சொன்னேன். நீ ஏன் அப்பா கிட்ட இப்படி சொன்னே?"


"நான் கூட உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொல்லலையே. நீ இன்னும் கல்யாணத்துக்கு ரெடி ஆகலன்னு தானே சொன்னேன்"


"ரெண்டும் ஒன்றுதான்"


"இல்ல. நேத்து நீ என் கிட்ட உன்னோட எக்ஸ்பெட்டேஷன்ஸ சொன்னல்ல.. அத வெச்சி தான் சொன்னேன். சரி நீ என்கிட்ட என்ன சொன்னே?


" அதான் நேத்தே சொன்னேனே..." சலிப்புடன் கூறினான்


"எங்க அம்மா அப்பாவ நல்லபடியா பார்த்துகனும், என் அம்மாவுக்கு அடுத்து இன்னொரு அம்மாவா இருக்கனும். 2,3 பசங்கல பெத்துகனும், அவங்கள நல்லபடியா வளர்க்கனும். இது தானே?"


"ஆமா அதுக்கென்ன இப்போ?"


"ஏன்டா பொண்ணு உனக்கு பாக்குறியா? இல்ல உங்க அப்பாவுக்கு பாக்குறியா?"


"என்ன சக்தி இப்படி கேக்குற?" அதிர்ச்சி ஆனான்.


"பின்ன? உனக்கு இன்னொரு அம்மான்னா பொண்ணு உங்க அப்பாவுக்கு தானே?? அது எப்படிடா.. உங்களைவிட 4,5 வருஷம் சின்ன பொண்ணா வேணும் ஆனா உங்க அம்மா அளவுக்கு கேரிங்கா இருக்கனும். அவ வந்து உங்க அம்மா அப்பாவ பார்த்துகனும்னா நீ எதுக்கு புள்ளையா இருக்கே? பசங்கல உங்களால பெத்துக்க முடியாது தான் அதுக்காக வளர்க்க கூடவா முடியாது? எல்லா பொறுப்பையும் வரபோற பொண்ணு தலைமேல போட்டுட்டு நீ என்ன தான் செய்வே?"


"என்ன சக்தி இப்படி பேசுற? நான் ஒன்னும் புதுசா எதுவும் எதிர் பாக்கலையே..."


"பிரவீன் அந்த பொண்ணு தான் எல்லாத்தையும் விட்டுட்டு உன் வீட்டுக்கு வரா. சோ எதிர்பார்ப்புங்கறது அந்த பொண்ணுக்கு தான் இருக்கனும். நீ கொடுக்கற இடத்துல இருக்கனும். எல்லா பொறுப்பையும் இல்ல, அவளோட வாழ்க்கைய வாழ கொஞ்சம் இடம். அவ உன்ன விட சின்ன பொண்ணு, ஒரே பொண்ணுன்னா அவளும் செல்லமா தான் வளர்ந்திருப்பா, அவ ஒன்னும் ட்ரேன்வர் வாங்கிட்டு உங்க வீட்டுக்கு வரல, இங்க இருக்க எல்லா பொறுப்பையும் வந்த உடனே வாரி சுமக்க. தாலி என்ன மேஜிக் ரோப்பாடா? அது கழுத்துல விழுந்ததும் 50 வயசான பொம்பளைங்க மாதிரி நடந்துக்க? சரி நீ சொன்னதுல ஏதாவது ஒரு பாய்ண்ட் அவளுக்காக பேசனியா?"


"நான் தானே சக்தி அவள் பாத்துக்க போறேன்?"


"எது..? எல்லா பொறுப்பையும் அவகிட்ட கொடுத்துட்டு 'எங்க அம்மா அப்பா சாப்டாங்கலா? பசங்க ஹோம் வொர்க் முடிச்கனசாங்கலா?'ன்னு பார்பீங்களே அத சொல்றியா? இல்ல... ஒரு நாளைக்கு 3 வேலை சாப்பாடு, மாசத்துக்கு ஒரு படம், வருஷத்துக்கு 2 புடவை எடுத்து குடுத்து ராணி மாதிரி பார்த்துக்குவீங்களே அத சொல்றியா?"


"அப்படி இல்ல சக்தி நெஜமாவே எனக்கு அவள ரொம்ப பிடிச்சிருக்கு. அவள நல்ல படியா பார்த்துக்குவேன். நீ வேணும்னா பாரேன்"


"மச்சி புதுல எல்லாம் அப்படித்தான் தோனும். 3 மாசம் கழிச்சு பழகிடும் உங்க அம்மா அப்பா மாதிரி அவளும் ஒரு பர்சன் அவ்வளவுதான். எதாவது தேவையா அவள தேடுவ, இல்லையா ஆஸ்யூஷ்வல் ரிமோட் இல்ல மோபைல் அவ்வளவு தான்"


"இங்க பாரு, என்னோட எதிர்பார்ப்பு என்னன்னு கேட்டது நீ. இப்போ இப்படி பேசுற!"


"உண்மைதான், அவ டீச்சர்னு சொன்னியே வேலைக்கு போகணுமா வேண்டாமான்னு கேட்டேன். ஆனா நீ.. தெளிவா சொல்லிட்டே. ஐ ஆம் அ காமன் மேன். அப்படின்னா என்ன அர்த்தம்? உனக்கு தேவைபட்டா அவ வேலைக்கு போகலாம், அவளோட தேவை வீட்டுக்கு தேவைன்னா வேலைய விட்டுடனும். அப்போ அவளோட ஆசை? ஓடி ஓடி படிச்சாளே அதற்க்கான பலன்? அவளுடைய கனவு, லட்சியம்? சரி அதெல்லாம் விடு. சிம்பிளா ஒரு கேள்வி கேட்கறேன். அதுக்கு மட்டும் சரியா பதில சொல்லு போதும். அவள பத்தி சொன்னதுல உனக்கு என்ன புரிஞ்சிது?"


"ஏய் லூசு, புரிஞ்சிகிற அளவுக்கு பேசல, ஜஸ்ட் தெரிச்சிக்கிறதுக்காக சொன்னா. அவ்வளவு தான்" 


"இதுதான்டா ஆம்பள பசங்க. எதையுமே சீரியசாவே எடுத்துக்க மாட்டீங்க, ஆனா பொண்ணுங்க ஒரு விஷயம் பேசினாலும் அதுக்குள்ள 4 விஷயத்தை மறைச்சு வெச்சி பேசிவாங்க. இப்போ காயத்ரி சொன்னத நீ எப்படி புரிஞ்சிகனும் தெரியுமா? படிக்க பிடிக்குமா, உன்ன மேற்க்கொண்டு நான் படிக்க வைக்கிறேன். உனக்கு பசங்களோட இருக்க பிடிக்குமா? உன்ன வேலையில நான் தலையிட மாட்டேன், உனக்கு ஜாலியா சிரிச்சு பேச பிடிக்குமா? உன்னோட ஃப்ரெண்ஷிப்ப நான் டிஸ்டர்ப் பண்ணமாட்டேன். பொருப்பா இருக்காளா, விட்டுடு, வேலை சரியா தெரியலையா ஒருமுறை சொல்லிக்கொடு. இது தானே மச்சி புரிஞ்சி நடத்துகிறது."


"அடேங்கப்பா... இந்த 4 வார்த்தையில இவ்வளவு அர்த்தம் இருக்கா? சரிம்மா தாயே... அவ எனக்கு அம்மா இருக்க வேண்டாம். நான் அவளுக்கு அப்பா மாதிரி.... மாதிரி தான் சொல்றேன். அவளுக்கு என்ன என்ன வேணுமோ பூர்த்தி செய்து நல்லபடியா பார்த்துகறேன். போதுமா?"


"ஓய், உனக்கு உங்க அப்பாவ ரொம்ப பிடிக்குமா?"


"அப்படியெல்லாம் இல்லயே!"


"அப்போ அப்பா மாதிரி பாத்துகிட்டா அவளுக்கு மட்டும் உன்ன எப்படி பிடிக்கும்" நக்கலாய் கேட்க


"ஏய்!! என்னதான் பண்ண சொல்றே?" அதிர்ந்து போய் கேட்டான்.


"சிம்பிள் மச்சி. அப்படியே ஃப்ரீயா விடு, நீ சுமக்கவும் வேண்டாம், அவ தலையிலயும் பாரத்த இறக்க வேண்டாம். அவ அவளுடைய வாழ்க்கைய வாழட்டும். முடிஞ்சா கொஞ்சம் ஃப்ரெண்லியா இரு. அதுபோதும். உன்னுடைய நல்லது கெட்டது அவகிட்ட ஷேர் பண்ணிக்கோ, அதேமாதிரி அவளுடைய நல்லது கெட்டது கேட்டு தெரிஞ்சிக்கோ, நல்லா இருந்தா பாராட்டு, தப்பா இருந்தா சுட்டிக்காட்டு. சரியா செய்தியா பெருமையா போய் சொல்லு, தப்பு பண்ணியா சாரி கேளு. அவளுக்கு கொஞ்சம் ஃப்ரீடம் கொடு, அவளுடைய உணர்வுக்கு மரியாதை கொடு. அப்புறம் பாரு! அவளோட வாழ்க்கை உன்னையும் உன் குடும்பத்தை சுத்தி மட்டுமே இருக்கும்." 


"கரேக்ட் தான்ல்ல!!! இதுக்கு பேரு தானே மியூச்சுவல் அன்டர்ஸ்டானீடிங்"


"ஆமா... இது தெரியாம நிறைய பேரு நான் முன்னாடி சொன்னா மாதிரி வாழறாங்க, ஒரு கட்டதுக்கு மேல, 45, 50 வயசு பெண்கள் கூட ஒடச்சிகிட்டு வெளியே வந்து விவாகரத்து கேட்கறாங்க. ஒன்னு தெரிஞ்சிகோ பிரவீன், அடுத்த வீட்டு குழந்தை போதும், நம்மல அக்கா அண்ணாவா மாத்த. ஒரு நாய் குட்டியோ, பூனை குட்டியோ போதும், நமக்குள்ள இருக்க தாய் தகப்பன் உணர்வை வெளிக்கொண்டு வர. ஆனா கணவன் மனைவி? ஒருத்தங்களால மட்டும் தான் தரமுடியும். அது தன்னில் சரி பாதி, நாம் சரியான பாதியா இருந்தோம்னா அவங்களும் அப்படியே இருப்பாங்க. அவங்கள நாம மதிக்கலன்னா அவங்களும் மதிக்க மாட்டாங்க, ஆனா அதை உணரும் போது ஆண்களுடைய வலி, இந்த உலகத்துக்கு பெண்களுடைய மனசோட ரணத்தை விட சின்னதா தான் தெரியும். நல்லதோ கெட்டதோ ஆரம்பம் ஆண்கள் பக்கம் தான் இருக்கும். இதைத் தான் அப்பவே சொன்னேன். நீ கொடுக்கற இடத்துல இருக்கனும்ன்னு‌"


இவை அனைத்தையும் கேட்டு மனம் தெளிந்தவன்


"தேங்ஸ் சக்தி. சீரியஸ்லி, யாரும் சொல்லித்தராத எதார்த்தம். என்னோட த்தேர்ட் ஐ ஓப்பன் ஆனா மாதிரி இருக்கு. இப்போ சொல்றேன் சக்தி, காயத்ரி எனக்கு இன்னோரு சக்தி."


"சூப்பர் மச்சி. அதுமட்டுமில்ல அவ தான் உன் வாழ்க்கையோட உண்மையான சக்தி. கீப் பிட் டப்" என்று கை கொடுத்தாள்.


"தேங்க்யூ. ஆமா... இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?" இதைக்கேட்டு கடுப்பான சக்தி 


"அடேய்!!! உன் சந்தேகத்துல தீய வைக்க, நானும் பொண்ணுதான்டா!!"


"அட! ஆமால்ல‌‌.. சாரி மறந்துட்டேன்" என்றான் பம்பிய படியே


           ----------×----------- 










  




Rate this content
Log in

Similar tamil story from Drama