STORYMIRROR

Roja rani

Children

4  

Roja rani

Children

அர்த்தம்

அர்த்தம்

1 min
205


ஒன்றரை வயது நிரம்பிய சுவாதியை தோளில் போட்டு சமாதானப்படுத்திய படியே அறையிலிருந்து வெளியேறினாள் அம்பிகா


"எதுக்குடி சும்மா அட்டகாசம் பண்றே? மழையில விளையாடல்லாம் போக கூடாது. உங்க அப்பாவ தான் சொல்லணும் சும்மா தண்ணீரில் விளையாட விட்டு விளையாட விட்டு மழை வரும்போது உன்ன கையில பிடிக்க முடிய மாட்டேங்குது" என்று அடம்பிடித்தவளை திட்டிக் கொண்டே ஹாலுக்கு வந்தாள். 


அங்கு வெளியில் புறப்பட தயாராக வந்த பாண்டியன்


"என்னம்மா?"


"மழை ஆரம்பச்சதிலிருந்து ஒரே அட்டகாசம் பண்றா மாமா, வெளியே போகனும்னு, சமையல் வேலை இருக்கு சும்மா இருடி" 


"என்கிட்ட விட்டுட்டு நீ போயி உன் வேலைய பாரும்மா"


"நீங்க புறப்படுங்க மாமா, நான் பார்த்துக்கிறேன்"


"நான் மழைவிட்டா தான் புறப்பட முடியும். அதுவரைக்கும் நான் பார்த்துக்கறேன்" என்று சுவாதியை அவர் வாங்கிக்கொள்ள அம்பிகா சமையல் அறைக்கு சென்றாள்


பாண்டியனின் கைபேசி அழைக்க அதை எடுத்து பேசியவர் குழந்தை மிகவும் நெலிய இறக்கி விட்டார், தொலைபேசியில்


"அந்த பத்திரமும் வேணுமா?" என்ன படியே தன் அறைக்கு சென்றார்


பீரோவை மூடுகையில் குழந்தையின் நினைவு வர வேகமாக வந்து பார்க்கையில் குழந்தை ஹாலில் இல்லை.


சுவாதி என்ற வாசலுக்கு சென்றவரின் கண்களில் பட்டது அந்த காட்சி.


முறைப்படி தூக்க தெரியாமல் தூக்கியபடி நனைந்த நிலையில் இருந்த ஒரு நாய்க்குட்டியை கையிலேந்தி தள்ளாட்டத்தில் வேகத்தை கொண்டு வீட்டிற்குள் நுழைந்த சுவாதி அங்கிருந்த துணியில் துடைக்க, சினுங்கிக் கொண்டிருந்த அந்த நாய்க்குட்டி 🐕 அவள் அழுத்தத்திலிருந்து விலகி ஓரமாய் சென்று தஞ்சமடைந்தது. ஆசையாய் அதன் பின் சென்றவளை கண்ட பாண்டியனுக்கு புரிந்தது அவள் அழுகையின் அர்த்தம்.



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil story from Children