Roja rani

Drama

4  

Roja rani

Drama

ஸ்கூட்டி

ஸ்கூட்டி

5 mins
227


   

             

      அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட மேகாவின் கண்களில் பட்டது ஒரு காதல் முத்தக்காட்சி. வெளிப்பட்ட சிறு புன்னகையை தன் ஹெல்மட் கொண்டு மறைத்து புறப்பட்டாள்.

காதலனுடன் சேர்ந்து வாழும் மேகா ரோஹித் நினைவுடன் அப்பார்ட்மெண்டில் நுழைந்தவள். வண்டியை நிறுத்தி விட்டு தன் போஷனுக்குள் நுழைந்தாள். தன் கையிலிருந்த ஹேண்ட்பேக் மற்றும் கவரை டீபா மீது வைத்தவளுக்கு சமையலறையில் சத்தம் கேட்டு நாக்கை கடித்து ஒரு நொடி வருத்தப்பட்டாள். தயக்கத்துடன் அங்கு சென்றவள்

"சாரி ரோஹித்" என்றவள் கேஸை அணைத்தாள்.

இதை எதிர்பார்க்காத ரோஹித் சட்டென்று திரும்பி சற்று கோபத்துடன்

"இப்ப எதுக்கு ஆஃப் பண்ணே?"

"இல்ல... உனக்கு கால் பண்ண மறந்துட்டேன்... இன்னிக்கு டீம் மீட்டிங் ஹோட்டல் அரேஞ்ச் பண்ணி இருந்தாங்க சோ.... நான் சாப்பிட்டுட்டு வந்துட்டேன்"

"சோ?"

"உனக்கும் டின்னர் வாங்கிட்டு வந்துட்டேன். முன்னாடியே சொல்லி இருக்கணும் சாரி... வா சாப்பிடு"

என்றவள் ஒரு தட்டை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்து அவள் கொண்டுவந்த கவரில் இருந்து ஒரு பார்சலில் இருந்த ஃப்ரைட்ரைஸை அந்த தட்டில் வைத்து ஒரு ஸ்பூன் அதனுடன் வைத்து அவனிடம் கொடுத்தாள்

ஏதும் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் கோபமாக இருப்பதைக் கண்டு, சற்று தயக்கத்துடன் பேசத் தொடங்கினாள்

"இன்னிக்கு மீட்டிங்ல நான்தான் ஸ்பீச் கொடுத்தேன். எல்லாரும் பாராட்டினாங்க. எங்க டீம் நம்பர் ஒண்ணா இருக்கறதுக்கு லீடர்ஷிப் நல்லா இருக்குன்னு சொல்ல.. எல்லாரும் என்ன பார்த்து க்ளாப் பண்ணாங்க"

சிறு பயம் கலந்த தயக்கத்துடனும், மகிழ்ச்சியுடனும் கூறிக் கொண்டிருந்தவளுக்கு "ம்" என்ற சத்தம் மட்டுமே பதிலாக கிடைத்துக் கொண்டிருந்தது. இறுதியாக மேகா

"அது மட்டும் இல்ல.." என்று சற்று மனம் மகிழ்ச்சி அதிகரித்து கூற வந்தவளிடம்

"உன்கிட்ட ஒன்னு கேட்கணும்" என்றதும் மேகா தயக்கத்துடன்

"என்னது?"

"ஃப்ரிட்ஜ் மேலே இட்லி பொடி யார் வெச்சது?"

"ஏன்? நான் தான்!"

"சாரி பிரிட்ஜ் ஓபன் பண்ணும் போது அது தவறி டஸ்ட்பின்ல விழுந்து கொட்டிக்கிச்சு"இதைக்கேட்டு கோபத்தில் சினிங்கினாள்

"என்னது??!! ம்... ம்... எங்க அம்மா எனக்கு ஆசையா செய்துகொடுத்த இட்லிபொடி ம்... ம்...." இதை எதிர்பார்த்த ரோஹித் செயற்கையான கோபத்தை விட்டு விட்டு, அவளிடம் கெஞ்ச ஆரம்பித்தான்.

"ஏய் ப்ளீஸ் ப்ளீஸ் சாரி டி... தெரியாம கொட்டிடுச்சு... உன்ன யாரு டோரில பாதி உட்கார்ந்த மாதிரி வைக்கச் சொன்னது?"

"நீ பார்த்து திறக்க வேண்டியதுதானே??"

"அதான் சாரி சொல்லிட்டேன்ல... மாசம் ஐம்தாயிரம் சம்பாதிக்கிற! அஞ்சு ரூபாய் இட்லி பொடிக்கு அசிங்கமா அழுவுற?"

"அஞ்சிரூபாயா!!?? அம்மா செய்து கொடுத்தது டா!!!" உணர்ச்சி பொங்க கூறினார்

சோபாவிலிருந்து இறங்கி மேகாவின் முன் கீழே அமர்ந்தவன்

"டீம் லீடர், மன்னிச்சு.... " என்று கையை பிடித்து ஆசையாய் மன்னிப்பு கேட்டான்

"இருடா. இன்னிக்கு உனக்கு டின்னர் கட்டு" என்றாள் கோபமாக

"அதுக்குத்தான் டார்லிங் சாப்பிட்டு முடித்ததும் சொன்னேன்" என்று கண்ணடித்தான். அப்போது சட்டென்று பவர் கட்டானது

"நீ இரு நான் கேன்டல் கொண்டு வரேன்" என்று எழுந்து சென்றவன்

"மேகா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுடி. எனக்கு இன்னும் சேலரி வரல. அம்மாவுக்கு மெடிசன் வாங்க மூனாயிரம் பணம் கேட்டிருந்தாங்க. கொஞ்சம் நீ அனுப்பி விடுவியா? நான் அப்புறமா உனக்கு தரேன்"

"நீ ஆணியே புடுங்க வேணாம்" என்றவள் தன் மொபைல் எடுத்து ரோஹித்தின் தாய் அக்கவுண்டிற்கு 5 ஆயிரத்தை அனுப்பி வைத்தாள்.

"அனுப்பிட்டேன்" என்றபடியே நிமிர்ந்தவளுக்கு சர்ப்ரைஸ் காத்துக்கொண்டிருந்தது

ரோஹித் கையில் ஒரு கேக் மீது மெழுகுவத்தி எரிந்த வண்ணம் கொண்டு வந்தான்

"ஏய்.. என்னடா இது!!??"

"கிடைக்கப் போற புரமோஷனுக்கு என் வாழ்த்துக்கள்..." என்றான் பூரிப்பாக

"உனக்கு எப்படி தெரியும்?" என்றாள் ஆச்சரியமாக

"ஒரு நிமிடம்" என்றவன் நண்பனுக்கு கால் செய்து மேயினை ஆன் செய்யச் சொல்ல, பவரும் வந்தது. கத்தியை அவளிடம் கொடுத்து

"அப்புறம் சொல்றேன் முதல்ல கேக்க கட் பண்ணு" என்றான்

கேக் மீது"Best wishes HR madam" என்று எழுதியிருப்பது கண்டு மனம் மகிழ்ந்த மேகா ரோஹித் கைதட்டலுடன் கேக்கை கட் செய்து அவனுக்கு ஊட்டினாள். அவனும் அவளுக்கு ஊட்ட..

"உனக்கு எப்படி தெரியும்னு சொல்லு" என்றாள்

அவள் கைகளைப் பிடித்து இழுத்தவள் பின்னிருந்து அவளை அணைத்தபடியே கூறினார்

"ஈவினிங் உன்னோட கேபினுக்கு வந்திருந்தேன். அங்க உன் பிரெண்ட் அனிதா தான் சொன்னாள். சந்தோஷமா இருந்தது. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும் போது தான் அது முழுமை அடையுது. அந்த அங்கீகாரம் எல்லோருக்கும் கிடைச்சிடாது. அதுக்காக ஏங்கிட்டு இருக்கிற என்ன மாதிரி ஆளுங்களுக்கு தான் தெரியும். பிரமோஷன் எவ்வளவு பெரிய வரம்ன்னு"

"ரோகித்... நான் ஒன்னு கேட்டா... தப்பா நினைச்சுக்க மாட்டியே?" என்றதும் 

"என்ன? கேளு"

"எனக்குப் பிரமோஷன் கெடச்சதுல... உனக்கு எதுவும்... சங்கடம் இல்லையே..." தயக்கத்துடன் கூறியதும் சற்றென்று அவளை நேர் நிறுத்தி

"உன்னுடைய வளர்ச்சி என்னுடைய பெருமை. உன்னுடைய பெருமை என்னுடைய கவுரவம்"

ரோஹித்தின் உள்மனதில் இருந்து வந்த வார்த்தைகள் மேகா ரோகித் மார் மீது சாய்ந்து நன்றி கூற வைத்தது. சட்டென்று நிமிர்ந்தவள் மீண்டும் குறும்பாய் சினிங்கினாள்

"என்ன இருந்தாலும் என் இட்லி பொடி!... ம்... ம்..." ரோஹித் ஒரு அடி விலகி நின்று கையை தலைமீது கூப்பி

"அம்மா தாயே இன்னும் ஒரு வாரத்துல உங்க அம்மா கிட்ட சொல்லி இட்லி பொடி வர வெச்சுடறேன் போதுமா?"

சிரித்தவள் தன் கையில் இருந்த ஹெல்மெட்டுடன் தன் கற்பனையையும் வண்டியில் வைத்து பூட்டினாள்.

நிஜத்தில் தன் போர்ஷனுக்கு சென்றாள். அதேபோல் கையிலிருந்த கவரையும் ஹேண்ட் பேக்கையும் டீபா மீது வைத்துவிட்டு சமையலறையில் சத்தம் கேட்டு உள்ளே சென்றாள். பின் இருந்தபடியே அடுப்பை அணைத்து சாரி சொல்ல ரோகித் கோபத்துடன் கேட்டான்

"இப்ப எதுக்கு ஆஃப் பண்ணே"

"சாரி ரோகித் உனக்கு கால் பண்ண மறந்துட்டேன்... இன்னிக்கு டீம் மீட்டிங் ஹோட்டல் அரேஞ்ச் பண்ணி இருந்தாங்க சோ.... நான் சாப்பிட்டுட்டு வந்துட்டேன்"

"சோ?"

"உனக்கும் டின்னர் வாங்கிட்டு வந்துட்டேன். முன்னாடியே சொல்லி இருக்கணும் சாரி... வா சாப்பிடு"

என்றவள் அதேபோல் ஒரு தட்டை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்து அவள் கொண்டுவந்த கவரில் இருந்து ஒரு பார்சலில் இருந்த ஃப்ரைட்ரைஸை அந்த தட்டில் வைத்து ஒரு ஸ்பூன் அதனுடன் வைத்து அவனிடம் கொடுத்தாள்

"இன்னிக்கு என்னோட ஸ்பீச் கேட்டு எல்லாரும் பாராட்டினாங்க. குறிப்பா மேனேஜர் மென்ஷன் பண்ணி சொன்னாரு. செம கிளாப்ஸ்"

"உன் வாய் திறமையை சொல்லித்தான் தெரியனுமா என்ன?" அலுவலக கோபத்தில் இருந்தவன் முனுமுனுத்தான்.

"புரியல..."

"நத்திங்"என்றவன் வேண்டா வேறுப்பாக சாப்பிட்டு கொண்டிருந்தான்

"எங்க டீம் நம்பர் 1 ஆ இருக்க என்னுடைய லீடர்ஷிப் தான் காரணம் அது இதுன்னு பாராட்டினாரு. ஆனால் இந்த கௌதமுக்கு தான். என்ன பாக்க முகமே இல்ல. செம கடுப்புல இருந்தான். அதுக்கு காரணம் இருக்கு." என்றவள் மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்துடன்

"ரோகித் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா!?" என்றாள் பூரிப்பாக

"சொல்லு" என்றவன் நிமிர்ந்துகூட பார்க்கவில்லை

"எனக்கு பிரமோஷன் கிடைக்கப் போகுது" என்றாள் ஆனந்தமாக

தன் வாய்க்கு அருகில் கொண்டு சென்ற சாப்பாட்டை மீண்டும் தட்டில் போட்டவன். கண்களை மூடி தன்னை தானே கட்டுப்படுத்திக் கொண்டான். இதை கவனிக்காத மேகா தொடர்ந்து வேகம் குறையாமல் பேசிக்கொண்டிருந்தாள்

"அது நடக்கக் கூடாதுங்கறது தான் அந்த கௌதமோட எண்ணம். இருக்கட்டும் எனக்கு பிரமோஷன் கிடைச்சதுக்கு அப்புறம் என் சீட் தானே உட்காரனும்? அப்போ தெரியும். என் சீட்டோட ஹீட். அசிஸ்டென்டா இருக்கும்போதே அவனுக்கு என்னோடு வொர்க் ஸ்பீடுக்கு டென்ஷன் ஆவான். இனி என்ன பண்ணப் போறான்னு பார்ப்போம்" என்று சிரித்தாள்

இதைக்கேட்டு சாப்பாட்டு தட்டை டேபிள் மீது வைத்தான்

"என்ன ஆச்சு? ஃப்ரைட்ரைஸ் பிடிக்கலையா?"

"எதுக்கு இப்போ ஆம்பளைகள இப்படி கேவலப் படுத்துற?"

"ஆம்பளைங்கள நான் கேவலப்படுத்தனேனா?"

"ஆமா! இவ்ளோ நேரம் அது தானே பண்ணிட்டு இருந்த?"

"நான் கௌதமை பத்தி மட்டும் தானே பேசிக்கிட்டு இருந்தேன். அவனோட வொர்க், ஆட்டிட்யூட், பத்திதான் சொல்லிட்டு இருந்தேன். இதே இடத்தில் ஒரு பொண்ணு இருந்தாலும் இப்படித்தான் பேசி இருப்பேன்!"

"இந்த இடத்தில் ஒரு பொண்ணு இருந்திருந்தா உங்களுக்குள்ள போட்டியும் பொறாமையும் தான் இருந்திருக்கும். இப்படி ஆணவத்துல ஆட மாட்டே!"

"ஆணவமா? எனக்கா?" மனமுடைந்து கேட்க,

"ஏய்! ஆமாண்டி. உன்னை மாதிரி பெரிய போஸ்டிங்ல இருக்கிற பொண்ணுங்களுக்கு இருக்க காமன் கேரக்டர் இது தானே. அதிகமா சம்பாதிக்கிறோங்குற திமிருல யாரையும் மதிக்கிறது கிடையாது. அது ஆபீஸா இருந்தாலும் சரி, வீடா இருந்தாலும் சரி. மேடம் எப்ப வருவாங்க, டின்னர் செய்வாங்களா, இல்ல மேடம்க்கு நாம ரெடி பண்ணி வைக்கணுமான்னு கூட சொல்ல மாட்டாங்க. திடீர்னு வந்து அவங்களுக்கு பிடித்ததை எதையாவது தட்டில் கொட்டி கொடுப்பாங்க. அதை நாய் மாதிரி நாமளும் சாப்பிடனும்." என்று தட்டை தூக்கி கீழே தட்டி விட்டான்

இதை எதிர்பார்க்காத மேகா எழுந்து நின்றாளைக் கண்டு சலித்து கொண்டவன்

"இதுல இன்னும் ப்ரமோஷன் வேற!" என்றான்

"ரோஹித். அது என்னோட ஹார்ட்வொர்க்கு கிடைத்த அங்கீகாரம்" கோபமாக கூற, எழுந்தவன்

"என்னடி ஹார்ட் வொர்க்? அப்போ ஆம்பளைங்க எல்லாம் சும்ம சுத்திக்கிட்டு இருக்கோமா? நாங்க கஷ்டப்பட்டு வேலை செய்றதால தான் உங்களால நல்ல பேர் வாங்க முடியுது"

"நல்ல லீடர்ஷிப் தான் முக்கியம் ரோஹித். இவ்வளவு பேசுறியே! உன் டீம் லீடர் ஒரு மென் தானே? உங்களால ஏன் நம்பர் ஒன் பொசிஷனுக்கு வர முடியல? பொண்ணுங்களுக்கு எல்லா வேலைகளையும் பர்ஃபெக்டா செய்யக்கூடிய கெபாசிட்டி இயற்கையாகவே இருக்கு. அதனாலதான் வீட்டையும் ஆபீஸையும் பேலன்ஸ்டா நிர்வாகம் பண்ண முடியுது"

"எது நிர்வாகம்? வீட்டுக்கு வாங்குற பொருளிலிருந்து நான் போடுற டிரஸ் வைக்கும் உன் பணத்திமிர் மட்டும்தான்டி இருக்கு. ஓடிஓடி உழைத்தாலும் பெத்த தாய் கேட்கும்போது மூவாயிரம் மருந்துக்குக் கூட அனுப்பி வைக்க கையாலாகாத போன என்ன மாதிரி ஆம்பளைங்களோட இந்த நிலைமைக்கு காரணம் யார் தெரியுமா? சிரிச்சு பேசி பல்ல காட்டி புரமோஷன் தட்டிட்டு போற பொம்பளைங்க மட்டும்தான்

"வார்த்தையை அளந்து பேசு ரோஹித். பல்லகாட்டினா மட்டும் உயர்ந்த இடத்துக்கு போயிட முடியாது. திறமை இல்லாதவங்களால அந்த இடத்தை தக்க வச்சுக்கவும் முடியாது. பல்லகாட்றது பத்து நிமிஷம் வேலை. அதே திறமையை காட்டி உயர்ந்து பாரு. அதுல இருக்கு உண்மையான மனநிறைவு. எனக்கு புரியல? அது எப்படி ரோகித்!!? பெண்களோட தோற்க்கடிக்க முடியாதப்போ ஆண் எடுக்கிற ஒரு பயங்கர ஆயுதம் அவளோட நடத்தையின் விமர்சனமா மட்டுமே இருக்கு? ஒரு ஸ்கூட்டி உங்கள கிராஸ் பண்ணும்போது தான் உங்க வண்டியில கியர் இருக்கிற விஷயமே உங்களுக்கு ஞாபகத்துக்கு வருது? அப்போ உங்களோட போட்டி கேவலம் ஸ்கூட்டி கூடதானா?

"ஆமாண்டி... ஸ்கூட்டிய யாரும் மடக்கிப் பிடிக்கிறது இல்ல. ம்.. நல்ல வேலை. இதுக்கே எந்த ஆட்டம் போடுறீங்க. இன்னும் எங்க அளவுக்கு கடவுள் உங்கள் ஸ்ட்ராங்கா படைத்து இருந்தா உங்கள கையில பிடிக்க முடியாது" இதை கேட்டு கோபம் மேலும் தலைதுக்க

"ஏன்? உன்னையும் உன் தங்கச்சியும் சுமந்து பெத்தெடுத்ததுல பொம்பளைங்க எவ்வளவு ஸ்ட்ராங்க்ன்னு சொல்லித் தரலையா? உங்கம்மா" என்று கடைசி வார்த்தையை சற்று அழுத்தமாக கூற

கோபம் கொண்ட ரோகித் அடுத்த நொடி தன்னை மறந்து அவள் கன்னத்தில் அறைந்தான். இதை எதிர்பார்க்காத மேகா, கன்னத்தைப் பிடித்துக் கொண்டு கலங்கிய கண்களுடன் ரோகித்தை முறைத்தாள்

தன் தவறை உணர்ந்த ரோகிதின் கோபம் தலை தொங்க, அதை வெளிப்படுத்த மறுத்தவன் தன் வண்டி சாவியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியே புறப்பட்டுச் சென்றான்

அழுதபடியே சோபாவில் அமர்ந்தவளுக்கு ரோகித் கூறியது நினைவுக்கு வந்தது. உடனே தன் மொபைலை எடுத்து ரோகித்தின் தாய்க்கு ஐந்தாயிரம் அனுப்பி வைத்துவிட்டு அமைதியில் புழுங்கினாள்.

       

            .............



Rate this content
Log in

Similar tamil story from Drama