Roja rani

Drama

4  

Roja rani

Drama

பாரதி ஒரு புதுமைப்பெண்

பாரதி ஒரு புதுமைப்பெண்

67 mins
363



              


                                     [1]

     இரயில்வே நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சிறு படபடப்புடன் சிகரெட்டை பிடித்துக்கொண்டிருந்தான் சிவா. அவன் அருகே இருந்த அவனது நண்பன் ஆதரவு கூறமுடியாத நிலையில் நின்றுக் கொண்டிருந்தான். இருப்பினும்,

  "சிவா, அவ வர நேரமாச்சு ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையா இரு. பதட்டப் படாதே. ஏதாவது நல்ல முடிவை எடுத்திருக்க கூட வாய்ப்பு இருக்கு. மனச தளர விடாதே"

   அவன் சொல்லி முடிக்கும் முன் இரண்டு பெண்கள் அவர்கள் நின்றிருந்த வீதிக்குள் திரும்பினர்.

  "சிவா... அவ வரா" தலையை குனிந்தபடியே கூற

  கையில் இருந்த சிகரெட்டை தரையில் போட்டு காலால் அனைத்து புகைகளை கைகளால் தள்ளிவிட்டான் சிவா. அந்த இரண்டு பெண்களும் இவர்களை கடந்து செல்ல இதை சற்றும் எதிர்பார்க்காத இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் சிவாவின் நண்பன் சிவாவிடம்

   "மச்சான் நீ ஒன்னும் பீல் பண்ணாத. நான் பேசுறேன்" என்றாள்

கோவத்தின் உச்சியில் இருந்த சிவா

   "வேண்டாம் நான் செத்தா தான் அவளுக்கு என் காதல் புரியும். அப்படித்தான் என் காதலை புரிய வைக்கணும்னு விதியிருந்தால் அப்படியே நடக்கட்டும்" ஆவேசமாக பேசினான்.

   

   "மச்சான் ப்ளீஸ்... கடைசியாக ஒருமுறை ட்ரை பண்ணலாம் அப்புறம் முடியலன்னா என்ன முடிவு வேணும்னாலும் எடுத்துக்கோ"

  இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத சிவா கேள்விக்குறியாக

நண்பனை பார்த்தான்

   "சாரிடா மச்சான். வாய்தவறி...." என்று திணற சிவா தன் தலையில் கையை வைத்து தன்னைத் தானே சமாதானப்படுத்த முயற்சி செய்தான்

   "சீக்கிரம் வா. அவ வீட்டுக்கு போறதுக்கு உள்ள பிடித்து பேசிடலாம்" என்று கூற சிவா தன் ரேஸ் பைக்கிள் தன் நண்பனை ஏற்றிக்கொண்டு அந்த பெண்கள் சென்ற திசையில் சென்றனர்

   அடுத்த தெருவில் அந்த பெண்கள் நடந்து கொண்டிருக்க, அவர்கள் மிக அருகில் பின்புறம் வந்து நின்றது அந்த வாகனம். சிவாவின் நண்பன் இறங்கி அதில் ஒரு பெண்ணை அழைத்தான்

   "ஏய் செல்வி" சற்று கோபமாய்

   அந்தப் பெண்கள் நிற்க, ஒருத்தி மட்டும் திரும்பி பார்த்தாள்.

   "என்னங்கண்ணா" என்றாள் சற்று பயந்த படியே

   "நேத்து உன்கிட்ட நான் என்ன சொன்னேன்? இன்னிக்கு முடிவு சொல்லனும்னு சொன்ன இல்ல? என்னமோ எதுவுமே நடக்காத மாதிரி ரெண்டு பேரும் ஜாலியா போறீங்க?"

   "அது வந்துண்ணா..."

  "என்ன கொழுப்பா? பசங்க உங்க பின்னாடி சுத்தி வந்தா? நீங்க எல்லாம் ரதிதேவின்னு நினைப்பா?"

  "அப்படியெல்லாம் இல்லண்ணா.."

  "என்ன நடக்குதுன்னே தெரியாது? நேத்து தானே உன்கிட்ட தெளிவா சொன்னேன்? நீ சொல்லலையா உன் பிரண்டு கிட்ட? இங்க பாரு என் பிரண்டு ஒன்னும் லேசு பட்டவன் இல்லை. அவனுக்கு இருக்குற வசதிக்கு எங்கே இருந்தாலும் தட்டி தூக்க முடியும். ஏதோ கருப்பா இருந்தாலும் பரவால்ல ஏழையாய் இருந்தாலும் பரவால்ல லவ் பண்ணிட்டான்னு இவ்வளவு தூரம் இறங்கி வந்தா!!? ரொம்ப பண்ண வேணாம்னு சொல்லு." என்று சொல்லும்போதே அருகில் இருந்த அவளின் தோழி அவனை அழைத்தாள்

  "ஒரு நிமிஷம்"

  "எஸ்" என்று அவள் அருகில் வந்ததும் பளார் என்று கன்னத்தில் அறைந்தாள்

  இதை சற்றும் எதிர்பாராத சிவாவும் அவன் நண்பனும் அதிர்ந்து போனார்கள். செல்வி சற்று பயத்துடன்

  "ரதி ப்ளீஸ் வேண்டாம்" என்றாள்

  "யாருடா நீ? செல்வி உனக்கு தெரிஞ்ச பொண்ணுனா அவ கிட்ட அவள பத்தி பேசு, இல்ல உன்ன பத்தி பேசு, அத விட்டுட்டு என்ன பத்தி பேசறது மட்டும் இல்லாமல் மறைமுக மிரட்டல் வேறயா? தொலைச்சிடுவேன். ஏன் அவனுக்கு வாய் இல்லை? நீ என்ன கொடுக்கா? போடா!" என்றாள்

   கன்னத்தில் வைத்த கையை எடுக்காமல் வாயை பிளந்தவன் அப்படியே திரும்பி சென்றார். ரதி செல்வியின் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல சிவா

  "நில்லு ரதி. என்ன பேச சொல்லிட்டு நீ பாட்டுக்கு போறே" என்றான்

  "நீ கிளம்பு செல்வி. நான் பொறுமையா வரேன்" என்று தோழியை அனுப்பி வைத்தாள் ரதி.

   "சொல்லு" என்றாள்

  "ஏன் ரதி? என்ன புரிஞ்சுக்கவே மாட்டியா? நான் உன்னை உண்மையா விரும்பறேன்!!"

  "ஒரு நிமிஷம். யார் நீ?" குறிப்பிட்டு கேள்வி கேட்டாள் ரதி

  "ரதி நா சிவா ஃபேமிலி பிரெண்ட்"

   சிவா வண்டியின் அருகில் இருந்த அவனது நண்பன் ஆச்சரியமாக திரும்பிப்பார்த்தான். 'அடப்பாவி பழகிய இந்த மூன்று மாதத்தில் இதை அவன் நம்மகிட்ட சொல்லவே இல்லையே' என்று முணுமுணுத்தபடி மீண்டும் கன்னத்தில் கையை வைத்து தடவிக் கொண்டான்.

  "தெரியுது இல்ல ஃபேமிலி பிரெண்ட்ன்னு? அப்புறம் ஏன் இந்த மாதிரி சில்லியா பிஃகேவ் பண்ற? ரோட்ல மடக்கி பேசுறது, எவன் எவனையோ கூட்டிட்டு வந்து பேசுறதுன்னு! நேரா வீட்ல சொல்ல வேண்டியதுதானே?"

  "என்ன ரதி தெரியாத மாதிரி கேக்குற? என் அப்பாவை பத்தி உனக்கு தெரியாதா?"

  "அப்போ மூடிக்கிட்டு போடா" கோபமாக சொல்லிவிட்டு நகர இருந்தவளை வித்தியாசமாக பார்த்தான் சிவாவின் நண்பன்

  "ரதி ப்ளீஸ்... சின்ன சின்ன காரணங்களைக் காட்டி என் காதலை கொச்சைப்படுத்தாதே. எங்க அப்பா சம்மதிக்க மாட்டார் தான். ஆனா உன்னோட சம்மதம் இருந்தா போதும். நம்ம கல்யாணத்த நல்ல படியா முடிக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு" நின்றவள் திரும்பி சிவாவை பார்த்து கிண்டலாக கேட்டாள்

  "எப்படி?"

  "நீ மட்டும் சம்மதம் சொன்னா எப்படியாவது எங்க அம்மா கிட்ட பேசி அவங்க சம்மதத்தை வாங்கிடுவேன். அம்மா அப்பாவை கன்வின்ஸ் பண்ணிடுவாங்க. அப்புறம் உங்க அம்மாகிட்ட.."

  "சிவா ப்ளீஸ். முட்டாள்தனத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு ஆகுற வேலைய பாரு. அந்த கடவுளே வந்து சொன்னாலும் உன் வீட்டுக்கு மருமகளா நான் வர மாட்டேன்" என்றவள் தீர்மானமாக திரும்பி நடந்தாள்

  "ரதி ப்ளீஸ் ரதி..!" என்று சொல்ல சொல்ல நிற்காமல் சென்றவளை கண்டு சலித்துக் கொண்டு நெற்றியில் கை வைத்து தேய்த்துக் கொடுத்தான்.

  அவன் அருகில் வந்த அவனது நண்பன்

  "மச்சி அந்த பொண்ணு உன் ஃபேமிலி பிரெண்டா!!?" என்று ஆச்சரியமாக கேட்டான்

  அந்த கேள்வியில் அதிர்ந்து போன சிவா

  "டேய் அது கூட தெரியாமலா எனக்கு ஹெல்ப் பண்ண வந்தே!!??"

                             [2]

   ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த சண்முகராஜன் தன் வீட்டின் காலிங் பெல் சத்தம் கேட்டு கதவை திறந்தார்

   "வாங்க வாங்க" என்று ஒரு ஐம்பது வயது நிரம்பிய அவரை வீட்டுக்குள் அழைத்துக்கொண்டு வந்தார்.

  "லட்சுமி தரகர் மணி வந்திருக்காரு சீக்கிரம் வா" என்றார்

   பூஜை அறையில் இருந்து வந்தவள் புன்னகையோடு வரவேற்றாள் லக்ஷ்மி

 

   "வாங்க அண்ணே, எப்படி இருக்கீங்க?"

   "நல்லா இருக்கேன். உங்க மகன் எப்படி இருக்காரு?"

   "தெரியலைங்கண்ணா. இன்னும் போன் பண்ணல. இனிமேல் தான் பேசனும். அவன் கிட்ட சொல்ல ஒரு நல்ல செய்தி இருந்தா நல்லா இருக்கும். நீங்க பேசிட்டு இருங்க நான் காப்பி கொண்டு வரேன்" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்

  "நானும் மூணு வருஷமா விடாமல் தேடுறேன், மிலிட்டரி வேலை செய்யறாருன்னு சொன்னாலே யாரும் பொண்ணு தர மாட்டேங்குறாங்க. 'எங்கபொண்ணு மாப்பிள்ளையோட சந்தோஷமா வாழறத கண்குளிர பார்க்க ஆசைப்படுறோம்' அப்படி இப்படி எதாவது சொல்லி தட்டிக் கழித்து விடுவார்கள்"என்றார் தரகர் மணி

   "என்ன சார் செய்யறது? நான் ஒரு டீச்சர் என் மகனும் அப்படித்தான் இருப்பான் என்று நாங்களும் நம்பினோம். ஆனா அவன் ஆர்மிக்கு தான் போவேன் அப்படின்னு பிடிவாதம் பிடித்து சேர்ந்துவிட்டான். சந்திரபோஸ் என்று பெயர் வச்சதுக்கு நாட்டுப்பற்று வந்திருக்குன்னு பார்த்தா ,ஒத்த பிள்ளையாய் இருந்தாலும் பெத்தவங்கள காப்பாத்துறத விட நாட்டைக் காப்பாற்றுவது தான் முக்கியம் என நினைக்கிற அளவுக்கு நாட்டுப்பற்று இருக்கனும்னு எதிர்பார்க்கல. எல்லாரும் நினைக்கிற மாதிரி எங்களுக்கும் எங்க பையன் குடும்பத்தோட சந்தோஷமா இருக்கணும்னு தான் ஆசை" காபியுடன் வந்த லட்சுமி குறுக்கிட்டாள்

     "அதெல்லாம் ஒன்னும் இல்லண்ணே, கால்கட்டு போட்டால் எல்லாம் சரியாகிவிடும். அவன் வேலைய விட்டுட்டு வந்து செட்டில் ஆகிடுவான்" என்றவள் இருவருக்கும் காபியைக் கொடுத்தாள்

   "அதை எப்படிமா இவ்வளவு ஆணித்தரமா நம்பறீங்க? கல்யாணம் ஆன பிறகும் நிறைய பேரு மிலிட்டரியில வேலை பார்த்துகிட்டு தான் இருக்காங்க" என்று கேட்டார் மணி

   "எங்க குடும்ப சூழ்நிலை என் மகனுக்கு நல்லாவே தெரியும்ண்ணே. நானும் இவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு இந்த 28 வருஷத்துல எங்களை தேடி சொந்தம் சொல்லிக்கிட்டு யாரும் வந்ததில்லை. எங்களுக்கு சொத்துன்னு சொல்லிக்க எந்த ஒரு வீடும் சொந்தம்னு சொல்லிக்க என் மகனும் தவிர எங்களுக்கு வேறு உலகமே இல்லை. அவன் சாதிக்க வேண்டிய வயசுல அவனோட விருப்பத்துக்கு மதிப்புக் கொடுத்து நாங்க அவனை மிலிட்டரிக்கு அனுப்பி வெச்சோம். அதே மாதிரி வயசானதுக்கப்பறம் எங்களை அவன் தான் பார்த்துக்கணும். அவன் பொண்டாட்டி புள்ள குட்டியோட சந்தோஷமாக வாழறதை கண்குளிர பாக்கணும், தனியா கிடக்கிற நாங்க கூட்டுக்குடும்பமா வாழனும் அப்படிங்கிற எங்க ஆசைய அவன் கண்டிப்பா நிறைவேற்றுவான். இந்த நம்பிக்கையை எங்களுக்கு கொடுத்துட்டு தான் அவன் வேலையில சேர்ந்தான்"

   "உங்கமகனோட பேச்சை பெத்தவங்க நீங்க நம்பலாம். ஆனால் மத்தவங்க நம்பனுமே. இந்த மாசம் ஒரு மூணு பொண்ணுங்க போட்டோ கொடுத்து இருக்காங்க நீங்க பாத்துட்டு சொன்னா நான் அவங்க கிட்ட பேசுறேன்"

 தன் கையில் இருந்த காலி டம்ளரை லட்சுமியிடம் கொடுத்துவிட்டு தன் கைப்பையில் இருந்து போட்டோக்களை சண்முகராஜனிடம் எடுத்து கொடுத்தார். அந்த போட்டோவுடன் இணைத்திருந்த விவரங்களை படித்து தன் மனைவியிடம் காட்டினார்

   "வேலைக்கு போற பொண்ணு வேணாங்க... என்னங்க இது டிகிரி கூட இல்லனா எப்படிங்க?? ம்... பொண்ணு கொஞ்சம் கலர் கம்மியா இருப்பா போலிருக்கே.." என்று ஒவ்வொரு போட்டோவையும் பார்த்த லட்சுமி எல்லாவற்றையும் குறை கூறினாள் தன் கணவனிடம் இருந்த போட்டோ வை சற்றென்று பிடுங்கியவள் "ரொம்ப அழகா இருக்காளே!! நம்ம சந்துருவுக்கு பொருத்தமாயிருக்கும் யார் இந்த பொண்ணு" என்று தரகரிடம் காண்பிக்க

   "அச்சோ! இந்த போட்டோவை இதுல விட்டு விட்டேனா? இது கொஞ்சம் பெரிய இடத்து பொண்ணும்மா. இப்போ அவங்க வீட்ல இருந்து தான் வந்தேன் அதான் கலந்து வந்துட்டு இருக்கு" என்றார்

   "சரி பரவாயில்லைங்க சார். இவ எல்லாத்தையும் குறை சொல்லிட்டு தான் இருப்பா 3 வீட்லயும் நீங்க பேசுங்க யாரு சரின்னு சொன்னாலும் முடித்துவிடலாம்" என்று தெளிவாக பேசி தரகரை வழி அனுப்பி வைத்தார் சண்முகராஜன்

   அவர்களின் வீட்டில் இருந்து வெளியேறிய தரகரின் கைபேசி அவரை அழைத்தது.

   "என்ன சார் வீட்ல விட சொன்னேன் டிரைவர் பாதியில விட்டுட்டு வந்துட்டாரு போல?" என்று ஒரு கம்பீர குரல் கேட்க

   "ச்சே.. ச்சே.. நான் தான் வழியில இறக்கி விட சொன்னேன் சார். ஒரு ஆர்மி மாப்பிள்ளைக்கு போட்டோ காட்ட அவங்க வீட்டுக்கு போக வேண்டி இருந்தது அதான்"

   "இப்போ தான் பேசிட்டு போனீங்க அதுக்குள்ள வேலை ஆரம்பிச்சுட்டீங்க? ரொம்ப ஃபாஸ்ட் சார் நீங்க!!.."

   "அப்படியெல்லாம் இல்லைங்க சார். இது பழைய கதை. அதுமட்டும் இல்லாம இவங்க உங்க அளவுக்கு இல்ல. நீங்க ஒன்னும் கவலைப் படவேண்டாம் கூடிய சீக்கிரத்தில் நான் முடித்து வைக்கிறேன்.." என்றவர் நம் கண்களிலிருந்து மறைந்து போனார்.

                                 [3]

     ரதி வீட்டிற்கு அருகில் வந்தவள் ஒரு சிறு ஓட்டு வீட்டிற்கு முன் பிச்சைக்காரனுக்கு போர்த்திய பட்டு துணியாய் ஒரு வெள்ளை ஹோண்டா சிட்டி நின்று கொண்டிருந்ததைப் பார்த்தாள். அதை கண்ட ரதி அங்கேயே நின்றுவிட்டாள். சிறிது நேரம் கழித்து வெறுப்புடன் நின்று கொண்டிருந்தவள் கண்ணில் பட்டது அந்த காட்சி. கதர் வேட்டி சட்டையுடன் ஒரு அரசியல்வாதி அந்த வீட்டிலிருந்து வெளியேறி காரில் அமர, ஒரு பெண்மணி அவரை வழியனுப்பி வைக்க வாசலில் வந்து நின்றாள். கார் நகர ரதியும் நகர ஆரம்பித்தார் தன் வீட்டை அடைவதற்குள் அந்தப் பெண்மணி உள்ளே சென்றுவிட்டார். வீட்டுக்குள் நுழைந்த ரதியை சற்று சந்தோஷமாக வரவேற்றாள் தாய் கௌரி.

   "ரதி என்னடி இன்னைக்கு லேட்டு"

   பதில் ஏதும் வரவில்லை. இருப்பினும்

  "கொஞ்சம் முன்னாடி வரக்கூடாது? அருணாச்சலம் அண்ணன் வந்திருந்தார். இந்த 15000 கொடுத்துவிட்டு போனார்"

   மீண்டும் பதில் ஏதும் வரவில்லை. தன் உடையை மாற்றிக்கொண்டு முகம் கை கால் கழுவிவிட்டு துண்டில் துடைத்துக் கொண்டு வந்த ரதியிடம் மீண்டும் பேச்சுக் கொடுத்தாள் கௌரி.

   "என்னடி நான் சொல்லிக்கிட்டே இருக்கேன்! நீ பாட்டுக்கு பேசாம உன் வேலையை பாத்துக்கிட்டு இருக்க? இந்தா இந்த பணத்தை உங்க அப்பா போட்டோகிட்ட வச்சு கும்பிட்டு கொடு" என்று அவள் முன் பணத்தை நீட்டினாள்

    

   "என்கிட்ட எதுக்கு கொடுக்கிறே? நீயே கொண்டுபோய் வை" என்று சற்று கோபமாகக் கூறினாள் ரதி

   "பிடிவாதக்காரி ஆச்சே" என்று பேசிக்கொண்டே பணத்தை தன் கணவர் படத்திற்கு முன் வைத்து வணங்கியவள்

   "ரதி ஏன் இன்னைக்கு லேட்ன்னு கேட்டேன்? உனக்காக அவரை எவ்வளவு நேரம் காக்க வெச்சேன்னு தெரியுமா? பாவம் அவருக்கு என்ன வேலையோ, நான் இன்னொரு நாள் வந்து பாத்துக்குறேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாரு" பேசியபடியே தன் மகளுக்கு காபி போட்டுக் கொண்டுவந்து கொடுத்தாள் கௌரி

   "நான் சரியான நேரத்துக்குத் தான் வந்தேன்.. ஆனா வீட்டுக்கு தான் வரல" சலித்துக் கொண்டு பதிலளித்தாள் ரதி

   "அடிப்பாவி அப்போ இன்னைக்கும் தெருமுனையில் நின்று அவர் கிளம்பினதுக்கப்பரம் வந்தியா? ஏண்டி இப்படி பண்ற? நீயும் நானும் தனியா இருக்கிற இந்த வீட்ல ஒரு ஆம்பளை வரும்போது நீ தனியா விலகி நின்னா பாக்கறவங்க என்னை தப்பா நினைக்க மாட்டாங்க? ஏற்கனவே கடங்காரங்கன்னு உங்கப்பா வாங்கி கொடுத்த பேர் போதாதா? நீ வேற என்ன தப்பானவள்னு கெட்ட பேரு வாங்கி தர பாக்குறியா? அப்படி என்னடி செய்தார் அந்த மனுஷன்? இன்னைக்கு வரைக்கும் உங்க அப்பாவோட ஃப்ரெண்டு அப்படிங்கிற ஒரே காரணத்துக்காக நமக்கு படி அளக்கறாரு. அந்த நல்" கௌரி பேசும்போதே குறுக்கிட்டாள் ரதி

   "என்ன பத்தி என்ன வேணும்னாலும் பேசு. எங்க அப்பாவை பத்தி பேசாத"

   "என்னடி அப்பா? பெரிய இந்த அப்பா! சொந்தமாக தொழில் செய்தால் லாபம் நஷ்டம் எல்லாம் வரத்தான் செய்யும். நாமதான் பொறுமையோடு இருந்து மீண்டு வரனும். வீடு, நகை, சொத்து எல்லாத்தையும் நஷ்டப்படும்போது இருந்த தைரியம் மீண்டு வரும்போது இல்லாம போச்சா? இதோ இந்த அண்ணனும் தானே உங்க அப்பாவோட கூட சேர்ந்து தொழில் பண்றாரு. இந்த ஏழு எட்டு வருஷத்தில மீண்டு வரல? அரசியல் அது இதுன்னு பெரியாள் ஆகல?"

   "அந்தாளு பெரிய ஆளானதே எங்க அப்பாவோட பணத்தை வச்சுத்தான்" முனுமுனுத்தாள் ரதி

   "என்னடி முனுமுனுக்கிறே? ஏதோ கூட பழகுன நண்பனோட குடும்பம் கஷ்டப்படுதுன்னு அப்பப்போ வந்து உதவி செய்கிறார். அதற்கு விசுவாசம் இல்லனாலும் பரவாயில்லை, கொஞ்சம் நன்றி கூடவா இல்லாமல் போச்சு? ஆனா உங்க அப்பா செய்த ஒரே ஒரு நல்ல காரியம் அந்த மனுஷனோட மகனுக்கு ஒன்னு பேசி வச்சதுதான். அது மட்டும் நல்லபடியா நடந்துச்சுன்னா நான் நிம்மதியா கண்ணை மூடி விடுவேன்" ரதி தன் தாயை முறைக்க

  

   "என்ன மொறைக்கிற? படிக்கும்போது பேசி வச்சது, அது எப்படி இப்ப நடக்கும்ன்னா? ரதி உண்மையிலேயே அவங்க குடும்பம் ரொம்ப நல்ல குடும்பம். நாம இப்போ தான் இப்படி ஒன்னும் இல்லாம ஆகிட்டோம். ஆனா நாம எப்படி வாழ்ந்த குடும்பம்னு அவங்களுக்கு தெரியாதா? நீ நல்லா வளர்ந்துட்டே கல்யாண வயசு வந்துருச்சுன்னு என்னால அவர்கிட்ட சொல்ல முடியல. உன்னை நேர்ல பார்த்தா அவரே புரிஞ்சிக்குவாருன்னு பார்த்தா நீ அவர் கண்ணில் படவே மாட்டேங்குற. அதற்காக இதை இப்படியே விட முடியாது. அடுத்த முறை அவரை பார்க்கும்போது என் பொண்ணு ரதிக்கு உங்க மகன் சிவாவை எப்போ கட்டி வைக்கப் போறீங்கன்னு கேட்க தான் போறேன்?"

   "ஸ்......"என்று சலித்துக்கொண்டாள் ரதி

   "ரதி அரிசியும் பருப்பும் ஊர வச்சிருக்கேன். அதை அரைச்சிடு. நான் வட்டி பணம் கொடுத்துட்டு அப்படியே மாவு பாக்கெட் எல்லாம் கடைங்கல்ல கொடுத்துட்டு வரேன்" என்றவள் பெரிய பையையும் கொஞ்சம் பணத்தையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்

   "வீதியில பிள்ளையோட தொல்லை, வீட்ல அப்பனோட தொல்லை.

இவனுங்க செய்கிற ஃபிராடு தனத்துக்கு எங்க அப்பாவுக்கு தான் கெட்ட பேரு" என்றபடி அவள் கண்களை மூடிக்கொண்டாள்

  "என்னப்பா ஒரு மாதிரி இருக்கீங்க?" கல்லூரி மாணவி வயதில் ரதி கேட்டாள்

  "ஒரு பெரிய அடிம்மா!" ஒரே திசையை நோக்கி யோசித்துக் கொண்டிருந்தவர் கண்கள் சிமிட்டாமல் பேசினார்.

   "யாருக்குப்பா? புதுசா ஆரம்பிச்ச கம்பெனியில வேலை செய்யரவங்களுக்கு ஏதாவது அடிபட்டுடுச்சா? என்றாள்.

   "துரோகம்.. நம்பிக்கை துரோகம்"

   "அப்பா என்ன சொல்ல வரீங்க? எனக்கு புரியல!"

   "ஒன்னும் இல்லம்மா, நீ போய் தூங்கு" என்று மகளை அனுப்பி வைத்தார்

   ஒரு சில மணி நேரத்தில் மனம் உறுத்த, தன் தந்தையின் அறையை திறந்தவள் அலறினாள்

   

   "அப்பா.....!!!" மகளின் அலறல் சத்தம் கேட்டு பதறிய கௌரி தன் கணவன் தூக்கில் தொங்கி இறந்திருப்பார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை

   "என்னங்க..... "

   சிறு சுதாரிப்போடு கண் திறந்த ரதி பழைய நினைவுகள் வந்து போனதை உணர்ந்தாள்.

                              [4]

   ஓரிரு நாட்கள் கடந்தன. சிவா தனது விலை உயர்ந்த வண்டியை ஒரு பெரிய மாளிகைக்குள் கொண்டு வந்து நிறுத்திவிட்டு உள்ளே சென்றான் ஹாலில் அமர்ந்திருந்த அருணாச்சலம் தன்னுடன் இருந்த தன் வலதுகையை அமைதிப்படுத்தி விட்டு கோபமாக மகனை அழைத்தார்

  "சிவா நில்லு"

  "என்னப்பா" என்றான் சாதாரணமாக.

  "எங்கே போயிட்டு வரே?"

   "சும்மா பிரண்ட்ஸ் மீட் பண்ணிட்டு வரேன்"

  "எந்த பிரெண்டு? அந்த பொண்ணையா?" சிவா தன் தந்தையின் கையாளை முறைக்க

   "அவனை ஏண்டா முறைக்கிற? உன்னை கண்காணிக்க சொன்னதே நான்தான். என்கிட்ட பேசு."

   "நான் புதுசா ஒண்ணும் தேடி போகலையே. ஏற்கனவே ரதி எனக்குன்னு நீங்க பேசினது தானே!"

    "நான் எங்கடா பேசினேன்? அவ அப்பன் ஒரு பைத்தியக்காரன். அவன் பேச்சை எல்லாம் நான் என்னைக்கும் மதிச்சதே இல்லை. படிக்கிற வயசுல எதுக்கு கல்யாணத்த பத்தி பேசணும் அந்த வயசு வரும்போது பேசிக்கலாம்னு தட்டிக் கழிச்சிட்டேன். அது மட்டும் இல்ல என் வீட்டுக்கு மருமகளா வரணும்னா சில தகுதி இருக்கணும். நல்ல படிப்பு, வசதி, அட்லீஸ்ட் அழகாகவாவது இருக்கனும். ஆனா அந்த பொண்ணுக்கு இதுல எந்த தகுதியும் இல்லை." குறுக்கிட்டான் சிவா

   "அவங்க வசதியை இழந்ததுக்கு யார் காரணம்? அந்தப் பெண்ணை நல்லா படிக்க வைக்கிற அளவுக்கு அவங்களுக்கு வசதி இருந்தது. ஆனா... எனக்கு எதுவும் தெரியாதுன்னு மட்டும் நினைக்காதீங்க"

   "வாய மூடுடா. என்னடா தெரியும் உனக்கு?" என்று சத்தமாக எழுந்ததும் அவர் மனைவி வேகமாக அங்கிருந்து வந்தார்

   

   "அன்னைக்கு நிலைமையில அரசியல்ல போஸ்டிங் வாங்க கொஞ்சம் பணம் தேவைப்பட்டது. சமாளிக்கிறதுகுள்ள நான் துரோகம் பண்ணிட்டேன் நான் தப்பு பண்ணிட்டேன்னு அவனே தற்கொலை செய்துகிட்டா? அதுக்கு நானா பொறுப்பு?"

    "நல்லா சமாளிக்கிறீங்கப்பா" என்றவன் தன் தாய் பக்கம் திரும்பி

    "அம்மா ரதி மாநிறம்தான். ஆனால் கலையா அழகா இருப்பாள் வசதி இல்லை படிப்பு கம்மிதான். ஆனா புத்திசாலி பொண்ணு. என்னைக்கா இருந்தாலும் அவ தான் என்னோட மனைவி. செய்த பாவத்திற்கு பரிகாரமாவது தேடச் சொல்லு" வேகமாக மாடி ஏறி தன் அறைக்குச் சென்றான்.

   "என்னங்க, அவன் கிட்ட எதுக்கு சரிக்கு சமமா பேசுறீங்க?"

  "வாய மூடுடி" என்றவன் தன் அருகில் இருந்தவரிடம்

   "அந்த கல்யாண புரோக்கருக்கு போன் போடுடா" என்றார் வேகமாக

   "என்னங்க அவசரமா நீங்க பொண்ணு பார்த்தா மட்டும் அவன் மனசு மாறவா போறான்? கொஞ்சம் பொறுமையா யோசிச்சு முடிவு எடுக்கலாமே"

   "போடி இவளே, மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவேன் நினைச்சியா? மூட்டபூச்சிய நசுக்கிப் போட்டு போயிட்டே இருக்கணும்"

   அருகில் இருந்தால் போனில் டயல் செய்து கொடுக்க

   "ஹலோ நான் அருணாச்சலம் எக்ஸ் எம்எல்ஏ பேசுறேன். எனக்கு தெரிஞ்சவங்க பொண்ணுக்கு வரன் பார்க்கணும். கஷ்டப்படுற குடும்பம்தான் அதனால் எதிர்பார்ப்பு எல்லாம் எதுவும் இல்லை. ஆனா ஒரே ஒரு கண்டிஷன் கல்யாணம் 3 மாதத்துக்குள் முடிக்கனும். எப்படிப்பட்ட மாப்பிள்ளையா இருந்தாலும் பரவால்ல. ரெண்டு மூணு மாசத்துக்கு உள்ள முடிச்சிடனும்"

   "ஆகட்டும் சார். கண்டிப்பா முடிச்சு கொடுக்கிறேன்" தன் கைபேசியை அணைத்து விட்டு எதிரே இருந்தவரிடம் பேச ஆரம்பித்தார் தரகர் மணி

   "என்னங்க சார் இந்த ரெண்டு வரன்ல உங்களுக்கு ஏதாவது ஓகேவா?"ஒரு பிரம்மாண்ட வீட்டு சோபாவில் எதிரில் அமர்ந்திருந்தவரிம் கேட்டார்

   "ஒன்னு ஃபாரின் மாப்பிள்ளை, அதனால வேண்டாம். இன்னொன்று வயசு கொஞ்சம் அதிகமா தெரியறார்." என்று தயக்கத்துடன் இழுத்தார்

   "பரவால்ல சார். நான் கூட அருணாசலம் சார் கால் பண்ணும் போது அவர் மகனுக்கு தான் பார்க்கச் சொல்றார், அப்படியே உங்க கிட்ட பேசலாம் நினைச்சேன். அவர்களும் உங்க ஆளுங்க தான் உங்கள் வசதிக்கு ஏற்றவங்க தான்"

   "மிஸ்டர் மணி, எங்க வசதிக்காக எங்க ஜாதிக்குன்னு தனியா பிரிச்சு பார்க்க வேண்டாம். எனக்கு வசதி கம்மியா இருந்தாலும் கவலை இல்லை. நல்ல குடும்பமா இருக்கணும், நல்ல பொறுப்பான பையனா இருக்கணும். நீங்க சொன்ன அந்த எம்எல்ஏ பையன் எனக்கு தெரியும். அவங்களுக்கு வசதி அதிகம். ஆனால் பையன் அவங்க அப்பாவோட எந்த பொறுப்பையும் எடுத்துக்காம சும்மாவே சுத்திக்கிட்டு இருக்கான். அதனால தான் சொல்றேன். ம்...கேக்கனும்னு நினைச்சேன், ரெண்டு நாளைக்கு முன்னாடி ஏதோ ஆர்மி பையனுக்கு பொண்ணு தேடுனீங்க, முடிஞ்சிருச்சா?"

   "இன்னும் இல்லைங்க சார். ரெண்டு நாளா உங்க வேலையாதான் சுத்திகிட்டு இருந்தேன். நீங்க கேட்டா மாதிரி நல்ல குடும்பம் ரொம்ப பொறுப்பான பையன் ஒரே மகன்தான் ஆர்மில சேரணும்னு பையனுக்கு ஆசை, மகனுக்கு கல்யாணம் பண்ணி முடிச்சு கூடவே இருக்கணும்னு பெத்தவங்களுக்கு ஆசை, 'என்னோட ஆசையை நிறைவேற்றிய உங்க ஆசையை நான் நிறைவேற்றுவேன்' என்று சொல்லவே தான் இந்த கல்யாண ஏற்பாடு பண்ண சொன்னாங்க. ஆனா மூணு வருஷமா பொண்ணு கிடைக்கல அதனால பையன் வேலையை விடவில்லை. அட்லீஸ்ட் வேலையை விட்டாலாவது பொண்ணு கிடைக்கும்னு சொல்றேன். ஆனா பெத்தவங்க அவன் மனசார வேலை பார்த்துட்டு வரட்டும், அப்போதுதான் எங்களோட வாழக்கூடிய வாழ்க்கை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்னு சொல்றாங்க. சொல்லப்போனால் கன்னித்தீவு கதை தான் சார்"

  "பையன் பேரு?"

   "சந்திரபோஸ்"

   "ம்..! சூப்பர் அவருடைய டீடைல்ஸ் வச்சிருக்கீங்களா?" 

   "ஓ.. இருக்கு சார். என்று தன் பையிலிருந்து எடுத்துக் கொடுத்தார்

    "பையன் பார்க்க நல்லா இருக்கான். இந்த டீடெயில்ஸ் என்கிட்டே இருக்கட்டும். நான் பாத்துட்டு சொல்றேன்"

   "என்ன சார் இது! இரண்டு நாளைக்கு முன்னாடி லக்ஷ்மியம்மா உங்க பொண்ணோட போட்டோவைப் பார்த்துட்டு ரொம்ப பிடிச்சிருக்கு என்று சொன்னாங்க. நான் தான் அது இதுன்னு சொல்லி தட்டிக் கழிச்சிட்டேன்"

   "யாரது லக்ஷ்மியம்மா?"

   "இந்த பையனோட அம்மா"

   "அவசரப்பட வேண்டாம். நான் சொல்றேன்"

   

   "சரிங்க சார் அப்ப நான் கெளம்புறேன்" என்றவர் புறப்பட்டு சென்றார்

   "என்னங்க..." என்று இழுத்தாள் விமல்ராஜின் மனைவி

    "லலிதா... என் மகள் என் கிட்ட பொறுப்பை கொடுத்துட்டாள். அதனால அவளுக்கு ஒரு குறையும் இல்லாமல் பார்க்க வேண்டியது என்னோட கடமை."

    "நான் அதுக்கு சொல்லலை ஒரு வேகத்தில் மாப்பிள்ளை பார்க்க சொல்லிட்டாள். ஆனா அவ பழசு எதுவும் மறக்கலன்னு நினைக்கிறேன்"

    "ஸீ... காயம் ஆறட்டும் மருந்து போடுறேன்னு சொல்லக்கூடாது. மருந்து போட்டால்தான் காயம் ஆறும்னு புரியவைக்கனும். வலி இருக்கத்தான் செய்யும். ஆனால் காலம் எல்லா காயங்களுக்கும் மருந்து போடும். நீ எதையும் போட்டு குழப்பிக்காத நான் பாத்துக்குறேன்"

                               [5]

   "ரதி... செல்வி வந்துட்டா பாரு" கௌரி தன் மகளுக்கு மதிய உணவை டிபன் பாக்ஸில் கொண்டு வந்த வண்ணம் ரதியை அழைத்தாள்.

   "வந்துட்டேன்" என்றவள் வாட்சை கட்டியபடியே செல்வியை வரவேற்றாள்.

   "வா செல்வி. இன்னைக்கு என்னசீக்கிரம் வந்துட்டே?"

   "ட்ரெயின் பாஸ் ரெனிவல் பண்ணனும் மறந்துட்டியா"

   "அட ஆமால்ல! அம்மா பணம் கேட்டு இருந்தனே தாம்மா"

   "ஐயோ! மறந்துட்டேன் டி. இரண்டு நாள் பொறுத்துக்கோயேன். அண்ணாச்சி கடையில் பாங்கி வந்ததும் தந்திடுறேன்"

   "என்னம்மா நீ... சரி விடு நான் பார்த்துக்கறேன்" என்று இருவரும் புறப்பட்டனர்

   நடந்து செல்கையில் செல்வி தயக்கத்துடன் ஆரம்பித்தாள்

  "நான் ஒன்னு கேட்டா கோவப்பட மாட்டியே..?"

   "கேளு"

    "உங்க குடும்ப சூழ்நிலை ரொம்ப கஷ்டமா இருக்கு. நீயோ டீச்சர் வேலை போயி மாதம் 10,000 சம்பாதிக்கிறே. உங்க அம்மா மாவு அரைச்சு விக்கறது, பூ கட்டுறதுன்னு ஏதோ ஒரு வேலையை பார்த்து கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறாங்க. ஆனால் தேதி 10 தான் ஆகுது ஒரு 250 ரூபாய் கூட இல்லாமல் என்னதான் செலவு பண்றீங்க?"

  "எங்க அப்பா கொஞ்சம் கடன் வாங்கியிருந்தார். அதை அடைக்கத்தான் சரியா இருக்கு. பரவால்ல பாத்துக்கலாம்"

  "என்னடி சாதாரணமா சொல்லிட்டு கடனை அடைக்கவே இவ்வளவு நாளுன்னா எப்போ கடனை அடைத்து உனக்காக எப்போ சேர்த்து வச்சு எப்ப கல்யாணம் செய்துக்குவே?"

   "கல்யாணம் மட்டும் தான் வாழ்க்கையா செல்வி? கல்யாணம் செய்துகிட்டா எல்லா பிரச்சினையும் சரியாகி விடுமா என்ன? சொல்லப் போனால் கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பிரச்சனை தான். கல்யாணத்துக்குப் பிறகுதான் பலப்பிரச்சனை."

   "அது சரிதான், ஆனா இந்த சமுதாயம் அதை ஏற்றுகாதே?"

   "சமுதாயத்தை விடு எங்க அம்மாவே ஏத்துக்க மாட்டாங்க. ஏற்கனவே இது பற்றி பேச்சு 'உனக்கு கல்யாணத்தை முடிச்சிட்டா எல்லா பிரச்சினையும் தீர்ந்திடும்' அப்படின்னு ஆனா என் பிரச்சனைக்கு கல்யாணம் ஒரு தீர்வாகாது. இதை சொன்னா எங்க அம்மா எங்க கேட்க போறாங்க?"

   பேசியபடியே ரயில் நிலையத்திற்கு வந்த அவர்கள் அங்கு வந்த ரயிலில் ஏறினார்

   "கடனைத் தவிர வேறு எதுவும் பிரச்சினை இல்லையே?"

    "என் பிரச்சனையே என் அம்மாதான். என் அம்மாவுக்கு என்னை விட்டால் யாருமில்லை. நான் கல்யாணம் செய்து விட்டு போயிட்டா என் வருமானமும் போய்விடும். அப்புறம் வீட்டு வாடகை, கடன், அவங்க செலவு இதுக்கெல்லாம் அவங்க சம்பாதிக்கறது எப்படி பத்தும்? இன்னும் கல்யாண செலவுவேற, அதனால நான் இதைப் பத்தி பேசுறதே இல்லை"

   "ஏன் ரதி உனக்கு காதல் திருமணத்தில் நம்பிக்கை இல்லையா"

   "ஏன் அப்படி கேட்கிற?"

    "இல்ல... அந்த அண்ணா ரொம்ப வசதியான குடும்பம். அதுமட்டுமில்லாமல் உன்னையே சுத்தி சுத்தி வர்றாரு. அவரோட வசதிக்கு உன்னோட பிரச்சினை எல்லாம் ஒன்னும் பெருசு இல்ல. அவரோட காதலையும் ஒன்னும் குறை சொல்ல முடியாது. அப்புறம் எதுக்கு நீ அவரை ஏத்துக்க மாட்டேங்குற? உங்க அம்மா சம்மதிக்க மாட்டாங்களா?" இதைக்கேட்டு கலகலவென சிரித்தாள் ரதி.

   "நீ வேற சிவாவை தான் கட்டிக்க போறேன்னு எங்க அம்மா நம்பிட்டு இருக்காங்க. ஆனா அது நடக்காதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்"

    "அம்மாவும் பிராப்ளம் இல்ல. அந்த அண்ணனும் ப்ராப்ளம் இல்ல அப்புறம் என்ன? நீ சம்மதிக்க வேண்டியது தானே.. வேற என்ன காரணம்?"

  

   "மூணு காரணம் இருக்கு. சூழ்நிலையைப் பார்த்து அவன் மேல எனக்கு காதல் வந்தா அது காதலே கிடையாது. இரண்டாவது அவனுக்கு என் மேலே வந்திருக்கிறது பரிதாபக் காதல் தானே தவிர அது உண்மையானது கிடையாது. என் மேல இருக்குற பரிதாபம் குறையும்போது காதல் செத்துப் போயிடும். மூன்றாவது காரணம் என் அப்பாவை நான் இழந்ததுக்கு காரணமே அந்த குடும்பம் தான் அப்புறம் எப்படி எனக்கு அங்க வாழ போகத் தோணும்?"

   "அப்போ உன்னோட ஃப்யூச்சர் பிளான்தான் என்ன?"

    "எனக்கும் தெரியாது. கடவுள் கையில ஒப்படைச்சுட்டேன். அதனால கடவுள் கொடுக்கறத எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துகனும் அவ்வளவுதான்"

                               [6]

   "லலிதா..." தன் வீட்டுக்குள் வந்த விமல்ராஜ் தன் மனைவியை அழைத்தார்

   "என்னங்க சீக்கிரம் வந்துட்டீங்க?"

   "ஜாதகம் பார்க்கப் போயிருந்தேன். ஜோசியர் அந்த பையன் சந்திரபோஸ் ஜாதகம் தான் எல்லா பொருத்தமும் இருக்குன்னு சொன்னார். தரகர் மணிகிட்ட பேசினேன். அன்னைக்கு சொன்னதுதான். அப்பா டீச்சர், அம்மா ஹவுஸ்வொய்ப், பையன் வேலையை விட்டுட்டு வந்த தொழில் செய்ய போறதா பிளான். குடும்பம் நல்ல குடும்பம். பிசினஸ் என்ன வேணாலும் நாம கூட சப்போர்ட் பண்ணி வச்சு கொடுக்கலாம் அதனால வசதி பற்றி எனக்கு பெருசா எந்த ஃபீலிங்ஸ் இல்ல. உன்னோட ஒப்பினியன் கேட்டுட்டு ஷாலு கிட்ட பேசலாம்ன்னு இருக்கேன். நீ என்ன நினைக்கிற?"

   "நமக்கு பிடிச்சிருந்தா மட்டும் போதாது. ஷாலு வந்ததும் கேட்டுவிட்டு அவளுக்கு ஓகே நா நேர்ல ஒரு எட்டு போய் பார்த்துட்டு எல்லாம் செட் ஆயிடுச்சின்னா மேற்கொண்டு பேசலாம். சொல்லிவச்சா மாதிரி உங்க பொண்ணே வந்துட்டாள்"

   "உனக்காக தான் பேசிட்டு இருக்கோம். கம் கம் சிட்" என்று தன் அருகில் அமர வைத்து அனைத்து விவரங்களையும் கூறினார்.

   சிறிதும் யோசிக்காமல் "டாடி... என்னோட செலக்சன் தப்பா ஆயிடுச்சு என்னைவிட என் மேல உங்களுக்கு தான் அக்கறை அதிகம். அதனால உங்க செலக்க்ஷன் தப்பாகாதுன்னு நம்பறேன். நீங்க யாருக்கு கழுத்தை நீட்ட சொன்னாலும் நீட்ட தயாரா இருக்கேன். டாடி உண்மையிலேயே உங்க மேல இருக்குற நம்பிக்கையில் தான் பேசுறேன் இப்போதைக்கு எனக்கு இருக்கிற ஒரே ஃபோக்கஸ் என்னோட பிசினஸ 'பெட்டிக் பெஸ்ட் லிஸ்ட் நம்பர் ஒன்னா கொண்டு வரணும். அவ்வளவுதான் சோ... உங்க வேலையை நீங்க தாராளமா பாருங்க" என்றவள் புன்முறுவலோடு விடைபெற்றார்

   "பாத்தியா லலிதா! நீ ஏதோ என் மகள் எதையும் மறக்கவே இல்லன்னு சொன்னே? ஆனா அவள் தெளிவாக இருக்கா. திரும்பவும் அந்த பையன் வந்தாலும் நீ யார் என்று கேட்கிற அளவுக்கு அவ பிரச்சனைகளை விட்டு வெளியே வந்துட்டா இனி ஆக வேண்டிய வேலையை பார்ப்போம்" மகிழ்ச்சியோடு கூறினார்

   "நாம ஒரு முறை அவங்கள நேரில் போய் பார்த்துட்டு என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு அதன்பிறகு தெளிவாக முடிவு எடுப்போம்"

   

   "நீ சொல்றதும் சரிதான். தரகர் கிட்ட பேசறேன். நாளைக்கே அவங்கள நாம சந்திக்க ஏற்பாடு பண்ண சொல்றேன்" என்றவர் தன் கைபேசியை எடுத்து டயல் செய்தார்

                                [7]

   "லட்சுமி... அவங்க வந்துட்டாங்க" கார் சத்தம் கேட்டு சண்முகராஜன் லக்ஷ்மி அழைத்தார் 

   காரிலிருந்து இறங்கிய லலிதா வீட்டை நிமிர்ந்து பார்த்தாள். பழைய முறைப்படி கட்டப்பட்ட ஒரு மாடி வீடு. லலிதாவின் மனதில் சிறு தயக்கம் தலை தூக்கியது. அவர்களை வாசலில் வந்து வரவேற்றனர். அனைவரும் உள்ளே சென்றதும் அங்கிருந்த மர சோபாவில் போட்டிருந்த குஷ்ஷனில் அனைவரும் அமர அவர்கள் பின்னால் இருந்து வந்த டிரைவர் பழத்தட்டை டீபா மீது வைத்துவிட்டுச் சென்றார். நேராக பேச்சைத் தொடங்கினார்

விமல்ராஜ்.

  "இவங்க என்னுடைய மனைவி லலிதா. நான் ரியல் எஸ்டேட் அண்ட் கன்ஸ்டிரக்ஷன் பிசினஸ் பண்ணிட்டு இருக்கேன். எங்களுக்கு ஒரே பொண்ணு பேரு ஷாலினி. பேஷன் டெக்னாலஜி முடிச்சிட்டு சொந்தமா பொட்டிக் வெச்சி நடத்திக்கிட்டு இருக்காள். உங்க குடும்பத்தை பத்தி மிஸ்டர் மணி சொன்னாரு. நான் கொஞ்சம் ஸ்டிரெயிட் பார்வர்டு. ஜாதி மதம் வசதி இதுலல்லாம் எனக்கு பெருசா நம்பிக்கை இல்லை. என் மனைவிக்கு ஜாதகத்திலே கொஞ்சம் நம்பிக்கை இருக்கு. அதையும் நாங்க பார்த்துட்டோம். எல்லாமே நல்லா இருக்குன்னு சொல்லிட்டு இருந்தாள். எங்களுக்கு உங்க பையனை ரொம்ப புடிச்சிருக்கு உங்க குடும்பத்தையும் ரொம்ப பிடிச்சிருக்கு. இனி உங்களுடைய கருத்தை தான் நீங்க சொல்லணும்" இடையில் உபசரணைகள் முடிந்தன

   "சந்தோஷம் சார். பொண்ணு போட்டோவை பார்த்த உடனே லட்சுமிக்கு ரொம்ப புடிச்சு போச்சு. நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்கல. ஆனா பையன் வரதுக்கு இன்னும் மூணு மாசம் ஆகும் ஒரு மாசம் லீவுல வருவான். அதோட அடுத்த வருஷம் தான். இந்த முறை வரும் போது நீங்க நேர்ல பார்த்து பேசுங்க. உங்களுக்கு பிடித்திருந்தால் மேற்கொண்டு நடக்கிறது பார்க்கலாம்"

    அதற்குள் லலிதா லட்சுமியிடம் "வீடு எப்ப கட்டினிங்க? தண்ணி கொட்டுற தாவாரம் எல்லாம் இருக்கு?"

   "வீடு பழசுதான். கட்டினது இல்ல நாங்க வாங்கினது. மாடியில ஒரு வராந்தா மாதிரி பெரிய ரூம் இருக்கும் கீழே கிச்சன் பூஜை ரூம் ரெண்டு பெட்ரூம் அட்டாச்ட் பாத்ரூம் எல்லா வசதியும் இருக்கு வாங்கின அதுக்கப்புறம் எங்களுக்கு புடிச்ச மாதிரி கொஞ்சம் ஆல்டர் செய்து விட்டோம்"

    மீண்டும் இவர்கள் பேச்சை தொடங்கினார்

   "சார் உங்க மகன் கிட்ட பேசுங்க. அவரை கேட்டுட்டு சொல்லுங்க இந்த லீவுல நிச்சயம் கல்யாணம் ரெண்டுமே வச்சிக்கலாம் அப்படின்னாலும் எங்களுக்கு ஓகே தான்" இதைக் கேட்டதும் பூரித்த லக்ஷ்மி

    "ரொம்ப சந்தோஷம். இன்னைக்கு சந்துரு கிட்ட பேசிட்டு நாங்க நல்ல செய்தியா சொல்றோம்"

   "சரி அப்போ நாங்க புறப்படுறோம்" என்று எழுந்ததும் லக்ஷ்மி உடனே உள்ளே பூவும் குங்குமமும் கொடுத்து வழி அனுப்பி வைத்தனர்

   "நல்ல குடும்பம், அழகான பொண்ணு, சீக்கிரம் கல்யாணம்... ஐயோ எனக்கு ஏதோ கனவுல நடக்கிற மாதிரியே இருக்குங்க" பூரித்துப் போனாள் லட்சுமி

   "கொஞ்சம் பொறுமையா இரு அவசரப்படாதே. அவங்க ரொம்ப வசதியானவங்க அந்தம்மா பேசுனது கவனிச்சியா?"

   "அதனால என்னங்க?"

    "வசதியாக வாழ்ந்த பொண்ணுக்கு இந்த வீட்டு வசதி பத்தாது என்று நினைக்கிறார்களோன்னு எனக்கு தோணுது"

இப்படி யோசிக்கிறவங்களா இருந்தா கல்யாணத்தை சீக்கிரம் வெச்சுக்கலாம்னு எப்படி சொல்லுவாங்க? பாருங்க வழக்கமா நான்தானே ஏதாவது குறை சொல்லுவேன். இப்போ நீங்க சொல்றீங்க? நீங்க சொல்ற காரணம் எனக்கு பெருசா தெரியல. நடக்கிறது எல்லாம் நல்லா தான் நடக்குது நாம சந்துரு கிட்ட பேசறோம் இந்த சம்பந்தத்தை முடிக்கிறோம்" என்று அவள் உள்ளே சென்று பூஜை கூடையை எடுத்துக்கொண்டு வந்தாள்

    "வாங்க கோயிலுக்கு போயிட்டு வந்து சந்துரு கிட்ட பேசலாம்"

    "நீ சும்மாவே ஆடுவே. சலங்கை கட்டிவிட்டா சொல்லவா வேணும் வா போலாம்"

                                [8]

   காரில் இருந்து தரகரை இறக்கி விட்டதும் லலிதா கணவரிடம் கேட்டாள்

   "என்னங்க... வீடு கொஞ்சம் வசதி கம்மியா இருக்கும் போல... நம்ம ஷாலு..."

   "நானும் கவனிச்சேன். வீடு வசதியாத்தான் இருக்கு. ஆனா வசதியான பொருட்கள்தான் இல்ல நம்ம ஷாலுவுக்கு என்னென்ன வேணுமோ எல்லாமே அவளுக்குப் பிடித்த மாதிரி ஃபுல்லா ரெடி பண்ணி கொடுத்திடலாம். நீ ஒன்னும் கவலைப்படாதே"

   "சரிங்க" சிறு மன நிம்மதி அடைந்தாள்

   கார் வீட்டுக்குள் நுழைந்ததும் லலிதா ஷாலுவின் கார் நின்றிருப்பதைக் கண்டு சிறு பரபரப்புடன் காரில் இருந்து இறங்கி வேகமாக வீட்டிற்கு உள்ளே சென்றாள். அங்கே தலையில் இரண்டு கைகளையும் வைத்து சோபாவில் மிகுந்த கோபத்துடன் ஷாலினி அமர்ந்திருந்தாள்.

   "என்னமா என்ன ஆச்சு?" அவளருகில் அமர்ந்து தலையை தடவிய படி கேட்டாள்

   "அந்த இடியட் எனக்கு கால் பண்றான்ம்மா!!" கோவத்துடன் சப்தமாக கத்தினாள்

   சற்று பதட்டம் அதிகரித்தது

   "யாருமா கால் பண்ணது"

   "ராகேஷ்" இதைக் கேட்டதும் விமல்ராஜ் தலைதூக்கிய கோபத்தை வெளிப்படுத்தாமல் மகளிடம் பொறுமையாக பேசினார்.

   "என்னம்மா சொன்னான்?"

   "நான் அவன் நம்பரை பிளாக் பண்ணி வச்சிருக்கேன் டாடி போனவாரம் அவன் கால் பண்ணி இருக்கான் மிஸ்டு கால் ல பார்த்தேன் இப்போ வீட்டுக்கு கால் பண்ணி என்னை டிஸ்டர்ப் பண்றான். ஹலோ கூட சொல்லல நான் உன்கிட்ட பேசணும் டைம் கொடுகன்னு சொல்றான். அவன் குரலைக் கேட்ட உடனே எனக்கு எல்லாமே ஞாபகத்துக்கு வந்துச்சு ரொம்ப திட்டிட்டு கால கட் பண்ணிட்டேன். ஆனால் எனக்கு ஆத்திரம் அடங்கால" இதைக்கேட்டு மகள் அருகில் அமர்ந்த விமல்ராஜ்

   "ஷாலு ரிலாக்ஸ். அவன் என்னதான் சொல்ல வரான்னு கேட்டிருக்கலாமே"

   "அவன் நல்லவனாக கூட இருக்கட்டும். ஆனால் எனக்கு தேவை இல்லை. அந்த சபையில் சொல்லாத எதையும் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. அவமானம் அப்படிங்கிறது அவங்களுக்கு மட்டும் தானா? நமக்கு இல்லையா? யாரும் அவனுக்காக என்கிட்ட சப்போர்ட் பண்ண வேண்டாம்" தீர்மானமாக கூறியவள் கார் சாவியை எடுத்துக்கொண்டு வேகமாக புறப்பட்டாள்

   "என்னங்க..." என் லலிதா பதற

   "பொறுமையாய் இரு பயப்படாத. என்னதான் நம்ம பொண்ணு ஸ்ட்ராங்கா இருந்தாலும் இந்த பிரச்சனையை வளரவிடக்கூடாது. ஷாலு கல்யாணத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்வதுதான் நல்லது. நான் பார்த்துக்கிறேன்"

                                [9]

    அன்று மாலை

   "ஹலோ சந்துரு எப்படிப்பா இருக்க?"

    "நான் நல்லா இருக்கேம்மா. நீங்களும் அப்பாவும் எப்படி இருக்கீங்க"

    "சந்துருு ஒரு குட் நியூஸ்! உனக்கு பொண்ணு பார்த்து இருக்கோம்! பேரு ஷாலினி, ரொம்ப அழகா இருக்கா, பேஷன் டிசைனிங் முடித்துவிட்டு சொந்தமா பொட்டிக் வெச்சிருக்கா, வசதியான குடும்பம் தான் ஆனா ரொம்ப நல்ல குடும்பம். பொண்ணோட போட்டோ அனுப்பி வைக்கிறோம் பாரு, கல்யாணத்தை வைச்சுக்கலாம்? இந்த லீவுல முடிச்சிடலாமா?

   "அம்மா பசங்களுக்கு ஸ்கூலெல்லாம் பார்த்துட்டீங்களா?" என்றான் கிண்டலாய்

   "என்னடா கிண்டல் பண்ற..." தாய் பம்பிய குரலில் கேட்டு மகன் சிரித்தான்

   "போன குடுடி. எல்லாத்துலயும் அவசரம். ஹலோ என்ன கண்ணா எப்படி இருக்க?"

    "நல்லா இருக்கேப்பா. நீங்க நல்லா இருக்கீங்களா?"

    "ம்... அவசர அவசரமா சொல்லி முடிச்சாலும் எல்லாத்தையும் தெளிவா உங்க அம்மா சொல்லிட்டா பொண்ணு போட்டோவை வாட்ஸ் அப்ல அனுப்புறேன். பாரு பார்த்துட்டு உனக்கு புடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம்"

   "அனுப்புங்கப்பா நோ ப்ராப்ளம். ஆனால் என் முடிவுன்னு ஒன்னும் தனியாக இல்லை. உங்களுக்கும் அம்மாவுக்கும் படிச்சிருந்தா போதும். உங்களுக்கு ஓகேன்னா நீங்க மேற்கொண்டு வேலையை பாருங்க எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல. ஆனா இங்க உளவுத்துறை கிட்ட இருந்து செய்தி வந்திருக்குன்னு சொல்லிக்கிறாங்க. அதைப் பொறுத்து தான் என்னோட வேலையை நிர்ணயம் ஆகும். எப்படியும் என்னோட வேலைய ரிசைன் பண்றதுக்கு ஒரு வருஷம் மேலாக ஆகலாம். இது என்னோட நிலைமை இனி நீங்களே முடிவு செஞ்சுக்கோங்கப்பா. எப்ப கல்யாணம் வெச்சுகிட்டாலும் எனக்கு ஓகே தான்"

    "சரிப்பா நான் பொண்ணு வீட்ல சொல்றேன் அவங்க என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று பார்ப்போம்"

    "சரிங்க அப்பா நான் வச்சிடறேன்"

     என்று கைபேசியை அனைத்தும் ஒரு இமேஜ் வாட்ஸ் அப்பில் வந்தது அதை திறந்து பார்த்த சந்துரு தன்னை மறந்து புன்முறுவல் பூத்தான். அருகில் ஒரு குரல்

   "என்ன மச்சி... பொண்ணு கிடைச்சிருச்சு போல!? செம்மையா இருக்காங்க. டேய் போடா வெட்கப்படுகிறான் டா!" என்று சிரித்துக் கொண்டே சென்றான்.

    வீட்டிற்கு வந்த விமல் ராஜ் என் கைபேசியை அணைத்து விட்டு மனைவியை அழைத்தார்

   "லலிதா ஷால் வந்துட்டாளா?"

   "இப்பதான் கால் செய்தேன் கிளம்பிட்டேன் என்று சொல்லிட்டு கட் பண்ணிட்டா"

   "சண்முகராஜன் பேசியிருந்தார். அவங்க எல்லாருக்கும் சம்மதமாம். கல்யாணம் நம்மல முடிவு செய்ய சொல்லிட்டாரு. ஷாலு போட்டோ பார்த்து சரின்னு சொல்லிட்டா மேற்கொண்டு ஆக வேண்டிய வேலையே ஸ்டார்ட் பண்ணலாம்"மகள் உள்ளே வருவதை கண்டு

   "வாடா.. வாடா.. உனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கோம்ல்ல. அவங்க வீட்ல எல்லாருக்கும் சம்மதம் சொல்லிட்டாங்க. எனக்கு உன்னோட விருப்பம் தாண்டா தெரியணும் இதோ மாப்பிள்ளை போட்டோ. பார்த்து உனக்கு பிடிச்சிருக்குன்னா சொல்லு, இல்ல வேற மாப்பிள்ளை பார்க்கலாமா" என்றார் ஆனந்தமாக

   "எனக்கு ஓகே டாடி. எப்ப வேணும்னாலும் கல்யாணத்தை வெச்சுக்கோங்க" என்றவள் தலை குனிந்த படியே தன் அறைக்குச் சென்றாள்

  "என்னங்க! குடிச்சிட்டு வந்திருக்காங்க!!" என்று கண் கலங்கினாள்

   "இந்த பழக்கத்தில் இருந்து அவளை வெளியே கொண்டு வர எவ்வளவு கஷ்டப்பட்டோம். காலையில் வந்த ஒரு போன்கால் அவளை பழையபடி மாத்திடுச்சேங்க!"

    "இதை வளர விட கூடாது. சீக்கிரம் இதற்கு ஒரு முடிவை தேடுவோம்" என்றவர் கைபேசியை எடுத்து டயல் செய்தார். புன்முறுவலுடன்

   "ஹலோ சண்முகராஜன் என் மகளுக்கு உங்க மகன ரொம்ப பிடிச்சிருக்கு. மாப்பிள்ளை இந்த முறை வரும்போது நிச்சயமும் கூடவே கல்யாணத்தை முடிச்சுடலாம். கல்யாணத்துக்குப் பிறகு வேலைக்குப் போறது எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அது அவருடைய விருப்பம் மாப்பிள்ளை வர தேதியை மட்டும் சொல்லுங்க அதுக்கு ஏத்தா மாதிரி நல்ல தேதியை பார்த்து முடிவு செய்திடலாம்"

   "நிச்சயமாக சார் அதுக்கு முன்னாடி நாங்க உங்க பொண்ணை பார்க்க வரலாமா?"

   "நிச்சயமா! ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுங்க அன்னைக்கு நாம சிம்பிளா ஒரு ஃபங்ஷன் மாதிரி வைத்துவிடலாம்" என்று சந்தோஷமாக கூறியவர் தன் கைபேசியை அணைத்து ஒருவித வருத்தம் கலந்த கோபம் வந்து தொற்றிக் கொண்டது விமல் ராஜின் முகத்தில்

                              [10]

    சில தினங்கள் உருண்டோடின மாவை பேக்கர் செய்து கொண்டிருந்த கௌரியை அழைத்தபடியே அருணாச்சலம் வீட்டிற்குள் நுழைந்தார்

   "அண்ணா! வாங்க அண்ணா..." என்றவள் அவசரமாக அனைத்தையும் எடுத்து ஓரமாக வைத்து விட்டு அங்கு இருந்த சேரை எடுத்து போட்டு அமர கூறினாள்

   "என்னமா தங்கச்சி எப்படி இருக்க?"

   "நல்லா இருக்கேண்ணா" என்றவள் இன்றைக்கு எப்படியாவது தன் மகளின் திருமணத்தை பற்றிய பேசிவிட வேண்டும் என்ற எண்ணம் மனம் முழுக்க ஓடியது

   "ஒரு முக்கியமான விஷயத்தை பேசலாம்ன்னுதான் வந்தேன். என்னுடைய நண்பன் ஆசைப்பட்டபடி அவன் நிறுவன கம்பெனியை என்னால காப்பாத்த முடியல, அதனால அவனுடைய இன்னொரு ஆசையை நிறைவேற்றலாம்னு நினைச்சேன். என் மனைவியும் சிவா கல்யாணத்தைப் பற்றிப் பேசிக்கிட்டே இருந்தாள்" அருணாச்சலம் பேசப் பேச மனம் மகிழ்ச்சியில் பூரித்த கௌரி அதை வெளிக்காட்டாமல் நின்று கேட்டுக் கொண்டிருந்தாள்

   "சரின்னு ஜோசியக்காரன் வரச்சொல்லி சிவா ஜாதகத்தை காட்டினா, இன்னும் ரெண்டு வருஷத்துக்கு அவனுக்கு நேரம் சரியில்லை அதனால கல்யாணம் இப்போதைக்கு செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டார்" இதைக் கேட்டு சற்று மனம் தளர்ந்தாள்

   "சரி லேட் ஆனா என்ன முடிவு செய்து வைப்போம் பொறுமையா கல்யாணம் செய்துகலாம் நினைச்சேன். என் நண்பன் ஆசையை நிறைவேற்றவே ரதியோடு ஜாதகத்தை கொடுத்து பொருத்தம் பார்த்து நிச்சயம் மட்டும் முடிக்கணும்னு முடிவு செய்தேன். ஆனா... எப்படி சொல்றதுன்னு தெரியல... ரெண்டு பேருக்கும் பொருத்தமே இல்லைன்னு சொல்லிட்டாரு. சரி பொருத்தம் இல்லன்னா என்ன இப்ப லவ் மேரேஜ் செய்துகிறவங்க ஜாதகத்தை பார்க்கறாங்களா என்ன, நான் பரவா இல்லை நிச்சயத்திற்கு ஒருநாள் பாருங்க என்று சொன்னேன். அதுக்கு ஜோசியர் அதையும் மீறி நீங்க கல்யாணம் செய்த உங்க மகனை நீங்க உயிரோடவே பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாரு!!" இதைக் கேட்டதும் பதறிப்போன கௌரி

   "ஐயோ! வேண்டாம் அண்ணே!! எதுக்கு சும்மா பேசிகிட்டு என் மகளுக்கு கொடுத்து வெச்சது அவ்வளவுதான். யார் என்ன செய்ய முடியும்? இந்த வார்த்தையைக் கேட்க எனக்கே கஷ்டமா இருக்கு, பாவம் அண்ணி மனசு எவ்வளவு பாடுபட்டு இருக்கும்"

    "துடிச்சு போய்ட்டாம்மா! எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல அதான் உன்னை கலந்து பேசிட்டு போலாம்னு வந்தேன்"

   "இனி அதைப் பற்றி பேச என்ன இருக்கு? எனக்கு அப்புறம் என் மகளுக்கு நீங்க, உங்க குடும்பம் இருக்கும்னு நம்பித்தான் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாங்கிக் கொண்டேன். இப்போ அவள் எதிர்காலம் என்ன ஆகும்னு நினைக்கவே முடியல" என்று கண் கலங்க ஆரம்பித்தாள்

   "என்னம்மா நீ... இதுக்கு போய் இப்படி வருத்தப்பட்டுட்டு இருக்கே. கடவுள் எல்லாருக்கும் ஒரு துணை வைத்திருப்பார். என் மகனுக்கு உன் மகளை எழுதி வைக்கல போல, அதுக்காக அவள் வாழ்க்கையை அப்படியே விட்டு விட முடியுமா என்ன? ஒரு நல்ல பையனை தேடி கண்டுபிடிக்கலாம். நல்ல படித்த, நல்ல வேலையில இருக்கிற, நல்ல குடும்பத்தில் பிறந்த ஒரு நல்ல பையன நானே தேடி நல்ல ஜாம் ஜாம்னு கல்யாணம் செய்து வைக்கிறேன். நீ கவலைப்படாதே. அது என்னோட கடமை" என்று ஆறுதல் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

    இதயத்தில் இறங்கிய ஈட்டியுடன் மாலை வரை தன் மகளின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தாள் கௌரி. மகள் வந்ததும்

   "அம்மாடி ரதி உன்கிட்ட ஒன்னு சொல்லணும், ஆனா நீ எப்படி எடுத்துக்குவன்னு தெரியலை"

   "சொல்லுமா"

   "அருணாச்சலம் அண்ணா வந்திருந்தார்..." என்று ஆரம்பித்தவள் அனைத்தையும் சொல்லி முடித்தார்

    எல்லாவற்றையும் கேட்டு அவள் எந்தவித பாதிப்பும் மனதில் இல்லாமல் சாதாரணமாக எழுந்து செல்ல, அவளை கோபமாக அழைத்தாள் கௌரி.

   "இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு! எதுவுமே உனக்கு சம்பந்தமில்லாதது மாதிரி போயிட்டு இருக்க? என்னடி நெனச்சிட்டு இருக்க?"

   "என்னை என்னம்மா செய்ய சொல்ற? உனக்கு இப்பதான் தெரியும் ஆனா எனக்கு இது சாத்தியமில்லைன்னு எப்பவோ தெரியும். நான் சொன்னா நீ நம்ப மாட்ட, நீயா நேரம் வரும்போது புரிஞ்சுக்கவேன்னு விட்டுட்டேன்"

   "எதை வச்சு சொல்ற? அவருக்கே ஜாதகம் பார்த்ததுக்கு அப்பறம் தான் தெரியும். உனக்கு மட்டும் ஞானதிருஷ்டில தெரிஞ்சுதோ!!?"

   "உனக்கு அவங்க சொன்ன காரணத்து மேல நம்பிக்கை. எனக்கு அவங்க குணத்து மேல நம்பிக்கை. நீ சொல்லுறதை வச்சு தெரிஞ்சிக்கிற, நான் அவங்க எல்லாரையும் புரிஞ்சு வச்சிருக்கேன்! அவ்வளவுதான்"

    "வாய மூடுடி. எப்பவும் அவரை குறை சொல்றது உனக்கு வேலையா போச்சு. உண்மையிலேயே அப்படி நினைக்கிற மனுஷனா இருந்தா உனக்கு ஒரு நல்ல சம்பந்தம் பார்த்து அவரே கல்யாணம் செய்து வைக்கிறேன்னு எனக்கு வாக்கு கொடுப்பாரா?"

   "இது தாம்மா நீ. அவரு ஒன்னும் நீ நினைக்கிற மாதிரி எனக்கு கல்யாணம் செய்துவைக்கிறேன்னு சொல்லிட்டு போக வரல. என் மகனுக்கு உன் மகளை கட்டிக்க முடியாது என்று தான் சொல்ல வந்திருக்கிறார். அது புரியாம நீயும் பொலம்புற... எதிர்பார்த்த உனக்கு வேணும்னா இது பெரிய இழப்பாக இருக்கலாம். ஆனா இது தான் நடக்கனும்னு ஏற்கனவே தெரிந்த எனக்கு இது எதுவுமே பாதிப்பை தரல. கண்ண துடச்சிகிட்டு வேலையை பாரும்மா. நம்ம வாழ்க்கை நம்ம தான் வாழனும். மத்தவங்க நமக்காக வாழ்வாங்க, நம்மல வாழ வைப்பாங்கன்னு நினைச்சா அது நம்ம முட்டாள்தனம்"

   "அதுக்காக நீ இப்படியே என் கூடவே இருந்துட முடியுமா என்ன? உனக்கு ஒரு வாழ்க்கையை தேடி வைக்காம போனா நான் என்ன அம்மா?"

   "அப்படித்தான் எனக்கு ஏதோ ஓரிடத்தில் வாழ்க்கை இருக்குன்னு தெரிஞ்சா எங்க இருந்தாலும் எனக்காக பிறந்தவன் கண்டிப்பா வர தானே போறான். வரட்டும் பாத்துக்கலாம்"

                             [11]

   "நான் வந்துட்டேன்"

    சந்துரு இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய போனால் லட்சுமி.

   "என்னங்க சந்துரு வந்துட்டான்" கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டாள்.

    சத்தம் கேட்டு குளித்துவிட்டு தலையை துவட்டிக் கொண்டு வந்த சண்முகராஜன் "ஏய் சந்துரு!! என்னடா பத்து மணி ஆகும் என்று சொன்ன?"

   "சும்மாப்பா.. சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னு. என் அம்மா முகத்துல இந்த சந்தோஷத்தை பார்க்கத்தான்" என்று தன் தாயின் கன்னங்களை பிடித்து ஆட்டினான்.

    ஆனந்தத்தில் குடும்பமே மூழ்கியிருந்தது சில மணி நேரம் கடந்தது. சண்முகராஜன் தன் மகனிடம்

   "என்னப்பா அவகிட்ட இன்னைக்கு ஈவினிங் வரேன்னு சொல்லி விடலாமா?"

   "கண்டிப்பா போயிடலாம் சொல்லிடுங்கப்பா" சாப்பிட்டுக்கொண்டே கூற

   "பாத்தியா பாத்தியா! நான் சொல்லல உனக்கு ரொம்ப புடிக்குமுன்னு!?"

    தோசையை கொண்டு வந்து அவன் தட்டில் வைத்த படியே லட்சுமி கேட்டால்

    "ஆமாம்மா! தோசைக்கும் காரச் சட்னிக்கு காம்பினேஷன் சூப்பர்!!" என்றான் கிண்டலாய்

    "நான் பொண்ண சொன்னேன்டா" செல்லக் கோபத்துடன் கூறினார்

   "பொண்ணா...." என்று தன் தந்தையைப் பார்த்து கண்ணடித்தான்

   "பிடிக்காமல்தான் கண்டிப்பா போகலாம்னு சொன்னயா"

   "ம்மா... நான் வந்து மூணு மணி நேரத்தில் இரண்டரை மணி நேரம் நீங்க அந்த பொண்ண பத்தி தான் பேசிட்டு இருக்கீங்க"

   "அப்போ மீதி அரை மணி நேரம்?" குறுக்கிட்டார் தந்தை

   "குளிச்சிட்டு இருந்தேன்ப்பா...." பரிதாபமாய் கூறினான்

   "ஓ.... சரி சரி"

   "நாளைக்குப் போய் பார்க்கிறதா இருந்தா இன்னைக்கு ஃபுல் டே என் நிலைமையை கொஞ்சம் நினைச்சுப் பாருங்க?"

   "கொஞ்சம் கஷ்டம்தான்"

   "அப்பாவும் பிள்ளையும் என்னைக் கிண்டல் பண்றீங்களா? எப்படியோ போங்க எனக்கு என்ன வந்தது?" என்று கோபமாய் சமையலறைக்குள் செல்ல இருவரும் சிரித்துக் கொண்டனர்

   மாலை அனைவரும் விமல்ராஜ் வீட்டில் அமர்ந்து இருந்தனர்

  "பொண்ண கூட்டிட்டு வா" என்று கூற லலிதா எழுந்து சென்றாள்

    சபையின் இடையில் வந்து இணைந்த தரகர் மணி சந்துருவை கவனித்தார். கட்டுக்கோப்பான உடல்வாகு, மாநிறத்திற்கும் சற்று மேலான நிறம், தூக்கி வாரிய தலை, ஹாண்ட்சம் ஆக இருந்தான்.

  "வணக்கம் தம்பி. போட்டோவை விட நேர்ல சூப்பரா இருக்கீங்க!"

   "ஆண்மகனுக்கு வீரன் தானே அழகு! அதுல நீங்க பேரழகன் தம்பி. ஆக்சுவலா எனக்கே ஆர்மி போகனும்னு ஆசை. ஆனா என்னால ஒரு பிசினஸ் மேன்னாக தான் ஆக முடிஞ்சது. ஆர் மி லைஃப் ரொம்ப கஷ்டம்னு எங்க அப்பா என்னை என்கரேஜ் பண்ணல. என்றார் விமல்ராஜ்

   "பூ வைக்க வந்த அன்னைக்கு கூட என் கிட்ட உங்க அப்பா கேட்டார். எனக்கு நாலு பசங்க ஆனாலும் அதுல ஒருத்தனக் கூட மிலிடரியில் அனுப்பி வைக்க எனக்கு தைரியம் இல்லை. நீங்க ஒரே மகனை எப்படி அனுப்புனீங்க அப்படினு கேட்டாரு அப்போ அந்த ஒரு மகன் நீங்கதானா" என்றார் சண்முகராஜன்

   "அந்த துரதிர்ஷ்டசாலி நான் தான்" என்றதும் அனைவரும் சிரித்தனர்

   அலங்கரித்த பெண்ணை லலிதா அழைத்து வந்தார் அனைவருக்கும் வணக்கம் சொல்லி தன் தந்தையின் அருகில் அமர்ந்தாள் ஷாலினி. லக்ஷ்மி நலம் விசாரித்ததில் பதிலளித்தவளை பார்த்தும் பார்க்காததுபோல் சமாளித்துக் கொண்டிருந்தான் சந்துரு. இதை கவனித்த விமல்ராஜ்

   "ஷாலு மாப்பிள்ளைக்கு வீட்டை சுத்தி காட்டும்மா" என்றார்

   "இல்ல... பரவால்ல... நான் வீட்ட பார்த்து என்ன செய்யப் போறேன்" என்றான் தயக்கமாக

    "தனியா அழைச்சிட்டு போய் பேச சொல்லி நாசூக்கா சொல்றாங்க டா" என்று பொறுமையாக அவன் அருகில் சாய்ந்து கூறினார் சண்முகராஜன்

   இதை கவனித்த அனைவரும் கண்டு கொள்ளாமல் இருக்க ஷாலு மட்டும் புன்முறுவலுடன் தலை குனிந்து கொண்டாள்.

  "சாரிப்பா..." என்று எழுந்ததும் ஷாலு "வாங்க" என்று அழைத்துச் சென்றாள்

   "கமெண்டோர்ல. ஆர்டர் போட்டார் தான் வேலையே நடக்காது. நாசூக்காக சொன்னால்லாம் புரிய மாட்டேங்குது" என்று சண்முகராஜன் கிண்டல் அடித்ததும், அனைவரும் சிரித்து விட்டனர்

                               [12]

    சிறிது நேரத்தில் மொட்டை மாடியில் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்

   "நானே உங்க கிட்ட தனியா பேசணும் நீ இருந்தேன். நல்லவேளையா அப்பா ஏற்பாடு செய்தார். என்னோட பாஸ்ட் பத்தி தான். பூ வைக்கிறதுக்கு முன்னாடியே உங்க கிட்ட சொல்லனும்னு நினைச்சேன். சான்ஸ் கிடைக்கல"நின்றவள் தொடர்ந்தாள்

   "என்னோட கிளாஸ் மேட் ராகேஷ். பிளஸ் 2 படிக்கும்போது துரத்தி துரத்தி லவ் பண்ணினான். ஒரு கட்டத்துல நானும் சம்மதித்து அஞ்சு வருஷம் லவ் பண்ணனோம். எங்க ரெண்டுபேர் வீட்டிலயும் சம்மதிச்சாங்க. நிச்சயம் எல்லாம் ஏற்பாடு செய்தாங்க. நிச்சயத்தன்னைக்கு முன்னால் ஏதோ கன்ஸ்டிரக்ஷன் பிசினஸ்ல ராகேஷ் அப்பாவுக்கு கிடைக்கவேண்டிய டெண்டர் எங்க அப்பாவோட கம்பெனிக்கு கிடைத்தது. இது அப்பாவுக்கு தெரியாது. ஆனால் தெரிஞ்சு செய்ததா சொல்லி நிச்சயம் மேடையில் வைத்து அசிங்கப்படுத்திட்டாங்க. அப்பா அப்ப கூட உங்களுக்கு நான் அதைக் கொடுத்திடுகிறேன் சொன்னார். அது இன்னும் தப்பா ஆயிடுச்சு. 'எனக்கு நீங்க ஒன்னும் பிச்சை போட வேண்டாம். நான் உங்க பொண்ணுக்கு வாழ்க்கை பிச்சை போடுறேன்'னு சொல்ல பிரச்சனை ரொம்ப பெருசாயிடுச்சு." சந்திரு ஆர்வமாக கேட்டுக் கொண்டிருக்க ஷாலினி தொடர்ந்தாள்

   "என் அப்பா மேல தப்பே இல்லன்னு அவர்கிட்ட அவர் பக்கம் நான் ஸ்டாண்ட் பண்ணினேன். நான் ராகேஷ் கிட்ட போய் சொன்னேன் உங்க அப்பாவுக்கு புரியலைன்னு. ஆனால் அவனும் அவங்க அப்பா சொன்னதுல என்ன தப்பு என்று சொல்ல என் காதல் அங்கேயே செத்து போயிடிச்சு. நானே நிச்சயத்தை நிறுத்திவிட்டு அவனை வேண்டாம்னு சொல்லிட்டேன். அதுக்கு அப்புறம் ரொம்ப ஸ்டிரஸ் ஆணை டாக்டர் டிரேட்மெண்ட்ன்னு..... பாவம் அப்பா என்னால அசிங்கப்பட்டது மட்டும் இல்லாம என நினைத்து ரொம்ப கவலைப்படும் படியும் நடந்துகிட்டேன். ஒரு கட்டத்தில் நான் என்னோட டிரெஸ்ஸை விட்டு வெளியே வரும்போது அப்பாவுக்காக ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். அவர் தான் என்னை பொட்டிக் வைக்க ஐடியா கொடுத்தார். ஆனால் அதுவும் எனக்காக தான் புரிஞ்சுது. அவரோட சந்தோஷம் என்னோட கல்யாணம் தான் தெரிஞ்சது. அதனாலதான் அப்பா கையை நீட்ற மாப்பிள்ளை கட்டிக்கிறேன் என்று முடிவு எடுத்தேன் என்ன இருந்தாலும் கடைசி வரைக்கும் வாழ போறவங்க கிட்ட எல்லாம் உண்மையை சொல்லனும்னு தோணுச்சு. அதான் சொல்லிட்டேன். கேக்குறேன்னு தப்பா நினைக்க வேண்டாம்.... ஒருவேளை இந்த இன்சிடென்ட் உங்களுக்கு சங்கடத்தை கொடுத்தா நீங்க தாராளமா...." தயக்கத்துடன் சொல்லி முடித்தாள்

   "சேச்சே... என்னங்க நீங்க... வாழ்க்கைன்னா எல்லாமே இருக்கும். சொல்லப் போனா நீங்க இவ்வளவு வெளிப்படையாக சொன்னது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. என்னோட லைப்ல டோட்டலாகவே ட்டிரை தாங்க. நான் படிக்கும்போது எக்சசைஸ் ஜிம் அதில் தான் ஆர்வம் அதிகம். ரிலாக்சேஷன்க்கு கொஞ்சம் கவிதைகள் படிப்பேன். என்னோட லைப்ல லேடிஸ் சேப்டர் ரொம்ப கம்மி. இரண்டே பேர்தான். ஒண்ணு என்னோட அம்மா அவங்க எங்க வீடுதான் உலகம். இன்னொன்னு நான் காலேஜ் படிக்கும் போது பக்கத்து வீட்டில் புதுசா குடி வந்து இருந்தாங்க. நான் மொட்டை மாடியில் எக்சர்சைஸ் பண்ணும்போது ஒரு பொண்ணு வந்து வந்து பார்க்கும். எனக்கு அப்போல்லாம் பொண்ணுங்கன்னாலே கொஞ்சம் பயம். ஏன்னா நான் படிச்ச ஸ்கூல் காலேஜ் எல்லாமே பாய்ஸ் தான். ஒரு பத்து நாளா தொடர்ந்து வந்து பார்த்துட்டு இருந்தாள். நான் அப்பப்போ நிமிர்ந்து பாப்பேன், ஒரு நாள் வீட்டுக்கு உள்ளே வந்துட்டாள். அம்மா அப்பா எல்லாம் இருக்காங்க! எனக்கு கை கால்லாம் நடுங்க ஆரம்பிச்சுருச்சு!! வந்தவள் 'உங்க மகன் கிட்ட கொஞ்சம் பேசணும்'னு சொல்ல, எனக்கு வேர்த்துப் போச்சு!! என் கிட்ட வந்து 'என்னோட பையனுக்கும் கொஞ்சம் இசை சொல்லித்தர முடியுமா? அவன் தின்னு தின்னு குண்டாகிட்டே போறான்' என்று சந்திரு சொன்னதும் ஷாலினி மனம்விட்டு கலகலவென சிரித்தாள்

   "மாடியிலேயே கேட்கலாம்னு பார்த்தா நீங்க திரும்பி கூட பாக்கல'ன்னு சொல்ல, அவங்க கல்யாணமான பொண்ணு அப்புறம்தான் தெரிஞ்சது. அன்னைக்கு விட்டடவன் தான். யார் பார்த்தாலும் நான் கண்டுக்கறதே இல்ல. அதுக்கு அப்புறம் நீ என் லைஃப் ல ஒரு பொண்ணுன்னா அது நீங்கதான். எனக்கு பாரதியார் ரொம்ப பிடிக்கும். அவர் ஆசை படுற மாதிரி பொண்ணுங்க தைரியமா இருக்கணும் எனக்கும் ஆசை. அந்த மாதிரி ஒரு தைரியமான பொண்ணுதான் எங்க அம்மாவும் அப்பாவும் எனக்காக செலக்ட் பண்ணி கொடுத்திருக்காங்கன்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்கள எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு" தைரியமாக கூறினான்

   "தேங்க்ஸ்" என்று புன்முறுவல் சிரிப்போடு தலை குனிந்தவளிடம்

   "உங்களுடைய இந்த குட்டி சிரிப்பை விட கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சிரிச்சா அந்த கலகலப்பான சிரிப்பு ரொம்ப அழகா இருந்தது! அந்த சிரிப்பை பார்க்கணும்னா இன்னொரு ஆண்டிகிட்ட அசிங்கப்படனும் போல?" என்றதும் கலகலவென சிரித்தாள் ஷாலினி

   மேலே வந்த வேலைக்காரி "அம்மா! உங்க ஐயா கூப்பிட்டாங்க"

   "வரேன் சொல்லு" என்றவள் சந்துருவை பார்த்து

   "போலாமா"

   "கண்டிப்பா"

   கீழே இறங்கி வந்தவர்கள் அமர்ந்ததும்

   "தேதி முடிவு செய்திருக்கும் தம்பி. எட்டாம் தேதி நிச்சயம், 15ஆம் தேதி கல்யாணம். நீங்க அடுத்த ரெண்டாம் தேதி கிளம்பறதா அப்பா சொன்னாரு. இதுக்கிடையில இருக்கிறது இந்த ரெண்டு நாள் தான் சரியா வரும்னு எல்லாரும் நினைக்கிறோம். உங்க கம்ஃபர்டபிள் எப்படி என்று சொன்னீங்கன்னா..." விமல்ராஜ் கேட்க

   "எனக்கு ஓகே. சார் எந்த கமீட்மென்டுமில்லை"

   "அப்போ ஆக வேண்டிய வேலைகளை சீக்கிரமா தொடங்கலாம்" என்றாள் லட்சுமி

   "சென்னை எக்ஸ்பிரஸ் ஸ்டார்ட் ஆயிடுச்சு..." என்று சண்முகராஜன் கிண்டலாக சொல்ல, மகன் மட்டும் கமுக்கமாய் சிரித்தான்

    கல்யாண வேலைகளும் நிச்சயம் வேலைகளும் கலைகட்டத் தொடங்கின. நாட்கள் மிகவும் குறைவு என்பதால் அனைவரும் கூடி செய்யும் வேலைகளில் இருவரும் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. கூட்டத்திலும் தன்மையை உணர்ந்தவர்கள், காதல் பார்வைகளும் சைகை பேச்சுக்களும் அழகாய் தென்பட்டன. நிச்சயம் நாள் நெருங்கியது. மறுநாள் நிச்சயம் கையில் மருதாணி வைத்து இருந்த அவள் தன் கைபேசி அழைப்பு கண்டு தன் வீட்டு வேலைக்காரியிடம் அதை ஆன் செய்து தன் காதில் வைக்கும்படி கூறினார். சந்துரு அழைப்பை எதிர்பார்த்து ஆர்வமாக

   "ஹலோ" என்றாள்

   "நீ இல்லன்னா சத்தியமா நான் செத்துடுவேன்! ஷாலினி சும்மா சொல்றேன் மட்டும் நினைக்காதே, சத்தியமா செத்துவிடுவேன்!!" ராகேஷின் குரல் அதிவேகமாக கேட்டது

   அதிர்ந்துபோன ஷாலினி வாயடைத்து நின்றாள் வேலைக்காரி "அம்மா... அம்மா..." என்றாள்

    சுதாரித்த ஷாலினி "மம்மி டாடி கூப்பிடு" என்றாள்

   "அம்மா அவங்க ரெண்டு பேரும் மண்டபத்துக்கு போயிருக்காங்க"

   

    செய்வதறியாது குழம்பியவள் 'அவன் தண்ணி அடிச்சுட்டு இருக்கான்' என்று தனக்குத் தானே ஆறுதல் தேடிக் கொண்டாள்

                               [13]

    அன்று காலை மண்டபம் கலைக்கட்டியிருந்தது. சொந்தபந்தங்கள் சூழ, நண்பர்கள் வருகை என இரு குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். மணமகன் நண்பர்களுடன் சேர்ந்து தன்னைத்தானே தயார்படுத்திக் கொண்டிருந்தான். மணமகளை அலங்கரித்துக் கொண்டு இருந்தனர். அங்கு வந்த லலிதாவை அழைத்தால் ஷாலினி

   "அம்மா இங்க வாயேன்..."

   "என்னம்மா?" என்றதும் பின்னிருந்து ஒரு குரல் கேட்டது

   "என்னமா ஷாலினி! ரெடி ஆகிட்டியா! என் கண்ணே பட்டுடும் போல இருக்கு!!" என்று தன் கை விரல்களால் சுத்தி போட்டா லட்சுமி லலிதாவை அழைத்தாள்

   "அண்ணி... ஐயர் உங்கள கூட்டிட்டு வர சொன்னாரு" என்று அழைத்துச் சென்றாள்

    பெரியவர்களின் சம்பிரதாயங்கள் முடிந்ததும் மணமகன் மணமகளை அழைத்து ஆசீர்வாதம் பெற்று உடைகளை பெற்றுக்கொள்ளும்படி ஐயர் கூறினார். அங்கு வந்த ஷாலினியின் முகம் சற்று வாடி இருப்பதை கண்ட சந்துரு 'என்ன'என்று கண் அசைவில் கேட்டான்

   'ஒன்றுமில்லை' என்று கண்களால் பதில் கூறி புன்முறுவல் பூத்தாள். மணமகன் அவர்கள் அளித்த தட்டை வாங்கிக் கொண்டு சென்றதும் மணமகள் அந்த தட்டை வாங்கி கொண்டிருக்கையில் இருவர் அழுதபடி ஓடி வந்தனர். அவர்கள் சத்தத்தைக் கேட்டு அனைவர் கவனமும் அவர்கள் பக்கம் திரும்பியது. அவர்களை கண்டதும் ஷாலினிக்கு பயம் அதிகரித்தது. விமல்ராஜ் லலிதாவும் குழப்பத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர் வந்தவர்கள் நேராக ஷாலினியை பார்த்து

   "ஷாலினி... என் மகனை காப்பாத்தி கொடும்மா" என்று அலறினாள் வேகமாக மேடையில் இருந்து இறங்கி வந்த விமல்ராஜ்

   "என்னங்க இது! எங்களை சபையில் அசிங்கப்படுத்த வேறு ஏதாவது பிளான் போடுவீங்களா?"

   "நிச்சயமா இல்லைங்க சார்.... எல்லா தவறும் என் மேல தான். என்னோட வறட்டு கௌரவத்தால இன்னைக்கு என் மகனை நாங்க இழந்திடுவோம் போல இருக்கு சார்..." என்று அழுதபடியே புலம்பினார் ராகேஷின் தந்தை

    சண்முகராஜனும் லக்ஷ்மியும் நடப்பது எதுவும் புரியாமல் குழப்பத்தில் நின்றிருந்தனர். சத்தம் கேட்டு சந்துரு சபைக்கு வந்தான்

    வேகமாகி ஷாலினி அருகில் சென்ற ராகேஷின் தாய்

   "அம்மாடி என் மகள் ஒரு க்க்ஷணம் கூட உன்னை மறந்ததில்லை. அன்னைக்கு வீட்டுக்கு வந்ததும் அவங்க அப்பா கூட சண்டை போட்டவந்தான் அதுக்கப்புறம் இந்த ஒரு வருஷத்துல இன்னும் அவர் கிட்ட ஒரு வார்த்தை கூட பேசல. என்கிட்ட கூட தேவைக்கு மட்டும் தான் பேசுவானே தவிர சாதாரணமாக கூட பேசுவதில்லை. பிரண்ட கூட பார்க்க வெளியே போவதில்லை. அவன் நிலைமையை பார்த்து நாங்க ரொம்ப மனசு உடைஞ்சு போய் விட்டோம்! அவன் அப்பா உங்க வீட்டுக்கு வந்து பேசி மன்னிப்பு கேட்கணும்ன்னு முடிவு எடுத்தார். அப்போதான் இன்னும் ரெண்டு நாள்ல உனக்கு நிச்சயம் கேள்விப்பட்டோம். ஏற்கனவே நம்மளால ஒரு முறை நிச்சயம் நின்னு போச்சு. இன்னொரு முறை நம்ம சுயநலத்துக்காக அவங்கள நாம அசிங்கப்படுத்த வேணாம்னு நாங்க வரலை. ரெண்டு நாளா அவனுக்கு தெரியாம தான் பார்த்துக்கிட்டோம்.எஔ ஆனா நேத்து நைட்டு எப்படியோ உனக்கு நிச்சயம்ன்னு அவனுக்கு தெரிஞ்சு போச்சு. நைட் ஃபுல்லா அவனுக்கு புரிய வச்சு எவ்வளவோ சமாதானப்படுத்தி இருந்தோம். 'சரி சரி'ன்னு இன்னைக்கு காலையில எங்களை ஏமாற்றி விஷத்தை குடிச்சிட்டான்ம்மா. நீ வந்தா தான் என் மகனை காப்பாற்ற முடியும் வேற வழி இல்லாமல் இங்கே வந்து நிற்கிறோம்" அழுதபடி பேசினாள்

   "பாருங்க அம்மா... இதுல எங்க தவறு என்னன்னு சொல்லுங்க? நாங்க உங்க மகனை ஏத்துக்க தானே செய்தோம்! ஆனால் வேண்டாம்னு முடிவு செய்தது" என்று விமல் ராஜ் பேசும்போதே குறுக்கிட்டார் ராகேஷின் தந்தை

   "தப்பு எங்க மேல தான் சார். எங்க மேல தான்..." என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதார்

   "என்னோட வெட்டி கௌரவம் தான்.. சார் உங்க மகளுக்கு வாழ்க்கை பிச்சை போடுறேன்னு சொன்னேன்.. ஆனா இன்னைக்கு என் மகனோட உயிர்பிச்சை கேட்டு வந்து இருக்கேன் சார். அவனை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயும் அவன் டிரேட்மெண்ட் எடுத்துக்க மாட்டேன்னு அடம் புடிக்கிறான் சார். தயவு செஞ்சு என் புள்ளையை காப்பாத்தி கொடுங்க சார்" என்று கதறி அழுதவர் கையேந்தி மண்டியிட்டார்

    எல்லோரும் செய்வதறியாது நின்றிருந்தனர். சந்திரு ஷாலினி அருகே சென்று அவள் கையில் இருந்த தட்டை வாங்கிக்கொண்டு 'போ' எனும்படி கைகாட்டினான். இதைக்கண்ட லக்ஷ்மிக்கு கோபம் வந்தது

   "என்ன பண்ற சந்துரு" என்றாள் கோபமாக

   "விடுங்கம்மா... நிச்சயம் நின்னா அது நமக்கு வெறும் அசிங்கம் தான். ஆனா மானத்தை விட ஒரு உயிர் முக்கியம். நீ கிளம்பு ஷாலினி" கண் கலங்கி நின்ற ஷாலினி கைகூப்பி மன்னித்துவிடுங்கள் என்பது போல அழ ஆரம்பித்தாள்

    ராகேஷ் தாயுடன் இறங்கி வந்தவள் தன் தந்தையிடம் வந்து நின்று 'நான் என்ன செய்வது' என்பது போல் நிற்க, அவர் ஏதும் பேசாமல் தலை குனிந்து நின்றார். ஷாலினி அவர்களை அழைத்துக்கொண்டு புறப்பட்டாள். சந்திரு தன் தாயை அழைத்து செல்ல முற்பட்டான். கோபத்தின் உச்சத்தில் இருந்த லட்சுமி அவன் கையை உதறிவிட்டு சத்தம் போட ஆரம்பித்தாள்.

   என்னடா நடக்குது இங்கே? யாரோ வராங்க, ஏதோ கதை சொல்றாங்க, நீ என்னமோ அவங்க வீட்டு பொண்ண தியாகி மாதிரி நீ அனுப்பி வைக்கிற? அவங்க என்னமோ வாயடைச்சு போய் நிற்கிறாங்க? அப்ப நாங்க என்ன முட்டாளா? எங்க மகனுக்காக நாங்கள் கண்ட கனவெல்லாம் மண்ணா போச்சு?"

   "அம்மா ப்ளீஸ் விடுங்க" என்று கலங்கிய கண்களை கட்டுப்படுத்திக் கொண்டான்

   "லட்சுமி. விடு. அவங்களும் வேணும்னு செய்யல. என்ன செய்யறது சூழ்நிலை அப்படி... நீ வருத்தப்பட்டு எதுவும் மாறப்போவதில்லை"

   "உண்மைதாங்க... எதுவும் மாறப்போவதில்லை தான். ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் பார்த்திருக்கலாமே? எல்லாத்தையும் இவ்வளவு பிரமாண்டமாக ஏற்பாடு செஞ்சவங்க அவங்கள சுத்தி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சு வச்சிருக்காம விட்டார்களே? இப்போ அவங்க செஞ்ச தப்புக்கு நம்ம தானே அசிங்கப்பட்டு நிற்கிறோம்? என் மகனை நினைத்து நான் எவ்வளவு கனவு கண்டு இருப்பேன்..." என்று அழ ஆரம்பித்தார்

     அவளை சமாதானப் படுத்திய சண்முகராஜனிடம் விமல்ராஜ் "எங்களை மன்னிச்சுடுங்க சார். இவ்வளவு பேர் கூடின சபையில இப்படிப்பட்ட ஒரு அவமானம் எவ்வளவு பெரிய வலியைத் தேடி வரும்ன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்... அது முடிந்து போன விஷயம் என்று தான் நான் எல்லா ஏற்பாடும் செய்தேன் ஆனால்.. இப்படி நடக்கும்னு..... மன்னிச்சுடுங்க சார்" என்று தலை குனிந்து கையெடுத்துக் கும்பிட அவர் கையை இறக்கி விட்டார் சண்முகராஜ்

   "அம்மா நம்ப போலாம்" என்று தன் தாயை அழைத்தான் சந்துரு

   "தம்பி..." என்ற விமல்ராஜிடம்

   "பரவாயில்லை சார். நாங்க இங்க இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் உங்க எல்லோருக்கும் சங்கடம் தான். நீங்க ஆக வேண்டியதை பாருங்கள்" என்றவன் தன் தாயை அணைத்தபடியே அழைத்துச் செல்ல சண்முகராஜன் உடன் சென்றார்

                                  [14]

    சந்துருவின் மடியில் லட்சுமி படுத்திருந்தாள் சண்முகராஜன் சோகமாக அமர்ந்து இருந்தார்

   "என்ன பாவம் செய்தோம்? தன் மகனுக்கு கல்யாணம் செய்து பார்க்கிற பாக்கியம் கூட எங்களுக்கு கிடைக்காதா? அந்த கடவுளுக்கு கூட கண்ணில்லையா?"

   "லட்சுமி... கொஞ்ச நேரம் அமைதியாய் இரு. நமக்கு மட்டும் தான் கஷ்டமா? சும்மா இருந்தவனை கல்யாண ஆசை காட்டி அவன் மனசை கெடுத்து வச்சிருக்கே! அவனோட மனநிலையை கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தியா?" என்றதும் எழுந்தவள் தன் மகனைப் பார்த்து

   "சந்துரு நீ ஒன்னும் மனசில் வெச்சுகாதேப்பா... அவ இல்லைன்னா வேற பொண்ணா இல்லை?" என்றதும் கண்கலங்கியதை மறைக்க எழுந்து மாடிக்கு சென்றான் சந்துரு

   அப்போது உள்ளே வந்த தரகர் மணி "சார்.." என்றவரை "வாங்க" என்று அழைத்து அமரச் சொன்னார் சண்முகராஜன்

   "நான் ஒரு முக்கியமான கல்யாணத்துக்குப் போக வேண்டி இருந்தது. அதனால தான் என்னால கலந்துக்க முடியல. என்னங்க சார் என்னென்னமோ நடந்து போச்சு?"

    "இனி நடந்ததைப் பற்றி பேசிப் புண்ணியமில்லை. நடக்கப்போவதை பார்க்கணும்" என்ற சண்முகராஜன்

   "நீங்க சீக்கிரமா ஒரு பொண்ணு பாருங். இந்த லீவுல சந்துருவுக்கு கல்யாணத்தை முடிச்சிடனும்" என்றார் திட்டவட்டமாக

   "நீங்க இப்போ எதுக்கு அவசரப் படுறீங்க" என்றாள் சற்றும் எதிர்பார்க்காத லட்சுமி

   "போதும் லட்சுமி. நல்ல பொண்ணா தேடுறோம், நல்ல பொண்ணா தேடுறோம்னு நாமதான் அவன் வாழ்க்கையை அழைச்சிட்டு இருக்கோம். இதுக்கு மேலயும் காலம் கடத்தினால் அது நம்ம முட்டாள்தனம். எவ்வளவு நாள் ஓடி ஓடி தேடினாலும் அவனுக்குன்னு எழுதப்பட்டிருக்கும் பொண்ணு தான் அமையும்"

   "அதுக்காக?"

   "எதுவும் பேசாத லக்ஷ்மி. பல கனவுகளோடு வந்த அவனை மனவேதனையோடு திருப்பி அனுப்ப எனக்கு இஷ்டம் இல்லை" என்றவர் தரகரிடம்

   "என் மகன் இரண்டாம் தேதி புறப்படுகிறான். 28ஆம் தேதி கடைசி தேதிக்குள்ள கல்யாணத்தை நடத்த முடியும்னு எனக்கு தோணுது. எங்களுக்கு வசதியா அழகா படிச்ச பொண்ணு எல்லாம் வேண்டாம். நல்ல குடும்பம் நல்ல பொண்ணு மட்டும் பாருங்கள் அது போதும் என்று அவரை வழியனுப்பி வைத்தார்

   "என்னங்க இன்னும் 20 நாள்ல எப்படிங்க இது சாத்தியமாகும்?"

   "ரொம்ப சுலபம். நீ அமைதியா இருந்தா" என்றவர் எழுந்து வெளியே புறப்பட்டார்

                              [15]

   "சிவா" கோபமாக அழைத்தார் அருணாச்சலம்

   "என்னப்பா?" வாசலில் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தவன் தந்தையிடம் வந்து நின்றான்

   "உங்க அம்மா சொல்றது உண்மையா? ரதியை பொண்ணு பாக்க போலாம்னு கூப்பிட்டியா?"

   "ஆமா"

   "உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? நானும் பொறுமையா எடுத்து சொன்னா... சார் கேட்க மாட்டீங்களோ??"

   "ரதி கிட்ட எவ்வளவோ கேட்டுப் பார்த்துட்டேன். எதுவா இருந்தாலும் உங்க வீட்டில சொல்லு, உங்க வீட்டில சொல்லுன்னே சொல்ற. நீங்க ஒத்துப்போக மாட்டேங்கறீங்க. என்னை என்ன தான் செய்ய சொல்றீங்க? அதான் அம்மாவாது என்னோட ஃபீலிங்ஸ் புரிஞ்சுக்குவாங்கன்னு அவங்க கிட்ட சொன்னேன்"

   "இது சரியில்லை சிவா... என்னை அசிங்க படுத்த தானே இப்படி செய்ற? என்னை வேற மாதிரி முடிவெடுக்க வைத்து விடாதே"

   "நீங்க என்ன முடிவு எடுக்கிறது? நான் சொல்றேன் என்னோட முடிவ. இன்னும் ஒரு மாசம் டைம் கொடுக்கிறேன். அதுக்குள்ள நீங்களே ஒரு நல்ல முடிவா எடுங்க. இல்ல நானே அவங்க அம்மா கிட்ட பேசி உண்மை எல்லாம் சொல்லி கையோடு தாலி கட்டி கூட்டிட்டு வர வேண்டியிருக்கும்" என்று அவன் பதில் எதுவும் எதிர்பார்க்காமல் வெளியில் சென்று தன் வண்டியில் புறப்பட்டான்

   "ச்சே..." என்றவர் கோபமாக சலித்துக் கொண்டவர் தரகருக்கு அழைப்பு விடுக்கும்படி சொன்னார். சில மணிநேரங்களில் தரகர் அருணாச்சலத்தை அவர் வீட்டில் வந்து சந்தித்தார்

   "இங்க பாருங்க... நீங்க என்ன செய்வீர்களோ எனக்கு தெரியாது. இன்னும் ஒரு மாசத்துக்குள்ள அந்த பொண்ணுக்கு நீங்கள் வரன் பார்த்தே ஆகணும்"

   " ஏன் சார்? ஏதாவது பிரச்சனையா?" என்று தரகர் கேட்டதும் சுதாரித்த பதிலளித்தார்

   "ச்சே... ச்சே... அப்படியெல்லாம் ஒன்னுமில்ல... நாங்க ஃபேமிலியோட வேர்ல்டு டூர் போகலாம் என்று முடிவு செய்திருந்தோம். அதுக்குள்ள இந்த கல்யாணத்தை முடித்து விட்டு போய்விடலாமுன்னுதான்"

  "அப்படிங்களா... ரெண்டு நாள் முன்னாடி ஒரு சம்பவம் ஒன்று நடந்தது" என்று ஆரம்பித்தவர் சந்துருவின் மொத்த விபரத்தையும் சொல்லி முடித்தார். இதைக் கேட்டு சற்று நிம்மதி அடைந்த அருணாச்சலம்

   "ரொம்ப நல்லதா போச்சு! அப்போ இந்த சம்பந்தத்தை பேசி முடிச்சிடுங்க. உங்கள நான் பெருசா கவனிக்கிறேன்" என்றார்

    இந்த வார்த்தையில் மகிழ்ச்சி அடைந்த மணி அங்கிருந்து புறப்பட்டு சண்முகராஜன் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்

   "சார் ஒரு பொண்ணோட டீடைல் கிடைச்சிருக்கு. ஒரே பொண்ணு நல்லா வாழ்ந்த குடும்பம். தொழில் நஷ்டம் என்று பொண்ணோட அப்பா தற்கொலை செய்து கொண்டார். சொந்த வீடு சொத்து எல்லாத்தையும் இழந்து இப்போ வாடகை வீட்டில்தான் இருக்காங்க. அதனால அவங்களுக்கு வசதி எல்லாம் ஒன்னும் பெருசா இல்ல. பொண்ணு படிப்பையும் பாதியில் நிறுத்த வேண்டியதா போயிடுச்சு. இந்த பொண்ணு வாய் பேச முடியாமல் காது கேட்காமல் இருக்கிற பசங்களுக்கு ஒரு ஸ்கூல் இருக்கும் இல்லையா? அதுல டீச்சரா வேலை பார்க்கிறாள். அவங்க அப்பாவோட ஃப்ரெண்டு தான் ஃபேமிலி கொஞ்சம் சப்போர்ட் பண்ணிட்டு இருக்காரு அவருக்கு ஆர்மி மாப்பிள்ளைன்னு சொன்னதும் ஓகேன்னு சொல்லிட்டாரு. எப்போ வேணும்னாலும் கல்யாணத்தை வைச்சுக்கலாம் என்று சொல்லிடாரு"

   "ரொம்ப சந்தோஷம் நாளைக்கு நாங்க வந்து பொண்ணு பார்க்கிறோம் அவங்க கிட்ட சொல்லிடுங்க" என்று சொல்லி அனுப்பிவைத்தார் சண்முகராஜன்

   "லட்சுமி பொண்ணு எப்படி இருந்தாலும் ஏத்துக்கோ. எதுவும் சொல்லாத. நமக்கு இதுல சந்தோஷம்தான்னு சந்திரு நினைக்கணும்"

   "ஏங்க இப்படி அவசரப் படுறீங்க?"

   "லக்ஷ்மி அவனுக்கு வயசாகிட்டே போகுது. அவனுக்கு மட்டுமில்லை நமக்கும் தான். இப்படி நெனச்சு பாரு? ஒருவேளை அவன் அடுத்த வருஷம் வரதுக்குள்ள எனக்கு ஏதாவது நடந்துச்சுன்னா"

    "என்னங்க நீங்க அபசகுனமா ஏதேதோ பேசிவிட்டு... சரி விடுங்க. அவனுக்கு இந்த பொண்ணு தான் அமையும் என்று விதி இருந்தால் அமையட்டும் நாளைக்கு நாம போய் பாத்துட்டு வரலாம்"

   "சந்துரு கிட்ட சொல்லலாம் அவனை கூப்பிட்டு"

   "அவன் ப்ரண்டு கூட பக்கத்துல இருக்க பார்க்குக்கு போய் இருக்கான்"

ஒரு வாரம் பழகினாதுல அந்த பொண்ணோட நினைப்பு அவனை விட்டு போகல"

   "என்ன செய்றது லக்ஷ்மி? நாமதான் அதை மறக்க வைக்கணும். கால் பண்ணி அவன வர சொல்லு"

    பார்க்கில் ஆறுதல் கூறிக் கொண்டிருந்த நண்பன்

    "நீ இரு... தம் காலி ஆகிடுச்சு வாங்கிட்டு வரேன்" என்று அருகிலிருந்த சிறு பெட்டிக் கடைக்கு சென்றான். அங்கு குழந்தைகளை பார்க்கிற்கு அழைத்துவந்த ரதி மற்றும் மற்ற ஆசிரியர்கள் அவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தனர். சந்துரு நண்பனின் கைபேசி அழைக்க அவன் அதைப் பார்த்துக் கொண்டே நடந்தவன் தெரியாமல் ரதி மீது இடித்து விட்டான். திரும்பிப் பார்த்தவள் பளாரென்று அவன் கன்னத்தில் அறைந்தாள் இதைக் கண்டு அங்கு வேகமாக சென்ற சந்துரு ரதியிடம் சண்டையிட்டான்

   "எதுக்காக அவன அடிச்சிங்க?"

   "பொண்ணுங்களை இடிச்சா சும்மா இருப்பாங்களா?"

   "தெரியாம வந்து இடிச்சா கூட அடிப்பீங்களா?"

   "இல்ல. தெரியாத மாதிரி வந்து இடித்தாலும் அடிப்போம்"

   "ஏன் பொண்ணுங்க எதுவும் தப்பே செய்யறது இல்லையா?"

    அவனது கோபம் வேறு மாதிரி வெளிப்பட அவன் மனநிலையை புரிந்த அவனது நண்பன்

   "சரி விடுடா. அம்மா கால் பண்றாங்க வா போகலாம்" என்றவன் "சாரி சிஸ்டர்" என்று சொல்லிவிட்டு சந்திருவை அழைத்து வந்தான் அவன் வீட்டில் இறக்கிவிட்டு பொறுமை காக்கும்படி ஆறுதல் கூறி புறப்பட்டார்

    உள்ளே வந்த சந்துருவிடம் சண்முகராஜன் "சந்துரு இங்கே வா" என்றார்

   "என்னப்பா?'தளர்ந்த குரலில் கேட்டான்

   "நாங்க ஒரு பொண்ணு பார்த்து விசாரிச்சு வைத்திருக்கும். நாளைக்கு நேர்ல போய் பார்த்துட்டு வரலாம்"

   "நீங்க போயிட்டு வாங்கப்பா. நான் வரலை நீங்க எந்த பெண்ணை பார்த்தாலும் சரி என்ன முடிவு எடுத்தாலும் சரி" என்றவன் அருகில் இருந்த அறைக்குள் சென்று கதவை தாழிட்டான்

    ரதி வீட்டிற்குள் அனைவரும் அமர்ந்திருந்தனர் அருணாசலம் உட்பட.

   "என்னுடைய நெருங்கிய நண்பன். அதுமட்டுமில்லாமல் அவன் என் கூடவே சேர்ந்து தொழில் செய்து அந்த தொழில் நஷ்டம் ஆயிடுச்சு. எனக்குள்ள ஒரு உறுத்தல், நம்ம தொழில் ராசிதான் நம்ம நண்பனே அடிச்சிருச்சோன்னு. எனக்கு அரசியல் சப்போர்ட் இருந்ததால என்னால சமாளிக்க முடிந்தது. இந்த மன உறுத்தல் ஆறுதலாகவும் என் நண்பன் ஆத்மா சாந்தி அடையவும் தான் நான் இந்த குடும்பத்தை பார்த்துக்கிறேன். பதவியில் இருந்து இருந்தால் இன்னும் ஏதேதோ இந்த குடும்பத்திற்காக செய்திருப்பேன். என்ன செய்யறது நான் பதவியில் இல்லாத போது தான் கல்யாணம் கூடி வந்து இருக்கு. இருந்தாலும் பரவாயில்லை நீங்க என்ன எதிர்பார்க்கிறீர்கனு சொல்லுங்க. பாத்து பண்ணிக்கலாம்" என்றார் அருணாச்சலம்

   "எங்களுக்கு எதிர்பார்ப்பு எல்லாம் ஒன்னும் இல்லைங்க. நீங்க உங்க பொண்ணுக்கு ஏதாவது செய்ய விரும்பினா செய்துக்கோங்க. எங்களுக்கு பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு. எங்க பையன் இரண்டாம் தேதி புறப்படுறாரு. அதனால நிச்சயம் கல்யாணம் எல்லாம் அடுத்தடுத்து நாள் வச்சுக்கலாம். 28ஆம் தேதி உங்களுக்கு வசதினா கல்யாணத்தை வைச்சுக்கலாம்." தெளிவாக சொல்லி முடித்தார் சண்முகராஜன்

   "ரொம்ப சந்தோஷம் சார். நீங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு எல்லாம் தளர ஆரம்பிச்சிடுங்க" என்று பேசி முடித்த அனைவரும் புறப்பட்டனர்

   லட்சுமி முகம் வாடி இருப்பதை கண்ட சண்முகராஜன் "என்ன லஷ்மி ஒரு மாதிரி இருக்கே?" என்று கேட்டார்.

   "மகனுக்கு எப்படிப்பட்ட பொண்ணு பார்க்கணும் கனவு கண்டிருந்தேன். ஆனா இப்போ படிப்பும் ஒண்ணும் பெருசா இல்லை, கலரும் கம்மியா..!"

   "நீ என்ன அழகிப் போட்டிக்கா ஆள் எடுக்குற? கடைசி வரைக்கும் சந்தோசமா வாழ்ந்தா போதும் நினை. கஷ்டத்தைப் பார்த்து வளர்ந்த பொண்ணு எல்லாத்தையும் அனுசரிச்சு போற அளவுக்கு பக்குவமான பொண்ணா தான் இருப்பாள். அவன் கிட்ட போட்டோ காட்டும்போது எதுவும் பேசி வைக்காதே. என்று ஆட்டோவில் இறங்கி வீட்டிற்குள் சென்றனர்.

    அங்கிருந்த சந்துருவிடம் "சந்துரு பொண்ணு பேரு ரதி. போட்டோ..." என்று ஒரு கவரைக் கொடுத்தார்

    அதை வாங்கியவன் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான். முடித்ததும் எழுந்து சென்றவனிடம் "சந்துரு போட்டோ" என்றதும் அந்த கவரை எடுத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றவன் டேபிள் மீது வைத்துவிட்டு கட்டிலில் சரிந்தான்

                             [16]

    சிவா வீட்டுக்குள் வந்து தன் தாயிடம் கோபத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தான்

    "அம்மா... என்னம்மா நினைச்சுட்டு இருக்காரு உன் புருஷன்? நான் எவ்வளவு சொல்லியும் என்னோட ஃபீலிங்ஸ் யாரும் புரிஞ்சுக்கல. ரதிக்கு அவசர அவசரமாக கல்யாண ஏற்பாடு பண்ணிட்டாரு"

   "அவரும் முதலிலிருந்து இதுதானடா சொல்லிட்டு இருக்காரு. அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு வேண்டாம்னு. நீ தான் கேட்க மாட்டேங்கிற?"

   "என்னமா நீயும் இப்படி பேசுற? அப்போ என்னுடைய லவ்?"

   "மண்ணாங்கட்டி லவ். உங்க அப்பாகிட்ட எது நடக்கும் எது நடக்காதுன்னு கூடவா உனக்கு தெரியாது? அந்த ஆளுக்கு பணத்தை தவிர வேறு எதுவும் கண்ணுக்குத் தெரியாது. அவர்கிட்ட போய் இறக்கும் பரிதாபம் எல்லாம் நீ எதிர்பார்த்தா அது உன்னோட தப்பு. அவங்க வீட்டுக்கு உதவி செய்கிறது கூட ஆதாயம் இல்லாமல் இல்லை. அதை புரிஞ்சுக்கோ. அவர் வேலை முடிஞ்சிடுச்சுன்னா அவ்வளவுதான். அட்லீஸ்ட் அந்த பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வரைக்குமாவது அவரோட ஆதாயம் முடியாமல் இருக்கே அந்த நினைத்து சந்தோஷப் படுவியா.... அத விட்டுட்டு அந்த பொண்ணை லவ் பண்றேன் கல்யாணம் பண்றேன்னு..... பாரு சிவா... நம்ம அப்பாவால அந்த குடும்பம் நஷ்டப்பட்டது போதும். வேற வீட்டுக்கு வாக்கப்பட்டு போனாலாவது அந்த பொண்ணுக்கு நல்ல ஃபேமிலி சப்போர்டாவது கிடைக்கும். நல்லது பண்றேன்னு அந்த பொண்ணை இங்கே கூட்டிட்டு வந்து அவர்களை காலம்பூரா கஷ்டப்படுத்த எனக்கும் மனசு இல்லை" என்று தன் மகனின் மனதை அமைதிப் படுத்தினாள்

    தாமரை இலைகள் இருக்கும் தண்ணீர் போல கல்யாண வேலைகளில் சந்துருவின் பங்களிப்பு இருந்தது. மாலை நிச்சயமும் அவ்வாறே நகர, காலை முகூர்த்த நேரமும் நெருங்கியது. மணமேடையில் இருவரும் அருகில் அமர்ந்து இருந்தும் சந்துரு அருகில் இருப்பது யார் என்று அறிந்து கொள்ள விரும்பவில்லை. முதல் வரிசையில் அருணாச்சல குடும்பத்தினர் அமர்ந்திருந்தனர் சிவா உட்பட. சம்பிரதாயங்கள் நடந்துகொண்டிருந்தபோது ஆண்கள் வேகமாக வந்து

   "இந்த கல்யாணத்தை நிறுத்துங்க" என்றனர்

    அனைவரும் அதிர்ந்து போக கௌரி வேகமாக இறங்கி அவர்களிடம் ஓடி வந்தார். அதில் ஒருவர்

   "என்னம்மா பொண்ணுக்கு மட்டும் கல்யாணம் பண்றே? அப்போ இவ்வளவு நாளா பணத்தை வைச்சுக்கிட்டு எங்களை ஏமாற்றிவிட்டு இருந்து இருக்க? எங்க பணத்த குடுத்துட்டு இந்த கல்யாணத்தை நடத்திக்கோ" என்றார்

   "ஐயா... நான் சத்தியமா உங்களை ஏமாற்ற மாட்டேன். நானே கஷ்டப்பட்டு தான் இந்த கல்யாணத்தை ஏற்பாடு செஞ்சிருக்கேன்"

    "என்னது? ஏமாத்த மாட்டியா? உன் மகள் வேலைக்குப் போய் சம்பாதிக்கிறது தான் எங்களுக்கு வட்டி பணமே சரியான நேரத்தில் கிடைத்தது. இனி அதுவும் வராது. அப்போ எப்படி அசல் வரும்?"

     இதை கண்டு சலித்துக் கொண்ட சந்திரு எழுந்து மணமகன் அறைக்குச் சென்றார். இதைக் கண்டு பதறிய லக்ஷ்மி சண்முகராஜன் என்னவென்று கேட்கும்படி கூறினாள்

   "என்ன சார் நீங்க... பணம் வசூல் செய்கிற இடமா இது? இனி உங்களுக்கு எப்பவும் போல வட்டி பணம் வந்து சேரும். அவங்க மகளோட சம்பளத்தை அப்படியே அவங்க அம்மாகிட்ட கொடுத்திவாங்க. அவ்வளவுதானே இதுக்குப் போயி..."

   "என்னது வட்டி பணமா? அப்போ அசல்? அதையும் நீங்களே தர உத்தரவாதம் கொடுக்க கொடுக்க முடியுமா?"

   "என்னங்கய்யா அவரப் போயி கேட்கிறீங்க?" என்று கௌரி சங்கடப்பட்டார்

   "வேற என்னம்மா பண்ண சொல்றிங்க? உங்க கணவர், மகன் யாராவது இருக்காங்களா? நாளைக்கு நீங்களே மண்டையை போட்டுட்டா?" அதைக் கேட்டு வேகமாக எழுந்த ரதியை தடுத்தால் லக்ஷ்மி அதற்குள் ஒரு வேகமான குரல் ஒன்றுகேட்டது

   "யோவ்" அனைவரும் திரும்பிப் பார்க்க அங்கு சிவா

   "கல்யாண வீட்ல வந்து என்ன பேச்சு பேசிட்டு இருக்கே? உனக்கு பணம்தானே வேணும். எவ்வளவு?"

   "எனக்கு மூன்றரை இலட்சம், இவருக்கு இரண்டரை லட்சம்"

   "அவ்வளவுதானே! சாயந்திரம் எங்க அப்பா கிட்ட வந்து வாங்கிக்கோங்க"

   இதைக் கேட்டு சற்று கோபம் கொண்ட அருணாச்சலம் வெளிப்படுத்தாமல் கேட்டார்

   "என்ன சிவா... நீ எதுக்காக..."

   "அப்பா ப்ளீஸ்... அந்த பொண்ணு எங்கேயாவது நிம்மதியாக வாழவிடுங்க. முதல்ல நான் சொன்னதைதான் நீங்க கேக்கல. அட்லீஸ்ட் இப்போ சொல்லுறதையாவது கேளுங்கள். உங்க பாணியில் சொல்லனும்னா ஒங்க நண்பனோட பொண்ணுக்கு வாழ்க்கை கொடுங்க, இல்ல வாழ விடுங்கள்"

    எதுவும் சொல்லாமல் திரும்பி சென்றார் அருணாச்சலம்

   "அதான் சொல்லிட்டேன் இல்ல. போங்க" என்று அவர்களை அனுப்பி வைத்துவிட்டு சண்முகராஜனை பார்த்து

   "சாரி சார்... நீங்க மேற்கொண்டு ஆக வேண்டிய வேலையே பாருங்க" என்று சண்முகராஜன் என்று சொல்லி அனுப்பி வைத்தான்

    கௌரி அழுதபடியே சிவாவை கையெடுத்து வணங்க, "என்ன ஆண்ட்டி நீங்க நானும் உங்க மகன் மாதிரி தான் கல்யாண வேலையை கவனிங்க" என்று அவளை அனுப்பிவிட்டு விட்டு அமர்ந்தவர் ரதியின் கண்களுக்கு நல்ல நண்பனாய் தெரிந்தான்

மணமகன் அறைக்குச் சென்ற சண்முகராஜன் மகனிடம் "சந்துரு வாப்பா" என்றார்

   "என்னப்பா இதெல்லாம்? எனக்கு மட்டும் ஏன் பா..."

   "விடு சந்திரு... ஒரு நல்ல விஷயம் நடக்கும் போது பல தடங்கல்கள் வரத்தான் செய்யும். அதையெல்லாம் பெரிசு பண்ண கூடாது. பாரு பத்து நிமிஷத்துல சரியாயிடுச்சு. இதுக்கு போய் ஏன் இவ்வளவு சங்கடப்படுறே? அன்னைக்கு நம்ம நிலைமை தான் இப்ப அந்த பொண்ணுக்கு. நாம யாருக்கும் அதே சங்கடத்தை கொடுக்க கூடாது" ஏதும் செய்வதறியாது வெறுப்புடன் எழுந்து சென்றான் சந்துரு

   இருந்த கோபத்தில் தாலி கட்டும் போதும் மணமகளின் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்க வில்லை

                                [17]

    அன்றிரவு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அறையில் சந்துரு மட்டும் அமர்ந்திருந்தான். கதவு திறக்கும் சத்தம் கேட்டு கட்டிலை விட்டு எழுந்து விலகி திரும்பி நின்றான். சிறிது நேரம் வளையல் சத்தம் கேட்டது அதன்பிறகு எந்த சத்தமும் இல்லை. என்ன நடக்கிறது என்று புரியாது திரும்பி பார்த்தால் தரையில் ஒரு போர்வையை விரித்து தலையணையிட்டு அலங்கரித்த ஒரு பெண் படுத்து இருந்தாள். அவளை கண்டதும்

'இந்தப் பொண்ண எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே' என்று யோசித்தவன் வேகமாக டேபிள் மீது இருந்த கவரை பிரித்து பார்த்தான்

   'இது அந்த பார்க்கில் சண்டை போட்ட பொண்ணு இல்ல' என்று எண்ணினான்

   "நீ எப்படி எங்கே?" என்று சத்தம் கேட்டு எழுந்து அமர்ந்தவாறு

   "எனக்கு தாலி கட்டினால் நான்தானே வருவேன்?"

   "ஐயோ" என்று தலையில் கை வைத்து கட்டிலில் அமர்ந்தான்

   "உங்க போட்டோவை பார்த்ததுமே நான் கேட்டேன் உங்களுக்கு ஓகே வான்னு. எல்லாரும் உங்களுக்கு சம்மதம்ன்னு தான் சொன்னாங்க. ரொம்ப ஸ்போட்டிவான ஆளுன்னு நெனச்சேன். அப்போ... நான்னு தெரியாமலே தாலி கட்டி இருக்கீங்க! சாரி இதுல என்னோட தவறு எதுவும் இல்லை"

    "எனக்கு அதிகப் பிரசங்கித்தனமா நடத்துகிற பொண்ணுங்கன்னாலே பிடிக்கவே மாட்டேங்குது. அதுலயும் உன்ன போய்..."

   "ஹலோ... எனக்கும் தான் மரியாதையான ஆம்பளையதான் பிடிக்கும். அதுக்கு என்ன செய்ய முடியும்?"

   "நான் தான் உன் போட்டோவை பாக்கல. நீ பார்த்தே இல்ல! நீயாவது சொல்லி இருக்க வேண்டியதுதானே"

   "சார் காதல் கோட்டை படத்தில் நடிப்பீங்கன்னு எனக்கு எப்படி தெரியும்"

   "என்ன?"

   "பொண்ணு பார்க்காம ஓகே சொல்லுவீங்கன்னு எனக்கு எப்படி தெரியும் என்று சொன்னே"

   "என் நேரம் உன் கூட எல்லாம் பேச வேண்டியிருக்கு"

   "நான் ஆரம்பிக்கலயே"

   கோபத்தில் முறைத்தவன் குப்புறப் படுத்தான் புன்முறுவல் செய்தவள் தானும் படுத்து உறங்கினாள்

    காலை குளித்து விட்டு சமையல் அறைக்கு சென்றாள். அங்கு லக்ஷ்மி காபி போட்டுக் கொண்டிருந்தாள்

   "இந்தாம்மா காபி"

   "இருக்கட்டும் அத்தை நீங்க சாப்பிடுங்க. யாருக்காவது கொடுக்கணுமா?"

   "ஆமாம். நீ சந்துருவுக்கு கொடு. நான் மாமா மாடியில யோகா பண்ணிட்டு இருக்காரு அவருக்கு கொடுத்துட்டு வர்றேன்"

   "நீங்க உங்க மகனுக்கு குடுங்கத்தை நான் மாமாவுக்கு கொடுத்துட்டு வர்றேன்" என்று அவள் பதிலை எதிர்பார்க்காமல் ஒரு கப்பை எடுத்துக்கொண்டு சென்றாள்

   சந்துருவின் கோபம் குறையவில்லை என்பது லக்ஷ்மிக்கு புரிந்தது மாடிக்குச் சென்ற ரதி 

   "மாமா காபி" என்றாள்

   "என்னம்மா புது இடம் எப்படி இருக்கு? பழகுற வரைக்கும் கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும்..."

   "அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைங்க மாமா. பொதுவாவே பொண்ணுங்க இருக்கிற இடத்துக்கு ஏத்தமாதிரி அடாப்ட் ஆயிடுவாங்க. அதுலயும் கல்யாணம் ஆகப் போற பொண்ணுங்க இன்னும் சீக்கிரமே நார்மல் ஆகிடுவாங்க. அவங்களுக்கு இன்னொரு வீட்டுக்கு தான் வாழ போவோம்ன்னு முன்னாடியே தெரியும். நிச்சயித்துக்கப்புறம் இங்கே தான் போகப் போறான்னு தெரியும். அதுக்கேத்த மனப்பக்குவம் தானாவே வந்துடும். ஆனா அந்த மனப்பக்குவம் பொதுவாகவே ஆண்களுக்கு இருக்காது. அதனால்தான் ஆண்கள் எத்தனை வருஷம் ஆனாலும் அவங்க மாமியார் வீட்ல சீக்கிரம் பழக மாட்டாங்க. ஆனா பொண்ணுங்க வந்த உடனே பொறுப்பு எடுத்துக் கொள்வோம். என்ன... சில பெண்களுக்கு தயங்குவாங்க. நான் கொஞ்சம் ஸ்ட்ரெய்ட்பார்வர்ட். அதனால எதுவாயிருந்தாலும் நேராவே கேட்டுத் தெரிஞ்சுக்கிறேன், நேராவே சொல்லிடுவேன். காபி எப்படி இருந்தது மாமா?"

   "ம்... உங்க அத்தை போடுற மாதிரி இருக்கு"

   "அவங்க போட்டதுதான் மாமா. நான் சும்மா கேட்டேன்" என்று குறும்பாய் ஒரு சிரிப்பை கொடுத்துவிட்டுச் சென்றாள்

    அவள் பேசியது சண்முகராஜனுக்கு சற்று சிந்திக்க வைத்தது

   'ஆமால்ல! ஆம்பளைங்கள விட பெண்கள் தான் எல்லா இடத்திலேயும் ஈசியா கலந்திடுவாங்க. எவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு சாதாரணமாக சொல்லிட்டா! கொஞ்சம் மெச்சூரிட்டி லெவல் அதிகம் தான். சந்துரு தயக்கத்துக்கு ஏத்த தைரியமான பொண்ணுதான்' என்று சந்தோஷப்பட்டார்

   அவள் இறங்கி வரும்போது சந்துரு தான் உடுத்தியிருந்த பட்டு வேஷ்டி சட்டையுடன் அமர்ந்து காபி குடித்து கொண்டிருந்தான். ரதி சமையல் அறைக்குள் சென்றதும் லக்ஷ்மி

   "ரதி சந்திருகிட்ட குளிச்சிட்டுதான் வெளியே வரணும்னு நீ சொல்லலையா?"

   "அவர் கண் முழிச்சி ரொம்ப நேரம் ஆச்சு அத்தை. அவருக்கு தெரியாமலா இருந்திருக்கும்? எதை ப்ரூவ் பண்ண இப்படி வந்து இருக்காரு எனக்கு தெரியலை" என்றவள் அவளுக்கென்று கொடுத்த காபியை பருகலானாள்

    இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத லக்ஷ்மி தன் மகன் மீது ரதி குறை கூறுவதாக எண்ணினாள்

                                 [18]

    மதியம் உணவு அருந்திக்கொண்டிருந்தனர். லக்ஷ்மி பரிமாறிக்கொண்டிருக்க மூவரில் சண்முகராஜன்

   "சந்துரு.. இன்னும் மூணு நாள்தான் இருக்கு நீ புறப்பட. இரண்டு குடும்பங்களையும் நெருங்கிய சொந்தம்னு சொல்லிக்க யாரும் இல்லாததால ஃபார்மாலிட்டீஸ் கம்மிதான். ஆனா நீங்க ஒரு முறையாவது ரதி வீட்டுக்கு போயிட்டு வரணும் எப்போ அழைச்சிட்டு போறே?"

    சந்திர பதிலளிக்கும் முன் ரதி குறிப்பிட்டாள்

   "என்ன மாமா இப்படி சொல்லிட்டீங்க?" அவள் சட்டென்று கூறியதும்

   "ஏன்மா? உங்க அம்மாவை பார்க்க போகணும் இல்லையா?"

   "கண்டிப்பா போகணும் தான். ஆனால் ஏன் நாங்க மட்டும் போகணும்? நீங்களும் அத்தையும் மட்டும் ஏன் தனியா இங்கேயே இருக்கணும்? நாம எல்லாருமே போகலாமே?"

   "போகலாமே... நல்ல யோசனைதான் அப்போ நாளைக்கு காலையில் புறப்படலாமா?"

   "சரிங்க மாமா" என்றவள் சாப்பிட்டு முடித்ததால் எழுந்து சென்றாள்

   சந்துருவும் லக்ஷ்மியும் இதில் எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்தது இவர்கள் மட்டுமே பேசி முடிவு எடுத்ததாக லஷ்மிக்கு சற்று உறுத்தல் ஏற்பட்டது. அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் சந்துரு அவன் அறையில் இருக்க மூவரும் ஹாலில் அமர்ந்து இருந்தார்கள். லக்ஷ்மி

    "ஏம்மாரதி சந்துரு கிட்ட கேட்காமலேயே எல்லாரும் போகலாம்னு முடிவு எடுத்திருக்க?"

   "மாமா எது சொன்னாலும் உங்க மகன் சரி சரின்னு தான் சொல்லுவாரு. வேண்டா வெறுப்பாய் என் கூட வரதை விட, நீங்களும் கூட வந்தால் அவரும் கொஞ்சம் நார்மலா இருப்பாரு. அது மட்டும் இல்ல, மாமா சொன்ன மாதிரி உங்க மகன் இன்னும் மூணு நாள்ல கிளம்பிடுவாரு. இதுல ஒரு நாள் எதுக்கு அவரையும் சங்கடப் படுத்தி உங்களையும் பிரிச்சு... எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணிட்டு. எல்லாரும் போன எங்க அம்மாவும் சந்தோஷப்படுவாங்க இல்லையா?" என்றவள்

   "மேலே காயப்போட்ட துணிகளை எடுத்துட்டு வரட்டுமா அத்தை?" என்று அவளிடம் தலையசைத்து சம்மதம் சொன்னாள். அவள் மாடிக்குச் சென்றதும் லக்ஷ்மி

  "நானும் பார்த்துகிட்டே இருக்கேன். சந்துருவை இவ ஏதோ குறை சொல்லிகிட்டே இருக்காங்க. கொஞ்சம் ஓவரா பேசுற பொண்ணோன்னு கூட தோணுது"

   "நீ எதுக்கு சின்ன விஷயத்தை பெரிசு படுத்துறே? நம்மள அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகணும்னு ஒரு சின்ன ஆசை யாக கூட இருக்கலாம். இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்தை கூட சந்துரு தான் முடிவு எடுக்கணும்னு ஒரு காமன் மாமியாரா நீயே நடந்து இருக்கிறே? ஆனா நீ ஒன்று கவனிச்சியா... அந்த பொண்ணு எதையுமே நாலாபக்கமும் யோசிச்சு தான் பேசுறாள். எல்லாரையும் மனசுல வெச்சுதான் முடிவு எடுக்கிறாள். அவகிட்ட ஏதோ ஒரு ஸ்பெஷல் குணமிருக்கு"

    "நான் ஒன்னும் எல்லாம் முடிவையும் என் மகன் தான் எடுக்கணும்னு சொல்ல வரல. ஆனா ஒரு மரியாதைக்காக அவன் முடிவு கேட்டு இருக்கலாம் இல்ல? அவன் வர மாட்டேன்னு சொன்னானா? இல்ல சங்கடமா இருக்குன்னு தான் சொன்னானா?"

     ரதி கடைசி கேள்வியின் போது லட்சுமி அருகில் நிற்பார் என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அந்த கேள்விக்கு பதில் ரதியே கொடுத்தாள்

   "அத்தை மாப்பிள்ளைல ரெண்டு ரகம். ஒன்று பிடிச்ச பொண்ணு கல்யாணம் செய்து, கிடைக்கிற லீவ சந்தோஷமாக கழிப்பாங்க. இன்னொன்னு, பிடிக்காத பொண்ணை கல்யாணம் செய்துகிட்டு பெத்தவங்க முன்னாடி வெறுப்பையும் காட்ட முடியாமல, அந்தப் பெண்ணையும் ஏத்துக்க முடியாம, சங்கடமாக கழிப்பாங்க. ரெண்டு மூணு நாள்ல புடிச்ச மனைவியை எந்த பொண்ணாலயும் மாற முடியாது. ஆனால் சங்கடங்களை குறைக்கலாம்ன்னு தான் அவரை கேட்காமலேயே நான் பேசினேன்"

    இப்படி ஒரு பதிலை சற்றும் எதிர்பாராத லக்ஷ்மி கோபத்தையும் சங்கடங்களையும் வெளிப்படுத்தாமல் சண்முகராஜனை பார்த்தாள். 'நான் தான் சொன்னேன்ல' என்பது போல பெருமையாய் ஒரு பார்வை பார்த்தார் சண்முகராஜன்

    மருமகள் பெருமையை ஏற்க மறுத்த லட்சுமியின் மனம் வேலையை தேடி சென்றது

   "நான் சிம்பிளா ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொண்டு வரேன்" என்று எழுந்து சென்றாள்

    மறுநாள் அனைவரும் புறப்பட்டு ரதியின் வீட்டிற்கு சென்றனர். கௌரி மனமகிழ வரவேற்றாள். தாயாருக்கு உதவுவதாக சொல்லிவிட்டு சென்றவள் அனைத்து வேலைகளையும் அவளே செய்தாள். வந்தவர்களை சிறப்பு உபசரணையில் எந்தக் குறையும் வைக்காத ரதி, சந்துருவை சங்கடப்படுத்த கூடாது என்பதிலும் கவனம் காட்டியது சண்முகராஜனுக்கு நன்றாகவே புரிந்தது. சந்துருவுக்கு எது கொடுத்தாலும் லட்சுமி மூலமாகவே சென்றது. தனக்கு முக்கியத்துவம் கொடுத்ததை எண்ணி லட்சுமிக்கு மகிழ்ச்சி அடைந்தாள். மாலை அவர்கள் புறப்பட சிறிது நேரத்திற்கு முன் அருணாச்சலம் அவர்கள் வீட்டிற்கு முறை செய்வதாக சொல்லி ஒரு தட்டில் பூ பழம் ஆயிரம் ரூபாயை வைத்துக் கொடுத்து விட்டு ஒரு லட்சம் செலவு செய்தது போல பெருமை பேசி சென்றார். விருந்து உபசாரங்கள் முடிந்து அனைவரும் வீடு திரும்பினர் மொட்டை மாடியில் இருந்த சந்துருவை சந்தித்தார் சண்முகராஜன்

   "என்ன சந்துரு... என்ன பண்ற?"

   "ஒண்ணும் இல்லைப்பா. சும்மா...."

   "உன்கிட்ட கொஞ்சம் பேசணும்மே... பேசலாமா?"

   "என்னப்பா நீங்க... பர்மிஷன் எல்லாம் கேட்டுகிட்டு?"

   "இத்தனை வருஷத்துல இந்த பயணம் உனக்கு வித்தியாசமானதா தான் இருந்திருக்கும். ஏன்னா நினைத்து வந்தது ஒன்னு. நடந்தது ஒன்னு. ஷாலினிய உனக்கு முடிவு செய்து மூணு மாசம் அவள் உன்கூட பழகுனது ஒரு வாரம். எவ்வளவுநாளா இருந்தாலும் கஷ்டம்தான் நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா அதன் பிறகு நடந்த எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை நாமதான் வர வச்சுக்கணும். ஷாலினி அளவுக்கு படிப்பு, அழகு, வசதின்னு எல்லாமே கம்மியா இருக்கலாம். ஆனா புத்திசாலி பொண்ணு. சூழ்நிலைகளைப் புரிந்து நடந்துக்கிற ஒரு பொறுப்பான பொண்ணு. ஒரு நேர்மையான வாழ்க்கைக்கு தேவையான குணங்கள் அவ கிட்ட இருக்கு. கடவுள் உனக்கு ஏத்த பொண்ணு தான் கொடுத்து இருக்காரு. அவள்தான் உன் மனைவி இதை யாராலும் மாற்ற முடியாது"

   "அப்பா... நீங்க ஏதோ தப்பா...."

  "சமாளிச்சு என்னை நம்ப வைக்க முடியாது சந்திரு. எனக்கு ஒரு புது மாப்பிள்ளை எப்படி இருப்பான்னு கூடவா எனக்கு தெரியாது? நாளைக்கு ஒரு நாள் தான் இருக்கு நாளைக்கு மறுநாள் நீ புறப்பட்டுனும். அதுக்கப்புறம் ஒரு வருஷம் ஆகும். உன் கூட நாங்க பிறந்ததிலிருந்தே இருக்கோம். எங்களுக்கே உன்ன பத்தி நினைப்பு நினைவுகள் தான் இருக்கும். ஆனால் இருக்கிற ஒரு நாளை அவளுக்காக வாழு. அட்லீஸ்ட் அந்த சந்தோஷத்தையாவது அடுத்த ஒருவருஷம் அந்த பொண்ணு நினைச்சு பாக்க கொடு. ஒன்னு சொல்றேன் சந்துரு, அந்த பொண்ணு உன்னை வேணாம்னு சொன்னதுக்காக இந்த பொண்ணை கஷ்டப்படுத்துவது சரியில்லை. அதுக்கு மேல நான் என்ன சொல்றது,.. இது உன் வாழ்க்கை நீதான் முடிவெடுக்கணும்" என்று முடித்தவர் கீழே சென்றார்

    சந்துரு சற்று குழம்பினான் சிறிது நேரம் யோசித்தவன் தெளிவுபெற ஆரம்பித்தான்

   'நான் பொண்ணுங்க கிட்ட பேசுற கேரக்டரே இல்லை. அப்படியிருக்க நான் எப்படி சண்டை போட்டு இருக்கமுடியும்? அப்பா சொன்னது சரிதான் அன்னைக்கு ஷாலினி மேலே இருந்த வெறுப்பு தான் எனக்கு ரதி மேல கோபம் வந்திருக்கு. நான் ஏமாந்ததுக்கும், நான் கோபப்பட்டது பாவம் அவ என்ன செய்வாள்? நாமலாதாவது இந்த பொண்ணத்தான் கல்யாணம் செய்துக்க போறோம்னு தெரியாம தான் செய்து கொண்டும். ஆனா அவ நான்தான் தெரிஞ்சு சம்மதிச்சு இருக்காங்க. அவ மனசுல என் மேல எந்த தவறான எண்ணமும் இல்லைன்னு தானே அர்த்தம்! அப்படியிருக்க நான் ஏன் அவளை ஒதுக்கி வைக்கனும்?' மனம்மாறிய சந்திரு மனதார ரதியை ஏற்றுக் கொள்ள முடிவு செய்தான்

    கீழே இறங்கி சென்றவனுக்கு அனைவரும் படுத்து உறங்கி விட்டனர் என்பது புரிந்தது. தன் அறைக்குச் சென்று அவன் ரதி படுத்து இருப்பதை கண்டு கட்டிலில் வந்து அமர்ந்தவன். அவள் தன்னைத் திரும்பிப் பார்ப்பாள் என்று ஓரிரு நிமிடம் காத்திருந்தான். அவள் திரும்பி கூட படுக்கவில்லை. அவளிடம் பேச்சுக் கொடுக்க வேண்டும் என்று எண்ணி தொண்டையை சரி செய்வது போல் சிறு சப்தம் எழுப்பினான். அசைவில்லை. மீண்டும் எழுப்பினான். அப்போதும் இல்லை. இரும்பி பார்த்தான் அப்போதும் அசைவில்லை. 'என்ன ஆச்சு' என்று எண்ணி உண்மையிலேயே தூங்கி விட்டாளா என்று பார்க்க அவள் அருகில் சென்று குனிந்து பார்த்தான். சட்டென்று திரும்பியவள் 'என்ன'வென்று கேட்டாள். இதை சற்றும் எதிர்பார்க்காத சந்துரு சிறு அதிர்வு கண்டான். என்ன சொல்வது என்று தெரியாமல் அருகிலிருந்த டேபிளின் மீது தண்ணீர் பாட்டிலைக் கொண்டு தண்ணீர் குடிக்க வந்ததாக சமாளிக்க அங்கிருந்த தண்ணீரை எடுத்து மேலும் கீழுமாக சிதறி கொடுத்துவிட்டுச் சென்றான். மீண்டும் திரும்பிப் படுத்துக் கொண்டவளைக் கண்டு சற்று ஆறுதல் அடைந்த அவன் கட்டிலில் அமர்ந்தான். மெல்ல தன் தலையில் அடித்துக் கொண்டான்

   'என்ன நினைச்சிருப்பாள்! இதுவரைக்கும் ஒரு வார்த்தை கூட சரியாக பேசாமல் அவ பக்கத்தில போனா கேவலமா ஏதாவது யோசித்திருப்பாளோ? இதற்குப் பேசாமல் எழுப்பிய பேசியிருக்கலாம்! சந்துரு இனி நைட் எதுவும் ரிஸ்க் எடுக்க வேண்டாம். அது மட்டுமில்ல பாவம் அவங்க வீட்ல எல்லா வேலையும் அவளே செய்தாள். அதுதான் அசந்து தூங்கிட்டாள். எதுவாயிருந்தாலும் பகல்ல பேசிக்கலாம்' என்று இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துறங்கினான்.

                            [19]

    காலையில் கண் விழித்தவன் ரதி குளித்துவிட்டு பாத்ரூமிலிருந்து வெளியேறுவதைக் கண்டு அழைத்தாள்

   "ரதி..."

  எதிர்பார்க்காதவள் குழப்பத்துடன் திரும்பினாள்

   "ரதி தானே உன் பேரு?"

   "இல்ல அது பாதி பேரு தான். முழு பேரு வேற. நல்லா பழகினா வாங்கத்தான் ஷார்ட் பார்ம்ல ரதின்னு கூப்பிடுவாங்க"

   "எங்க அம்மா உன்னை கூப்பிடும்போது கேட்டு இருக்கேன். அதுதான் எனக்கு தெரியும். சரி... இன்னைக்கு நாம கொஞ்சம் வெளியே போறோம். பதினோரு மணிக்கு ரெடியா இரு"

   "எங்கே போறோம்? மாமா நைட் கூட என்கிட்ட எதுவுமே சொல்லலையே?"

   "அம்மா அப்பா வரலை. நாம மட்டும் தான். நாமன்னா நீயும் நானும் மட்டும்தான்"

   "ஓ.... சரி எங்கே போகிறோம்?"

   "ஏன் இப்பவே கேட்கிற?"

   "எங்கே போறோம்னு தெரிஞ்சா அதுக்கேத்த மாதிரி ரெடி ஆகலாமேன்னுதான்"

   "அம்மா ரதிதேவி... நீ நார்மலாகவே ரெடியாகு போதும்" கிண்டலாய் கையெடுத்து வணங்கினாள்

   " என் பேரு ரதிதேவி இல்ல"

   "ஐயோ..." செல்ல சலிப்பு காட்டியவனிடம்

   "சாரி" செல்ல அலட்சியத்துடன் அவளும் சொல்லிச் சென்றாள்

    காலை உணவு அருந்துகையில் தன் தந்தையிடம்

   "அப்பா... நான் ரதியே வெளியே கூட்டிட்டு போயிட்டு வரேன்ப்பா"

   "சூப்பர் சந்துரு. போயிட்டு வாங்க!"

   "அம்மா மூணு மணிக்கு நீங்களும் ரெடியா இருங்க. எல்லோரும் சினிமாவுக்குப் போகலாம்"

   "என்ன சந்துரு... நீ முதல் முறையா உன் மனைவியை வெளியே கூட்டிட்டு போற. நாங்க எதுக்கு? அது மட்டும் இல்லாம நீ நாளைக்கு கிளம்பியதால மலைக் கோயிலுக்கு போயிட்டு அர்ச்சனை பண்ணிட்டு வரணும். வந்ததும் உனக்கு பேக்கிங் எல்லாம் வேற பண்ணனும். எங்களை எதிர்பார்க்காம நீங்க ரெண்டு பேரும் வெளியே போயிட்டு, அப்படியே சினிமாவும் பாத்துட்டு நைட் வாங்க. சந்துரு நாளைக்கு நீ கொண்டு போக ஒரு லிஸ்ட் எடுத்து வச்சிருக்கேன். அதை வரும்போது வாங்கிட்டு வந்துருங்க"

   "சரிங்கம்மா"

    ரதியை புறப்படும் படி சொல்லிவிட்டு லட்சுமி சண்முகராஜனுடன் கோவிலுக்குப் புறப்பட்டாள். அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு தன் அறையில் வந்து புறப்பட தயாரானாள் ரதி. புடவையை கழட்டி விட்டு ஜாக்கெட்டை கழட்டியளுக்கு தாலி தன் கழுத்தில் தூக்கலாக இருப்பதை கண்டாள் அதை முன்னுக்கு இழுக்க அது வரவில்லை. இதில் மாட்டிக் கொண்டு இருப்பதை உணர்ந்தவள் காலை பாத்ரூமில் உள்ளாடையின் பின் கொக்கி போடுகையில் திணறியது நினைவுக்கு வந்தது. அதை எடுக்க முற்படுகையில் பாத்ரூமிலிருந்து சந்துரு வெளிப்பட்டான். ஏதோ சங்கடத்தில் இருப்பதை உணர்ந்த அவன் அவள் கோலத்தை காணாமல்

   "என்ன ஆச்சு" என்றான்

   பதறிப்போன ரதி அருகில் இருந்த மெல்லிசை படவை எடுத்து தன்னை மறைத்துக் கொணடு தன் முதுகை மறக்க திரும்ப, அவளின் அழகு மறைமுகமாய் மணவாளனின் கண்களில் பட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காத சந்திரு "சாரி" என்று தலைகுனிந்து கொண்டான்.

   "தாலி கயிறு மாட்டிக்கிச்சு..." என்றாள் தயக்கமாக

   "எங்கே"

   "என்னுடைய பிரா கொக்கியில.... அது எப்படி மாற்றித் இருக்குன்னு தெரியல. இழுத்தா ஏதாவது அருந்துமோன்னு பயமா இருக்கு. ஏன்னா இது நூல் கயிறு இல்லையா..."

   "சரி நான் அம்மாவை வரச் சொல்றேன்"

   "அத்தையும் மாமாவும் கோயிலுக்கு கிளம்பிட்டாங்க"

   அவனுள் எழுந்த கேள்வி படபடக்க ஆரம்பித்தது "நான் வேணுமுன்னா ஹெல்ப் பண்ணவா?"

   "ஆனா..."

   "கண்ணை மூடிக்கிட்டு எடுத்து விடுறேன்" என்றவன் கண்களை மூடிக் கொண்டு நெருங்க, திரும்பி நின்றாள் ரதி.

    கயிறை தேடியவன் கைகளில் அவளது மெல்லிய ஸ்பரிசம் பட படபடப்பு அதிகரித்தது. சந்த்ருவின் சங்கடத்தை உணர்ந்த ரதி

   "கண்ணை திறந்தால் தான் எடுக்க முடியும்..." என்றாள்

    கண்களைத் திறந்தவனுக்கு கைகள் உதற ஆரம்பித்தன. அவனின் கண்ணில்பட்ட அவளது வியர்வைத்துளிகள், அவன் தொண்டை தண்ணீரை உள்ளே தள்ளியது. பார்த்தவனுக்கு புரிந்தது அது வசமாக மாட்டிக் கொண்டிருப்பது மெல்ல எடுத்து பார்த்தவனுக்கு அது வரவில்லை. ஓரிரு நிமிடம் போராடியவன் அதன் போக்கில் செல்ல அந்நூலை கொக்கியில் சிக்கி இருப்பதை உணர்ந்தான். வேறு வழியின்றி கொக்கியை கழட்ட பதரிய ரதி பெரு மூச்சை இழுத்து பிடித்தாள். அந்த சத்தம் அவன் செய்த வேலையை அவனுக்கு உணர்த்தியது

   "சாரி... வழி வழி இல்லை. ஒன் செகண்ட்," என்று வேகமாக எடுத்து விட்டவன் அதே வேகத்தில் கொக்கியையும் மாட்டிவிட்டான்

   "ஓகே?" என்றான் பதட்டமாக

   "ம்..." என்றதும் வேகமாக அறையைவிட்டு வெளியேறினான்

    அவன் வேகத்தில் இருந்த குழந்தை தனத்தை எண்ணி வெட்கப்பட்டு சிரித்தாள். ஹாலில் வந்து அமர்ந்து அவனுக்கு அவன் கண்ணை திறக்க மனமில்லை. சுகமான பதட்டத்தை கைவிடவும் விருப்பமில்லை. சிறிது நேரத்தில் வெளியே வந்தவள்

   "நான் ரெடி" என்றாள்

    அவள் கட்டியிருந்த அந்த மெல்லிய சேலை இதற்குமுன் கண்ட காட்சியை நினைவூட்டியது

    கோவிலுக்கு சென்று திரும்பி வருகையில் வீட்டில் கதவு திறந்திருந்தது

   "என்னாச்சு இவங்க இன்னுமா கிளம்பல?" என்று லக்ஷ்மி கேட்டபடியே இருவரும் உள்ளே வந்தனர் சந்திரு முழங்கையை வாஷ்பேஷன் கழுவிக் கொண்டு வர ரதி துண்டை நீட்டியபடி நின்றிருந்தார்

   "சந்துரு.. என்ன ஆச்சு என்னடா! கையில் அடிபட்டு இருக்கு?" என்று வேகமாக சென்று முதல் உதவி செய்தாள் லட்சுமி

    சந்துரு ரதியை பார்க்க சண்முகராஜன் ரதி இடம் கேட்டார்

   "ரதி என்னம்மா ஆச்சு?"

   "வண்டியிலிருந்து கீழே விழுந்துவிட்டார் மாமா"

   "அச்சச்சோ..! உனக்கு ஏதாவது அடிபட்டு இருக்காம்மா"

   "இல்லை மாமா. நான் இறங்கிட்டேன்..." தயங்கியபடி கூறினார்

   "அவ இறங்கினதல தான்ப்பா நான் கீழே விழுந்தேன்"

   "ஏதாவது புரியிற மாதிரி சொல்லுங்களேன்" லக்ஷ்மி வேகமாக கேட்டாள்

   "நாங்க போயிட்டு இருக்கும்போது ஏதோ கொஞ்சம் பேரு கும்பலா இருந்தாங்க. என்ன ஆச்சுன்னு கிட்ட போய் பார்த்தா ஒருத்தர் அடிப்பட்டு கிடந்தார். ஏதாவது உதவி வேணுமானு கேட்டேன், அங்கே எல்லாரும் ஹெல்ப் பண்ணிட்டு இருந்தாங்க. சரி நமக்கு வேலை இல்லைன்னு திரும்பவும் ரெண்டு பேரும் வண்டில ஏறி ஒரு பத்து செகண்டு தான் இருக்கும், வண்டிய வேகம் எடுக்கும் போது அவ சட்டுன்னு குதிச்சிட்டா!!"

   "அச்சச்சோ...! எதுக்கும்மா?"

   "என்ன கேளுங்கப்பா..! குதித்ததும் நான் வண்டி தடுமாறிக் கீழே விழுந்துட்டேன். அதைக்கூட கவனிக்காமல் கூட்டத்தில் இருந்த ஒருத்தரை அரைஞ்சிட்டு வந்தாள். நான் எப்போ எழுந்தேன் எப்போ விழுந்தேன் கூட கேட்காமல் 'வாங்க போகலாம்'ன்றா"

  "ஏம்மா ரதி கூட்டத்தில நிற்கும்போது அவன் உன்னை ஏதாவது..?"

  "அப்பா... வண்டி கிட்டே தான் நின்னுட்டு இருந்தாள். கூட்டத்து கிட்ட கூட வரலையே" ரதியை கேட்டாலும் வேகமாக சந்துரு பதிலளித்துக் கொண்டிருந்தான்

   "ஏய் சும்மா இருடா. என்ன நடந்ததுன்னு நீ சொல்லும்மா"

   "என்ன நடந்தால் என்னங்க? கீழே விழுந்திருக்கான் கைல அடிப்படுற அளவுக்கு, கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம, என்னன்னு கூட கேட்க மனசு இல்லையா?" லட்சுமிக்கு கொஞ்சம் கோபம் தலைதூக்கியது

   "இரக்கமா? அத்தை... இறக்கப் படாத அளவுக்கு எல்லாம் பெரிய அடி இல்லை. ஒரு ஆர்மி மேனுக்கு இதெல்லாம் சாதாரணம். இதுக்கே இவ்வளவு பயந்தா எப்படி அத்தை?"

   "எனக்கு அடிப்பட்டது கூட வலிக்கலை. இப்போ வரைக்கும் ஏன் அடிபட்டு இருக்குன்னு தெரியாமல் இருக்கேன் பாரு அதுதான் வலிக்குது" கிண்டலாய் கேட்டான்

    "என்னதான் ஆச்சு? எல்லோரும் கேட்கிறோமே சொல்லும்மா"

   "என்ன மாமா இது? எல்லாத்தையும் எல்லார்கிட்டயும் சொல்ல முடியாது இல்லையா? ஒருத்தர் அடி பட்டிருந்தா அவருக்கு ஹெல்ப் பண்ணு கொஞ்சம் பேருக்கு போவாங்க, சிலர் வேடிக்கை பார்க்கப் போவாங்க, சின்ன பொண்ணு மாமா... 13 14 வயசு தான் இருக்கும். இவனுக்கு 40க்கு மேலே கூட்ட நெரிசலில் சாக்காக வைச்சிகிட்டு.... எப்படி மாமா என்னால சும்மா இருக்க முடியும்? என் தங்கையோ இல்லை என்னோட ஸ்டுடென்ட் அங்கே இருந்திருந்தா நான் சும்மா இருப்பேனா? அவனை ஏன் அடிச்சேன்னு யாருக்குமே தெரியாது"

   'எனக்கு இப்ப தானே தெரியும்' முனங்கினான் சந்திரு

   "ஆனா அடி வாங்கினவனுக்கு தெரியும் இல்ல!"

   "சரியான சண்டக்கோழிப்பா"

   "அது ஒண்ணும் இல்ல மாமா... பட்ட காலிலே படும்ன்னு சொல்வாங்க. என்னோட நேரம் அவர் இருக்கும் போதுதான் ஏதாவது பிரச்சினை என்ன தேடி வருது நான் என்ன செய்யறது?" லட்சுமி சட்டென்று

   "என்னங்க நீங்க அந்த லிஸ்ட்ல எடுத்துக்கிட்டு போய் எல்லாத்தையும் வாங்கிட்டு வந்துடுங்க" என்று சண்முகராஜனை அனுப்பி வைத்தாள்

                            [20]

           

    சந்துரு அவன் அறையில் படுத்திருந்தான். லட்சுமி ஹாலில் அமர்ந்து சந்துருவின் பெட்டியை அடுக்கிக் கொண்டிருக்க ரதி அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள்

   "ரதி சந்துரு கபோர்ட்ல கொஞ்சம் துணியை அயன் பண்ணி வச்சிருக்கேன் அது எடுத்துட்டு வாமா" என்றாள்

    அவன் கபோர்ட் திறந்து துணியை எடுக்கையில் ஒரு டைரி கீழே விழுந்தது. அதை எடுத்து முதல் பக்கம் திரும்பி பார்க்கையில் 'என் அருமை பாரதிக்கு..' என்று நடுவில் தலைப்பு போல் எழுதி இருந்தது. அந்த தலைப்பை ஆச்சரியத்துடன் வருடி கொடுத்தவள். உள்ளே யாரைப்பற்றி என்று ஆர்வமாக திறந்து பார்த்தாள் இலக்கிய நயம் இல்லாவிட்டாலும் எதார்த்தமான சில கவிதைகள் இருந்ததைக் கண்டாள். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் படித்துப் பார்த்தாள்

         பெண்ணுரிமை பெண் பாதுகாப்பு என்று

       இன்று மாதர்சங்கம் மடை கட்டி நிற்கலாம்.

         ஆனால் அதற்கான அடிக்கல்லை அன்றே

      நாடியது ஒரு ஆண் என்பதில், உன்னைக்

         கண்டு நான் கர்வம் கொள்கிறேன்

                  "நன்றி பாரதி"

    அதையும் வருடி பார்த்தவள் டைரியை மூடி உள்ளே வைத்து விட்டு அங்கிருந்த துணியை எடுத்து சென்றாள்

   "ஏன் அத்தை? உங்க மகன் கவிதை எழுதுவாரா?"

   "எழுதி நான் பார்த்ததில்லை. ஆனால் பாரதியார் கவிதைகள் அப்படின்னா அவனுக்கு ரொம்ப பிடிக்கும். காலேஜ் படிக்கும்போது நிறைய புக்ஸ் லைப்ரரியிலிருந்து கொண்டு வருவான்" கடைக்குச் சென்ற சண்முகராஜன் கொஞ்சம் வேகமாக உள்ளே வந்தவர் சிறு பதட்டத்துடன் மருமகளை அழைத்தார்

   "ரதி ரதி"

   "என்னங்க என்ன ஆச்சு?"

   "கூப்பிட்டீங்களா மாமா?"

   "உன் அம்மா கால் பண்ணாங்க. வீட்டில வழுக்கி விழுந்துட்டாங்கலாம்"

   "அச்சச்சோ!! ஏதாவது பெரிய அடியா?" லட்சுமி பதற

   "தெரியலையே..."

   "பயப்படாதீங்க மாமா. போன் கொடுங்க" என்று சற்று பொறுமையுடன் கைபேசியை வாங்கி தாயை அழைத்தாள்

   "ஹலோ... அம்மா என்னமா சில்லறையா?"

   "........"

   "சரி... சரி.. புலம்பாதே... நான் வரேன். நான் வந்து கூட்டிட்டு போறேன்" என்றவள் பதட்டமில்லாமல் கைபேசியை தன் மாமனாரிடம் கொடுத்தாள்

   "என்னம்மா நீ ?அம்மா விழுந்துட்டாங்க இப்படி பேசிட்டு இருக்கே!?" லக்ஷ்மி கேட்க

   "அங்கு என்ன நிலவரமோ தெரியாம நாம பதறக்கூடாது. ஒத்த கால்ல அடிபட்டு இருக்காம். வீங்கி இருக்குன்னு சொன்னாங்க. அது மட்டும் இல்லாம நான் பயந்துட்டேன் அம்மாவுக்கு தெரிஞ்சா அவங்க உடைஞ்சு போயிடுவாங்க. ஏதாவது கில்ட்டியா பீல் பண்ணுவாங்க. நான் கிண்டலா பேசினா அவங்க நார்மலா இருப்பாங்க. அதனால தான்... நான் போய் பாத்துட்டு வந்தர்றேன்" என்றவள் அவள் அறைக்குள் செல்கையில் லக்ஷ்மி

   "சந்திரு எழுந்ததும் நான் சொல்கிறேன். நீ கெளம்பு" என்றாள்

   "பேக் எடுத்துக்கிறேன் அத்தை" அவசரம் அவசரமாக புறப்பட்டார்

    

    மாலை உறக்கம் கலைந்து எழுந்தவன் ஹாலில் வந்து அமர்ந்தான்

   "சந்திரு.. என்ன சாப்பிடறே?" சுற்றி முற்றி தேடியவன்

  

   "அப்பா எங்கேம்மா?"

   "மாடியில வாக்கிங் பண்ணிட்டு இருக்காரு" சந்துரு மாடிக்கு சென்றான்

   "என்னப்பா வாக்கிங்கா?" என்றவன் சுற்றி முற்றி தேடினாள்

   "ஆமாம்பா... சந்துரு என்ன தேடுற?"

   "ஒன்னும் இல்லப்பா"

   "நாளைக்கு எத்தனை மணிக்கு ட்ரெயின்?"

   "12 மணிக்குதான். 10 மணிக்கு கிளம்பினால் சரியாக இருக்கும்"

   "சரிப்பா. ஏன் சந்துரு நான் நேத்து பேசினது யோசிச்சு பார்த்தியா?"

   "ம்... யோசிக்க மட்டும் இல்லப்பா, தெளிவா ஆயிட்டேன் கூட சொல்லலாம். ரதியை தண்டிக்கனும்ங்கறது என்னோட ஆசை இல்லப்பா. ஏன்... எனக்கு ஷாலினி மேல கூட கோபம் இல்லை. எனக்கு இப்படி நடந்துடுச்சேன்னு வருத்தம் அவ்வளவுதான். அதுமட்டுமில்ல அவளை நான் ஃபர்ஸ்ட் டைம் பார்க்கும்போதே சண்டக்கோழி அதான் பார்த்தேன். வீட்டுக்கு வருவானே என் ஃப்ரெண்ட் அவனை பார்க்கல அடிச்சுட்டாள்" என்று சிரித்தவன் தொடர்ந்தான்

   "அவளை ஏற்றுக்கொண்டதை அவளுக்கு புரிய வைக்கத்தான் இன்னைக்கு அவளை வெளியே கூட்டிட்டு போனேன். ஏதாவது கிஃப்ட் வாங்கி கொடுக்கலாம்ன்னு. ஆனா சண்டக்கோழி அங்கேயும் வம்பிழுத்து..." என்று சிரித்தான்

   "சரி விடு... நீ புரிஞ்சுகிட்ட இல்ல அது போதும். ஃபியூச்சர் பிளான் என்ன? என்ன முடிவு செய்திருக்க? அம்மா சொன்ன மாதிரி தானா... இல்ல இன்னும் கொஞ்ச நாள் வேலை பாக்க போறியா?"

   "இல்லைப்பா அம்மா சொன்ன மாதிரி தான். சீக்கிரமாக வேலையை ரிசைன் பண்ணிட்டு வந்துருவேன். நாங்க எதிர்பார்த்த மாதிரி எந்த வாரும் இப்போதைக்கு இல்லை. அதனால ப்ரொசீஜர் சீக்கிரமே முடிஞ்சிடும். கூடிய சீக்கிரத்துல நான் மொத்தமா வந்து உங்களுடனேயே இருப்பேன்"

   "ரொம்ப சந்தோஷம் சந்திரு. நீயும் ரதியும் சந்தோசமா வாழனும். ஒரு மூணு பேரன் பேத்திகளை பெத்து கொடுங்க. ரதியோட அம்மாவையும் இங்கே கூட்டிட்டு வந்து வெச்சுக்கலாம். நாங்க பசங்களை பார்த்துக்கிறோம் நீங்க ஜாலியா இருங்க. இப்படி ஒரு நிறைவான வாழ்க்கையை நீ வாழுறத பார்த்துட்டுதான் நிம்மதியா கண்ணை மூடும்"

   "அப்பா பொறுமை.... பொறுமை... வேலையை போறேன் தான் சொன்னேன். அதுக்குள்ள எவ்வளவுதூரம் போயிட்டீங்க? நீங்களும் அம்மா மாதிரியே ஆகிட்டீங்கப்பா" என்றதும் இருவரும் சிரித்தனர்

   "ரதி எங்கேப்பா?

   "அம்மா சொல்லலையா?"

   "இல்லையே... என்ன?"

   "அவங்க அம்மா வழுக்கிக் கீழே விழுந்துட்டாங்கன்னு போன் வந்தது. அதான் அங்கே போய் இருக்காள். நான் கால் பண்ணேன் 'ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்திருக்கேன் ப்ராப்ளம் ஒன்னும் இல்ல டாக்டரை பார்த்துட்டு சொல்றேன்'னு சொன்னாள். இன்னும் கால் பண்ணல" சொல்லிக்கொண்டிருக்கும்போதே கைபேசி அழைத்தது

   "இதோ... ரதி தான் கால் பண்றாள். இந்தா பேசு"

   "இல்லப்பா... நீங்களே பேசுங்க"

   "உன்னோட தயக்கம் எப்போ உன்னை விட்டு போக போகுதோ! ஹலோ..."

   "........"

   "அப்படியா.... சரி டாக்டர் என்ன சொன்னாங்க?"

   "........"

   "சரிமா. ஒன்னும் ப்ராப்ளம் இல்லை"

    லட்சுமி இருவருக்கும் காபியை மாடிக்கு கொண்டு வர, சந்துரு லட்சுமியிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தான். சண்முகராஜன் சிறிது நேரம் பேசிவிட்டு கைபேசி துண்டித்து அவர்களுடன் வந்து இணைந்தார்

   "என்னப்பா! என்ன சொன்னா? வரதா இருந்தா நான் வண்டி எடுத்துட்டு போய் கூட்டிட்டு வரவா?"

   "இல்ல சந்திரு. எக்ஸ்-ரே எடுத்து பார்த்து அவங்க கால் வீக்கத்துக்கு மஸுல்ஸ் தான் ப்ராப்ளம் மத்தபடி போன் நல்லா தான் இருக்கு என்று சொல்லிவிட்டார்களாம். 'தலை வலிக்குதுன்னு ஆட்டோவில் போகும்போது சொன்னாங்க. டாக்டர் சிடி ஸ்கேன் எடுக்க சொல்லியிருக்காரு. அதுவும் ஒரு முறை பார்த்து விடலாம்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன் மாமா நான் காலையில வந்திடுவா'ன்னு கேட்டாள். 'சந்துருவும் காலையில தான் புறப்படுறான்'னு சொன்னேன். அதுக்குள்ள வந்திடுறேன்னு சொன்னாள் நானும் சரின்னு சொல்லிட்டேன்" வாடிய முகத்தை மறைக்க லட்சுமியிடம் பேச்சை மாற்றி அவனை கண்டறிந்தார் சண்முகராஜன்

                             [21]

    காலை விடிந்தது. ரதி சீக்கிரமே எழுந்து அனைத்து வேலைகளையும் வேகமாக முடித்தாள். மணி பத்தை நெருங்க அம்மாவை எழுப்பியபடியே வேலைகளையும் தொடர்ந்தாள்

   "ம்மா... நான் எல்லா வேலையும் முடிச்சிட்டேன். அவரை அனுப்பிட்டு சீக்கிரமே வந்துடுவேன். அதுவரைக்கும் காலை இழுத்துகிட்டு நடக்கிறேன் செய்யறேன்னு திரும்பவும் ஏதாவது செய்து வைக்காதே. டாக்டர் கொடுத்த மாத்திரை தூக்கம் வரும் தான் அதுக்காக பத்து மணி வரைக்கும் இல்லை. தண்ணி புடிச்சிகிட்டு வரதுக்குள்ள எழுந்து உட்காரு. நான் வந்து சீக்கிரமே குளிப்பாட்டி விட்டுடுறேன். அவரை ட்ரெயின் எழுதிட்டு அப்படியே ஹாஸ்பிடலுக்கு போயி சிடி ஸ்கேன் ரிப்போர்ட் வாங்கிட்டு வரேன். திரும்பவும் டாக்டரை பார்க்க சாயந்திரம் தான் வர சொல்லி இருக்காங்க. எந்திரிம்மா"

    தண்ணீர் குடத்தை எடுத்துக்கொண்டு குழாய் அடிக்கு சென்றவள் ஏதோ அவள் மனம் உருத்த வேகமாக ஓடி வந்து வீட்டில் பார்த்தாள். மனம் பதறியது. "அம்மா" என்று அழைத்தபடி அருகில் சென்றாள் எந்த அசைவும் இல்லாததால் பதறிப் போனாள். அவளை உலுக்கி எழுப்பி பார்த்தாள். மனம் முழுவதும் பயம், கண்கள் முழுவதும் கண்ணீர், கைகள் உதறிக் கொண்டு இருக்கையில் நேற்று டாக்டர் சொன்னது நினைவுக்கு வந்தது.

   "ஒருவேளை மயக்கம் மாதிரி இருந்தா உடனே ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வாங்க"

   "மயக்கம்தான்... மயக்கம்தான். ஒன்னுமில்ல அம்மா, உனக்கு ஒன்னுமில்ல." என்று வேகமாக சென்று அடுத்த தெருவில் இருந்த ஒரு டாக்டரை அழைத்து வந்தாள்

   அங்கு

   "என்னப்பா புறப்பட்டாச்சா?"

   "ஆமாம்பா. ஆனா... ரதி இன்னும் வரலையே?"

   "தெரியலையேப்பா... காலையில வந்துருவேன்னு தான் சொன்னாள். சரி வா நாம ஸ்டேஷனுக்கு போயிடலாம். இடையில் அவளுக்கு கால் பண்ணி அப்படியே ஸ்டேஷன் வர சொல்லலாம்"

   "சரிப்பா அம்மாவுடன் சேர்ந்து நில்லுங்க" என்றவன் அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு மூவரும் ஆட்டோவில் புறப்பட்டனர்

    சந்திருவிற்கு ரதியை பார்க்காத ஏக்கம் அவனுக்கு உணர்த்தியது. ஆட்டோவில் செல்லும்போது ரதியின் கைப்பேசிக்கு முயற்சித்தார் சண்முகராஜன். ஆனால் அவள் எடுக்கவில்லை

   "எடுத்தாளாப்பா?"

   "இல்ல சந்திரு. என்னன்னு தெரியலையே". 

   "என்னங்க போன் அவங்க அம்மா கிட்ட கொடுத்துட்டு ரதி கிளம்பி இருப்பாங்க. டைம் ஆயிடுச்சுன்னு அவளுக்கும் தெரியும். அவ நேர ஸ்டேஷனுக்கு வந்திடுவா பாருங்க"

   "அதுவும் சரிதான்"

    இங்கு

   கௌரியை பரிசோதித்த டாக்டர் "சாரிமா அவங்க இறந்துட்டாங்க" என்றார்

    இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத கதறி அழ ஆரம்பித்தாள்

   "அம்மா....... என்னை விட்டு போகாதம்மா.... ப்ளீஸ்மா...... இனி தான் நாம சந்தோஷமா இருக்க போறோம் என்று நம்பியிருந்தேன். இந்த நேரத்துல நீ என்னை தனியா விட்டுட்டு சந்தோஷத்தை கொண்டு போகாதம்மா... ப்ளீஸ்மா.... அம்மா... அம்மா..."

    ரதியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்

அங்கு

   ரயில் நிலையத்தில் காத்திருந்தவர்கள் பொறுமை இழந்தனர்

   "சந்திரு... கவலை படாதே கண்ணா... ரதி கிட்ட நாங்க சொல்றோம். ரதியை போன்ல பேச சொல்றோம்" என்று லக்ஷ்மி ஆறுதல் கூறினார்

   "அப்பா... எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா?"

   "சொல்லுப்பா" என்றதும் தன் பாக்கெட்டிலிருந்து சிறிது பணத்தை எடுத்துக் கொடுத்தார்

   "ரதியோட போன் அவங்க அம்மாகிட்ட கொடுத்துட்டாள். அதுவும் நார்மல் போனு தான். இப்போ அவ கிட்ட போன் இல்லை. நேத்து நான் அவளை கூட்டிட்டு போனதே கிஃப்ட்டா ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுக்கலாம்னு தான். அட்லிஸ்ட் புறப்படும்போது வந்தாலாவது அப்படியே வழியில வாங்கி தரலாம்னு இந்த 10 ஆயிரம் ரூபாயை கொண்டு வந்தேன். ஆனால் எதுவுமே நடக்கல. வெளியே போற பொண்ணு... அதனால் நீங்களே அவளுக்கு ஒரு நல்ல ஸ்மார்ட் போனா பார்த்து வாங்கி கொடுங்கப்பா"

மகனின் ஏக்கம் புரிந்து கொண்ட சண்முகராஜன்

  "நீ கவலை படாதே. நான் ரதி எங்கே இருந்தாலும் நேராவே போயி, இன்னும் இரண்டு மணி நேரத்துக்குள்ள உன்கிட்ட பேச வைக்கிறேன்"

   "அவ்வளவு அவசரம் எல்லாம் ஒன்னும் இல்லப்பா. நீங்க வீணா அலர்ஜி தெரிஞ்சுகிட்டு இருக்காதீங்க. அங்கே அவ சூழ்நிலை என்னவோ அவள் எப்போ வீட்டுக்கு வராளோ அப்பவே நான் பேசிக்கிறேன். நீங்க பத்திரமா வீட்டுக்கு போங்க"

    சிறிது நேரம் பேசியவர்கள் இடையே வண்டி புறப்பட தயார் என்பது போல் சத்தம் குறுக்கிட்டது. சந்துரு இருவரையும் ஒருமுறை கட்டியணைத்து முத்தமிட்டு வண்டியில் ஏறினான். இருப்பினும் அவன் கண்கள் ஒருமுறை படிக்கட்டின் பக்கம் சென்றது. ரதி வரவில்லை. வண்டியும் புறப்பட்டது

   இங்கு

    கௌரியை முறைப்படி படுக்க வைத்துவிட்டு, அக்கம்பக்கத்தினர் சூழ்ந்திருக்க, செல்வி ரதிக்கு ஆறுதலாய் அருகில் அமர்ந்திருந்தாள். அருணாச்சலத்தின் வருகையை கண்டு சிலர் வழி விட்டனர். கொண்டுவந்த மலர் வளையத்தை கௌரியின் மேல் வைத்து சில நொடிகள் மௌனம் காத்தவர் ரதியிடம் ஆறுதல் கூறினார்

   "என்னமா இது இப்படி ஆயிடுச்சு? நேத்து என்கிட்ட சொல்லியிருந்தா நான் தெரிஞ்ச ஹாஸ்பிடல்லா பார்த்து அட்மிட் பண்ணி எப்படியாவது பொழைக்க வச்சிருப்பேன். நீயும் உங்க அம்மா மாதிரி எந்த உதவியும் கேட்க மாட்டேங்கிற. என்னம்மா நீ..." என்றவர் மெல்ல வெளியே வந்தார் வந்தவர் வெளியில் இருந்தவர்களை விசாரித்தார்

   "எங்கே ரதி மாமியார் வீட்ல யாரையும் காணோம்?

   "தெரியலைங்க. நாங்களும் இப்போ வருவாங்க, அப்ப வருவாங்கன்னு தான் நினைச்சுட்டு இருக்கோம்"

    "அவங்களுக்கு தகவல் சொல்லியாச்சா?"

    "தெரியலைங்க"

    "ரதி உங்க வீட்டுக்காரர் போற ட்ரெயின் இந்நேரம் புறப்பட்டு இருக்கும் இப்பயாவது உங்க மாமனார் மாமியாருக்கு தகவல் கொடுடி"

    செல்வி சொல்லும்போதே ரதிக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. செல்வியிடம் சொல்லி உள்ளிருந்த தன் ஹேன்ட் பேக்கில் இருந்து கைபேசியை எடுத்து வரச் சொன்னாள்

    அங்கு 

    

    ஆட்டோவில் வந்து கொண்டிருந்த சண்முகராஜன் கைபேசி ஒலித்தது.

   "யாருங்க?" லட்சுமி கேட்க

   "அருணாச்சலம் சார்.. ஒரு நிமிஷம் இரு. சொல்லுங்க சார்?"

   "என்ன சார் புறப்பட்டுடீங்களா?"

   "புறப்பட்டுடீங்களாவா? நாங்க திரும்ப வீட்டுக்கு வந்துட்டு இருக்கோம். என் மகன் மட்டும் தான் வேலைக்கு புறப்பட்டார்"

   "என்னது வேலைக்கா? என்ன சார் சொல்றீங்க? உங்களுக்கு விஷயமே தெரியாதா? ரதி அம்மா இறந்துட்டாங்க"

   "என்னங்க சொல்றீங்க!!??" பதறியவர் ஆட்டோவை நிறுத்தினார்

   "என்னங்க ஆச்சு??" லக்ஷ்மி பதறினாள்

   "எப்போ? எப்படி?"

   ".........."

   "நாங்க உடனே வரோம்" என்று கைபேசியை அணைத்தவர் "ரதி அம்மா இறந்துட்டாங்களாம் லட்சுமி. ஆட்டோ வைத்திருப்புங்க"

   ரதி கைக்கு வந்த கைபேசியை சைலண்ட் இல் இருந்து எடுத்தாள். 14 மிஸ்டு கால்ஸ். அதேநேரம் தூரத்து உறவினர் வருகை தந்ததால் கைபேசியில் தன் மாமனாரை அழைத்து செல்வியிடம் கொடுத்து பேசச் சொன்னாள்

   சிறிது நேரத்தில் அங்கு வந்து இறங்கி வேகமாக உள்ளே சென்று பார்க்கையில் தனியாக அமர்ந்திருந்த மருமகளை கண்டு பதறிப்போனாள் லக்ஷ்மி. அருணாச்சலம் உதவ முன்வந்தும் சண்முகராஜன் எவர் உதவியும் எதிர்பார்க்காமல் அவரே அனைத்தையும் நல்ல முறையில் செய்து முடித்தார்

                               [22]

   சந்திருவிற்கு இரண்டு நாட்கள் கழித்து விஷயம் தெரியவந்ததும் மிகவும் வருத்தப்பட ரதியின் கைபேசி எண்ணை தந்தையிடம் கேட்டுப் பெற்றான். ஆனால் ஏதோ ஒரு தயக்கம்

   'இதுவரைக்கும் அவகிட்ட சந்தோஷமாக ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. ஆறுதல் சொன்னால் அதை அவ எப்படி எடுத்துக் கொள்வாளோ?'

   நாட்கள் நகர ஆரம்பித்தன. சந்திரு தன்னை திருமணம் செய்ததில் சங்கடமாக இருப்பதாக நினைத்திருந்தாள். அவன் தன் தாய் தந்தையிடம் பேசும்போது ரதியிடம் பேச முயற்சிப்பான். ஆனால் தன்னால் எந்த சங்கடமும் வரக்கூடாது என்று பல காரணங்கள் சொல்லி அங்கிருந்து விலகி இருப்பாள். இது லக்ஷ்மிக்கு மௌன கோபத்தை விதைத்தது. தன் மகன் கேட்கும் நேரத்தில் அழைக்கும் தூரத்தில் கூட அவள் இருப்பதில்லை. பெரும்பாலும் அவள் பணிக்கு செல்வதும் ஒரு காரணமாகும். லக்ஷ்மியின் சிறுசிறு வெறுப்பு ரதி மீது விழுவதை புரிந்துகொண்டு சண்முகராஜன் ரதியின் மனதில் இருப்பதை அறிய முயற்சித்தார். அன்று மொட்டை மாடியில் பரிட்சை பேப்பரை எடுத்துக் கொண்டிருந்தாவளிடம் பேச்சுக் கொடுக்க வந்த சண்முகராஜன்

   "என்னம்மா ஸ்கூல் வேலையா இருக்கியா?" என்றவர் அவள் முன் வந்து அமர்ந்தார்

   "வாங்க மாமா. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல... சொல்லுங்க மாமா?"

   "சந்துரு உன் நம்பர் கேட்டு வாங்கினான். கால் பண்ணானா?

   "இல்லையே.. ஏதாவது முக்கியமான விஷயமா? ஏதாவது வேலை இருக்குங்களா?"

   "சசே.. ச்சே.. என்னம்மா நீ... உன் புருஷன் உன்கிட்ட பேச வேலை இருந்தா தான் பேசணுமா? நார்மல் கான்வர்சேஷன் தான்."

   "தாலி கட்டிட்டா மட்டும் நாம முழு உரிமையும் எடுத்துக்க கூடாது இல்லையா மாமா. என்ன சந்தர்ப்பமும் சூழ்நிலையும் எங்க கல்யாணம் கண்ணை மூடி கண்ணை திறக்க அதுக்குள்ளே முடிச்சிடுச்சு. அதுமட்டுமில்ல கல்யாணத்துக்கு முன்னாடியும் சரி, பின்னாடியும் சரி, அவரோட கண்ணோட்டத்தில நான் தப்பாவே தெரிஞ்சிருக்கேன். அவரை சங்கடப் படுத்த கூடாதுன்னுதான் அவர்கிட்ட என்பத்தி புரிய வைக்க கூட முயற்சி செய்யல"

   "நீ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கேம்மா. அவன் கொஞ்சம் தயங்கி தயங்கித்தான் எல்லார்கிட்டயும் பேசுவான், பழகுவான். ஆனா உன்கிட்ட அப்படி இல்லை சந்துரு உன்கிட்ட பேச பலமுறை முயற்சி செய்கிறான் ஆனால் அதை நீ புரிஞ்சுக்காம விலகி போயிட்டிருக்கே"

   "இல்ல மாமா. அவர் என்கிட்ட பேச முயற்சி செய்வாருன்னு தெரிந்துதான் நான் விலகி போறேன். நான் பக்கத்துல இருக்கும்போது வராத காதல். என் அம்மா இறந்ததால வரக்கூடாது இல்லையா? எனக்கு பரிதாப காதல் பிடிக்காது மாமா. என்னை மனசார ஏத்துகிட்டு, என்னோட கேரக்டரை புரிஞ்சிகிட்டு, உண்மையா பிடிக்குது, பிடிக்கலை இத மாத்திக்கோ, அதை பழகிக்கோ, அப்படின்னு வர ஒரு உரிமை காதல் தான் மாமா வாழ்நாள் முழுவதும் நிலைக்கும். அதிலும் கோபம் வருத்தம் கருத்துவேறுபாடு சண்டைகள் எல்லாம் வரும் ஆனா அதுல ஒரு உரிமை இருக்கும். இந்த பரிதாப காதல் இருக்கு பாருங்க சின்னதா ஏதாவது சண்டை வந்தாலும் 'போனா போகுதுன்னு பார்த்தா' அப்படிங்கிற வார்த்தை அடிக்கடி வர ஆரம்பிக்கும். இதனால் மறைகாயங்கள் அதிகரிக்கும். கொஞ்சம் வருஷமாவே கரடுமுரடான பாதையை தான் மாமா நான் கடந்து இருக்கேன். இன்னும் ஒரு வருஷம் அதுவரைக்கும் அவர் உங்களுக்கு மகனாகவும் நான் உங்களுக்கு மருமகளாகவும் வாழறோம். சந்தோஷமான வசதியான வாழ்க்கை வாழனும் நான் ஆசைப்படல்ல. நிம்மதியா ஒரு உரிமையான வாழ்க்கை வாழனும் தான் மாமா ஆசைப்படுகிறேன்"

    அவள் ஆசையில் இருந்த நியாயத்தை புரிந்துகொண்ட சண்முகராஜன் பதில் பேசாமல் இருந்தார்

   "என்ன ஆச்சுங்க மாமா?"

   "ஒன்னும் இல்லம்மா. உன் நல்ல குணத்திற்கு எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்"

            

   ஒருநாள் ரதியை அழைத்துக் கொண்டு லக்ஷ்மி அருகில் இருந்த கோவிலுக்கு சென்றாள். கோவில் வாசலில் இருந்த பூவிற்கும் பெண்மணி லட்சுமியிடம் நலம் விசாரித்தாள்

   "என்னம்மா லட்சுமி? பார்த்து ரொம்ப நாளாச்சு எப்படி இருக்க?"

   "நல்லா இருக்கேம்மா. நீங்க எப்படி இருக்கீங்க? என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்?"

   "என் மகளோட புருஷன் ஆஸ்பத்திரியில் இருந்தார். அதான் நான் போய் பசங்களை பார்த்துகிட்டேன். மக புருஷனை பார்த்துகிட்டா ஆமா.. உன் மகனுக்கு கல்யாணம் முடிவு செய்து இருந்தியே... முடிச்சிட்டியா?"

   "ஓ முடிச்சிட்டேன். இதோ இவதான் என் மருமகள்" என்று மகிழ்ச்சியுடன் அறிமுகம் செய்து வைத்தாள்.

    அதே நேரம் அங்கு வந்த காரில் இருந்து லலிதாவும் ஷாலினியும் பூஜை கூடையுடன் இறங்கினார்கள். அந்நேரம் அந்தப் பெண்மணி

   "பொண்ணு செகப்பா இருக்கும்னு சொன்னே? பொண்ணு மாதிரி தான் இருக்கா!"

    லலிதாவை கண்டதும் லட்சுமிக்கு கோபம் கொஞ்சம் தலைதூக்க, சிரித்தபடியே அந்தப் பெண்மணிக்கு பதிலளித்தாள் ரதி

   "என்ன செய்றதும்மா? ஸ்டுடியோ காரங்க எல்லாத்தையும் மாத்திட்டாங்க!"

   "போன வாரம் நான் இருந்தேனே... உங்களை நான் பாக்கவே இல்லையே?"

   "கல்யாணமான ஒரு வாரத்துல எங்க அம்மா இறந்துட்டாங்க. அதான் மூணு மாசம் கழிச்சு இன்னைக்கு தான் முதல் முறையாக கோவிலுக்கு வரோம்" என்றாள் ரதி

   "என்னடி இது அநியாயம்? கல்யாணம் ஆன கையோடு காரியத்தை முடிச்சிருக்கே! என்ன நேரமோ, என்ன ராசியோ, பாருமா லட்சுமி... கெட்டது நடந்த கையோட விடாம ஏதாவது நல்லது பண்ணி வைக்கணும். இல்லனா திரும்பத்திரும்ப கெட்டது நடக்கும் சீக்கிரம் நல்லது நடக்க ஏற்பாடு பண்ணு"

    இதற்கு பதிலளிக்க ரதி தயாரான தருவாயில், லலிதா லட்சுமியிடம் அருகில் வந்து பேச்சுக் கொடுக்க, கோபம் கொண்ட லட்சுமி தன் மருமகளை கையை பிடித்து வேகமாக திரும்பி வந்தாள்

   "அத்தை கோவிலுக்கு போகலையா?"

   "வேண்டாம் பேசாம வா"

                                [23]

    வீட்டிற்கு வந்து கோபமாக பூஜை கூடையை டீபா மீது வைத்தவள் சோபாவில் அமர்ந்தாள். பேப்பர் படித்துக் கொண்டிருந்த சண்முகராஜன் மருமகளிடம் என்ன என்பது போல் சைகை காட்டினார். தெரியவில்லை என்பது போல் சைகை காட்டிய மருமகளிடம்

    "என்னம்மா உனக்கு ஸ்கூலுக்கு டைம் ஆகுது. நீ புறப்படு" என்றார்

    ரதி தன் ஹேண்ட் பேக்கை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள். லட்சுமியிடம் பொறுமையாக கேட்டார்

   "என்னம்மா ஆச்சு?"

   "நானும் ரதியும் பூக்காரம்மா கிட்ட பூ வாங்கிட்டு இருந்தோம். அப்போது பார்த்து அந்த அம்மா மகளைக் கூட்டிட்டு வந்தாங்க" கோபமாகக் கூறினாள்

   "எந்த அம்மா?"

   "லலிதா. ஷாலினியோட அம்மா"

   "சரி... அதனால் என்ன?"

   "அவங்க பொண்ணுக்கு கல்யாணம் முடிச்சுட்டாங்க" ஆவேசமாக கூறினார்

   "அதனால என்ன? நாம கூட தான் சந்துருவுக்கு கல்யாணம் முடிச்சிட்டோம். இப்போ அவங்க பொண்ணுக்கு அவங்க கல்யாணம் செய்யாம இருந்தா நீ என்ன சந்துருவுக்கு ரெண்டாவது கல்யாணம் செய்து வைக்க போறியா என்ன? இதுல நீ டென்ஷன் ஆகுறதுக்கு என்ன இருக்கு லட்சுமி?"

   "அது மட்டும் இல்லைங்க. அவங்க முன்னாடி இந்த பூக்காரம்மா பொண்ணு கருப்பா இருக்கு, அம்மா இறந்துட்டாங்களா ராசி நேரம் எல்லாம் சரியா பார்த்தீர்களா, அப்படி இப்படின்னு நக்கல் பேசினது எனக்கு அசிங்கமா போச்சு"

   "ரதி இதைக் கேட்டாளா?" சிறு கோபத்துடன் கேட்டார்.

   "கேட்டால் கேட்டால்... ஆனா அவ அதைப் பெருசா எடுத்துக்கலை. பக்கத்துல இருந்து யார்ன்னு அவளுக்கு தெரியாதே. எனக்கு தானே அவமானமா போச்சு"

   "இப்போ உனக்கு கோபம் ஷாலினி அம்மா மேலயா? இல்ல பூக்காரம்மா மேலயா?"

   "நம்ம மேல தான்... இன்னும் கொஞ்சம் பொறுமையா தேடி கல்யாணம் செய்து இருக்கலாம். விசாரிக்க கூட டைம் கொடுக்கல"

   "யாருக்கு?" சற்று கோபம் அதிகரிக்க

   "சந்துருவுக்கு தான்"

   "வாய மூடு லட்சுமி. யாரோ ரெண்டு பொம்பளைங்களுக்காக நம்ப மருமகளை எதுக்கு குறை சொல்ற?"

   "என்னை ஏன் சத்தம் போடுறீங்க? அந்த பூக்காரம்மா கேட்டதில்ல என்ன தப்பு? கல்யாணம் ஆன கையோடு அம்மா வாரி கொடுத்துட்டா. நல்லது நடந்த வீட்டில உடனே ஒரு எழவு விழுந்தால் யாருக்குத்தான் கோபம் வராது? பதிலுக்கு கோபப்பட்டாள்

   "என்ன பேசுற நீ? அவள் வந்ததால உனக்கு ஒன்னும் ஆகல இல்ல. அவங்க அம்மா தானே இறந்தாங்க அதுக்கு முன்னாடி நல்லா தானே இருந்தாங்க? அப்படி பார்த்தா சந்துரு அந்த வீட்டுக்கு மருமகனா போன நேரம் தான் இப்படி ஆச்சு னு எடுத்துக்கலாமா?

   "என்னங்க இப்படி பேசுறீங்க?"

   "வேற எப்படி பேச சொல்ற? மகனுக்குன்னா ஒரு ஞாயம் மருமகளுக்குன்னா ஒரு நியாயமா. சந்துருவை விட ரதி அழகு கம்மிதான் ஆனால் சந்திருவைவிட தைரியமான பொண்ணு. சந்துரு விட புத்திசாலி பொண்ணு. 'அழகாய் இருக்க பொண்ணுங்க பல தவறுகளில் மன்னிக்க படுறாங்க'ன்னு எங்கேயோ படித்த ஞாபகம். அப்போ சிரிப்பு வந்தது. ஆனால் அழகு கம்மியா இருந்தா எல்லா பழியும் அவங்க மேல போடலாம்னு நீங்க நடந்து கொள்வதுதான் புரியுது. போங்கடி நீங்களும் உங்க எழுதப்படாத நியாயமும்" என்று கோபமாக எழுந்து சென்றார்

    நடந்த சம்பவம் சண்முகராஜனின் மனதை உறுத்திக் கொண்டிருந்தது அன்று மாலை சந்துரு அழைத்தான்

   "எப்படிப்பா இருக்கீங்க?"

   "ம்... நீ எப்படிப்பா இருக்க? வேலை விஷயம் என்ன ஆச்சு?"

   "அதைப் பத்தி சொல்லலாம்னு தான் போன் செய்தேன். பார்மாலிடீஸ் எல்லாம் முடிஞ்சிடுச்சு. ஆனா இங்க சூழ்நிலை கொஞ்சம் மாறுது"

   "என்னப்பா இப்படி சொல்லிட்ட..."

   "ஒன்னும் இல்லப்பா. ஒரு வாரம் வெயிட் பண்ண சொல்லியிருக்காங்க அதுக்குள்ள பிராப்ளம் ஆரம்பிச்சதுன்னா முடிஞ்சதும் தான் வர முடியும். ஆனால் அனேகமா வராதுன்னு பேசிக்கிறாங்க. அப்படி வரலைன்னா செகண்ட் வீக் நான் கிளம்பிடுவேன். ஆமா நீங்க ஏம்ப்பா வருத்தமா கேக்குறீங்க?"

    "சந்துரு... உங்க அம்மாவுக்கு ஷாலினி மாதிரி ஒரு பெண்ணைப் பார்த்து முடிவு செய்துவிட்டு ரதியை கல்யாணம் செய்து இப்போது அவளுக்கு அவ்வளவா விருப்பம் இல்லை. நான் அதை அப்போ பெருசா எடுத்துக்கல. ஆனா கொஞ்ச நாளா அவருக்கு ரதி மேல எதற்கெடுத்தாலும் கோபம் வருவது. ராசி இல்ல அது இதுன்னு... பாவம் சந்துரு வந்த பொண்ணு. அவ எதையும் பெருசா எடுத்துக்கலனாளும் எனக்கு கஷ்டமா இருக்கு. ரதி லட்சுமியோட கோபத்தை பெரிசா எடுத்துக்காததே லட்சுமிக்கு இன்னும் கோபத்தை அதிகரித்ததோன்னு எனக்கு தோணுது. கொண்டு வந்துவிட்டு குறை சொல்லக்கூடாது என்று சொல்லுவாங்க. உங்க அம்மா எதையாவது சொல்லி அந்த பொண்ணோட மனசு கஷ்டப்படுத்துறா... அந்த பொண்ணு எங்கே போவாள் சொல்லு? இதுக்கெல்லாம் ஒரே காரணம் உங்க ரெண்டு பேருக்குள்ள இருக்க அந்த இடைவெளிதான். அதை உடைத்து விட்டால் எல்லாம் சரியாகிடும். நீயும் சீக்கிரம் வருவேன்னு நெனச்சேன். அதனாலதான் உன்னோட பதில் எனக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்தது"

   "என்னப்பா நீங்க இதுக்கு போய்... இவ்வளவு சீரியஸா எடுத்துக்காதீங்க? இது எல்லா வீட்டிலும் வரக்கூடிய மாமியார் மருமகள் சண்டை தானே"

   "ஆமாம்டா நான் இல்லன்னு சொல்லல. வாழ்ந்த வாழ்க்கைக்கோ, வாழ்ந்துகிட்டு இருக்க வாழ்க்கைக்கோ, பொருத்து போகலாம். ஆனால் வாழப்போற வாழ்க்கைக்கு பொருத்து போகறது கஷ்டம். சந்தோஷத்தையே கண்ணுல காட்டாம, வெறுப்புகளையும் கோபத்தையும் சமாளிச்சா அந்த பொண்ணுக்கு எவ்வளவு துக்கத்தை தரும். இப்படி யோசிச்சுப் பாரு. இதுவே ஷாலினியை கல்யாணம் செய்திருந்தாள், உங்க அம்மா இப்படி நடந்து கொள்வாளா? இல்ல இப்படி நடந்துகிட்டா. அவ இங்கே தான் தங்கி இருப்பாளா? 'எனக்கு இங்கே இது இல்ல அது இல்ல நான் அம்மா வீட்டுக்கு போறேன்'னு போயிருப்பா"

   "சரிப்பா. நீங்க ஒன்னும் வருத்தப்படாதீங்க. இன்னும் ரெண்டே வாரம்தான் நான் வந்துருவேன். அதுக்கப்புறம் எந்த பிரச்சினையும் வராது. அப்பா நான் அடுத்த வாரம் ஃபுல்லா கேம்பில் தான் இருப்பேன். அதனால பேச முடியாது அம்மா கிட்ட குடுங்க ஒருமுறை பேசிடுறேன்.

   "அம்மா வெளியே போய் இருக்கா. நாளைக்கு தானே கிளம்புறே? இன்னைக்குள்ள அவளை பேச சொல்றேன்" என்றவர் லைனை துண்டித்தார்

   சண்முகராஜன் பின்னிருந்து ஒரு குரல் கேட்டது

    "மாமா காப்பி போடவா டி போடவா?"

   "ரதி... நீ எப்போமா வந்தே" என்று திரும்பி பார்த்தார்.

   "இப்போ தான் மாமா. உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க. நான் போட்டு கொண்டு வரேன்"

   "எனக்கு எதுவும் வேண்டாம். நீ இங்க வந்து கொஞ்சம் உட்காரு"

   "என்ன மாமா சொல்லுங்க" அமர்ந்தவள் கேட்டாள்

   "எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். அந்த அருணாச்சலம் இருக்காரு அவரு யாரு?"

   "அவரா மாமா... அவர் எங்க அப்பாவோட பிரண்ட். ரெண்டு பேரும் சேர்ந்து தொழில் செய்யலாம்னு முடிவு செஞ்சாங்க. அப்பா அவரை நம்பி ஊர்ல இருந்த இடம், வயல் எல்லாத்தையும் வித்து கொண்டு வந்து தொழில் போட்டாரு. அதுவும் பத்தாமல் இருந்த வீடு, அம்மாவோட நகை எல்லாத்தையும் வித்து திரும்பவும் கொடுத்தார். நான் அப்போது தான் காலேஜ் சேர்ந்து இருந்தேன். பீஸ் கட்ட கொஞ்சம் பணம் குறைந்தது அதை வாங்கிட்டு வரேன்னு அப்பா போனார். ஆனால் ரொம்ப முகம் வாடிப் போய் வந்தார். என்ன ஆச்சுன்னு கேட்டேன். நம்பிக்கை துரோகம்ன்னு ஒரு வார்த்தை தான் சொன்னார். நானும் அதுக்கு மேல எதுவும் கேட்கல. ஆனா அன்னைக்கு நைட் சூசைட் பண்ணிக்கிட்டாரு. மறுநாள் அந்த அருணாச்சலம் வந்து அழுது நஷ்டம் ஆயிடுச்சுன்னு சொன்னார். நாங்களும் அதனாலதான் அப்பா இறந்தார்ன்னு நம்பினோம். அன்னைக்கு அவரு 'நீ கவலை படாதே நான் இருக்கேன் நான் உன்னை பார்த்துக்கிறேன்' என்று சொன்னார். ஆரம்பத்தில் காலேஜ் ஃபீஸ் கட்ட கொஞ்சம் சப்போர்ட் பண்ணாரு. போகப் போக குறைந்துகொண்டே வந்துச்சு. அதனால என் படிப்பும் பாதியிலேயே விட்டுட்டேன். மூணு வருஷம் கழிச்சு ஒருநாள் அந்த கம்பெனி செக்யூரிட்டி வேலை பார்த்தவர் என்னை சந்தித்து ஒரு விஷயத்தை சொன்னார். அப்பாவோட பணத்தை அந்த ஆளு ஏமாற்றி விட்டதாகவும், அதை தெரிஞ்சு அப்பா கேட்டதால அடித்து அசிங்கப்படுத்திய தாகவும், நைட்டோட நைட்டா அந்த ஃபேக்டரி காலி செஞ்சுட்டு தீ வைத்து விட்டதாகவும் சொன்னார். என்னால நம்பவே முடியல. கோபம் வந்தது அம்மா கிட்ட சொல்ல போனேன். ஆனா அம்மா அவரைத்தான் முழுசா நம்பியிருந்தாங்க. அவர் ஏதாவது செய்துட்டா ஏதோ தாய் வீட்டு சீதனமே வந்தா மாதிரி பூரிப்பாங்க. யோசனை பண்ணி பார்த்தேன். அந்த நேரத்தில் அவர் எம்எல்ஏ வேற. நம்மளால ஒன்னும் செய்ய முடியாது. அம்மா கிட்ட சொல்லி அவங்க ஆவேசப்பட்டு அவர்களையும் நான் இழக்க விரும்பல. எதையாவது அடையலாம்ன்னா போராடலாம். இறப்பும் ன்னு தெரிஞ்சு எதுக்கு போராடுறதுன்னு விட்டுட்டேன். ஆனா அவரு இப்போ ஹெல்ப் பண்றது கூட காரணமாகத்தான். அந்த ஃபேக்டரி எரிஞ்சதுக்கு இன்சூரன்ஸ் கம்பெனி மேல கேஸ் போட்டு இருக்காரு. அதுல சாட்சியா நாங்க அவருக்கு வேணும். அதனால எங்களை தக்க வச்சுக்க உதவி செய்ற மாதிரி நடிச்சு இருக்காரு"

   "ஓ.... அதான் பேச்சு மட்டும் பெருசாயிருக்கு!"

   "அவருடைய நடிப்பு எல்லாருக்கும் தெரியும். அம்மாவை தவிர, அவங்களுக்காக தான் நான் பொறுத்து போனேன். இனி அதுவும் இல்லை"

   "ரதி சொல்ல மறந்துட்டேன் ஒரு குட் நியூஸ்" சர்ப்ரைஸாக சொன்னார் சண்முகராஜன்

   "என்ன மாமா?"

   "இன்னும் ரெண்டு வாரம் தான். சந்துரு இங்கே வரப்போறான்"

   "என்ன மாமா சொல்றீங்க? எப்படி?"

   "ஆமாம்மா. எல்லா ஃபார்மாலிட்டீஸ் உம் முடிஞ்சிடுச்சாம். ஒருவாரம் கேம்ப் போறாங்களாம். வந்ததும் என்னைக்கு வரேன்னு போன் பண்றேன்னு சொல்லி இருக்கான்"

   "சந்தோஷம் மாமா. இங்கே வந்து என்ன செய்வாரு?"

   "அவன் என்ன பிளான் வச்சிருக்கான்னு எனக்கு தெரியல. ஆனா அவனுக்கு சொந்தமாக ஒரு ஜிம் வைக்கணும்னு ஆசை. காலேஜ் முடிஞ்ச கையோட கேட்டான். ஆனா அதுக்குள்ள அவனுக்கு வேலை கிடைத்தது. எக்சர்சைஸ் என அவனுக்கு ரொம்ப பிடிக்கும். அவன் என்ன பிசினஸ் வேணும்னாலும் பண்ணட்டும். என்னால முடிஞ்ச அளவுக்கு ஒரு சின்னதா ஜிம் வெச்சு கொடுத்தா அவனும் வொர்க் அவுட் பண்ணுவான். அவன் பிசினஸ்ல இதையும் சேர்த்து பார்த்துக்குவான்."

   "நீங்க இன்னும் இந்த ப்ளானை விடலையா? அவனுக்கு சப்போர்ட் பண்ணா போதும். அவனுக்கு பாரம் ஏற்றாதீங்கன்னு நான் படிச்சு படிச்சு சொல்றேன்..." என்றபடியே லக்ஷ்மி உள்ளே வந்தாள்.

    சண்முகராஜன் எதிரில் அமர்ந்திருந்த ரதி சிரித்தபடியே எழுந்து சென்றாள். சண்முகராஜன் லட்சுமி மகனிடம் பேசச் சொன்னது அவளது காதுகளில் இருந்து மெல்ல மறைந்தது

                              [24]

    ஒரு வாரம் உருண்டோடின. ஒரு நாள் காலை சண்முகராஜன் லக்ஷ்மி அழைத்தார்

    "லட்சுமி நாம மலை கோயிலுக்கு போயிட்டு வரலாமா?"

   "என்னங்க இது! நான் கெஞ்சினாலும் வர மாட்டீங்க! இன்னைக்கு நம்ம கல்யாண நாளும் இல்ல... என்ன திடீர்னு பக்தி?

   "மனசு ஏதோ சஞ்சலப்பட்டது. கோவிலுக்கு போனா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும் என்று பார்க்கிறேன்"

   "நேற்றிலிருந்தே நீங்க சரியில்லை. இன்னைக்கு ஒரு மாதிரி பேசுறீங்க. உடம்புக்கு ஏதாவது செய்யதா? நாம வேணும்னா டாக்டரைப் பார்க்கலாமா?"

    "அதெல்லாம் ஒன்னும் இல்லை லட்சுமி. வா நம்ம கோயிலுக்கு போகலாம்"

    "சரிங்க. ரதி ஸ்கூலுக்கு கிளம்பிறா, நாமும் அப்படியே கிளம்பிடலாம்" என்று எழுந்து சென்று பூஜை கூடையை தயார் செய்தார்

    சண்முகராஜனின் கைபேசி அவரைப் அவசரமாக அழைத்தது. ரதி வேலைக்கு தயாராகிக் கொண்டிருக்கையில் அங்கு சார்ஜரில் இருந்த கைபேசியை எடுத்து சோபாவில் அமர்ந்திருந்த சண்முகராஜன் இடம் கொடுத்தார். கைப்பேசியில் வந்த எண்ணை கண்டு சற்று பதற்றம் அடைந்தார்

   "என்ன மாமா? என்ன ஆச்சு?"

   "இது... சந்திருவோட ஆபீஸர் நம்பர்....!"

   "பரவாயில்லை மாமா அட்டென்ட் பண்ணி பேசுங்க"

   "இல்லமா... கொஞ்சம் பதட்டமா இருக்கு!"

   "போன் எடுங்க மாமா" சிறு பயம் அவளையும் தொற்றிக்கொள்ள

   "என்னங்க... என்ன ஆச்சு?" என்று லக்ஷ்மி கேட்டபடியே பூஜை அறையிலிருந்து வெளியே வந்தார். ரதி கைபேசியை வாங்கி பேசினாள்

   "ஹலோ"

   "........."

   "ஆமா"

   "........."

   "நான் அவரோட வைப்"

   ".........."

   "என்னம்மா ஆச்சு?" என்று பதட்டம் அதிகரித்தபடியே லட்சுமி கேட்டாள்

    பேசிக்கொண்டிருந்தவளிடம் இருந்து போனை பிடுங்கி பேச ஆரம்பித்தாள் லட்சுமி

   "ஹலோ"

   "என்னம்மா ஆச்சு?" என்று சண்முகராஜன் மருமகளிடம் கேட்டார்

   "ஒன்னும் இல்லை மாமா... சண்டையில் அவருக்கு கொஞ்சம்... அடிபட்டுடுச்சாம்"

    பதட்டத்தில் இருந்தவர் சடாரென்று சோபாவில் அமர்ந்தார்

   "சந்துரு.....!!" என்ற லக்ஷ்மி கத்த சண்முகராஜன் நெஞ்சை பிடித்துக் கொள்ள ரதி லக்ஷ்மியை சமாதானப்படுத்தினாள். ஏதோ அசைவு தெரிய திரும்பி பார்த்த ரதி "மாமா" என்று அலறியபடியே சண்முகராஜன் இடம் சென்றாள். லக்ஷ்மியும் பதறியபடியே அவனருகில் வந்து

   "என்னங்க... என்ன ஆச்சு...!! என்னங்க செய்யுது?" சண்முகராஜன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு துடித்துக் கொண்டிருந்தார்

   ரதி உடனே ஒரு ஆட்டோவை பிடித்து சண்முகராஜனை ஏற்றிக் கொண்டு அருகிலிருந்த ஹாஸ்பிட்டலில் சேர்த்தாள். அங்கு அவரை ஐசியூவில் சேர்க்கப்பட்டார். வெளியே இருந்தவர்களிடம் டாக்டர் வந்து கேட்டார்

   "நீங்க?"

   "நான் அவங்க மருமகள். இவங்க அவருடைய வைஃப். மாமா எப்படி இருக்காரு டாக்டர்"

   "மேஜர் அட்டாக்" லக்ஷ்மி இதைக்கேட்டதும் அலறி அழுதாள்

   "உடனே ஆபரேஷன் பண்ணி ஆகணும்"

   "ஓகே டாக்டர். நீங்க ரெடி பண்ணுங்க. நான் கேஷ் அரேஞ்ச் பண்ணுகிறேன்" என்றதும் சண்முகராஜன் கைப்பேசி ஒலித்தது

    டாக்டர் மற்ற விபரங்களை லக்ஷ்மி லட்சுமியிடம் சொல்ல ரதி சற்று தள்ளி வந்து பேசினாள்

   "ஹலோ"

   ".........."

  "ம்....." அவள் தலையில் கை வைத்து நின்றாள். இங்கு நிலைமையை யோசித்து வேகமாக திரும்பி வந்தாள்

   "டாக்டர் நாங்க மாமாவை பார்க்கலாமா?"

   "தாராளமா. ஆனா சீக்கிரம் வந்துடுங்க. பார்த்துப் பேசுங்கள். ஒருத்தர் ஒருத்தர போங்க"

   "தேங்க்யூ டாக்டர்" என்றவள் லட்சுமியிடம்

   "அத்தை பயப்படாமல் இருங்க. நான் போய் பார்த்துட்டு வரேன்" என்று உள்ளே சென்றாள்

   "மாமா" திரும்பிப் பார்த்தார் சண்முகராஜன்

   "என்ன மாமா இப்படி பயந்துட்டீங்களா? பாருங்க! அவரு அங்கே நல்லா தான் இருக்காரு. சண்டையில சின்ன சின்ன காயம் தானாம். ஜஸ்ட் பார்மாலிட்டிகாக எல்லாருக்கும் இன்ஃபார்ம் பண்ண வேண்டியது ப்ரோசீதாராம். அவ்வளவுதான் ஒன் வீக்ல வீட்டுக்கு அனுப்பி விடுவார்களாம். சும்மா ரெஸ்ட்... எடுக்க மத்தபடி நீங்க பயப்படுற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல மாமா"

    புன்முறுவல் பூத்த சண்முகராஜன் "டாக்டர் என்ன சொன்னாரு" என்று கேட்டார்

   "ஒன்னும் பயப்பட வேண்டியதில்லை, மைல்ட் அட்டாக் மாதிரி தான் இருக்கு, ஆன்ஜியோ பண்ணா போதும்ன்னு சொல்லி இருக்காங்க. அதற்கான ஏற்பாடு பண்ணிட்டு இருக்காங்க. சரியாயிடும் மாமா கவலை படாதீங்க"

   "கடவுள் உன்னை இவ்வளவு கஷ்டப்படுத்த கூடாது!" மெல்லிய குரலில் கூறினார்

   "அப்படி எல்லாம் இல்ல மாமா. நீங்க அமைதியா ரெஸ்ட் எடுங்க. அத்தையை அனுப்பி வைக்கிறேன்" என்று புறப்பட்டார்

    அவள் பாதி தூரம் வரும்போதே நர்ஸ் லக்ஷ்மி உள்ளே அனுப்பினாள். ரதி பேச வருவதற்குள் வேகமாக சண்முகராஜன் இடம் சென்று அழுதால் லக்ஷ்மி

   "கவலைப்படாத லட்சுமி எல்லாம் சரியாகிடும்"

   "நம்ம பையனுக்கு முகத்தில் அடிபட்டு ஒரு கண்ணு போயிடுச்சாங்க..." என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். சில நொடிகள் அழுகை சத்தத்தை மட்டும் உணர்ந்து சண்முகராஜனை பார்த்தாள் லட்சுமி

   "என்னங்க... என்ன விட்டுட்டு போய்ட்டீங்களா..." அலறிக் கதறினாள்

   லக்ஷ்மியின் சத்தம்கேட்டு உருக்குலைந்து போனால் ரதி

                            [25]

     வீட்டில் சடலத்தை வைத்திருக்கையில் அருகில் லட்சுமி அழுது அழுது சோர்ந்து கிடக்க, ரதி சற்று தூரத்தில் அமர்ந்திருந்து சிறு சிறு வேலைகளை செய்து கொண்டிருந்தாள். லலிதாவும் விமல்ராஜும் மாலையைக் கொண்டு வந்து போட்டனர். அவர்களை கண்டதும் லட்சுமிக்கு கோபமும் அழுகையும் பொத்துக் கொண்டு வர

   "யார் யார் விட்ட சாபமோ... யாரால யார் காலடி எடுத்து வெச்ச நேரமோ.... என் குடும்பத்தை இப்படிப் பழி வாங்குவதே.... நாங்க யாருக்கு என்ன துரோகம் செய்தோம்! என் குடும்பமே எப்படி சரிஞ்சி போச்சே..." என்று புலம்பி அழுததை கண்டு லலிதாவும் விமல் ராஜன் புறப்பட, ரதி சமையலறைக்குச் சென்றாள். பின்தொடர்ந்த செல்வி

    "என்னடி இது இப்படி பேசுறாங்க?" அழுதுகொண்டிருந்த ரதி

   "அவங்களுக்கு என்னை பிடிக்காதுன்னு எனக்கு தெரியும் செல்வி. ஆனால் என்னைக்கும் இவ்வளவு வெளிப்படையா என்னை பேசினதில்லை. எனக்கு புரியல! என் வாழ்க்கையை நான் வடிவமைக்கலையே! அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சிருந்தா...... ஆனா எனக்காக யோசித்தவர் எங்க மாமனார் மட்டும்தான். அந்த கடவுளுக்கு என் மேல என்ன கோபம் தெரியல... எனக்கு யாரெல்லாம் சப்போட்டா இருக்காங்களோ அவங்களை மட்டும் கூட்டிட்டு போயிட்டாரு. நான் தனியா போராட தயாராக இருக்கேன்... ஆனா என்னை காரணம் காட்டி என்னை சுத்தி இருக்கிறவங்களையும் கஷ்டப்படுத்தனுமா?"

   "வருத்தப்படாத ரதி. கண்டிப்பா ஒரு நாள் உன் வாழ்க்கை மாறும். அன்னைக்கு எல்லாரும் என்ன புரிஞ்சுக்குவாங்க"

   "இனி என்ன இருக்கு செல்வி என் லைஃப்ல? என்னை பிடிக்காத மாமியார், ஏத்துகாத புருஷன், எப்பவும் போல கடமையே என்று ஒரு வாழ்க்கை, பரவாயில்லை பழகின விஷயம்தானே... பார்த்துக்கலாம்"

   "வேலைக்கு போற வர்ற ஆரம்பிச்சா எல்லாம் சரியாயிடும்"

   "செல்வி ஸ்கூல்ல இன்ஃபாம் பண்ணிடு. இன்னும் ஒரு வாரத்துக்கு நான் வரமாட்டேன்"

   "நான் ஒன்னு சொல்றேன் கேட்பியா?"

   "சொல்லு"

   "உங்க வீட்டுக்காரர் வர ஒரு வாரம் ஆகும். உன் மாமியாரும் உன் மேல ரொம்ப கோபமா இருக்காங்க. ஒரு ரெண்டு நாள் இருந்துட்டு நீ வேலைக்கு வந்திடு. உன் வீட்டுக்காரர் வந்ததும் லீவு எடுத்துக்கோ"

   "என்ன பேசுற செல்வி? என் மேல அவங்களுக்கு கோபம் வரது நியாயம்தானே... நான் இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து எல்லாமே தப்பு தப்பா நடக்குது. அதனாலதான் இவ்வளவு கோபம். பரவாயில்லை செல்வி... ஆனா அவங்க மகன் இங்கே வந்து அவர் கிட்ட அவங்க அம்மாவை ஒப்படைக்கிற வரைக்கும், அவங்களை நல்லபடியா பார்த்துக்க வேண்டியது என்னுடைய கடமை. வாக்க படாமல் இருந்திருந்தாலோ, இல்ல சந்துருவுக்கு இப்படி ஒரு இழப்பு நடக்காமல் இருந்திருந்தாலோ இவங்களுக்கு பிடித்த மாதிரி ஒரு வாழ்க்கை வாழ நான் ஒதுங்கி போய் இருப்பேன். ஆனா இப்போ ஏத்துக்கிறாங்களோ இல்லையோ, கோபப்படுகிறாங்களோ, வெறுப்பு காற்றாங்களோ நான் இங்கேயேதான் இருக்கனும். தூணில்லாத சுவருக்கு ஒரு கட்டையை முட்டுக்கொடுக்கிறாமாதிரி"

   "சரி ரதி. பார்த்துக்கோ... பொறுமையை கைவிடாதே" என்று சொல்லிவிட்டு புறப்பட்டாள்

    அனைத்து சடங்குகளும் முடிந்தன. அன்று முதல் ரதி லட்சுமியின் கண்முன் வருவதே இல்லை. ஒதுங்கிருந்தபடியே வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டு அக்கம்பக்கம் இருப்பவரின் உதவியுடன் லட்சுமியை கவனித்துக் கொண்டும் இருந்தாள். சமாதானம் செய்து சாப்பிட சாப்பாடு கொடுக்க வருபவர்களிடம் கூட ரதியை குறை கூறிக் கொண்டிருந்தாள் லக்ஷ்மி. கடந்து போகையில் ரதியை கண்டாலே எரிந்து விழுந்து கொண்டிருந்தாள். அது எதையும் மனதில் போட்டுக் கொள்ளாமல் தன் வேலைகளை பார்த்தாள்.

    சில தினங்கள் கடந்தன அன்று விடியற்காலை வீட்டு வாசலில் ஒரு ஆம்புலன்ஸ் வந்து நின்றது. சத்தம் கேட்டு லட்சுமி வேகமாக எழுந்து செல்ல ரதி அவளை பின் தொடர்ந்து வந்து நின்றாள். ஆம்புலன்சில் இருந்து வீல்சேரில் மெல்ல சந்துருவை இருவர் இறங்கினர். லக்ஷ்மி மகனைக் கண்டு அழ ஆரம்பித்தாள். ரதியின் அழுகை சத்தம் வெளியே வராமல் பார்த்துக் கொண்டாள். அவர்கள் சந்துருவை உள்ளே அழைத்துச் செல்ல இருவரும் அவர்களை பின் தொடர்ந்தார்கள். லக்ஷ்மி மகனை பிடித்து கொண்டு கதறி அழ ஆரம்பித்தாள். ஒரு கை கட்டு போட்டு இருக்க மறு கையால் தாயை அணைத்தபடி கண் கலங்கினான் சந்துரு.

   "கடைசி நேரத்தில் அவர் முகத்தை பார்க்க கூட கொடுத்து வைக்கலியே... என் மகனுக்கு... இது என்ன கடவுள் கொடுமை கடவுளே..."

   வந்தவர்களில் ஒருவர் அவருடைய ஹாஸ்பிடல் ரிப்போர்ட்டை எடுத்து கொடுத்துவிட்டு ரதியிடம் விவரங்களை கூறினார்

   "பாருங்கம்மா அவரை ரொம்ப அழ விடாதீங்க. கண்ணுல தண்ணி வரக்கூடாது. ஆபரேஷன் பண்ணி இருக்காங்க. செப்டிக் ஆயிடும். முகத்துல இருக்குற கட்டு கழட்ட மூனு வாரம் ஆகும். கால் கையெல்லாம் ஏர்க்கிராக் அஞ்சு இடத்துல இருக்கு. மத்தபடி பிராக்சர் எதுவும் இல்லை. அவரை நடக்க விடாதீங்க. மீறி நடந்தால் ப்ராக்சர் ஆக வாய்ப்பிருக்கு. பாம் வெடித்ததால அந்த சுவர் செதிரின வேகத்தில் முகத்தில் அடிபட்டிருக்கு. நல்ல வேளை அங்கு இருந்து குதித்ததால அடி கம்மியா இருக்கு. இல்லனா பிழைத்திருக்க கூட முடியாது. முகம் கட்டு கழற்ற வரைக்கும் அவரால் பேச முடியாது. ஏன்னா முகத்துல இருக்குற எலும்பு உடைந்து இருக்கு. பத்திரமா பாத்துக்கோங்க. இதோடு அடுத்தவாரம் ஆர்மி ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போங்க. அவர் பத்தின டீடெயில்ஸ் அங்கேயே வந்துரும். அவங்க பார்த்துக்குவாங்க"

   "சரிங்க" என்று டிரைவர் கொண்டு வந்த அனைத்தையும் வாங்கி சந்துருவின் ரூமில் வைத்தாள்.

   அழுது தீர்த்த லக்ஷ்மி தன் மகனுக்கு ஏதேனும் கொண்டுவர சமையலறைக்குச் சென்றாள். ஒரு ஓரமாக நின்று சந்துருவை பார்த்தாள் ரதி. மிகுந்த மனச் சோர்வடைந்து நிலையில் இருந்தான். அவனிடம் பேச தயங்கியவள், லக்ஷ்மி சமையலறையிலிருந்து ஹார்லிக்ஸ் கலந்து கொண்டு ஒரு ஸ்பூனுடன் வெளியே வருவதை கண்டாள். சந்துருவின் ஒரு பக்கம் மட்டும் திறந்திருந்த வாயில் மெல்ல ஊட்ட ஆரம்பித்தாள் லட்சுமி. ரதி சமையலறைக்குச் சென்று மற்ற வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள். இங்கு லக்ஷ்மியும் ஆரம்பித்தாள்

   "என்ன நேரமோ என்னமோ தெரியல சந்துரு. நமக்கு இப்படி ஒரு நிலைமை. நல்லா இருந்த மனுஷன் எப்படி சட்டென்னு சாக முடியும்? உனக்காக அவர் துடித்தது என் கண்ணுக்குள்ளேயே நிற்கிது. அப்பக்கூட ஒரு பதட்டமா.. ஒரு கவலையா.. இல்லவே இல்லை. எப்படி இருக்கும்? பெத்தவ விழுந்து கிடக்கும்போதே கிண்டல் செய்த புண்ணியவதி தானே! அந்த அலட்சியம் தான் ஆத்தாவை வாரி கொடுத்துட்டா! உனக்கு அடிபட்டதை கூட ரொம்ப சாதாரணமா சொல்றா!! அதுசரி பெத்தவ உயிரை துச்சமென்னு பார்த்தா, மத்தவங்க உயிரை பத்தி அவளுக்கு என்ன கவலை?"

   சந்துரு கையை தூக்கி 'போதும்' என்பதுபோல் காண்பித்தான். இவை அனைத்தும் ரதி காதில் விழுந்தும் எதுவும் நடக்கவில்லை என்பது போல் நடந்து கொண்டாள். அனைத்து வேலைகளையும் முடித்து அவள் வேகமாக வேலைக்கு புறப்பட்டாள். ரதி புறப்பட்டதும் சந்திருவை அழைத்து சென்று அவன் அறையில் படுக்க வைத்தாள் லட்சுமி

                            [26]

   "ரதி! என்னடி வேலைக்கு வந்துட்டேன்?"

   "அவரு வந்துட்டாரு செல்வி"

   "அப்போ நீ ஏன் வந்தே? அவரை பாத்துக்கணும் இல்ல.. உங்க மாமியார் இந்த நிலைமையில் இருக்கும் போது, அவரை பார்த்துக்கிறது கஷ்டம்தானே"

   "நான் இருந்தா தான் கஷ்டம் செல்வி. ரெண்டு பேருமே மன காயத்தோடு இருக்கும்போது அவர்களுக்கு பிடிக்காத நான் அவங்க முன்னாடி திரிஞ்சிட்டிருந்தா இன்னும் கோபம் தான் வருமே தவிர அவங்க மனசு அமைதி அடையாது. நான் வீட்ல இருந்தா... நான் அவரை பாத்துக்குவேன் அவங்க அம்மா நினைப்பாங்க. அவங்க அம்மாவை நான் பாத்துக்குவான்னு அவர் நினைப்பாரு. ஆனால் யாரும் நான் சொல்றதை கேட்க மாட்டார்கள். இதுவே நான் அங்கே இல்லன்னா ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்குவாங்க"

   "ஆனா உன்ன பத்தி தப்பா பேசுவாங்க ரதி"

   "இனி பேச என்ன இருக்கு. அப்படியே பேசினாலும் அதையும் தொடச்சி போட்டுட்டு போக வேண்டியதுதான்"

    மாலை பணியை முடித்துவிட்டு வந்து கொண்டிருந்தவளை சிவா வழிமறித்தான். சட்டென்று குறுக்கே வந்ததும் சற்று கோபமாக

   "என்ன வேணும் சிவா?"

   "கொஞ்சம் என் கூட வர முடியுமா?"

   "எங்கே?"

   "என் காருக்குள்ள தான்"

   "எதுக்கு?"

   "வா சொல்றேன்"

   "பரவாயில்லை. எதுவா இருந்தாலும் இங்கேயே சொல்லு" என்றவளை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றான் சிவா.

   "விடு... என்ன பண்ற சிவா...!!" காரின் பின்புறம் அவளை அமர வைத்து மறுபக்கம் தானும் வந்து அமர்ந்தாள்

    இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். கண்ணாடி மூடி இருந்ததால் எதுவும் கேட்கவில்லை. ஒரு பெட்டியில் நிறைய பணத்தையும் எடுத்துக்காட்டினான். முதலில் மறுத்தவள் பின் சம்மதித்தாள். இருவரும் இறங்கி வந்தனர்

   "ரொம்ப தேங்க்ஸ் சிவா. எனக்காக நீ இவ்வளவு யோசிச்சு இருப்பேன்னு நான் எதிர்பார்க்கல. என்னை யாரும் புரிஞ்சுக்கன்னு வருத்தம் இருந்தது. இப்ப எனக்கு அதுவும் இல்லை நான் கிளம்புறேன்" என்று புறப்பட்டார்

   "சரி" என்று அனுப்பி வைத்தவன் சிரித்தபடியே அவள் செல்வதை கண்டு, அவள் தலை மறைந்ததும் "எஸ்" என்று வெற்றிக்குறி போட்டு சென்றான்.

    நாட்கள் நகர ஆரம்பித்தன. ரதி வீட்டைப் பார்த்துக் கொள்வதும், லக்ஷ்மி சந்துருவை பார்த்துக் கொள்வதும், தொடர்ந்தது. ஒரு பழக்கம் மட்டும் புதிதாய் ஆரம்பித்தது. ஞாயிறு அன்று சிவா தெருமுனையில் நிற்க ரதி சென்று அவருடன் வெளியே செல்வது, மாலை அல்லது இரவு திரும்பி வருவது. இரண்டு வாரங்கள் இப்படியே நகர, லக்ஷ்மி அந்த கோபத்தையும் நாசூககாக வெளிப்படுத்தினாள். எதையும் பொருட்படுத்தாது சந்துருவின் ஹாஸ்பிடல், மாமனார் காரியம் என எந்த வேலையும் குறை வைக்கவில்லை ரதி. சந்துருவின் உடல்நலம் நன்றாக தேறி வந்தது. மூன்றாவது வாரம் லட்சுமி மட்டும் சந்திருவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள். அனைத்து கட்டுகளையும் பிரித்து, ஒரு கூலிங் கிளாஸ் போடும்படி கூறினர். ஒரு பக்கம் முழுவதும் அடிபட்ட தழும்புகள் கல்வெட்டாய் பதிந்து போய் இருப்பது கண்டு அங்கேயே வருத்தப்பட்டு அழுதாள் லக்ஷ்மி

   "அம்மா.... அழாதேம்மா... இதெல்லாம் சாதாரணம்"

    தாயை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வர இரவு ஆனது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் ரதி புறப்பட லட்சுமிக்கு கோபம் வந்தது. சந்துருவை அழைப்பது போல் ரதியை நிறுத்தினாள்

   "சந்துரு" என்றாள் கோபமாக

   "என்னம்மா"

   வெகு நாட்கள் கழித்து சந்துரு குரலை கேட்டு ஆச்சரியமாக பார்த்தாள் ரதி

   "இங்க வீட்டு வேலை செய்ய ஆள் இல்லாம இல்ல. இது என்ன குடும்பமா இல்ல சத்திரமா? ஊரை சுத்திட்டு வந்து தங்கறதுக்கு. வேலைகளைக் கூட நானே பாத்துக்கிறேன். ஆனா நாலு பேரு அசிங்கமா பேசின அதைத்தான் என்னால ஏத்துக்க முடியாது. கண்டவனோட ஊர் சுத்திட்டு வரவங்களுக்கு நம்ம வீட்ல இடம் கிடையாது" இதை கேட்டு ரதி நின்றுகொண்டிருக்க சந்திரு

   "என்னமா நீங்க அவளை போயி..." என்று சிரித்தான் "நீ கிளம்பு" என்று ரதியை அனுப்பி வைத்தான்

   "என்னம்மா அவமேல உங்களுக்கு இவ்வளவு கோபம்? அப்படி என்ன செய்துவிட்ட அவ? ஓடிவந்து கட்டினா உங்க பிள்ளை தான் கட்டுவேன்னு வந்தாளா? என் மகனுக்கு உடனே கல்யாணம் செய்யணும் நீங்களும் அப்பாவும் தானே பார்த்து முடிவு பண்ணீங்க! இதுல அவ தப்பு என்ன இருக்கு? அவங்க அம்மா இறந்தது கஷ்டம்தான். ஆனால் அதனால் பாதிப்பு அவளுக்கு தானே அதிகம்! பாதிக்கப்பட்டவ இதுவரைக்கும் நம்ம யார் மேலேயும் பழி போடலையே! அப்பாவுக்கு விஆர்எஸ் கொடுத்ததே அவருக்கு உடம்பு சரியில்லன்னு தான்... அவர் இறந்தததுக்கும், அவளுக்கும் என்னம்மா சம்பந்தம்? உங்களுக்கு தெரியுமாம்மா என்ன எனக்கு நடந்ததுன்னு? ஆக்சிடென்ட்ல என் கூட இருந்த இரண்டு பேருமே இறந்து போயிட்டாங்க. நா மட்டும்தான் பொழச்சேன். ரதி கழுத்துல நான் கட்டிய தாலிதான் என்னை காப்பாதுச்சுன்னு நான் சொல்றேன். உங்களால மறுக்க முடியுமா? போனமுறை எனக்கு மனசு சங்கடப் பட்டு இருந்தது, அதனால அவளோட நான் நெருங்கி பழகல. அதுக்காக அவளுக்கு என்ன பிடிக்கலைன்னோ, அவ எனக்கு பிடிச்ச மாதிரி நடந்துகலன்னோ நீங்களே எப்படி முடிவு செய்தீங்க? இப்ப சொல்றேன்ம்மா. எனக்கு ரதியை ரொம்ப பிடிக்கும். இனி அவளை நான் ஒதுக்கி வைக்க மாட்டேன். இப்ப சொல்லுங்க உங்களுக்கு என்ன பிரச்சனை?"

    வாசலில் நின்று அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த ரதி வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு புறப்பட்டாள்

   "தப்புதாண்டா... ஒத்துக்குறேன். நான் அவளை தப்பான கண்ணோட்டத்தோடு பார்த்திருக்கிறேன்னு. அதற்காக அவ தப்பே பண்ணலைன்னு ஆகிவிடுமா? இப்படி வீட்டில் தங்காமல் ஊர் சுத்திக்கிட்டு இருந்தா பாக்கறவங்கள விடு, நமக்கே என்ன தோணும்?"

   "இதுல தோண என்னம்மா இருக்கு? அவளுக்கு என்ன வேலையோ! உங்களுக்கு அவ மேல சந்தேகம் இருந்தால் கூப்பிட்டு கேளுங்கள். அவ என்ன செய்யறேன்னு தெரிஞ்சிக்கணும்ன்னா கூப்பிட்டு பொறுமையாக பேசி, என்ன நடக்குதுன்னு கேட்டு தெரிஞ்சுக்கோங்க. அதற்கான உரிமை உங்களுக்கு இல்லையா? என்ன இல்ல கேட்டா அவதான் சொல்ல மாட்டாளா?"

   "இல்லை சந்துரு.... சந்தேகம் எல்லாம் இல்ல... கேட்டா சொல்ல சொல்லுவா தான்... ஆனா"

   "அவளை இந்த ஊரு நம்புதோ... இல்லை நீங்க அவளை நம்பறீங்களோ அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் நான் அவளை 100% நம்பறேன். கல்யாணத்துக்கு முன்னாடியே அந்த சிவாவை அவளுக்கு தெரியும். அன்னைக்கு சுத்தாதவளா இன்னைக்கு அவன்கூட சுத்திட போறாள்? தப்பு உங்க மேலே இல்லம்மா. எங்க ரெண்டு பேர் மேல தான். உங்களை சங்கட படுத்த கூடாதுன்னு ஒதுங்கி நிற்கிறதும், அவகிட்ட வாழ்க்கையை எங்கிருந்து ஆரம்பிக்கிறதுன்னு நான் தயங்கி நிற்கிறதும், உங்களுக்கு தப்பா புரிய வச்சிடுச்சு. சாரிம்மா... இனி இப்படி நடக்காம நான் பாத்துக்குறேன்" மகன் மன்னிப்பு கேட்டதும் தன் தவறுகளை உணர்ந்தாள் லட்சுமி.

                                [27]   

    மாலை ரதி வீட்டுக்கு வந்து முகம் கழுவிக் கொண்டு வந்ததும் லட்சுமி காபி கப்பை சிரித்தபடியே நீட்டினாள். தயக்க சிரிப்புடன் அதை வாங்கியவள் மெல்ல திரும்பி மாடிக்குச் செல்ல முற்பட்டாள். சோபாவில் அமர்ந்திருந்த சந்துரு அவளை அழைத்தான் கிண்டலாய்

   "ஓய் சண்டக்கோழி எங்க போறே?" குறும்பு குரல் கேட்டதும் மனம் மலர்ந்தது ரதிக்கு. இருப்பினும் அமைதியாய்

   "மாடிக்கு..."

   "இங்கே வா. இப்படி உட்காரு" என்றுதும் அவன் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்

   "சொல்லுங்க..."

   "நான் போனதுக்கப்புறம் எத்தனை பேரை அடிச்சே?"

   "இல்ல... யாரையும் அடிக்கல செல்ல முறை பாய் கூறினாள்

   "பொய் சொல்லாதே. ஏன்டா என் மாமனாரை கொன்னேன்னு டாக்டர் அடிக்காம விட்டிருப்பே?" அவன் சொல்லை கேட்டு முறைத்தாள்

   "அப்படி எல்லாம் ஒன்னுமில்ல"

   "சரி... உள்ளே இருந்து ரொம்ப போரடிக்குது. வெளியே எங்கேயாவது போலாமா? இதைக்கேட்டு சந்தோஷப் பட்டவள் வேகமாக

   "சரி. ஆனா நான் ஒரு இடம் சொல்றேன். அங்கே போகலாமா?"

   "தாளாரம்மா... அங்கே நீ யாரையும் அடிக்க மாட்டேன்னு உத்தரவாதம் கொடுத்தா" அதை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் வேகமாக

   "அம்மாவையும் கூட்டிட்டு தானே?"

   "ம்... கூட்டிட்டு போகலாமே. அம்மா..." என்று அழைத்தான் லக்ஷ்மி அங்கே வந்து

   "நீங்க போயிட்டு வாங்க. நான் எதுக்கு?"

    அதிவேகமாக லட்சுமி அருகில் சென்று "ப்ளீஸ் அத்தை... இந்த ஒரு முறை மறுக்காம வாங்க... ப்ளீஸ்... ப்ளீஸ்..."

   "சரி வரேன்" என்றதும் மூவரும் புறப்பட்டனர்.

   ஆட்டோ டிரைவருக்கு வழிகாட்டினாள். வண்டி நின்றது. இறங்கியதும் அவர்களை அழைத்துக்கொண்டு மாடிக்கு சென்றாள். தன் ஹேன்ட் பேக்கில் இருந்து ஒரு சாவியை எடுத்து லட்சுமியிடம் கொடுத்து திறக்கச் சொன்னாள். கதவைத் திறந்து பார்த்தவர்களுக்கு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. புதிதாக உருவாக்கிய உடற்பயிற்சிக் கூடம். ரதி சந்தோஷமாக பார்க்க அசந்து போய் நின்றான் சந்திரு. லக்ஷ்மிக்கு சட்டென்று ஞாபகம் வந்தது அன்று ரதியிடம் சண்முகராஜன் பேசிக்கொண்டிருந்தது. ஆனந்தக் கண்ணீருடன் ரதியே பார்த்த லட்சுமி

   "என்னை மன்னிச்சிடும்மா... உன்னோடு நல்ல மனசு புரிஞ்சுக்காம உன்ன தப்பா நினைச்சிட்டேன். சந்துரு சொல்லும்போது கூட எனக்கு உன் அருமை புரியல. ஆனால் உன் மாமா ஆசையை நிறைவேத்தி நீ யாருன்னு எனக்கு புரிய வெச்சிட்டே"

   "என்னத்தை நீங்க... இதுக்கு போய் கண்கலங்கி..."

   "ஒய் சண்டை கோழி. யார்கிட்ட அடிச்சு பிடுங்கன இந்த ஜிம்ம?"

   "அடிச்சு எல்லாம் பிடுங்கல"

   "மிரட்டியே வாங்கிட்டியா?"

   "ஒருநாள் சிவா வந்து என்னை மீட் பண்ணன். காருக்குள் வந்து பேச சொன்னான். அங்க என்ன நடந்ததுன்னா...

   "உனக்கு ஒன்னு கொடுக்கணும்னு நினைக்கிறேன்"

   "எதுவா இருந்தாலும் வீட்டுக்கு வந்து பேசு சிவா. இப்படி பிஹேவ் பண்ணாதே"

   "இதை மட்டும் வாங்கிட்டு நீ கிளம்பு. அதுக்கப்புறம் ஒரு லைப்ல நான் வரவே மாட்டேன்."

   "என்னது?" கேட்டேன். ஒரு பெட்டியை எடுத்து அதில் இருந்த பணத்தை திறந்து காட்டினான்

   "எதுக்கு இது?"

   "உனக்கு தான்!"

   "யார் பணம். என்கிட்ட ஏன் கொடுக்கிறே?"

   "உன் பணம் தான். ஃபேக்டரி கேஸ் தீர்ப்பு வந்துருச்சு. இன்சூரன்ஸ் கம்பெனி 50 லட்சம் நமக்கு கொடுத்தாங்க. கம்பெனி என் பெயரில் தானே அப்பா ஸ்டார்ட் பண்ணி இருந்தாரு. அதனால என்னோட அக்கவுண்டுக்கு தான் வந்தது. பாட்னர் ஷிப்ல 50 பர்சன்டேஜ் உனக்கு சேர் இருக்கு இல்ல? அதனால்தான் 25 லட்சம் உனக்காக நான் கொண்டு வந்தேன்"

   "எனக்கு இது வேண்டாம் சிவா"

    "ஏன்?"

   "இந்த பணத்தை அவருக்கே என் அப்பா கிட்ட கொடுத்திருந்தா என் வாழ்க்கை இவ்வளவு மாறி இருக்காது. இதை தான் முதல்ல இழந்தேன். அதிலிருந்து இன்னைக்கு வரைக்கும் எல்லாமே இழந்துட்டிருக்கேன். எனக்கு இது மேல ஆசை எல்லாம் இல்ல சிவா. உங்க அப்பா இதுக்காகத்தான் என்னையும் அம்மாவையும் பாத்துகிட்டாருன்னு எனக்கு நல்லாவே தெரியும். அவர் எங்களுக்கு செய்த உதவிக்குக் கைமாறாக இந்த பணத்தை அவரே கொடுத்துடறேன்"

   "என்ன ரதி பேசுறே? நீ சொன்ன மாதிரி எல்லாத்தையும் இழந்திருக்கலாம். ஆனால் உன் வாழ்க்கை இன்னும் முடியல. இதை மட்டும் நீ வாங்கிக்கிட்டா எல்லாமே திரும்பவும் உனக்கு கிடைக்கும். நீ வேணும்னா பாரு! ரதி... இதை நான் உனக்கு கொடுக்கல. உங்க அப்பாதான் கொடுக்குறாரு. உங்க அப்பா உன்னோடு எதிர்காலத்துக்காக தான் இந்த தொழில்ல நான் முதலீடு செய்கிறேன்னு சொல்லி இருந்தாரு. அதை நானே கேட்டு இருக்கேன். இப்போ அந்த கம்பெனியிலிருந்து வர பணம் உங்க அப்பா பணம் தானே! இதுக்கு எதுக்கு உனக்கு இவ்வளவு தயக்கம்! உன் குடும்ப சூழ்நிலை எனக்கு தெரியாது ஆனால் இந்த பணம் சரியான நேரத்துல உன் கையிலே கிடைக்கணும்னு தான் இவ்வளவு நாள் தள்ளிப் போய் இருக்கு. உன் அப்பா ஆசைப்பட்ட மாதிரி நீ ஒரு தொழில் செய். அவர் ஆத்மா சாந்தி அடையும்" சில நொடிகள் சிந்தித்துவள் புன்முறுவல் பூத்தார்

   "சரி சிவா நான் வாங்கிக்கிறேன். ஆனா ஒரு கண்டிஷன். என் கல்யாணத்துல நீ கொடுத்த 6 லஞ்சமும், உங்க அப்பா எங்களுக்கு செலவு செய்த இரண்டு லட்சமும் நீ உங்க அப்பா கிட்ட கொடுத்திடனும்"

   "உன் நியாயத்துக்கு அளவே இல்லாம போச்சு. சரி மீதி 17 லட்சம் தானே இருக்கு? உனக்கு போதுமா? அதை வச்சுக்கிட்டு என்ன செய்ய முடியும்?" சிரித்தவள்

   "அப்பாவோட ஆசையை நிறைவேற்ற முடியும். ஆனா அதுக்கு நீ எனக்கு ஹெல்ப் பண்ணனும்" என்று சொல்லி முடித்தாள்

   "சிவா தான் இந்த இடத்தை பார்க்க, இதையெல்லாம் வாங்கி செட் பண்ண, எல்லாத்துக்கும் ஹெல்ப் பண்ணிட்டு இருந்தான்" ரதி கூறியதை கேட்டு நெகிழ்ந்து போனான் சந்துரு

   "ரெடி பண்ணிட்டு ஏதாவது ஒரு வழியில உங்க கிட்ட சேக்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன். காலையில நீங்க பேசுனதை கேட்டேன். நான் கொடுத்தால் நீங்கள் மறுக்க மாட்டீங்கன்னு நம்பிக்கை வந்தது"

                               [28]

    இரவு வீட்டில் தன் அறைக்கு தூங்க இருவரும் வந்தனர். வழக்கம்போல் ஒரு போர்வையை தலையணையும் எடுத்துக்கொண்டு தனியே சென்றாள் ரதி

   "என்ன தூக்கம் வருதா?"

   "ஏன் கேக்குறீங்க?"

   "எனக்கு வரலை.... உனக்கு தூக்கம் வரலைன்னா கொஞ்ச நேரம் பேசலாமேன்னு.."

   "பேசுங்க கேட்கிறேன்" போர்வையை விரித்து தலையை போட்டபடியே கூறினாள்

   "கிண்டலு.... இங்கே வா. கட்டிலில் உட்காரு. ஒரு முக்கியமான விஷயம் பேசனும்" என்றதும் அவளும் அங்கே சென்று அமர்ந்தார்

   "நீ கராத்தே கத்துகிட்டியா?" திரும்பி முறைத்தவள்

  "இனிமேல் தான் கற்றுக்கனும்" என்று வலையல்களை பின்னுக்கு தள்ளி விட்டாள்

   "இதைக் கேட்கத்தான் கூப்பிட்டீங்களா?"

   "இல்ல.... ஒன்னு சொல்ல கூப்பிட்டேன். ஏய்! திரும்பு திரும்பு என்றான். சற்று பதட்டமாக

   "என்ன ஆச்சு?"

   "திரும்ப சொல்றேன்ல்ல!" என்றதும் அவள் புரியாமல் சற்று திரும்பி இருக்க

   "ஒன்னும் இல்லை... தாலிக்கயிறு மாட்டிக்கிச்சு பார்த்தேன்!" என்றதும்

    முகத்தை மட்டும் திருப்பி ரதி முறைக்க, அதே நேரம் அருகில் சென்றவன் மெல்லிய குரலில் "ஐ லவ் யூ" என்று சொல்ல, நேராக அவள் காதுகளில் விழுந்த ஒலி உடல் முழுவதும் பரவி சிலிர்க்க, அவன் சொன்ன வார்த்தை இதயம் முழுவதும் பரவி மனம் நிறைய, கண்கள் மூடி தன்னை மறந்து சாய்ந்தவளை தாங்கிப் பிடித்தான் அவன் தோள்களில். அவன் கண்களில் பட்ட அவளது மஞ்சள் கயிறுக்கு முத்தமிட சென்றவனது மூச்சுக்காற்று அவள் ஸ்பரிசத்தை வருட, சிலிர்த்த அவளின் சிணுங்களில் சந்துருவின் முகத்தை அவள் கழுத்தில் சிறை பிடித்தது. அவன் கைகள் முன்னுக்கு சென்று அவளை அணைக்க முற்படுகையில் காற்று அவன் கைகளுக்கு உதவியது. பறந்துகொண்டிருந்த சேலையை கவனிக்காதவன் கையை நேராக இடுப்பை வருடி உள்ளே சென்றதும், இதை எதிர்பார்க்காத சந்திருவிற்கு தங்கம் தேடி சென்றவனுக்கு புதையல் கிடைத்தது போல் மூழ்கிப் போகும், சட்டென்று எழுந்தாள். சந்துரு தன் இரு கன்னத்தையும் பிடித்துக்கொண்டு

   "பாரு.... நான் உன் புருஷன்... தப்பில்லை... பழக்க தோஷத்தில் அடித்து விடாதே" என்றான்

    சிரித்தவள் சென்று கதவைத் தாழிட்டாள். தண்ணி எடுக்க வந்த லட்சுமியின் காதில் தாழிட்ட சத்தம் கேட்க, புன்முறுவல் பூத்தவள் தன் அறைக்கு சென்று படுத்து உறங்கினாள்.

    விடிந்தது. குளித்து விட்டு வந்து கட்டிலில் இருந்த சந்துருவிடம் கீழே இருந்த போர்வையை மடித்தபடி

   "பாருங்க.... குளிச்சிட்டு தான் வெளியே வரணும் சரியா?" சாதாரணமாக கூற, மோக பார்வை வீசியவன்

   "ஓய் சண்டக்கோழி.. இங்க வாடி"

   "என்ன?"

   "இங்க வா..." கொஞ்சல் குரலில் அழைத்தான்

   "சொல்லுங்க" என்று அருகில் வந்து அமர்ந்தாள்

   "எவ்வளவு புரிஞ்சி நடந்துக்கிற உனக்கு நைட்டு நமக்குள்ள இது நடக்கும் என்று தெரியாதா?"

   "தெரியும்"

   "தெரியுமா? தெரிஞ்சும் ஏன் தனியா போய் படுக்க போனே?"

   "உங்க தயக்கத்தை உடைக்கத்தான்"

   "ம்...!! பாருப்பா!!! அப்படின்னா இப்போ என்ன நடக்கப்போகுதுன்னு கூட" என்று அவள் அருகில் வந்தவனை அப்படியே தடுத்து நிறுத்தினார்.

   "தெரியும். நீங்க என்னை ஸ்கூல்ல டிராப் பண்ணிட்டு, ஜிம்முல நடக்கிற வேலையை சூப்பரைசிங் பண்ண போறீங்க. சீக்கிரம் கிளம்பி வாங்க" என்று எழுந்து சென்று அவளிடம்

   "அதுக்கு முன்னாடி ஒரு காபி" என்றவனின் மனதில் ஒரு கவிதை எழுந்தது

                 ரதி என்றால் அழகு

                அழகு என்றால் அது

             முகம்தான் என்று அர்த்தமல்ல

               அகமாகவும் இருக்கலாம்

    இதை எழுத டைரியை எடுக்க தன் கபோர்டு திறந்தான். டைரியின் அருகில் அவனது திருமண பத்திரிக்கை இருந்தது. அன்றுதான் முதன்முறையாக எடுத்து பார்த்தவளின் புருவம் சுருங்கியது. காபியைக் கொண்டு வந்து வைத்துவிட்டு சென்றவளிடம் கேட்டான்.

   "ஏய்!! உன் முழு பெயர் என்ன??!!"

    அவனைத் திரும்பிப் பார்த்தவள் கர்வமாய் ஒரு புன்னகை பூத்துச்சென்றாள். டைரியை எடுத்து எழுதினால்

          பாரதி கற்பனையில் கண்டான்

          ஆயிரம் புதுமைப்பெண் ஆனால்

         நான் கண்ணெதிரே காண்கிறேன்

           "பாரதி ஒரு புதுமைப்பெண்"

           

              -----------×---------



Rate this content
Log in

Similar tamil story from Drama