STORYMIRROR

hema malini

Inspirational Others Children

5  

hema malini

Inspirational Others Children

கட்டவண்டி கட்ட வண்டி

கட்டவண்டி கட்ட வண்டி

2 mins
4

"தாத்தா தாத்தா" பாட்டி சொன்னாங்க அந்த காலத்தில் மாட்டு வண்டியில் தான் நீங்க எல்லாம் பயணம் செஞ்சீங்க

என்று அது எப்படி தாத்தா மாட்டு வண்டியில் பயணம்

செய்வது?


என்று வெளிநாட்டு வாசி மகன் வயிற்றுப்பேரன் அர்ஜுன் தாத்தா வீட்டுக்கு விடுமுறை நாளில் வர

கேட்க...

"இப்போ கூட இருக்கு

சில கிராமங்களில்"...


அதுவா பேராண்டி அதை பற்றி விரிவாக சொல்லவா?

என்றார் தாத்தா ராகவன்.."


"சொல்லுங்க தாத்தா"


"கட்டவண்டி(மூங்கில் தட்டி வண்டி) வேளாண் பொருட்களை பக்கத்து நகர சந்தைக்கு ஏற்றிச்செல்ல, விளைச்சலை வீடுகொண்டு வந்து சேர்க்க , வீடுகளிலிருந்து மாட்டுச்சாணம், கண்மாய் மண்ணை நஞ்சை, புஞ்சையில் கொட்டி மண்ணை பண்படுத்துவதற்கு, இந்த வண்டியை பயன்படுத்துவர்.

கண்ணா"


" ம் ம்...


 இது அளவில் பெரிதாக இருக்கும் அதனால் பெரியா (உழவு) மாடுகள் பயன்படுத்தப்படும்.


வில்லு / தட்டு வண்டியில் ஐந்துபேர் அமர்ந்து பயணம் செய்லாம் மேலும் இந்த வண்டி பயணத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும், வண்டியில் உட்காரும் இடத்தில் வைக்கோலை மெத்தை மாதிரி அழகாக நிரவி அதன் மேல் ஒரு ஜமுக்காலம் (போர்வை) ஒன்றை விரித்து அதில் குடும்பத்தினர் அமர்ந்து அமர்ந்து பயணம் செய்வோம்,..


"அது எதுக்கு வைக்கோல் போடுறாங்க தாத்தா?"


 ( வைகோலை அப்படி போடுவதற்க்கு இரண்டு காரணங்கள் ஒன்று உட்காரும் பொழுது மெத்தை மேல் உட்காருவது போல் இருக்கும்,மற்றொன்று மாட்டுக்கு சாப்பிட உணவு.)


"ஓஹோ அட டூ இன் வன் "

என்று சொல்றீங்க"

 என்றான் பேரன் அர்ஜுன்"


"அதே அதே."..


பிறகு சொல்லுங்க தாத்தா.."


தாத்தா தொடர்ந்தார்...


 வண்டியில் ஏற பின் பகுதியில் படி போன்ற அமைப்பு, பிடித்து ஏற கைப்பிடிக்கு கம்பி, பின்புற பயணிகள் விழாமல் இருக்க தடுப்பு கம்பி மற்றும் அதை மாட்ட கொக்கி போன்ற அமைப்பு என எராளமான வசதிகள் இருக்கும்.


"அட இது நால்லா இருக்கு

தாத்தா...எனக்கும் மாட்டு வண்டியில் பயணம் செய்ய

ஆசையா இருக்கு தாத்தா...


"அதுக்கு என்ன டா செல்லம் அடுத்த முறை விடுமுறைக்கு நீ வரும்போது பயணிப்போம்

சரியா? தாத்தா காட்டாயம்

கூட்டி செல்கிறேன்..."


தாத்தா பிராமிஸ் பண்ணுங்க.."


"உண்மையா கொண்டுசெல்வேன் அர்ஜுன்" நில்லு முழுசா கேளு அர்ஜுன்".. 


"சரி தாத்தா".…

 

 "அமரும் பலகைக்கும் சக்கர அட்சிக்கும் இடையே இரும்பு வில்லு பட்டைகல் (ஷாக் அப்சொர்பர்) இருப்பதால் அதிகமான அதிர்வுகள் இருக்காது. 


இந்த வண்டிகளில் பூட்டப்படும் மாடுகள் பொதுவாக இளம் காளைகள் மட்டுமே மேலும் இந்த மாடுகளை சில ஆண்டுகளுக்கு விவசாய வேலைக்கு பயன்படுத்தமாட்டோம் ( ஆறு பல் போடும்வரை).


 இந்த இளம் காளைகளுக்கு அழகாக கழுத்தில் மணி கட்டி, காலில் சலங்கை கட்டி 

பயணிப்பது போல...

"சல்சல்'...,சத்தத்துடன் பயணிப்பது இனிமையான அனுபவம்...


"தாத்தா அருமையா சொல்லிட்டீங்க ஃப்ளைட்

பயணத்தை விட சூப்பரா இருக்கும் போல இருக்கே?


"ஆமாம் ஆமாம் அடுத்த பொங்கல் பண்டிகைக்கு

விடுப்பு எடுத்து உன் அப்பா கிட்ட சொல்லி போவோம்

சரியா?


"நம்ம கிராமத்து வீட்டுக்கு"


"ஹை ஹை ஜாலி ஜாலி

என்று துள்ளி குதித்து தாத்தாவை கட்டிக்கொண்டு

ஓட...


"அர்ஜுன் அர்ஜுன் என்று

அவன் தாய் அழைக்க...


"அம்மா அம்மா தாத்தா 

மாட்டுவண்டி, பற்றி நிறைய

சொன்னார் மா"

"கட்ட வண்டி பற்றின்னு சொல்லு ...


ம்ம் ம்ம்..."

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻





இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil story from Inspirational