hema malini

Comedy Others

4  

hema malini

Comedy Others

பிரபலம்😝

பிரபலம்😝

2 mins
10


பிரபலம்


"என்னங்க உங்களுக்கு இப்போதைக்கு பிரபலமான இரண்டு வார்த்தைகள்

தெரியுமா?

"அது என்னடி இப்போதைக்கு

பிரபலமான வார்த்தை?

தெரிய வில்லையே என்னவாக இருக்கும் என்று

கணவர் யோசிக்க...


"பட்டி தொட்டியெல்லாம் பிரபலம் தான்"


பட்டி தொட்டியெல்லாம் பிரபலமா?


"ஆமாங்க இப்போ பிறந்த குழந்தை கூட சொல்லும்..

அடியே இவளே இப்போ பிறந்த குழந்தை எப்படி சொல்லும்?

தூக்கி அடிச்சேன்னா பாத்துக்கோ..போவியா அங்குட்டு ..

பிறந்த குழந்தை பேசுமாம்ல?

சரி சரி நமக்குள் வம்பு ஏன்

உங்க வாயால நான் சொல்ல வைப்பேன் பாத்து க்கோங்க...

அப்படியா சங்கதி சரி சரி சொல்ல வை பார்த்துடுவோம்ல?

என்று கணவன் வீம்பாக

சவால் விட...

மனைவி கையில் இருந்து

விலை உயர்ந்த பீங்கான்

குவளை ஒன்று கீழே விழுந்து உடைய ...

அடியே மூதேவி உங்கப்பன் வீட்டு சொத்தா ? இப்படி போட்டு உடைக்குறே?

இல்ல ஓசியா கிடைத்ததா

என்ன ?

அது என்ன விலை தெரியுமா?

மனைவி விழுந்து விழுந்து

சிரிக்க ...


"என்னடி சிரிப்பு ? மனுசன் பாடா பட்டு ஓடாய் தேய்ந்து மாங்கு மாங்குன்னு உழைத்த காசுல

வாங்கின பீங்கான் ஜாடி

உடைத்து விட்டு இப்படி சிரிக்கிறா பாரு என்று சிவதாண்டவம் ஆட...


"மனைவி சொன்னாள் 

என்னங்க பின்ன மாட்டுப் பொங்கல் பண்டிகை அதுவுமா ஜாலியா இருப்போம் என்று சும்மா சிரிக்க சிந்திக்க வைக்க ஒரு கேள்வி கேட்டா அது கூட பதில் சொல்ல முடியாமல்... என்று இழுக்க


என்னடி இழுவ?

கேள்வி எல்லாம் கேட்ட அது இருக்கட்டும் ..

அதுக்கு இது சரியா போயிடுமா? என்று தை பிறந்தது கூட தெரியாமல்

தை தை என்று குதிக்க..


"மனைவி நான் கேட்ட கேள்விக்கு விடை வந்து விட்டது உங்கள் வாயில் இருந்தே என்று சொல்ல..


"அடியே என்ன விளையாட்டு பதில் எங்க சொன்னேன்? மேலும் கோபக்காரன் ஆக்காத போவியா அங்குட்டு

என்றார்...

மனைவி ஆமாங்க நான் 


கேட்ட இரண்டு பதிலும் கோபத்துல உங்க வாயில் இருந்து "டபக் ' என்று வந்து

விழுந்ததுங்க என்று சொல்லி மீண்டும் சிரிக்க..

கொஞ்சம் ரீவைண்ட் பண்ணட்டா ?என்றார் மனைவி..

ரீவைண்டா ? என்னடி புதுசு புதுசா வார்த்தை வைரல்

பண்ணுறே ?


"ஜாடி உடைய நீங்க என்ன சொன்னீங்க? உங்கப்பன்

வீட்டு சொத்தா ? என்றேன்..

பிறகு என்ன சொன்னீங்க?

ஓசி யா ஒன்னும் கிடைக்கல என்றேன்...

அதே தான் இப்போ பிரபலமான வார்த்தை 

"ஹி ஹி ஹி ஹி ஹி..

என்றாள் மனைவி..

கணவர் அடியே இவளே அதுக்கு இப்படியா ஜாடிய

உடைப்பே?ஒரு குளு

 தந்திருக்கலாம் என்றார்

கணவர் குளுவா?


ஆமா ஆமா.. குளு தான்..

அது எப்படிங்க?

தகரமுடி,ஒரு கல் ஒரு கண்ணாடி இப்படி எல்லாம்

தான்..

அடப்பாவி மனுசா நீ என்னை விட கில்லாடி யா இல்ல இருக்கே?

மொத்தத்தில் ஜாடி போச்சு


ஹைய்யோ ஹைய்யோ...


("இது சிரிக்க மட்டும் )


 


Rate this content
Log in

Similar tamil story from Comedy