STORYMIRROR

hema malini

Inspirational Others

4  

hema malini

Inspirational Others

பேரு வச்சியே?சோறு வச்சியா?

பேரு வச்சியே?சோறு வச்சியா?

1 min
4

"என்ன பங்கஜம் என்ன இன்று அவசர அவசரமாக எங்கு செல்கிறாய்?


அட இன்னைக்கு என்ன நாள்? அது கூட தெரியாதா?


என்ன நாள்? புரியவில்லை

வெள்ளிக்கிழமை அமாவாசை வேறு என்ன?


ஓஹோ அப்படியா சங்கதி தெரிஞ்சுக்கிட்டே என்னிடம்

கேள்வி எழுகிறது ?


அதுக்கு என்ன?


என் மாமியாருக்கு தர்ப்பணம் செய்ய செல்கிறேன்...


அவர் முன்னாடியே கிளம்பி போயிட்டார் கூட்டம்

அலை மோதும் அமாவாசை நாளன்று நண்பகல் 12 மணிக்கு முன்பு திதி தர்ப்பணம் கொடுக்க வேண்டும், அதிகாலை நான்கு மணியில் இருந்து கொடுக்க ஆரம்பித்து விடலாம். சூரிய உதயம் முன்பு பிரம்ம முகூர்த்தம் இருப்பதால் சூரியன் வந்தபிறகு கொடுக்க வேண்டும் என்று முன்பு முகூர்த்தத்தில் செய்வது புண்ணியமாகும்.


அதெல்லாம் இருக்கட்டும்

உயிரோடு இருக்கும்போது

ஒரு வாய் சோறு வச்சியா

அது இதை விட புண்ணியம்



இறந்த பிறகு சோறு 

படையல் வச்சு புண்ணியம்

தேடும் உலகம் ...


உயிரோடு இருக்கும்போது பேச்சு துணைக்கு ஆளில் லை சரியான நேரத்துக்கு

சாப்பாடு இல்லை.



மனிதருக்கு மரியாதை இல்லை... ஆனா மரித்து ப்போன பின் பிரம்ம முகூர்த்தம் என்ன படையல்

என்ன...

 " காகம் ஆகணும்

அப்போ தான் மரியாதை

என்னத்த சொல்றது உங்கள்

நம்பிக்கை எல்லாம் இருக்கட்டும் செய்ங்க ஆனா மனிதரா மாணிக்க மா இருக்கும்போது ஒரு

வாய் சோறு வையுங்க

அப்பா சாமிகளா....

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil story from Inspirational