Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

anuradha nazeer

Crime

4.5  

anuradha nazeer

Crime

கடைசியா குடுக்கும் வாக்குமூலம்

கடைசியா குடுக்கும் வாக்குமூலம்

3 mins
2.8K


இவன் கதைய முடிச்சிவுட்ரு, கொலைக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவி; வாட்ஸ்அப் ஆடியோவால் சிக்கிய ஆண் நண்பர்

ஆண் நண்பரின் உதவியுடன் கணவனைக் கொலை செய்ததுடன், அதை விபத்தாக மாற்ற முயற்சி செய்த மனைவியை அதிரடியாகக் கைது செய்திருக்கிறது காவல்துறை.


புதுச்சேரி மாநிலம் காட்டேரிக்குப்பத்தைச் சேர்ந்தவர், கந்தசாமி. 35 வயதான இவர், தொண்டமாநத்தம் கிராமத்தில் இருக்கும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஒன்றில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றிவந்தார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி, பள்ளி வேலைகளை முடித்துவிட்டு இரவு 7.30 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பத்துக்கண்ணு அருகே சென்றுகொண்டிருந்தபோது, பின்பக்கமாக சீறிப்பாய்ந்து வந்த கார் ஒன்று மோதியதால் தூக்கி வீசப்பட்டார் கந்தசாமி.

அதையடுத்து, அந்தக் காரில் வந்த இருவர் தப்பித்து ஓடிவிட, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கந்தசாமி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுயநினைவை இழந்து கோமா நிலையில் இருந்த கந்தசாமி, இரண்டு நாள்களுக்குப் பிறகு 17-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால்தான் கந்தசாமி உயிரிழந்தார் என்று மருத்துவர்களும் சான்றிதழ் அளிக்க, அவரது உடலை அடக்கம் செய்தனர் உறவினர்கள். இரண்டு நாள்கள் கழித்து, வில்லியனூர் போக்குவரத்து காவல் நிலையத்துக்கு வந்த கந்தசாமியின் அம்மா, தனது மகன் சாவில் மருமகள் புவனேஸ்வரி மீது சந்தேகம் இருப்பதாக இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்திடம் தெரிவித்தார்.


மேலும், தனது உறவினருக்கு வாட்ஸ்அப் மூலம் கந்தசாமி அனுப்பிய சில ஆடியோக்களையும் சிடி போட்டு கொடுத்திருக்கிறார். அந்த ஆடியோவில், தனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்கு மனைவி புவனேஸ்வரிதான் காரணம் என்று கூறியிருக்கிறார் கந்தசாமி. அதையடுத்து, விபத்து நடந்த இடத்திற்குச் சென்ற போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், அந்தப் பகுதிகளில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்திருக்கிறார்.

அப்போது, அது விபத்து இல்லை திட்டமிட்ட கொலை என்று தெரிய வந்ததும், வழக்கு போக்குவரத்தில் இருந்து குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதையடுத்து, துரிதமாகக் களமிறங்கிய வில்லியனூர் போலீஸார், கந்தசாமியின் செல்போனை எடுத்துவரச் சொல்லி அதையும் ஆய்வு செய்திருக்கிறார். அதில், கந்தசாமிக்கும் அவரது மனைவிக்கும் நடந்த கோபமான உரையாடல்களும், கந்தசாமியை அவரது மனைவி தகாத வார்த்தைகளால் திட்டும் சிறிய வீடியோ காட்சியும் இருந்திருக்கிறது.


அதையடுத்து சந்தேகம் அதிகரிக்க, காரின் உரிமையாளரான லிங்காரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவரை கஸ்டடியில் எடுத்து விசாரித்தது போலீஸ். அப்போது, காட்டேரிக்குப்பத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் (எ) அஜித்குமார் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், நானும் அவரும் சென்றுதான் கந்தசாமி மீது காரை ஏற்றிக் கொலைசெய்தோம் என்று கூற, ஸ்ரீதரையும் அள்ளிக் கொண்டுவந்தது போலீஸ். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “நானும் கந்தசாமியும் டிரைவர்கள் என்பதால் நண்பர்கள் ஆனோம். அதனால் அடிக்கடி அவரைப் பார்க்க அவரது வீட்டுக்குப் போவேன். அப்போது அவர் மனைவி புவனேஸ்வரிக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது.


`இவன் தொல்லை தாங்க முடியல. அவன் கதைய முடிச்சிவுட்ரு. அப்போதான் நாம சந்தோஷமா வாழ முடியும்னு’ சொல்லுச்சி. அதுக்கப்புறம்தான் ஆக்சிடெண்ட் மாதிரி செட் பண்ணி கொலை பண்ணோம்.

அந்தப் பழக்கம் எங்களுக்குள்ள காதலா மாறிடுச்சி. கந்தசாமி வீட்டில் இல்லாத நேரத்துல நாங்க அடிக்கடி தனியா சந்திச்சிக்குவோம். இதுபற்றி கந்தசாமிக்கு தெரியவந்ததால் புவனேஸ்வரியை திட்டியதோடு, அவருடன் அடிக்கடி சண்டை போடுவார். புவனேஸ்வரியும் பதிலுக்கு சண்டை போடுவார். ஒரு கட்டத்தில் புவனேஸ்வரி, அவங்க அம்மா வீட்டுக்கு போயிடுச்சி. ஆனா, ’குழந்தைங்கள பாக்காம என்னால இருக்க முடியலை. அதனால இனிமேல் நாம ஒண்ணா வாழலாம். நீ யாருகிட்டயும் பேசாத’னு கந்தசாமி டார்ச்சர் பண்ணாரு.


அதுல கடுப்பான புவனேஸ்வரி, ‘இவன் தொல்லை தாங்க முடியல. அவன் கதைய முடிச்சிவுட்ரு. அப்போதான் நாம சந்தோஷமா வாழ முடியும்னு’ சொல்லுச்சி. அதுக்கப்புறம்தான் ஆக்சிடெண்ட் மாதிரி செட் பண்ணி கொலை பண்ணோம். சம்பவம் நடந்த அன்னைக்கு ’கந்தசாமி ஸ்கூல்ல இருந்து கெளம்பிட்டாரு ரெடியா இரு’னு புவனேஸ்வரிதான் எனக்கு போன் பண்ணி சொல்லுச்சி. அதுக்கப்புறம்தான் அவர் மேல காரை ஏத்தி கொலை பண்ணோம்” என்று கூற, அதிர்ச்சியடைந்திருக்கிறது போலீஸ்.

அதையடுத்து புவனேஸ்வரி, ஸ்ரீதர் மற்றும் பிரவீன்குமார் மூவரையும் கைதுசெய்த போலீஸ், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து காலாப்பட்டு மத்தியச் சிறையில் அடைத்தது. கொலை செய்யப்படுவதற்கு முன்பு தனது தாயுடன் செல்போனில் பேசிய ஆடியோவைப் பதிவுசெய்து, அதை அப்படியே தனது உறவினருக்கு அனுப்பியிருக்கிறார் கந்தசாமி.


அந்த ஆடியோவில், “அம்மா… நான் கடைசியா குடுக்கும் வாக்குமூலம் இது. இதுக்கப்புறம் நான் உயிரோட இருப்பனான்னு தெரியாது. நாளைக்குக் காலைல நான் உயிரோட இருந்துட்டா பிரச்னை இல்லை. ஒருவேளை செத்துப்போயிட்டா அதுக்குக் காரணம் புவனா, அவ அம்மா, அவ அண்ணன், அந்தப் பையன் ஸ்ரீதர் நாலுபேர்தான்” என்று கூறியிருக்கிறார்.


கந்தசாமி பேசிய இந்த ஆடியோதான் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க போலீஸுக்கு உதவியிருக்கிறது.


Rate this content
Log in

More tamil story from anuradha nazeer

Similar tamil story from Crime