anuradha nazeer

Crime

5.0  

anuradha nazeer

Crime

கொலை

கொலை

2 mins
184


கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை அடுத்த மஞ்சேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் ரூபஸ்ரீ. மஞ்சேஸ்வரம் அருகிலுள்ள மியப்படவம் கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தார். இதற்கிடையே, கடந்த 16-ம் தேதி மதியம் தன் மகள் படிக்கும் பள்ளிக்கு அவருக்கு ஸ்கூல் பீஸ் கட்டச் சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அவரின் குடும்பத்தினர் போலீஸில் ரூபஸ்ரீ காணாமல் போனதாகப் புகார் அளித்தனர்.

காணாமல்போன 36 மணிநேரம் கழித்து கொய்ப்பாடி கடலில் இருந்து பிணமாக அவர் மீட்கப்பட்டார். உடலில் துணிகள் எதுவும் இல்லாமலும், தலைமுடிகள் இல்லாமலும் கடற்கடையில் அவரது உடல் ஒதுங்கியிருந்தது.


இதையடுத்து சந்தேகத்துக்கிடமான மரணம் என்று வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தினர். பல்வேறு சந்தேகங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட விசாரணையில் கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்குப் பின் ரூபஸ்ரீயை கொன்றவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், இந்தக் கொலை வழக்கில் வெளிவந்துள்ள மர்மங்கள் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


காணாமல்போன 36 மணிநேரம் கழித்து கொய்ப்பாடி கடலில் இருந்து பிணமாக அவர் மீட்கப்பட்டார். உடலில் துணிகள் எதுவும் இல்லாமலும், தலைமுடிகள் இல்லாமலும் கடற்கடையில் அவரது உடல் ஒதுங்கியிருந்தது. இதையடுத்து சந்தேகத்துக்கிடமான மரணம் என்று வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தினர். பல்வேறு சந்தேகங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட விசாரணையில் கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்குப் பின் ரூபஸ்ரீயை கொன்றவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், இந்தக் கொலை வழக்கில் வெளிவந்துள்ள மர்மங்கள் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


16-ம் தேதி மதியம் ரூபஸ்ரீ வெங்கட்ரமணா வீட்டுக்கு வந்துள்ளார். அங்கே அவரை சித்ரவதை செய்ததுடன் பக்கெட்டில் உள்ள தண்ணீரில் மூழ்கடித்து வெங்கட்ரமணா அவரைக் கொலை செய்துள்ளார். பின்னர், காரில் அவரது உடலைக் கொண்டு சென்று கடலில் வீசியுள்ளார். இதற்கு அவரது கார் டிரைவர் உதவியுள்ளார். இதுதொடர்பாகக் கேரள க்ரைம் பிராஞ்ச் போலீஸார் பேசுகையில், ``ரூபஸ்ரீ பணிக்குச் சேர்ந்த அதே வருடம்தான் வெங்கட்ரமணாவும் இங்கு பணிக்குச் சேர்ந்துள்ளார். இருவரும் நட்பாகப் பழக ஆரம்பித்துள்ளனர். பின்னர் இவர்களின் பழக்கம் நெருக்கமாகியுள்ளது. ஒரே பள்ளி என்பதால் பணம் கொடுக்கல் வாங்கலும் அவர்களுக்கிடையே இருந்துள்ளது.


ஆனால், இந்த வழக்கில் எங்களுக்கு கைகொடுத்தது ரூபஸ்ரீ தலைமுடிதான். தலைமுடி அவரது காரில் இருந்ததைக் கண்டுபிடித்தோம். பரிசோதித்தபோது அது ரூபஸ்ரீ உடையது என்பது உறுதியானது. ஏற்கெனவே அவரை விசாரித்தபோது எங்களுக்கு சந்தேகம் இருந்தது. ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரைக் கைது செய்ய முடியவில்லை. இப்போது சரியான ஆதாரங்கள் கிடைத்ததால் அவரையும், அவருக்கு உதவிய கார் டிரைவரையும் கைது செய்துள்ளோம்" எனக் கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு.

வாய்ச்சண்டை முற்றி கொலையில் முடிந்துள்ளது.


Rate this content
Log in

Similar tamil story from Crime