anuradha nazeer

Crime

5.0  

anuradha nazeer

Crime

கொலை!

கொலை!

2 mins
746


இறந்த பின் தூக்க மாத்திரைகளை திணித்த தாய்.. 3 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த கொலை!

லால் கிருஷ்ணனை சோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு லால் கிருஷ்ணன் உடல் தகனம் செய்யப்பட்டது.


கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை மலையடி பகுதியைச் சேர்ந்தவர் வசந்தா (49). இவரின் கணவர் பிரிந்து சென்றதால் கடந்த சில ஆண்டுகளாக தன் மகன் லால் கிருஷ்ணன் (13) மற்றும் மகளுடன் வசித்துவந்தார். இந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு பள்ளியிலிருந்து திரும்பிய மகன் தூக்க மாத்திரை தின்று மயங்கிவிட்டதாக வசந்தா சத்தம்போட்டார்.


அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து லால் கிருஷ்ணனை மீட்டு பாறசாலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நிலைமை மோசமாக இருந்ததால் அங்கிருந்து மெடிக்கல் காலேஜுக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு லால் கிருஷ்ணனை சோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு லால் கிருஷ்ணன் உடல் தகனம் செய்யப்பட்டது.


இதைத் தொடர்ந்து வசந்தாவை விட்டுப் பிரிந்து சென்ற கணவன் தன் மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாவட்ட எஸ்.பி, முதல்வரின் தனிப்பிரிவு உள்ளிட்டவைகளுக்கு புகார் அனுப்பினார். அந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்தியும் போலீஸாருக்கு எந்தச் துருப்புச்சீட்டும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு சுபனன் என்ற 35 வயதுக்காரருக்கு தன் மகளைத் திருமணம் செய்துவைத்தார் வசந்தா. அந்தத் திருமணத்தால் வசந்தா மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.


வசந்தாவையும் அவரின் மருமகன் சுபனனையும் தனித்தனியாக விசாரணை நடத்தியதில் அவர்களுக்குள் கள்ளக்காதல் இருப்பதாகவும் அதற்கு இடையூறாக இருந்த மகனைக் கொலை செய்ததாகவும் திடுக்கிடும் தகவல் வெளியானது. இதையடுத்து, பளுகல் போலீஸார் லால் கிருஷ்ணனின் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றினர். லால் கிருஷ்ணனின் தாய் வசந்தாவையும் சுபனனையும் நேற்று கைது செய்தனர்.


லால்கிருஷ்ணன் இறந்ததை உறுதி செய்ததும் தன் மகன் தூக்கமாத்திரை தின்று மயங்கியதாக நாடகம் ஆடினார். பிரேதப் பரிசோதனையில் லால் கிருஷ்ணனின் கழுத்து நெரிக்கப்பட்டிருப்பதும் தூக்க மாத்திரை தொண்டைப் பகுதியில் தேங்கியிருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அதிக வயதுகொண்ட சுபனனுக்கு தன் மகளைத் திருமணம் செய்துவைத்து தொடர்ந்து நெருக்கமாக இருக்கலாம் என வசந்தா முடிவு செய்தார். அந்தத் திருமணம்தான் வசந்தா மீதான சந்தேகத்தை வலுப்படுத்தியது" என்றனர்.


Rate this content
Log in

Similar tamil story from Crime