anuradha nazeer

Crime

5.0  

anuradha nazeer

Crime

கொலை

கொலை

2 mins
2.3K


பெண்ணை கற்பழித்து கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த லாரி டிரைவர் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு டும்கூர்மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

 போலீசார் விசாரணையில் யாரோ மர்ம நபர் அந்த பெண்ணை கற்பழித்து விட்டு ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துவிட்டு உடலை வீசிச் சென்றது தெரிய வந்து உள்ளது. 1994 இல் நடந்த சம்பவம்.

 அப்போது     சித்த அனுமய்யா  

  தான் கற்பழித்து கொன்றது தெரியவந்தது .

ஆனால்போலீசாரிடம் இருந்து தப்பி வழக்கில் மாட்டாமல் இருப்பதற்காக தலைமறைவாக ஓடிவிட்டார்.

 துப்பு கிடைக்கவில்லை .

வழக்கு கிடப்பில் போடப்பட்டது.

 பல ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் உள்ளது.

 இந்த சமயத்தில் தான் புதிய போலீஸ் சூப்பிரண்ட்.  வந்தார்.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு வம்சி கிருஷ்ணா, கொரட்டகெரே போலீஸ் இன்ஸ்பெக்டர் நதாப் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

 மேலும் அவர் விசாரணையை முடுக்கி விட்டார்.

25 ஆண்டுகளுக்கு பிறகு கைது.

இதையடுத்து 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கற்பழிப்பு கொலை வழக்கில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். 

இந்த நிலையில், சித்த அனுமய்யா பெங்களூரு நெலமங்களாவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவது தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் நெலமங்களாவுக்கு சென்று அங்கு வசித்து வந்த சித்த அனுமய்யாவை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். 

பின்னர் அவரை விசாரணைக்காக கொரட்டகெேரவுக்கு அழைத்து சென்றுள்ளனர். பெண்ணை கற்பழித்து கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த சித்த அனுமய்யா, 25 ஆண்டுகளுக்கு பிறகு போலீசில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக கொரட்டகெரேயில் இருந்து மும்பைக்கு தப்பி சென்றுவிட்டார். 

தொடக்கத்தில் அங்கு லாரி கிளீனராக வேலை பார்த்து வந்த சித்த அனுமய்யா, 

பின்னர் அங்கேயே லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். 

இதையடுத்து சில ஆண்டுகள் கழித்து மும்பையில் இருந்து கர்நாடக மாநிலம் கொப்பலுக்கு வந்த சித்த அனுமய்யா, 

அங்கு லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

அங்கு தனது பெயரை சிவராஜ் என மாற்றிக் கொண்ட அவர், அதேப்பகுதியை சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவரை 2-வதாக திருமணம் செய்துகொண்டார். 

இதையடுத்து அங்கிருந்து பெங்களூரு நெலமங்களாவுக்கு வந்து 2-வது மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.நலமங்களாவில் வேலை பார்த்தபோது அவருடைய உறவினர் ஒருவரை சித்த அனுமய்யா பார்த்துள்ளார். அப்போது அவர், உறவினரிடம் தனது முதல் மனைவி பற்றி விசாரித்துள்ளார். 

மேலும் தனது ஊருக்கு ெசன்றால் தனது மனைவியிடம் நலம் விசாரிக்கும்படியும் சித்த அனுமய்யா, அவரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அவர், கொரட்டகெரே சென்று சித்த அனுமய்யாவின் மனைவி ஈரமல்லம்மாவிடம் நலம் விசாரித்துள்ளார். இதையடுத்து கற்பழிப்பு கொலை வழக்கு தொடர்பாக புதிய போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் ஈரமல்லம்மாவிடம் விசாரித்தபோது, உறவினர் ஒருவரிடம் கணவர் நலம் விசாரிக்க கூறியதாக அவர் தெரிவித்தார். 

போலீசார், அந்த உறவினரை பிடித்து விசாரித்ததில், சித்த அனுமய்யா பெங்களூரு நெலமங்களாவில் பெயரை மாற்றிக் கொண்டு வசிப்பது தெரியவந்தது.

இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணை

புதிய போலீஸ் சூப்பிரண்டு வம்சி கிருஷ்ணாவின் நடவடிக்கையால் 25 ஆண்டுகளாக நிலுவையில் கிடந்த இந்த வழக்கில் தீர்வு காணப்பட்டுள்ளது.


రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్

Similar tamil story from Crime