STORYMIRROR

anuradha nazeer

Crime

4.7  

anuradha nazeer

Crime

கீதாவின் மரணம் கொலை

கீதாவின் மரணம் கொலை

2 mins
12K


ஏ.சி அறை என்பதால் ஜன்னல்கள் எல்லாம் மூடப்படிருந்தது. அப்படி இருக்கும்போது பாம்பு எப்படி வந்தது என்று கீதா

வின் பெற்றோருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.


கேரளமாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் கீதா இவருக்கும் தனியார் கம்பெனியில் கிளர்க்காகப் பணிபுரியும் பாபு என்பவருக்கும் 2018-ம் ஆண்டு திருமணம் ஆனது. திருமணத்தின்போது 100 பவுன் நகைகள், ஐந்து லட்சம் ரூபாய், சொத்து, கார் என நிறைய வரதட்சணை கொடுத்துள்ளார்கள். இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கைநிறைய வரதட்சணை வாங்கியும் திருப்தி அடையாதபாபு மற்றும் அவரது உறவினர்கள் மேலும் வரதட்சணைக் கேட்டு கீதாவுக்கு மனதளவில் டார்ச்சர் கொடுத்துள்ளனர். இந்த

நிலையில் கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி பாபுவின் பறக்கோட்டு பகுதியில் உள்ள வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கீதாவின் காலில் ஏதோ கடித்ததாக உணர்ந்துள்ளார். அவர் சத்தம்போட்டு அலறியதால் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் சோதித்ததில் பாம்பு கடித்திருப்பதாகக் கூறியதை அடுத்து திருவல்லாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையில் இருந்த கீதா பின்னர் 16 நாள்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டிஸ்சார்ஜ் ஆனாலும் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறியதால் கொல்லம் அஞ்சல் பகுதியில் உள்ள தாய் வீட்டில் வசித்தார் கீதா


இந்தநிலையில்தான் கடந்த 6-ம் தேதி காலையில் நீண்டநேரமாக படுக்கையில் இருந்து எழவில்லைகீதா. அவரது தாய் எழுப்பியபோதும் அசைவில்ல

ை. இதைத் தொடர்ந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.கீதா வின் காலில் பாம்பு கடித்ததற்கான அடையாளம் இருந்தது.கீதா தூங்கிய அறையில் உள்ள உடை மாற்றும் பகுதியில் மூர்க்கன் வகை பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது.



கீதாஇறந்ததற்கு முந்தினநாள் அவரின் கணவர் பாபுஅங்கு வந்திருக்கிறார். முந்தின நாள் இரவுபாபுவும் கீதாவும் அந்த அறையில்தான் துங்கியுள்ளனர். அதிகாலை 5 மணிக்கெல்லாம் பாபுஅறையிலிருந்து எழுந்து வெளியே சென்றுவிட்டார். ஏ.சி அறை என்பதால் ஜன்னல்கள் எல்லாம் மூடப்படிருந்தது. அப்படி இருக்கும்போது பாம்பு எப்படி வந்தது என்று கீதாவின் பெற்றோருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.கீதா இறந்த சமயத்தில் பாபுவின் செயல்பாடுகளும் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக அஞ்சல் காவல் நிலையத்தில் கீதாவின் பெற்றோர் புகார் அளித்தனர்.



முதன்முறை பாம்பு கடித்த மார்ச் 2-ம் தேதிக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு பெட்ரூம் அருகில் பாம்பு ஒன்றைக் கண்டதாகவும். பயத்தில் அலறியதால் அங்கு வந்து பாம்பை வெறும் கைகளால் பிடித்து சாக்கில் போட்டு எடுத்துச் சென்றதாகவும் ஏற்கெனவே கீதாதெரிவித்திருந்தார். எனவே இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் எனகீதா வின் பெற்றோர் கூறினர். இந்த வழக்கு நேற்று மாலை கிரைம் பிரான்ச் ஏற்றெடுத்தது. கிரைம் பிரான்ச் டி.எஸ்.பி அசோக்குமார் தலைமையில் விசாரணை முடுக்கிவிடப்பட்டது. கீதாவின் கணவர் பாபு விடம் விசாரணை நடத்தப்பட்டது. சில மணி நேர விசாரணைக்குப் பிறகு கீதாவின் மரணம் கொலை எனத் தெரியவந்தது.


Rate this content
Log in

Similar tamil story from Crime