anuradha nazeer

Crime

4.9  

anuradha nazeer

Crime

காதலனுடன்

காதலனுடன்

1 min
29


 பைக்கில் காதலனுடன் சென்ற பெண்ணை "தொட்ட" நபர்.. ரோட்டிலேயே கும்மி எடுத்த மக்கள்.. வடபழனியில் பரபரப்பு சென்னை: ஆண் நண்பருடன் பைக்கில் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார் கமாண்டோ படை வீரர் ஒருவர்.. விடுவார்களா நம் மக்கள்? ரவுண்டு கட்டி நடுரோட்டிலேயே சரமாரி அடி வெளுத்து விட்டனர். சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த பெண் அவர்.. 26 வயதாகிறது.. கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.. வேலை முடித்துவிட்டு வந்த இவரை அவரது ஆண் நண்பர் பைக்கில் வீட்டில் டிராப் செய்ய கூட்டி சென்றுள்ளார். அசோக்பில்லர் அருகே இவர்கள் சென்றபோது, பின்னாடியே ஒரு நபர் பைக்கில் வந்துள்ளார்.. இளம்பெண்ணின் அருகில் உரசி வந்து பாலியல் தொல்லை தந்துள்ளார்.. இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த பெண் அதிர்ச்சியடைந்து அப்போதே கூச்சல் போட்டுள்ளார்.


பெண் சத்தம் போட்டதும், பைக்கில் வந்த நபருக்கு ஒரு நிமிஷம் எதுவுமே புரியவில்லை.. அதனால் அங்கிருந்து வேகமாக செல்ல, தன் பைக்கை ஸ்பீடாக ஓட்டினார்.. ஆனால் ஆண் நண்பர் விடவில்லை.. பின்னாடியே துரத்தி கொண்டு சென்றார்.. எம்எம்டிஏ காலனி அருகே உள்ள சிக்னலில் வந்தபோது, அவரது பைக்கை, தன்னுடைய பைக்கால் மோதி கீழே தள்ளினார் ஆண் நண்பர்... இதில் கீழே தடுமாறி விழுந்தார் அந்த நபர். அதற்குள் பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை மடக்கி பிடித்து சரமாரியாக வெளுத்தார்.. தகவலறிந்து வடபழனி போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டனர்.. அந்த இளைஞரை மீட்டு ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றார்கள்.. சம்பந்தப்பட்ட பெண்ணும், பாலியல் தொல்லை தந்ததாக அந்த இளைஞர் மீது புகார் தந்தார். உடனடி விசாரணை அப்போதே ஆரம்பமானது.


அவரது பெயர் முரளி கிருஷ்ணன் என்பதும், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கமாண்டோ தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. பாலியல் சீண்டல் செய்தபோது, முரளிகிருஷ்ணா குடிபோதையிலும் இருந்துள்ளார். கமாண்டோ வீரர் முரளி கிருஷ்ணனிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. கமாண்டோ வீரரே பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை அதிர்ச்சியடைந்தார்கள்..


Rate this content
Log in

Similar tamil story from Crime