Saravanan P

Abstract Comedy Drama

4  

Saravanan P

Abstract Comedy Drama

காதல் அர்த்தம்

காதல் அர்த்தம்

2 mins
266


"தேன் என்னும் நம் காதல்,

வாழ்வில் நான் செய்த மிகப்பெரிய தேடல்,

அமிர்தத்தை விட தேனே உயர்ந்தது ஏன்?

காவியத்தில் உள்ள இனிப்பான அமிர்தத்தை விட,

காட்டமான தேன் இனியது,

உறவுக்கு நலமும் வேண்டும்,

உறவுக்கு கண்டிப்பும் வேண்டும்,

தேனை போல் நம் உறவும் நீண்ட நாள் நல்ல நிலையில் இருக்கவேண்டும் இல்லையா?

நீ என்ன நினைக்கிறாய்,

பதில் மடலுக்கு காத்திருக்கிறேன்."

பிரவீன் கல்லூரியில் அன்று சற்று வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தான் ஏனென்றால் 09:05 மணிக்கு மேல் அந்த வகுப்பின் முதல் பீரியட் சென்றால் உள்ளே விடமாட்டார்கள்.

அன்று சென்று வகுப்பில் அமர்ந்தாலும் அவன் மனதில் முதல் நாள் பார்த்த காதல் திரைப்படம் ஒன்றின் நினைவு வந்து போனது "காதல் என்பது படத்தில் காட்டுவது போல் இருக்குமா?" என யோசித்து விட்டு லேட்டாக வந்தவர்கள் திரும்பி செல்வதை பார்த்தான்.

அன்று மாலை கல்லூரி முடிந்து விடுதி திரும்பிய பிரவீன் கேம் விளையாடி கொண்டிருந்தான்.

தீடீரென்று அவனது பள்ளி நண்பன் விஷால் கால் செய்தான்.

இருவரும் பல நாட்கள் கழித்து பேசிக்கொண்டனர்.

விஷால்,பிரவீன் திருச்சியில் ஓரே பள்ளியில் படித்தார்கள்.

இப்பொழுது விஷால் சென்னையில் ஒரு கல்லூரியில் படித்து வந்தான்.

பிரவீன் மதுரையில் ஒரு கல்லூரியில் படித்து வந்தான்.

இப்பொழுது அவர்களது 

பிரவீன்: லவ் எப்படி தான் பண்றாங்கனே தெரியல டா,பொண்ணுங்க கிட்ட எப்படிதான் பேசுறாங்களோ 

விஷால்: டேய்,நீ எப்பவும் பசங்க கிட்ட பேசுற மாதிரியே பேசுடா 

பிரவீன்: நீ சொல்லுவ டா 

விஷால்: டேய்,டேய் 

பிரவீன்: சரி டா,இந்த லவ் எப்படி டா?

விஷால்: டேய் அது இப்ப ஒரு பொண்ண உனக்கு பிடிச்சிருக்கு 

பிரவீன்: ஓகே 

விஷால்: இப்ப அந்த பொண்ணு கூட ஒரு பிரண்ட் மாதிரி இருந்து அவள பத்தி புரிஞ்சிக்குற 

பிரவீன்: ஓகே 

விஷால்: அந்த பொண்ணு கிட்ட மட்டும் பேசாத 

பிரவீன்: என்னது? 

விஷால்: எல்லா பொண்ணுங்க கிட்டயூம் பிரண்டிலியா இரு.

 பிரவீன்: ஏன்? 

விஷால்: பொண்ணு கிட்ட பேசியே ஆகனும் அப்படினு ஒரு பொண்ணு கிட்ட பேசி அத நீ லவ்னு நினைச்சுக்குவ,

எல்லா பொண்ணு கிட்டயும் பேசு,உனக்கு பிடிச்ச பொண்ணு கிட்டயும் பேசு,உண்மையிலேயே லவ்வானு தெரியும்.

பிரவீன்: சூப்பர் டா 

விஷால்: உடனே உனக்கு பிடிச்ச பொண்ணு கிட்ட லவ்வ சொல்லாத.

லவ் பத்தி அந்த பொண்ணு என்ன நினைக்குதுனு தெரிஞ்சிக்கோ,உன் லவ் பத்தி கிளுஸ் அப்பப்ப குடு. 

அந்த பொண்ணு புரிஞ்சிக்கிட்டா கரெக்ட டைம்ல சொல்லு. 

பிடிக்கலனு சொன்னா அந்த உண்மைய ஏத்துக்கோ,கஷ்டம் தான் ஆனா டைம் தேவைப்படும் மனசு சரியாக.

பிரவீன்: இவ்வளவு விவரமா பேசுறியா? யார் நீ,திருட்டுப்பயலே 

விஷால்: லவ் பத்தி சொல்ல லவ் பண்ணனும்னு அவசியம் இல்லை.

பிரவீன்: திருட்டுப்பயலே.



Rate this content
Log in

Similar tamil story from Abstract